25 ஏப்., 2011

நாம் நினைத்தால் நிச்சயம் மாற்றலாம்...


நம்மில் எத்தனைபேர் தெருவில் நம்மிடம் கையேந்துபவர்களுக்கு பிச்சை போடுகிறோம், எத்தனை பேர் அவர்களை திட்டி அனுப்புகிறோம். எத்தனை பேர் பரிதாபப்படுகிறோம். எத்தனை பேர் அவர்களுக்கான மாற்று வழிகளை யோசிக்கிறோம். 

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்துவிட்டு நான்கு நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. வாழ்வில் வலி ஒன்றை மட்டுமே அனுபவிப்பவர்கள், அந்த உலகத்தையும் சந்தோசமாக ஏற்றுகொள்ள எப்படி பழகிக்கொண்டார்கள்? இதையே பாலா "நான் கடவுளில்" காட்டிய உலகத்தை பார்த்த கணத்தில் இருந்து இந்த உலகில் முதலில் அகற்றப்படவேண்டியது எதுவென புரிந்தது. ஆனால் பிச்சை எடுக்கவே தேவைப்படாத தமிழகத்தில், ஏனெனில் இங்குதான் கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு அரசாங்கமே வழங்குகிறது, எப்படி இத்தனை பிச்சைகாரர்கள் எனப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவின் தெலுங்கானா பகுதிக்காரர்கள். இவர்கள் பிச்சை எடுத்து தினமும் ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அப்படி தினமும் ஆயிரம் ரூபாய்வரை சம்பாதிக்க அவர்களின் கையில் வைத்திருக்கும் யாரோ ஒருவரின் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. ஆம் நண்பர்களே இந்தக்குழந்தைகள் எப்போதும் பிரச்சினையின்றி தூங்க பாலில் கஞ்சா கலந்து கொடுக்கபடுகிறது என சொல்கிறார்கள். வேறுபல உத்திகளை பயன்படுத்தவும் செய்கிறார்கள் என்றும் கேள்விப்பட நேரும்போது நாம் கொண்டாடும் சுதந்திரம் பற்றி எனக்கு கோபம்தான் வருகிறது.

சென்னையில் இதேபோல கோபம் வந்த இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து MOTTO CHILDREN'S என்கிற அமைப்பை ஏற்ப்படுத்தி நடத்தி வருகின்றனர். குழந்தைகள் மட்டுமல்லாது, கைவிடப்பட்ட முதியவர்களையும் பராமரிக்கிறார்கள். பாலியல் தொழிலில் இருந்து மீண்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க சுயதொழில் பயிற்சியும் அளித்து அவர்கள் வாழ்வு மேம்பட உதவுகிறார்கள். அந்தப்பகுதி மக்களும், காவல்துறை அதிகாரிகளும் இவர்களின் மேல் வைத்திருக்கும் மரியாதையை பார்க்கும்போது இவர்களின் நேர்மை எனக்குப் புரிந்தது.

இவர்களைப் போன்றவர்களுக்கு உதவவேண்டியது நமது கடமை. எனவே விருப்பமுள்ளவர்கள் தங்கள் உதவிகளை நேரிடையாக இவர்களுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் உதவிகளை ஆடைகளாகவோ, பொருட்களாகவோ, பணமாகவோ அனுப்பி வைக்கலாம். பணம் அனுப்பினால் 80G வரிவிலக்கு உண்டு. உங்கள் குழந்தைகள் பிறந்த நாளிலோ, உங்கள் திருமண நாளிலோ இந்த குழந்தைகளுக்கான ஒரு நாள் உணவை ஏற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 
cell no : 9380006110 / 8015573334 
telephone : 044-43569563


17 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

// கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு அரசாங்கமே வழங்குகிறது, //

பிச்சை எடுப்பதே அந்த ஒத்த ரூபாய்க்குத்தான சார்..
அரிசி இலவசம் கிடையாதே..!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆதரவுக்கரம் கொடுப்போம்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நிச்சயம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று...

அஞ்சா சிங்கம் சொன்னது…

நன்றி தலைவரே அருமையான பதிவு ..........

Sivakumar சொன்னது…

குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை மெயிலில் பட்டியல் போட்டு அனுப்பி உள்ளார்கள். சக பதிவர்களிடம் பேசி விரைவில் உதவி செய்ய முடிவெடுப்போம்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த விஷயத்தில் அரசாங்கம் எந்த ஒரு கவலையும் கொள்ளாததது.. வேதனைதன்...

மாற்றங்கள் தேவைதான் கண்டிப்பாக மாறும்...

ஜோதிஜி சொன்னது…

நன்றி செந்தில்.

வலைபதிவுகளில் இது போன்ற விசயங்கள் எழுதி என்ன சாதிக்க முடியும் என்பதை விட இப்படியும் பல நல்ல மனிதர்கள் மற்றவர்களின் நலனுக்காக தங்களை அர்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது படிப்பவர்களுக்கு உணர்த்தக்கூடும்.

கவி அழகன் சொன்னது…

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சமூக சிந்தனையுடன் கூடிய மிகவும் நல்லதொரு பதிவு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைத்தால் நிச்சயம் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்து விடலாம்.

பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்.

சசிகுமார் சொன்னது…

கண்டிப்பாக என்னால் ஆன உதவியை செய்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

////ஆம் நண்பர்களே இந்தக்குழந்தைகள் எப்போதும் பிரச்சினையின்றி தூங்க பாலில் கஞ்சா கலந்து கொடுக்கபடுகிறது என சொல்கிறார்கள்.// எவ்வளவு பெரிய கொடுமை.. குழந்தைகளின் எதிர்காலத்தை எரித்து தம் வறுமை போக்குகிறார்களா???((

பெயரில்லா சொன்னது…

Dead alien found in UFO hotspot in Russia ; With translation

http://www.youtube.com/watch?v=bMGatrWkG2c

http://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/dead-alien-found-in-russia-viral-video-spotlight-2269940.html

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே!

RK நண்பன்.. சொன்னது…

தகவலுக்கு நன்றி செந்தில் அண்ணா..

நிச்சயம் vaaippu கிடைக்கும்போது உதவுவோம்...

போளூர் தயாநிதி சொன்னது…

ஆதரவுக்கரம் கொடுப்போம்

test சொன்னது…

நான் ஏழாம் உலகம் இன்னும் படிக்கவில்லை! 'நான்கடவுள்' பார்த்து சில நாட்கள்....அதன்பின் பிச்சைக்காரர்கள், பிளாட்பார வாசிகளைப் பார்க்கும்போது எப்போதும் கேள்விகள் வலியாய் மனதில்! மாற வேண்டும்!

vasu balaji சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்பு கொள்கிறேன்.