15 ஆக., 2013

இப்படியாக...

Photo : KRP Senthil
விருப்பம் இல்லை
என்றாலும் 
வாங்கத்தான் 
வேண்டியிருக்கிறது 
யாரிடமாவது கடனாக..

கோவிலுக்கு வெளியே
பிச்சைக்காரர்கள், 
கருவறையில்
ஏமாற்றுக்காரர்கள்,
நடுவே
சுயநலக்காரர்கள்..

நாம் அவர்களையும் 
அவர்கள் நம்மையும்,
சகித்துக்கொண்டுதான்
வாழ்கிறோம்..

பணக்காரர்கள் சிலர்,
கடவுள்களும் சிலரே,
மற்றெல்லோரும் ஏழைகளே..

மிகப்பெரிய உலகம் 
மிகப்பெரிய மனிதர்கள் கூட்டம்
மிகச்சிறிய மனது..

குல தெய்வத்துக்கு 
இரண்டு கெடா,
சாராயம்,
சுருட்டு 
சாப்பிடும்போது தகராறு..

காக்கும் சாமியின்
கோவிலுக்கு
பாதுகாப்பாய் 
ஒரு காவலாளியும்,
மூன்று
பெரிய பூட்டுகளும் ..

பாறைகள்
சாலைகளாகவும் 
வீடுகளாகவும் 
சமயங்களில்
கடவுளாகவும்..

உதிர்கிற இலை
ஒவ்வொன்றின்
மரணத்திலும் 
வளர்கிறது ஒரு காடு..

4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…


உதிர்கிற இலை
ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு/

/ஆழமான கருத்துடைய அற்புத வரிகள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

.

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

மாதேவி சொன்னது…

காக்கும் சாமியும் பூட்டுச்சிறையுள்:))

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

கவியாழி சொன்னது…

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்