Photo : KRPSenthil |
சதுரங்கப் பலகையில்
எதிரெதிர் அமரும்போது
நீ கவனமாக
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை
நான் விரும்பி தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது
உன் கண்களுக்கு தப்புவதில்லை
எனது பிஷப்புகளும்
ஆமென்..
கொடுத்தாலும் வாங்கினாலும்
முத்தங்களுக்காய் பலியான
சிப்பாய் நான்..
செக் வைத்த இறுமாப்பில்
உன்
உன்
வெற்றிச் சிரிப்பை
காற்றில் பரவவிட்டபோது
காற்றில் பரவவிட்டபோது
உறைந்துபோன முத்தங்களால்
இந்தக் கவிதை தன்னையே
இன்னொரு முறை
எழுதத்துவங்கியது ..
அடுத்த ஆட்டம்
இன்னும் சிறிது நேரத்தில்
ஒரு
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும்
நீ ராணியாகவும்
நான் ஜெயிக்க நீ தோற்க
நீ ஜெயிக்க நான் தோற்க..
7 கருத்துகள்:
செக் வைத்த இறுமாப்பில்
உன்
வெற்றிச் சிரிப்பை
காற்றில் பரவவிட்டபோது
உறைந்துபோன முத்தங்களால்
இந்தக் கவிதை தன்னையே
இன்னொரு முறை
எழுதத்துவங்கியது ..
ஆஹா... அருமை அண்ணா...
ஒரு செவ்வகப் பலகையின் மேலேயா...?
நல்லது...
நல்ல ஒரு கவிதை , நினைப்பு
// நீ கவனமாக
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை
நான் விரும்பி தோற்பதை ..//
இது நல்லா இருக்கு. கவிதையே நல்லாத்தான் இருக்கு. இந்த வரிகள்ல இருக்கிற சொல் ஒழுங்கு புதுமையா, அந்த உணர்வு நிலைபாட்டை உணர்த்துவதா இருக்கு.
arumai annaa.....
கவர்ந்திழுக்கும் வார்த்தைகளில் அருமையான கவிதை! நன்றி!
nice ! senthil
கருத்துரையிடுக