கிராம முன்னேற்றங்கள்தாம் இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என் மகாத்மா சொன்னார். தன் சொந்த தேவைக்கு தனக்கு தாமே தன்னிறைவை கொண்டிருந்த கிராமங்கள் இப்போது இல்லை.இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பத்தாண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என அப்போதைய தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார்கள். கிராமப் பொருளாதார முன்னேற்றமே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது.
கிராம முன்னேற்றத்திற்க்காக விவசாயிகளை ஒருங்கிணைக்க கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டன. ஆரம்பத்தில் மிக உற்சாமாக இயங்கிய கூட்டுறவு சங்கங்கள், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைய ஆரம்பித்தது. விவசாய மற்றும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் அரசியல்வாதிகள் பொறுப்பேற்க ஆரம்பித்தவுடன். கையாடலும் கூடவே நடக்க ஆரம்பித்தன. அதன்பிறகு கடன் கொடுப்பதே பெரிய விவசாயிகள் அல்லது அப்போதைய ஆளும் கட்சியினருக்கு என்றானது.
மக்களுக்காக மக்களால் நிர்வாகிக்கப்பட வேண்டிய கூட்டுறவு சங்கங்கள் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டது எம்.ஜி.ஆரின் பொற்க்கால ஆட்சியில்தான். அதன்பின் வந்த தி.மு.க ஆட்சியில் அமைச்சரான கோ.சி.மணி மீண்டும் அதனை சரி செய்து குறைகளை களைந்து அதற்கு புத்துயிர் ஊட்டினார். அப்புறம் மாற்றி மாற்றி இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் போட்டி போட்டு அதனை குழியில் தள்ளி தற்போது சாகும் தருவாயில் இருக்கிறது.
தொடர்ந்து கூட்டுறவு சங்கக்களுக்கான தேர்தல் நடத்தப்படவே இல்லை. மக்களால் நிர்வாகிக்கப்பட வேண்டிய கூட்டுறவு சங்கங்கள் இன்று அரசாங்கத்தால் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கிறது. உலக மயமாக்கலின் இன்னொரு பாதிப்பு இப்படி கூட்டுறவு சங்கங்கள் காணாமல் போவது. தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் இருக்கும் நிலையில் தனிப்பட்ட நபர்களால் அதிலும் முக்கியமாக அரசியல்வாதிகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டு. விவசாய நிலத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறிப்போய்விட்டது.
சென்னை நகரில் மட்டுமே நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பால் பற்றாக்குறையாக இருக்கிறது. தனியார் பால் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து அதனை மீண்டும் பால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறது. இரண்டு பசுமாடுகளை வைத்திருந்தால் அன்றாடம் குடும்ப செலவுகளை சமாளிக்கலாம். ஆனால் இன்றைய கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மாடுகளை அடிமாட்டுக்கு விற்றுவிட்டு பாக்கெட் பாலுக்கு மாறியதை பெருமையுடன் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய பால் உறபத்தியாளர் சங்கங்கள் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
ஒரு பசு மாடாவது வைத்திருப்பது கவுரவம் என்கிற நிலைமை போய் மாடு இல்லாமல் இருப்பது கவுரவம் என்கிற கேவலமான மனப்பான்மை எல்லோரிடம் வந்தற்கு காரணமே. அரசியல் கட்சிகளை தனியார் நிறுவனங்கள் போல் நடத்தும் கட்சிகளின் ஊடகங்கள் எப்போதும் சினிமா மற்றும் அதனை சார்ந்த நிகழ்சிகளை மட்டும் ஒளிபரப்பி மக்களின் மூளைகளை மழுங்கடித்து விட்டதுதான். அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் காயடிக்கப்பட்ட காளை மாடுகளைப்போல் வாரிசுகளுக்கு கோசம் போட்டு அவர்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்கு வாழ்வை சுமக்க பழகிவிட்டனர்.
உலகின் முன்னேறிய நாடுகளில் எல்லாம் விவசாயத்தில் குறைந்த அளவு தண்ணீரைக்கொண்டு மிகுந்த விளைச்சலை இயற்கை முறையில் விளைவிக்கும் மிகச்சிறந்த தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார்கள். இந்தியாவில் மேலும் மேலும் ஆழ்துளை கிணறுகளை எக்கச்சக்கமாக தோண்டி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுக சிறுக சேமிக்கப்பட்ட தண்ணீரை நாம் வீணாக்கி வருகிறோம். இதற்கான காரணமே நாம் அனைவரும் சுயநலப் பேய்களாக மாறி 'எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன' என்கிற மனப்பான்மைக்கு மாறிப்போனதுதான்.
ஜெயலலிதா வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி ஊழலில் கைதானபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி "இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய ஊழல்" என்று வர்ணித்தார். அவரின் இப்போதைய ஆள் ராசா செய்திருப்பது ஊழலே இல்லை என அறிக்கை விடுகிறார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை நடத்தும் சோனியாவும் அவரது செல்லப்பிள்ளையும் ஊழலை ஒழிப்போம்ன்னு சொல்லியே மிகப்பெரிய ஊழல்களை அரங்கேற்றியுள்ளனர்.
இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியிருக்கும் மொத்த பணத்தின் உத்தேச பதிப்பு எவ்வளவு தெரியும் Rs.2250000 Cr, இவ்வளவு பணத்தையும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள். இந்திய அரசியல்வாதிகள் தானும் சாப்பிடாமல், மக்களையும் சாப்பிட விடாமல் பணத்தை மென்மேலும் கொள்ளையடிப்பதில் போட்டா போட்டி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இணையம் எல்லா ஊர்களிலும், எல்லா வீடுகளிலும் குறைந்தபட்சம் மொபைல் போனிலாவது எளிதாக கிடைக்கும்போது நமக்கான மாற்றத்தின் விதை துளிர்விடும் என நம்புகிறேன்.. அதுவரை நமது தேசபக்தி சிசுபாலர்கள் என்னையும், இந்தக் கட்டுரையையும் திட்டிக்கொண்டே பக்கத்து நாயர் கடையில்போய் யூரியா கலக்கப்பட்ட பாக்கெட் பாலில் போடப்பட்ட புளியங்கொட்டை தூள் கலந்த டீயை உறிஞ்சியவாறே அரசியல் பேசுங்கள்...
தொடர்புடைய சுட்டிகள்:
18 கருத்துகள்:
http://puratchikkaaran.blogspot.com/2011/04/blog-post_20.html
நல்ல அருமையான பதிவு.
கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை மீண்டும் எப்போது மக்களும், ஆட்சியாளர்களும், அனைத்துக்கட்சியினரும் உணர்வார்களோ?
அந்த நாளும் வந்திடாதோ!
>>
ஜெயலலிதா வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி ஊழலில் கைதானபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி "இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய ஊழல்" என்று வர்ணித்தார். அவரின் இப்போதைய ஆள் ராசா செய்திருப்பது ஊழலே இல்லை என அறிக்கை விடுகிறார்.
ஒருவர் கட்சி எலக்ஷன்ல தோற்றால் மட்டுமே சி எம் ஆகாமல் போக முடியாதுன்னு உளறுவாரோ?
கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை கடந்து போகும் பொதெல்லாம் "எப்படி செயல்பட்ட சங்கங்கள் இப்படியாகி விட்டதே" என்று சங்கடப்படுவேன். அரசியல்வாதிகளை விடுங்கள். எந்த மக்களுக்காக கொண்டு வரப்பட்டதோ அந்த மக்களுக்கே இதன் அருமை பெருமை தெரியவில்லையே.
இந்த பிரச்ச்னைக்கு என்ன தீர்வு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
//தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் இருக்கும்//
இப்படி ஒரு சட்டம் தமிழகத்தில் இருக்கா.......... சட்டத்தை போடறதும் இவனுங்க தான் அதை மீறுவதும் இந்த பாழா போன அரசியல் வாதிங்க தான்.
அண்ணே.. டீ இன்னும் வரல..
அற்புதமான கட்டுரை.. கிராமங்கள் முற்றிலும் அழியும் அறிகுறியே கிராமங்கள் நகர முறைகளுக்கு மாறுதல். கூட்டுறவு மட்டுமல்ல, நம் அரசியல் வாதிகள் எங்கெல்லாம் கை வைக்கின்றனரோ அங்கெல்லாம் இந்த மாதிரி நடப்பது மிகக் கொடுமையானது. வேலியே பயிரை சாதாரணமாக உரிமையோடு மேய்கிறது.. உரிமையாளர்களாகிய மக்கள் வேடிக்கைபார்க்கிறோம்.. கசப்பான வேதனையான உண்மை.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//கிராமங்கள் முற்றிலும் அழியும் அறிகுறியே கிராமங்கள் நகர முறைகளுக்கு மாறுதல். //
இன்று இந்தியாவிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட(40%) மாநிலம் என்ற பெருமையை(?) அடைந்துள்ளது தமிழகம்.
இன்னும் சில பத்தாண்டுகளில் முழுமையான நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறலாம்.
//ஒரு பசு மாடாவது வைத்திருப்பது கவுரவம் என்கிற நிலைமை போய் மாடு இல்லாமல் இருப்பது கவுரவம் என்கிற கேவலமான மனப்பான்மை எல்லோரிடம் வந்தற்கு காரணமே. அரசியல் கட்சிகளை தனியார் நிறுவனங்கள் போல் நடத்தும் கட்சிகளின் ஊடகங்கள் எப்போதும் சினிமா மற்றும் அதனை சார்ந்த நிகழ்சிகளை மட்டும் ஒளிபரப்பி மக்களின் மூளைகளை மழுங்கடித்து விட்டதுதான்.//
இப்பல்லாம் மாடு வைத்திருந்தாலும் அதற்கு பச்சைத் தீவனம் கிடைப்பது பெரும்பாடு. சோளத்தட்டு, வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு இதெல்லாம் வாங்கிப் போட்டு, பாலக் கறந்து, சொசைட்டியில ஊத்தி காச வாங்கறதுக்கு பதிலா பாக்கட் பால வாங்கறது எளிதானது இல்லையா?
மாற்றாக மாடு வளர்ப்பது இப்படியும் மாறலாம்.
எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விஷயம்...
//கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை கடந்து போகும் பொதெல்லாம் "எப்படி செயல்பட்ட சங்கங்கள் இப்படியாகி விட்டதே" என்று சங்கடப்படுவேன். அரசியல்வாதிகளை விடுங்கள். எந்த மக்களுக்காக கொண்டு வரப்பட்டதோ அந்த மக்களுக்கே இதன் அருமை பெருமை தெரியவில்லையே.//
நல்ல பதிவு. என் எண்ணமும் இதுவே...!!!
அதெல்லாம் வேணாம். கறந்தபால் காபி கிடைக்கற இடத்துக்கு கூப்பிடுங்க. jokes apart ரொம்ப முக்கியமான பதிவு.
//தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் இருக்கும் நிலையில் தனிப்பட்ட நபர்களால் அதிலும் முக்கியமாக அரசியல்வாதிகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டு. விவசாய நிலத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறிப்போய்விட்டது.//
ரியல் எஸ்டேட்காரர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்வதும்,1க்கு 1 இலவசம்,தங்க காசுன்னு நம் கண்முன்னே விளம்பரம் செய்தும் இது பற்றி யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல.அதுவும் விவசாய நிலங்களையெல்லாம் பட்டா போட்டு விற்பது இன்னும் கொடுமை.
பார்க்க,,,,பணம் விமர்சனம்
http://ragariz.blogspot.com/2011/04/krp-senthil-author-of-panam.html
நல்ல பதிவு செந்தில். கூட்டுறவின் மிகப்பெரிய மகத்துவத்தை குஜராத், அமுல் பால் பண்ணைகளும், ஆந்திராவின் மேக்ஸ் சட்டத்தின் அடிப்படையிலான கூட்டுறவு அமைப்புகளையும் பார்த்தால் உணரமுடியும். எல்லா நல்ல விஷயங்களையும் கடித்து சக்கையாக்கும் திராவிட கட்சிகள் கூட்டுறவை தமிழ்நாட்டில் செல்லாக்காக்கிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தலே நடத்தவில்லை. கூடிய சீக்கிரம் இதே போல, தற்போது நம்பிக்கையளித்துவரும் மக்கள் இயக்கமான சுய உதவிக்குழுக்களையும் அடித்து உலையில் போடப்போகிறார்கள். காலக்கொடுமை...
அவசியமான இடுகை!
நல்ல பதிவு அண்ணன்,சரியான நிர்வகாமிண்மையல் பாதிக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் மண்னார்குடி பாமணி உர மணி ஆலையும் ஒன்று..
சத்ீஷ குமார்..
பரௌனி
பீஹார்.
கருத்துரையிடுக