இந்த நகரத்தில்
..
யாருமற்ற வீதியில்
தனிமையின் கால்களால்
கடந்து கொண்டிருக்கிறேன்
காலத்தை..
நகரெங்கும் பரவியிருக்கும்
சூரியப் புழுக்கம்
மனதை தகிக்க வைத்து
உடலை
வியர்வைக் கண்ணீரால்
கழுவ,
பூட்டிய கதவுகளின் பின்னிருந்து
வரும்
சமையல் வாசனைகளை
நுகர்ந்த தெரு நாய்கள்
வால் குழைத்து
நிழல் தேடுகிறது..
நேற்று மதியம் முதலாக
எனக்கான அரிசியில்
என் பெயர் இல்லை போல..
இன்னும் சற்று நேரத்தில்
தற்காலிக
அல்லது
நிரந்தர
கண் அயர்வுக்கு
நான் போகக்கூடும்..
மொட்டைமாடிகளில்
கைப்பிடிச் சோற்றிற்காக
அலையும் காகமென
இப்பெரு நகரமெங்கும்
பரவிக்கொண்டிருக்கின்றன
என் பசித்த கனவுகள்
6 கருத்துகள்:
கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணே
கவிதை சூப்பர்
கலக்குறிங்க போங்க ...
நெருடல் வரிகள்...
ஏதோ ஒரு பெரிய ஜீவாதாரமான விஷயத்தைச் சொல்லாமல் சொல்லிப்போகும் அசத்தலான கவிதை. பாராட்டுக்கள்.
fantastic...
கருத்துரையிடுக