11 ஆக., 2013

ஐந்து ஐந்து ஐந்து ...

மென்மையான காதலில் அழுத்தமான ஒரு சோகம் இழையோடும் படங்களை இயக்கியவர் சசி, நேர்த்தியான திரைக்கதையும், எளிமையான கதாபாத்திரங்ளும் இவரின் பலம். சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ என தொடர்ந்து ரசிகர்களை தனக்கான பாணியில் மகிழ்வித்தவர். அதேபோல பரத் ஒரு நல்ல நடிகர், இவர் நடித்த பட்டியல், வெயில், காதல் போன்ற படங்கள் இவரின் சிறப்பான நடிப்புக்கு உதாரனம். ஆனால், திடீரென ஆக்சன் பேரரசாக மாறி பின்னுக்கு தள்ளப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் தருகிறார்கள் என்பதால் எதிர்பார்ப்பு கூடதலாகவே இருந்தது. ஆனால் நம் எதிர்பார்ப்பை சுமாராகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பரத் தன் காதலி மிருத்திகாவை தேடுகிறார். ஆனால் அப்படி யாரும் இல்லை என அவரின் மனநல மருத்துவரும், அண்ணன் சந்தானமும் சொல்கிறார்கள். ஆனால் பரத் அது உண்மைதான் என கண்டுபிடிக்கிறார். காதலியை தேடுகிறார், அப்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகளை கடந்து இறுதியில் காதலியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. நான் லீனியரில் சொல்லப்படும் கதைகளில் திரைக்கதை மிக நேர்த்தியாக இருக்கவேண்டும் ஆனால் இதில் திரைக்கதையும், எடிட்டிங்கும் மிக சுமாராகவே இருப்பதால் படம் அவ்வப்போது தொய்வாகவே நகர்கிறது.

பரத் இப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து சிரமப்பட்டிருக்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் அதனைக்காட்டி பிரமாதப்படுத்துகிறார். ஆனால் காதலியை தேடும் காட்சிகளில் இவரின் நடிப்பும், காதலை சொல்ல முற்படும்போது இவரின் தவிப்பும் நேர்த்தி. நாயகி மிருத்திகா கொஞ்சமாக நடிக்கவும் செய்கிறார். காதல் காட்சிகளை உருவாக்கிய விதம் இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்தில் சந்தானம் வரும் காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. அவரின் வழக்கமான ஸ்டேண்ட் அப் காமெடிதான் என்றாலும் பல இடங்களில் சிரிக்க வைத்து படத்தை நகர்த்த உதவுகிறார்.

படத்தில் சொதப்பலான காட்சிகள் என்றால் வில்லனுக்கு வைத்த ஃப்ளாஷ்பேக் மற்றும் நாயகியை கடத்தியதற்காக அவர் சொல்லும் மொக்கையான காரனங்கள். பாடல்கள், இசை இரண்டுமே நன்றாக இருக்கிறது. வித்தியாசமான முயற்சிக்காக பார்க்கலாம்.  

3 கருத்துகள்:

ரமேஷ் வீரா சொன்னது…

neengalum eppa vimarsanam elutha pada m paarkuringa pola.....unga judgement correct irukkum...

rajamelaiyur சொன்னது…

எளிய ஆனால் நல்ல விமர்சனம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

555 - சூப்பர்ன்னு சொல்றீங்க...

தலைவா வரலை.... 555வாவது பார்ப்போம்...