எனது நண்பரும் நாகரத்ணா பதிப்பகத்தின் உரிமையாளரும் எழுத்தாளருமான திரு.குகன் எனது ‘பணம்’ புத்தகத்துக்கான முதல் விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..
விமர்சனத்தில் இருந்து..
தமிழில் வர வேண்டிய புத்தகங்கள் இன்னும் பல உள்ளது. சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி எழுத எழுத்தாளர்கள் தான் இங்கு இல்லை. வெளிநாட்டு சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கும் ஒருவனால் தன் அனுபவங்களை எழுத்தால் பதிவு செய்வதில்லை. எழுத தெரிந்தவனுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கே.ஆர்.பி.செந்தில் போல் அரிதான சில பேருக்கு தான் வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் அனுபவத்தை எழுத்தில் பதிவு செய்கிறார்கள். அதுவும் இந்த புத்தகம் யாரும் தொடாத சப்ஜெக்ட்.
மேலும் படிக்க..
18 கருத்துகள்:
வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் மக்கா....
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ::))
முதன் முதலாக ”பணம்” வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி கவர்னராகிய தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நண்பரே !
மேலும் பல நல்ல புத்தகங்கள் உங்களால் தொடர்ந்து வெளியீடு செய்யப்பட வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள்
பயம் என்று வந்தாலே முந்தி அடித்து படித்து விடவேண்டும். முதல் புத்தக விமர்சனமே அசத்தலாக உள்ளது. தொடர்ந்து புதிய புத்தகங்களை வாங்குங்க..படியுங்க..நமக்கும் அறிமுகம் செய்யுங்க..
அது பயம் இல்லை பணம்..தட்டச்சு தவறு...:(
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துகள் செந்தில்.
நீங்களும் எழுத்தாளராகி விட்டீங்களா!
மனம் இனிய நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்! :-)
எண்ணிறந்த தகவல்கள், ஆனால் ஒரே ஓட்டம். அசைபோட விடாத அவசர கதி.
பதிவுகளாக வந்தபோது படித்த விறுவிறுப்பு மட்டுப்படுவதாக ஓர் உணர்வு. மறுவாசிப்பு காரணம் இல்லை என்று எண்ணுகிறேன். இந் நூலில் வரும் மலேசிய சம்பவங்கள்தாம் ஒப்பீட்டளவில் விறுவிறுப்பு மிக்கவை. பதிவுகளின் non-linear வாசிப்பில் இச் சம்பவங்களின் இடைவைப்பு விறுவிறுப்புக்கு உதவின; நூல் வடிவின் linear யாப்பில் அப்படி இல்லை என்பது என் கருத்து.
அசைபோட விடாத அவசர கதி என்றதில், ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி', முத்தம்மாள் பழனிச்சாமி எழுதிய 'நாடு விட்டு நாடு' ஆகிய நூல்களின் குறுக்கீடுகளும் காரணம் ஆகலாம்.
ஆனால் இப்படித் தகவல் சேகரித்து எழுதுவதென்பது எளிதல்ல. அவ்வவ் இடங்கள், நிகழ்வுகளில் தன்னனுபவம் இல்லையென்றால் வெளிறிவிடும். இந்த உழைப்புக்காகவும் இந் நூல் சொல்லும் செய்திக்காகவும் இதன் ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இனி வரும் நூல், ஆழ் இடத்து ஆற்றொழுக்காய் அமையும் என்றும் நம்புகிறேன். வாழ்க!
மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில் !
Is it available from Udumalai.com?
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
sir, nice to hear u published "PANAM" where to buy, have u added any extra episode apart from blog update or same.
RAJAN.R
Chennai
கருத்துரையிடுக