தியாகி திலீபனின் நினைவு தினம்(26.09.2013) அவருக்கு என் வீரவணக்கம்....
வீரமறவன் நீ...
தியாக தீபமாய் தன்னையே
எரித்துக் கொண்டவன் நீ...
அகிம்சை தேசத்துக்கு உன்னையே
கோரிக்கையாய் வைத்தவன் நீ...
நீ புலி ...
பசி துறந்து பலியான புலி ...
திலீபா நீ விதைக்கப்பட்டாய்
எம் மனங்களில்,
இந்திய தேசத்தின் மீது மாறாத
நம்பிக்கை கொண்டவன் நீ,
அன்றைக்கும், இன்றைக்கும்,
என்றைக்கும் உதவாது இந்தியா,
அன்று உன்னை மட்டும் இழந்தோம்,
இப்போது லச்சங்களில் இழந்தோம்
இன்னும்
இன்னும்
இழப்பதற்கு
தயாராய் இருக்கிறோம்,
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி
ஒருநாள் உண்மையாகும்.
இத்தாலி அன்னையை
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,
முள்ளிவாய்க்கால்
முடிவல்ல ஆரம்பம்..
ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.
3 கருத்துகள்:
வீர வணக்கங்கள்...
திலீபனின் கனவுகள் ஒரு நாள் நிறைவேறும்...
வீர வணக்கம்
வீர வணக்கம் அண்ணா....
கருத்துரையிடுக