அனைவருக்கும் வணக்கம். வருகிற 25 ந்தேதி இரவே சென்னை வந்துவிட திட்டமிட்டு
இருந்தேன். ஆனால் எதிர்பாராத வேலைச்சுமையால் என்னால் இப் பிரமாண்டமான
பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். ஆனாலும் பல
வருடங்களாக இப்படி ஒரு பதிவர் சந்திப்பை நடத்தவேண்டும் என பலரும்
ஆசைப்பட்டோம். நிறைய காரணங்கள் எம்மால் அதற்கு ஒரு இறுதி வடிவம் கொடுக்க
இயலாமலே இருந்தது. ஆனால் இப்போது புலவர் ஐயா அவர்கள், சென்னை பித்தன் ஐயா
அவர்கள், திரு. மதுமதி, திரு.பால கணேஷ் ஆகியோரின் ஆர்வம் அண்ணன்
மோகன்குமார் தம்பிகள் செல்வின், சிவக்குமார், ஆனா.முனா (நான் இப்படித்தான்
மொபைலில் வைத்திருக்கிறேன்), பிரபாகரன், கருண், சவுந்தர், ரஹீம் கசாலி,
சிராஜ், நக்கீரன், வீடு சுரேஷ் குமார் (தம்பி மெயில் இன்னும் வரல) என என்
படைத்தளபதிகள் துணையோடு வெற்றிகரமாக நடக்கப்போகிறது.
சென்னையில் இருக்கும் மூத்த பதிவர்களில் அண்ணன் மணிஜி, அண்ணன் காவேரி கணேஷ் , அண்ணன் உண்மைத்தமிழன், கார்க்கி, விதூஷ், பெஸ்கி, கேபிள், சுரேகா அமெரிக்கா போய்விட்டதால் அப்துல்லாவால் மனதளவிலான ஆதரவைத் தவிர மற்றவர்கள் கலந்து கொள்வோர் பட்டியலில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இத்தனை காலம் நம்மால் முடியவில்லை. ஆனாலும் யாரோ கைக்காசை போட்டு செலவழிக்கிறார்கள். எனவே அவர்களை பாராட்டும் விதமாக அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். எப்போதும் நம் வழக்கமான பதிவர் சந்திப்புகளைப் போல் விருப்பப் பட்டவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் வரலாம், போகலாம் ஆனால் ஒரு நாள் முழுக்க திட்டமிடப்பட்டு நடக்கும் பதிவர் சந்திப்பில் நம் பெயர்களை பதிந்தால்தான் அவர்களால் நமக்கான உணவு ஏற்பாடுகளை சரியாக செய்ய முடியும் என்பதால் அன்பு கூர்ந்து சென்னையின் பிரபல பதிவர்கள் தங்கள் பெயர்களை பதிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
இடையில் மனிதாபிமானி எனும் ஒரு(அல்லது சில) பதிவரால் தேவையற்ற குழப்பங்கள் ஆரம்பித்து இருக்கின்றன. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் அரபு தேசம் போனால் மட்டும்தான் இப்படியான மத குழப்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள். திடீரென ஐந்து வேலை தொழுவதும், மார்க்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்ததும் உடனே அல்லா மீதான நம்பிக்கை அதிகமாகி நீங்களே நபியாக மாறி இஸ்லாம் அல்லாதோரிடம் உங்கள் நம்பிக்கைகளை கடைவிரிக்கிறீர்கள் கொள்வோர் யாருமற்ற விரக்தியில் மனஉளைச்சல் மேலோங்க சாந்தியும் சமாதானமும் நிலவும் இவ்வுலகில் அதனை முழுதும் அகற்றப் போராடுகிறீர்கள் . மார்க்கம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறது ஆனால் அரபு தேசமாகட்டும், மலேயா, மற்றும் இன்னபிற இஸ்லாமிய தேசங்களாகட்டும், இத்துப் போன இந்தோனேசியாவாகட்டும் எவனும் இந்திய இஸ்லாமியர்களை சமமாக மதிப்பதில்லை, ஏன் பட்டாணி முஸ்லீம் மற்றவர்களை சமமாக பாவிப்பதில்லை, இப்படி உங்களுக்குள் களையவேண்டிய ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு எங்கள் தனிப்பட்ட மதுப் பழக்கத்தை வைத்து கிண்டலடிப்பது தனிமனித அத்துமீறல். இனி உண்மையான சாந்தியும், சமாதானமும் நிலவ அல்லா உங்களை ஆசிர்வதிப்பாராக. இன்ஷா அல்லா.
மற்றபடி பதிவர் சந்திப்புக்காக உழைக்கும் அனைத்தும் தோழர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மிகவும் நேர்த்தியாக நடத்தப்படும் ஈரோடு பதிவர் சந்திப்புகளையே இங்கு ஒவ்வொரு வருடமும் யாரோ ஒருவர் குறை சொல்லிக்கொண்டுதான் இருகின்றனர். எனவே நமக்கு சம்பந்தம் இல்லாதோரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால் அதனை செயல்படுத்துங்கள். இல்லாவிடில் புறந்தள்ளுங்கள்.
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

28 கருத்துகள்:
krpiji,
நடுநிலையான பார்வை, சரியாக சொன்னீர்கள்!
அருமை கே.ஆர்.பி
நீங்கள் இங்கு இல்லாதது வருத்தம்தான் .என்றாலும் விழா மிக சிறப்பாக நடைபெறும் என்பது உறுதி .............
நன்றி அண்ணே ............
Nice....krp....
Vetri nam pakkame.....
சிறப்பான அலசல் நன்றிங்க.
அண்ணே உங்களை சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு....
பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் (TM 4)
நல்லது தலைவரே...
விழா சிறக்க வாழ்த்துக்கள்... (TM 5)
எளிமையாக ஆனால் சிறப்பாக,
சரியாய் சொல்லிட்டேங்க...
மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் .. தனிப்பட்ட ஒருவரின் செயல்களை விமர்சனம் செய்வது நாகரிகமில்லை. ஊரை திருத்துவது அவர்கள் வேலையும் இல்லை
நீங்கள் அரபு தேசம் போனால் மட்டும்தான் இப்படியான மத குழப்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள். திடீரென ஐந்து வேலை தொழுவதும், மார்க்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்ததும் உடனே அல்லா மீதான நம்பிக்கை அதிகமாகி நீங்களே நபியாக மாறி இஸ்லாம் அல்லாதோரிடம் உங்கள் நம்பிக்கைகளை கடைவிரிக்கிறீர்கள் கொள்வோர் யாருமற்ற விரக்தியில் மனஉளைச்சல் மேலோங்க சாந்தியும் சமாதானமும் நிலவும் இவ்வுலகில் அதனை முழுதும் அகற்றப் போராடுகிறீர்கள் . மார்க்கம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறது ஆனால் அரபு தேசமாகட்டும், மலேயா, மற்றும் இன்னபிற இஸ்லாமிய தேசங்களாகட்டும், இத்துப் போன இந்தோனேசியாவாகட்டும் எவனும் இந்திய இஸ்லாமியர்களை சமமாக மதிப்பதில்லை,
அருமையான வரிகள்
ஏன் பட்டாணி முஸ்லீம் மற்றவர்களை சமமாக பாவிப்பதில்லை,( இந்த கருத்தில் உடன்பாடு இல்லை இது தவறான கருத்தாகும்
அண்ணே, நீங்கள் பதிவர் சந்திப்புக்கு வருவீர்கள் என்று மிகவும் எதிர்பார்த்தேன். பரவாயில்லை. முந்தாநாள் நடந்த கலாட்டாவில் நீங்கள் பங்குபெற்றிருந்தால் கதை வேறு மாதிரி போயிருக்கும்.
குடி வெறி தன்னை அழிக்கும். மதவெறி சமூகத்தையே அழிக்கும் என்று தெரியாத சிலரின் தூண்டுதலாலேயே கலாட்டாக்கள் நடந்தேறின. எத்தனை பெரியார்கள் வந்தாலும் இது போன்ற புல்லுருவிகளை ஒழிக்க முடியாது போல.
செந்திலண்ணே!நலமா?
//அரபு தேசம் போனால் மட்டும்தான் இப்படியான மத குழப்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள்//
அதென்ன அப்படி சொல்லீட்டீங்க.நானெல்லாம் இன்னும் மதத்திற்குள்ளேயே மாட்டிக்கொள்ளவில்லை.இனி எப்போது குழப்பத்தில் மாட்டிக்கொள்வது:)
தனிமனித நம்பிக்கைகள் பொது கலந்துரையாடலைப் பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்சினை.
செந்தில் அண்ணே, பொதுவாக மத விசயங்களில் ஈடுபடுவோர் குறித்து அது இஸ்லாமோ அல்லது எந்த மதமோ நான் வெளிப்படையாக கருத்துகூறுவதில்லை. முதல்முறையாக உங்கள் இடுகையில் சில வார்த்தைகள் மதக் கருத்துகளை இணையத்தில் முன்வைப்போருக்குச் சொல்ல விரும்புகிறேன். பிறர் அறிந்துகொள்ளும் விதமாக கேள்விகள் எழுப்பும்போது சொல்வது வேறு.. பிறருக்கு எரிச்சல் மூட்டும் விதத்தில் கருத்துக்களை திணிப்பது என்பது வேறு. இந்த எளிய உண்மை பலருக்கும் புரிவதில்லை என்பதில் எனக்கும் வருத்தமே. மதத்தை இணையம் வழி எத்தி வைத்து மதத்துக்கு நல்ல பெயர் எடுத்துத் தருகிறேன் என்று கிளம்பியவர்களால் இன்று கிடைத்த பலன் என்ன? அண்ணன் அஞ்சாசிங்கம் போன்ற பல நடுநிலமையான, பிறரோடு அன்போடும்,இணக்கத்தோடும்,நட்போடும் இருக்கக்கூடியவர்களே இன்றைக்கு இஸ்லாத்தை எதிர்த்து எரிச்சலோடு கருத்துகளை முன்வைக்கும் அளவிற்கு மாற்றியதே இவர்கள் செய்த ஒரே சாதனை!!
ஹலோ... பதிவரே...
மனிதாபிமானி பதிவுக்கும்... அதை தொடர்ந்த உங்கள் உள்நோக்கத்துடன் மதவெறி தூண்டும் துவேஷ பாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே..!
இப்போ ரெண்டே கட்சிதான்..! குடியை ஆதரிக்கிற கட்சி. அதை எதிர்க்கிற கட்சி..!
நீங்க எந்த பக்கம்..? அதை முதல்லே சொல்லுங்க.
அப்புறம்... மத்ததை பத்தி பேசலாம்.
ஒரு காலத்தில் சென்னையின் முன்னோடிப் பதிவர் என்ற அடிப்படையில் விழா சிறக்க என் அன்பான வாழ்த்துகள் :)
நீங்கள் இல்லாதது ஒரு பெரிய குறைதான்!
விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.
///~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…
ஹலோ... பதிவரே...
மனிதாபிமானி பதிவுக்கும்... அதை தொடர்ந்த உங்கள் உள்நோக்கத்துடன் மதவெறி தூண்டும் துவேஷ பாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே..!
இப்போ ரெண்டே கட்சிதான்..! குடியை ஆதரிக்கிற கட்சி. அதை எதிர்க்கிற கட்சி..!
நீங்க எந்த பக்கம்..? அதை முதல்லே சொல்லுங்க.
அப்புறம்... மத்ததை பத்தி பேசலாம்.///
குடியை ஆதரிக்கின்ற கட்சி ஆல்ஹகால் அதிகம் குடிப்பார்கள்.
குடியை எதிர்க்கின்ற கட்சி ஆல்ஹகாலை குறைவாகக் குடிப்பார்கள்.
என் மச்சான் சுவனப்பிரியன் எழுதியதைப் படிக்கவில்லையா?
நான் குடிக்கும் கட்சியை எப்போதும் ஆதரிக்க மாட்டேன்.
உன்னைப் போல் மனித ரத்தம் குடிக்கும் கும்பலை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன்.
"I am citizen of MARS"
கே.ஆர். பி. விழா சிறப்புற வாழ்த்துகள். என்னைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தம் மேலோங்குகிறது.
மனிதாபிமானி சர்ச்சையை நானும் படித்தேன். வருந்த வேண்டிய விஷயம். அதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் உண்மைதான்.
நீங்கள் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்த்தேன்..
நல்ல பதிவு !!! ஒரு சில மதவாதிகளின் செயலால் அனைத்து இஸ்லாமிய தமிழ் பதிவர்களும் அப்படித் தான் என முடிவுக்கு வரத் தேவை இல்லை ... கருப்பு ஆடுகளை கண்டுப்பிடித்து அவர்களே வெளியேற்றினால் அனைவருக்கும் நலம் !!!
பொறுக்காதவர் பொறாமைக் கொள்வதும், குழப்பம் செய்வதும் வழக்கம் தான் !!! இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றே நினைக்கின்றேன்.
@ முஹம்மத் ஆஷிக் - // இப்போ ரெண்டே கட்சிதான்..! குடியை ஆதரிக்கிற கட்சி. அதை எதிர்க்கிற கட்சி..! //
எப்போதுமே ரெண்டு ரெண்டாத் தான் உங்களுக்குத் தெரியுமா ..
எதிலும் மூன்றாவது ஒன்று இருக்கவே செய்யும் .. நாங்கள் மூன்றாவது அணி ...
அதாவது ஹலால் குடிகாரர்கள் !!! ( விளக்கத்துக்கு சுவனப்பிரியன் பதிவை படிக்கவும் ) ...
:)
//என் படைத்தளபதிகள் துணையோடு வெற்றிகரமாக நடக்கப்போகிறது. //
கிங் மேக்கர் கிங் ஆயிட்டார். கிளிக்கு ரெக்கை மொளச்சிடுத்து. அது ஆத்தை விட்டே பறந்து போயிடுத்து!!
@ ஆரூர் முனா
பெரியாரே மதுவை ஒழிக்க எண்ணியவர். ஆரூர் எனக்கு மண்ட காயுது :))
//பெரியாரே மதுவை ஒழிக்க எண்ணியவர். ஆரூர் எனக்கு மண்ட காயுது :))//
சிவா,
அது பெரியார் காங்கிரசில் இருந்தப்போ, அப்புறம் அவரே கள்ளு தமிழர்கள் பாரம்பரியம்னு பனைத்தொழிலாளர்களுக்காக சொன்னதாக நினைவு.
எனவே கொஞ்சம் "தண்ணி"யில நனைந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம் :-))
இ அண்ணாச்சிங்களுக்கு வேற ஜோலியே இல்லே அவனுங்களுக்குள்ள
தள்ளு கூடனே சமயம் உள்ளு, ங்கல கண்டு படிக்கு நெங்கக்கு ஒரு வகுப்பே உள்ளு அது மலையாளி. நெங்கக்கு ஆயாள் நாயரானோ,காக்கவனோ,
அச்சாயநானோ யாராயலும் அவன் மலையாளியானு.
கருத்துரையிடுக