3 அக்., 2013

இந்தோனேசியாவிலிருந்து...


நேற்று காலை மலேசியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பினாங்கில் இருந்து ஒரு பழைய நண்பர் அழைத்திருந்தார்!.
“வணக்கம் செந்தில்!, இந்தியாவிற்கு கிரானைட் இம்போர்ட் பன்ன ஆள் இருந்தா!, இந்தோனேசியாவில்  ஒரு இடத்தில் ஏராளமாக கிரானைட் இருக்கு, நல்ல அதாவது genuine buyer இருந்தா சொல்லுங்க” என்றார்.
நான் “ வணக்கம் சார், இங்கயே தாராளமா கிடைக்குது, இருந்தாலும் யாருக்காவது தேவை இருக்குமான்னு விசாரிச்சு சொல்றேன்.”
அவர் “செந்தில் அந்த இடத்தில கிரானைட் மட்டும் இல்ல, அதுக்கும் கீழே காப்பர், மற்றும் மினரல்ஸ் குவிஞ்சு கெடக்கு, அதனாலதான் உங்க கிட்ட genuine buyer இருந்தா மட்டும்! சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.
நான் “ஏன் ஃப்ராடுன்னா ஒத்துக்க மாட்டீங்களா?”
அவர் “ செந்தில் என்ன சொல்றீங்க!?”
நான் “ யோவ் பின்ன என்னய்யா நீங்க ஃப்ராடு பன்றவன்கூட வியாபாரம் செய்ய நான் நல்லவனை அறிமுகப்படுத்தனுமா? இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க!, அதான் பாவமா இருக்கு!” என்றதும். அப்புறம் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்தார்.

கேபிள் சொல்வார் நூறுகோடி வியாபாரம் எல்லாம் நம்மை மாதிரி ஆட்கள் கிட்ட வந்தாலே அதெல்லாம் ஃப்ராடுதான்னு!!
.....................................................................................................................................................................
நானும், கேபிளும் மேற்கு மாம்பலம் எண்: 128, ஏரிக்கரை தெருவில் இருக்கு டாஸ்மாக் கடை எண்: 641 - ல் ரெண்டு பியர் வாங்கினோம். ஒரு பியரின் விலை ரூ.100 தான். ஆனால், விற்பனையாளர் ரூ.110 X2 = 220 எடுத்துக்கொண்டார். கேபிள் ஏன் MRP யை விடவும் அதிகம் விற்கிறீர்கள் என சண்டை போட்டதும் ரூ.10 மட்டும் மீதம் தந்தார். இன்னொரு பத்து ரூபாய் தர முடியாது என்றும் சொன்னார். கேபிள் விடாப்பிடியாக பணம் கேட்டதும். விற்பனையாளர் “அதிகாரிகள் சொல்லித்தான் வாங்குறோம், உன்னால முடிஞ்சத பன்னிக்கோ!” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!.
.............................................................................................................................................................
சமீபமாக வரும் திரைப்படங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவிர்த்து எல்லாப்படங்களிலுமே நாயகனை டாஸ்மாக்கில் குடித்து திரிபவனாகவும், பொறுக்கியாகவும் காட்டுகிறார்கள். ஆனால் நாயகிகள் அவனைத்தான் காதலிக்கிறார்கள்!. உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன?. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா?” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல!!!..
................................................................................................................................................................
அவசர அவசரமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து ராகுல் எதிர்க்கிறார் என ஒரு நாடகம் ஆடி அதனை வாபஸ் பெற்றுவிட்டனர். குற்றவாளிகளுக்கு இந்த அரசு வக்காலத்து வாங்க காரனமே, கடந்த பத்து வருஷமா இவங்க அடிச்சதை ஆட்சி மாறினா, மோடி உள்ள புடிச்சு போட்டு அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வச்சிடுவாறோ என்கிற பயம்தான்!.

ஆனால் நிறைய அரசியல்வாதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாங்க. இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் இவங்க அரசியல் செஞ்சு யாரை காப்பாத்த போறாங்க?. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது?. அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில்!. உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்!.
....................................................................................................................................................................


'' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''

''பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.

தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!''

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்
பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல் !

-

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆட்சி மாறினால் அவனும் கொள்ளை தான் அடிப்பான் ப்ரோ நம்ம ஊரு அரசியல்வாதிங்களா பத்தி தெரியாதா இவர்களுடைய முந்தைய ஆட்சியில் ஊழல் இல்லையா ? ஹையோ ஹையோ

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரபாகரன் அவர்களை நினைத்தால் மனம் வெம்புகிறது... வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

பெம்மு குட்டி சொன்னது…

டாஸ்மார்க்ல சண்டை போட்டதுக்கு அப்புறம், குடிக்க கூடாதுன்னு சொல்லுறது எதுன்னா குறியீடா ??
;-))))))

கவியாழி சொன்னது…

இதையும்தாங்கனும்தமிழா

Unknown சொன்னது…


தலைப்பை பார்த்தவுடன் வெளிநாடு போய்விட்டீரோ என்று பார்த்தேன்!
சிவக்குமாரோ, மூனா செந்திலோ
உங்களுடன் பேசினார்களா! உங்கள்
தொலை பேசி எண் ,நான் அறியேன்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான பல செய்திகள்! பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர்தான்! மறுப்பதற்கில்லை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கதம்பமாய் செய்திகள்...
அனைத்தும் அருமை.
பிரபாகரன் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து அருமை.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!.
..........................................................................நம்ம ஒருத்தனால என்ன செய்ய முடியும் என்ற மனநிலை தான் இதற்கு காரணம்...... கேட்டால் கிடைக்கும் ....

Thangavel Manickadevar சொன்னது…

//. நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!. // உங்களுக்குச் சண்டை போட திராணி இல்லையென்பதை ஒத்துக் கொள்ளுங்கள். உடனே “தமிழன்” திராணியில்லாதவனாக மாறிவிட்டான் என்று எதற்கு தமிழனை இழுக்கின்றீர்கள்?