25 செப்., 2011

அபாய வளைவுகள்...

எப்போதும் 
உன் கண்கள் வழியே
உன் மனதுக்குள் நுழைய முயல்கிறேன்
உன் குத்தீட்டிக் கண்கள்
ஒரு பாலியல் குற்றவாளியைப்போல்
என்னை விசாரனை செய்கிறது..

என் பின்னிருக்கையில்

நீ அமர நேரும்போதெல்லாம்
தெளிவாகத்
தள்ளியே அமருகிறாய்
பள்ளம் இருக்கும் பார்த்து போ என்கிறாய்
நுனி விரல்களால் கை குலுக்குகிறாய்
அளவாய் சிரிக்கிறாய்
எல்லோரிடமும் நான் நல்லவன்
என பாராட்டி வைக்கிறாய்..

கேட்டுவிடும் தூரத்தில்தான்

நீ இருக்கிறாய்
கேட்டு மறுத்து விட்டால் கூட பரவாயில்லை
போட்டுக் கொடுத்து மானத்தை வாங்கிவிட்டால்
என்ன ஆவது என
என் ஆறாம் அறிவு எச்சரித்தாலும்
சபிக்கப்பட்ட இந்த நகரத்து 
சாலைகளைப் போல
அபாயகரமாகத்தான் இருக்கிறது
அவள் வளைவுகளும்..

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

சூப்பருங்கோ கவிதை அசத்தலுங்கோ

Unknown சொன்னது…

நான் தான் முதல்லயா

Unknown சொன்னது…

உடான்ஸ்-ல இனைச்சாச்சி ஓட்டும் போட்டாச்சி

SURYAJEEVA சொன்னது…

என்னவோ சொல்றீங்க? கேட்டுக்கிறோம்

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

மாமா இந்த அனுபவம் எப்ப நடந்தது......???

கோகுல் சொன்னது…

வளைவுகள் எங்கே இருந்தாலும் அபாயம் தான் போல?

நாய் நக்ஸ் சொன்னது…

அடி பலமோ ??

Jana சொன்னது…

வளைவில் முந்தாதே என்பதன் அர்த்தம் இப்போ புரியுது :)

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//கேட்டு மறுத்து விட்டால் கூட பரவாயில்லை
போட்டுக் கொடுத்து மானத்தை வாங்கிவிட்டால்//

-- நியாயமான கவலை தான்..

நல்லாயிருக்கு உங்க கவிதை...

Sivakumar சொன்னது…

பார்ரா!