20 ஏப்., 2011

குழந்தையின் கனவில் சுழலும் லத்திகள் ...


courtesy - article.wn.com

குப்பைகளை 
தெருவில் கொட்டுகிறார்கள் சிலர் 
அதிலிருந்து 
வாழ்வை துவங்குகிறார்கள் சிலர்..

தெருவோரக் கடையொன்றின் 
பரபரப்பான வியாபாரத்தை 
பாதிக்காமல் 
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை..

மந்திரிமார்களும், அதிகாரிகளும் 
அடிபொடிகளும் 
சாலையைக் கடந்தபின்பு 
கூவிக்கொண்டிருந்தான் ஒருவன் 
"எதை எடுத்தாலும் பத்து ரூவா!" ..

சப்தங்களாலும் 
தூசிகளாலும் 
நிரம்பியிருக்கும் இந்த நகரத்தில் 
மனிதர்களோடு 
சில பறவைகளும் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..

விதிக்கப்பட்ட வாழ்வை 
வாழ்வதாக 
சொல்லிக்கொள்கிறோம் 
சபிக்கப்பட்டிருந்தாலும்!..

19 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் வாசகன்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சபிக்கப்பட்ட வாழ்க்கை நம் நாட்டில் பலருக்கு...

அருமையான கவிதை செந்தில்...

Unknown சொன்னது…

யதார்த்ததை காட்டி, பளீரென அறைகிறது. மிக சாதாரணமாக நாம் கடந்து செல்லும் மனிதர்களின் ரணம் பற்றி பேசுகிறது உங்கள் கவிதை. எளிய வார்த்தைகளில் வாழ்வின் ரகசியம் வருத்ததோடு கசிகிறது.

Unknown சொன்னது…

கே.ஆர்.பி. செந்திலின் தனித்தன்மை வாய்ந்த் டிரேட் மார்க் கவிதையாக்கம்..

vasu balaji சொன்னது…

/விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக
சொல்லிக்கொள்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்!.

சத்தியமிது:(

Unknown சொன்னது…

கவிதை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான கவிதை. யதார்த்தம்.

Chitra சொன்னது…

மனதை உலுக்கும் படமும் கவிதையும்....

பனித்துளி சங்கர் சொன்னது…

இதயம் முழுவதும் நிரம்பி வழிகிறது வலியின் சாயங்கள் . புகைப்படமும் அதற்கு தகுந்த வார்த்தை தொடுப்பும் கவிதையில் சிறப்பு . வாழ்த்துக்கள் நண்பா

நிரூபன் சொன்னது…

தெருவோரத்தில் வாழும் ஜீவன்களின் யதார்த்தை, உணர்வினை அழகாக வெளிப்படுத்தும் புகைப் படத்துடன் கூடிய கவிதையினூடாக வெளிப்படுத்தியுள்ளீர்க.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படமும் தலைப்பும் கவிதையை விட மனதை கலக்குவதாக உள்ளன.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக
சொல்லிக்கொள்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்!.///

சரியாக சொன்னீர்கள்....

பெயரில்லா சொன்னது…

சூப்பர்!

சசிகுமார் சொன்னது…

கவிதையிலும் உங்களின் சமூக உணர்வு வெளிப்படுகிறது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

Unknown சொன்னது…

உண்மைதான் சார்

போளூர் தயாநிதி சொன்னது…

//விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக
சொல்லிக்கொள்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்!..//
அருமையான கவிதை

ஹேமா சொன்னது…

படத்தைப் பார்க்கவே கஸ்டமாயிருக்கு !

க ரா சொன்னது…

படமும் கவிதையும் கிளாசிக் ...