பெயர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இயற்பெயர் : வீரியம் இழந்த சிறுத்தைகள் கட்சி
தலைவர் : தொல்.திருமாவளவன்
துணைத்தலைவர்கள் : வன்னி அரசு, இரவிக்குமார்
மேலும்
துணைத்தலைவர்கள் : கட்டப் பஞ்சாயத்தில் திறமைமிக்க தளபதிகள்
வயது : வீரியம் இழக்கக்கூடாத வயது
தொழில் : கருணாநிதிக்கு ஜால்ரா தட்டுவது,
பண்பாட்டுக்காவலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக
நடிப்பது, ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது
பலம் : கட்டிவா என்றால் வெட்டி வரும் விசுவாசம்
மிக்க தொண்டர்கள்
பலவீனம் : அத்தொண்டர்களின் சக்தியை சமூக
முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தாமல்
வீணடிப்பது (அம்மிகொத்த சிற்பி எதற்கு?)
நீண்டகாலச் சாதனைகள்: அடங்க மறு!அத்துமீறு! திமிறி எழு!
திருப்பி அடி!
சமீபகாலச் சாதனைகள் : மேற்கண்ட கோஷத்தை ராஜபக்க்ஷே வீட்டிலேயே
மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது
நீண்டகால எரிச்சல் : டாக்டர் கிருஷ்ணசாமி,
ஜான் பாண்டியன் போன்றோர்
சமீபத்திய எரிச்சல் :எவ்வளவு 'சீன்' போட்டாலும் நம்பாதவர்கள்
மக்கள் : தமிழினத்தைக் காக்கும் அவதாரம் என்று
நம்புபவர்கள் மட்டும்
சொத்துமதிப்பு : "இப்பதான்யா ஆரமிச்சிருக்கோம்,அதுக்குள்ள
கேட்டா எப்பிடி?"
நண்பர்கள் : திருமாவை வைத்து சினிமா எடுப்பவர்கள்
எதிரிகள் : 'ஈழப்பற்றை'க் கேள்வி கேட்பவர்கள்
ஆசை : அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான
ஒரே கட்சி
நிராசை : தமிழுணர்வாளர்களின் ஏகோபித்த
தலைமையாக நினைத்தது
பாராட்டுக்குரியது : தாழ்த்தப்பட்ட மக்கள் கொஞ்சமாவது
தலைநிமிரக் காரணமாக இருந்தது
பயம் : ஈழ ஆதரவு முத்திரை ஏற்கனவே அழின்சு போச்சு!
'தாழ்த்தப்பட்டோரின் தலைமை' என்கிற
முத்திரையும் காணாமல் போய்விடுமோ?
கோபம் : முன்பு ரஜினி குஷ்பு மீது, இப்போது குஷ்பு பற்றி
கேள்வி கேட்பவர்கள்மீது
காணாமல் போனவை : தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கான
ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்
புதியவை : பத்து எம்மெல்லே சீட்டு
கருத்து : கருணாநிதி 'அப்ரூவ்' செய்தால் மட்டும்
சொல்லப்படுவது
டிஸ்கி : " ஒரு இயக்கம் தேர்தல் அரசியலில் நுழைவது
என்பது வாழைப்பழம் வயிற்றுக்குள் நுழைவது
போன்றது. வெளியே வரும்போது பழமாக வராது;
மலமாகத்தான் வரும்" இந்த வாசகம்
ஞாபகமிருக்கா?! (அய்யா...நீங்க சொன்னதுதான்!)
21 கருத்துகள்:
ரொம்ப டேஞ்சரான ஆசாமியா இருக்கீங்களே! பாமக பயோடேட்டால அவரு ஜெ.கூட்டு கூட்டு வெக்கிறது 'எதுக்கோ' சமானம்னு சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, அதிமுக பயோடேட்டால 'அம்மா' சென்னாரெட்டி, நரசிம்மராவ் பத்தி சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, இப்போ வி.சி பயோடேட்டால தேர்தல் அரசியல் பத்தி திருமா சொன்ன ஸ்டேட்மெண்ட்டு...
இப்பிடி சொன்ன தலீவருங்களும், கேட்டுட்டு மண்டைய ஆட்டிட்டு இருந்த மந்தைகளும் எல்லாத்தையும் மறந்தாலும் ஒண்ணொண்ணா எடுத்துப்போட்டு தாளிச்சா அவுங்க என்னதாம் பண்ணுவாங்க பாவம்?
'சனநாயக' அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
இவரின் போஸ்டர் பயித்தியம் பற்றி ஒண்ணுமே சொல்லலீங்களே! காணவில்லை விளம்பரத்தல மட்டும் தான் இன்னும் இவர் போட்டோ வரவில்லை. சீக்கிரம் அதுவும் வந்துவிடும்னு நினைக்கிறேன்!
சாதனை...பல கோடி ரசிகர்களை கொண்ட தலைவர் பவர் ஸ்டாரை உருவாக்கியது. அதை மறந்துட்டீங்களே....
/// ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது//
//இயற்பெயர் : வீரியம் இழந்த சிறுத்தைகள் கட்சி//
//டிஸ்கி : " ஒரு இயக்கம் தேர்தல் அரசியலில் நுழைவது என்பது வாழைப்பழம் வயிற்றுக்குள் நுழைவது போன்றது. வெளியே வரும்போது பழமாக வராது; மலமாகத்தான் வரும்" இந்த வாசகம் ஞாபகமிருக்கா?! (அய்யா...நீங்க சொன்னதுதான்!)//
என்ன செய்ய, அரசியல் என்னும் மந்திரத்தின் மகிமை அது!!!
"ஒரு இயக்கம் தேர்தல் அரசியலில் நுழைவது என்பது வாழைப்பழம் வயிற்றுக்குள் நுழைவது போன்றது. வெளியே வரும்போது பழமாக வராது; மலமாகத்தான் வரும்"
வெளியே வருவதை மீண்டும் வாய் வழியாக உள்ளே நுழைப்பவர்கள். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சபாஷ்..
ஒரு இயக்கம் தேர்தல் அரசியலில் நுழைவது என்பது....////
அடடா....நீங்க என்னங்க இதையெல்லாம் ஞாபக படுத்திகிட்டு....அரசியலின் மூலதனமே மக்களின் மறதிதான் தலைவரே....
//பாராட்டுக்குரியது : தாழ்த்தப்பட்ட மக்கள் கொஞ்சமாவது தலைநிமிரக் காரணமாக இருந்தது//
அண்ணே இத ஏற்க்க முடியாது. இவனால் நாங்கள் எந்த விதத்திலும் பயனாகவில்லை தலை நிமிரவும் இல்லை எங்களை வெறும் ஓட்டுக்காக மட்டும் உபயோக படுத்துகிறார். மாறாக வெட்கபடுகிறோம் எம் மக்களை கொன்றவனோடு கூட்டு வைத்து வேடிக்கை பார்த்ததற்கு.
இப்படி ஒரு மானஸ்தன் இருந்ததா ஞாபகம்!
//துணைத்தலைவர்கள் : கட்டப் பஞ்சாயத்தில் திறமைமிக்க தளபதிகள்//
கட்டப்பஞ்சாயத்துன்னா எல்லோரும் அழகிரின்னே நினைச்சுகிட்டுருக்காங்க.இந்த துணைத்தலைவர்களும் அதில் உள்ளடக்கம் என்பதை கூர்ந்து கவனித்துள்ளீர்கள்.
நடுநிலையான பயோடேட்டா!வாழ்த்துக்கள்.
விக்கி உலகம் சொன்னது…
இப்படி ஒரு மானஸ்தன் இருந்ததா ஞாபகம்!.................///////////
ஆமாம் தல எல்லாருக்கும் தமிழ் பெயர் வச்சிக்கிட்டு திரிஞ்சாரு ............
சினிமாவில்...... ஹீரோவா ஒரு படம் நடிச்சதே..
வந்துச்சா பாஸ்?...
மேற்கண்ட கோஷத்தை ராஜபக்க்ஷே வீட்டிலேயே
மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது
கலக்குது பயோ டாடா
இவரும் பத்தோடு பதினொன்னு அம்புட்டுதான் விடுங்க மக்கா...
ம்...எப்பவும்போல உள்ளதை அப்படியே !
ம்... அப்படித்தான்..
அடங்கமறு அத்துமீறுவா,அப்பறம் அடிமாட்டுக்கு அணிப்பிறுவங்க தம்பி,சாதிய ஒழிக்க பாடுபடுங்க நான் தாழ்தபட்டவன்னு வர்ர தல முறைக்கும் ஞாபகபடுத்திகிட்டிருக்காதிங்க.
[ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது] நல்ல சொன்னீங்க போங்க
வாழப்பழம் தின்னாத குரங்கு உன்டா
சொல்லுங்கோ.அது போலத்தான் இவுங்களும்
கருத்துரையிடுக