8 ஜூன், 2011

மெல்ல மரித்துக்கொண்டிருக்கிறது மனிதம்...

என்னை நம்பு என்றாய்
நம்பினேன் 
நம்பிக்கைத் துரோகம் என்றாய்
யாருக்கு யார் செய்தால் என்ன?
துரோகம் ஒரு போதும் 
நம்பியவரை கைவிடாதிருக்கட்டும்..

நமக்கான உறவுகளை 
நாம்தான் உருவாக்கினோம்
நமக்கான அன்பையும் அப்படியே
நமக்கான பிரச்சினைகளும் 
நம்மால்தான் உருவானது 
நமது பிரிவில் மிச்சமிருப்பது 
சுயநலம் மட்டுமே..

அதனால் என்ன 
சுயநலம் பொதுவானதாக இருக்கும்வரை 
நியாங்களும் பொதுவானவைதான்..

நீ 
நிச்சயம் 
நியாயமாகத்தான் நடந்துகொண்டாய் 
நானும் அப்படித்தான் 
நடுவிலிருக்கும் இடைவெளிகள்தான் 
நமது அநியாங்களை 
நிரப்பிக்கொண்டிருக்கிறது..

உனக்கு இன்னொரு நட்பு கிடைக்கும் 
எனக்கும் அப்படியே...
அதன்பிறகு 
தொடர்ந்து வரும் துரோகங்களுக்கு 
நாம் பழகியிருப்பதால் 
துரோகங்கள் மன்னிக்கப்படலாம் 
அல்லது 
நியாயங்கள் பிரித்து வைக்கலாம் 
அவரவர் நியாயம் அவரவர்க்கு 
துரோகங்களும் அப்படியே..

எல்லோருக்குமே தேவைப்படுகிறது 
சில நட்புகளும் 
சில துரோகங்களும் 
சில கதைகளும்
நீ நியாயவான் 
நானும் நியாயவான் 
அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.. 

மனிதர்கள் இல்லா 
வாழ்வை விரும்புகிறேன் 
மனிதர்கள் நடுவில் 
மனிதனாக..

மெல்ல மரித்துக்கொண்டிருக்கிறது 
மனிதம் 
என்னைக் கொன்றவாறே..

11 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மெல்ல மரித்துகொண்டிருக்கிறது
மனிதம்..

இதோ அதன் நிழற்படக்காட்சியை நண்பர் ஒருவர் தம் பதிவில் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்..

http://karurkirukkan.blogspot.com/2011/06/blog-post_08.html

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மிச்சமிருப்பது
சுயநலம் மட்டுமே..

சக்தி கல்வி மையம் சொன்னது…

மனிதம் வளர்ப்போம்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மனிதர்கள் இல்லா
வாழ்வை விரும்புகிறேன்
மனிதர்கள் நடுவில்
மனிதனாக..//

ஆஹா!

rajamelaiyur சொன்னது…

Super . . . Excellent . . Wonderful . .

ஹேமா சொன்னது…

இன்றைய நிதர்சனம் !

vidivelli சொன்னது…

//மனிதர்கள் இல்லா
வாழ்வை விரும்புகிறேன்
மனிதர்கள் நடுவில்
மனிதனாக..//
நல்ல கவிதை.



நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்

அன்புடன் நான் சொன்னது…

உண்மையின் வெளிப்பாடு... சொற்களாய்.... நல்லாயிருக்குங்க தோழர்.

Kalee J சொன்னது…

Great kavithai!

அருண் சொன்னது…

//மனிதர்கள் இல்லா
வாழ்வை விரும்புகிறேன்
மனிதர்கள் நடுவில்
மனிதனாக..//என்னை கவர்ந்த வரி.
யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை.
-அருண்-