அப்டீன்னு நான் சொல்லல... திருவள்ளுவரு (Nickname for wikipedia) சொல்றாரு. நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்க சாப்பிடுற உணவு எல்லாமே பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்தான்(processed food).சிங்கப்பூருக்குன்னு தனியா விவசாயமோ, இல்ல வேறவகையான உணவு உற்பத்தியோ இல்லை. அதுனால எல்லாமே வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் குறைந்தபட்சம் ரெண்டு நாள்லருந்து ஒருவாரம் பழசான உணவு வகைகளைத்தான் சாப்பிடறாங்க. ஆனா அவங்களோட சராசரி வயசு 82. இது ஏன்னு சொல்லி ஆரம்பத்துல எனக்கு சந்தேகமா இருந்திச்சி. ஏன்னா இந்தியர்கள் சாப்பிடுறது எல்லாமே ஃப்ரஷ்ஷான உணவுப்பொருட்கள்தான். அதுக்கப்புறம் அது சம்பந்தமா நெறைய தேடிப் படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கு சில ஆச்சர்யங்கள் கிடைச்சிது. அது என்னென்னன்னா...
எல்லாமே கலப்படமுங்கோ! வியாபாரிகள் அதிக லாபத்துக்காக இப்படி கலப்பட வியாபாரம் செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்களை பணக்காரர்களாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம் நாட்டில் சுகாதரத்துறை அப்படீன்னு ஒன்னு இருக்கிற மாதிரியே தெரியலீங்க. என் நண்பர் சென்னை ஆட்டுதொட்டி அருகே ஒரு சிறிய கோல்ட் ஸ்டோரேஜ் வைத்திருந்தார். பக்கத்தில் வெட்டுகிற ஆடு முதல் மாடு வரைக்கும் மீந்ததை அங்குதான் வைப்பார்களாம். ஆனால் நாள் முழுதும் வெயிலில் கிடந்ததால் ஏற்கனவே கெட்டுப்போக துவங்கியிருக்கும் அவைகள் கோல்ட் ஸ்டோரேஜ் ல் வைப்பதால் ஒன்றும் பயனளிக்காமல் மேலும் கெட்டுப் போயிருக்குமாம். அதனைத்தான் தெருவோர கடைக்காரர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள் என்று சொல்வார்.
தண்ணீர் முதல் அத்தனை உணவு வகைகளும் இப்படி சுயநலத்துக்காக அடிப்படை நேர்மையின்றி விற்கப் படுவதால்தான் நமது சராசரி ஆயுளானது எல்லாவற்றையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சிங்கப்பூரர்களை காட்டிலும் குறைவாக இருக்கிறது.
நேரமிருப்பவர்கள் தொடர்புடைய சுட்டிகளை படித்து பாருங்கள், அதிர்சிகள் காத்திருக்கின்றன..
7 கருத்துகள்:
அடடா. 82 - 64 = 18 x 130 கோடி = 2340 கோடி வருடங்களை [விலை மதிப்பற்ற சராசரி மனித ஆயுளை] இபபடி அநியாயமாக கலப்படம் வாயிலாக கொல்லுகிறார்களே, பாவிகள்.
மிகவும் வருந்தத்தக்க விஷயம் தான்.
இது இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது...
விவசாயத்தில் புரட்சி என்ற பெயரில் பல்வேறு ராசாயண பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி நடக்கிறது அதனால் பல்வேறு விளைவுகளை நாம் சந்திக்க நேருடுகிறது...
இன்னும் தொழிற்சாலைகளில் உற்ப்த்தியாகும் பொருட்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்...
குளிர் பாணங்களில் அதிக அளவு விஷ கலவைகள் இருப்பது தெரிந்தும் நாம் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம்....
தாங்க கவிதை வீதி வந்து வெகுநாட்கள் ஆகிறது..
அதிர்ச்சியான செய்தி, கலப்படம் செய்கிறவர்கள் போதாதென்று எண்டோசல்பானை அரசாங்கமே ஊக்கிவிக்கும் கொடுமை வேறு, கூடிய விரைவில் 30 வயதுக்குள்ளேயே அனைவரும் ஆண்டணுபவித்து விட்டு போக வேண்டியதுதான் :-(
அடுத்த தலைமுறையில் இன்னும் குறையும்...
இன்னும் குறைய வாய்ப்பிருக்கு...
என்ன அண்ணே... இப்பிடி சொல்லி வயித்துல புளிய கரைச்சிட்டீங்க
கருத்துரையிடுக