27 டிச., 2008

'' போர் அவசியமா ''

தற்போது இந்தியாவும் , பாகிஸ்தானும் ஒருவருக்கு ஒருவர் நான் தாக்கப்போகிறேன் என்றும் , தாக்கினால் திருப்பி தாக்குவேன் என்றும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள் , ஆனால் போர் வந்தால் என்ன ஆகும் என்பதை இருவரும் உணர்ந்துதான் பேசுகிறார்களா ?
மும்பை தாக்குதலைபோல இதற்க்கு முன் எத்தனையோ தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவத இயக்கங்கள் நடத்தி உள்ளன , அப்போதெல்லாம் கோபப்படாத நாம் இப்போது மட்டும் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு போருக்கு தயாராகிறோம் ?
அப்போது செத்ததெல்லாம் அப்பாவி ஏழை இந்தியர்கள் மட்டுமே , ஆனால் இப்போதைய தாக்குதலில் செத்தது பணக்கார இந்தியனும் , இஸ்ரேலியர்களும் , இங்கிலாந்துகாரர்களும் , மற்ற வெளிநாட்டவர்களும் , இதில் சத்ரபதி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளைப்பற்றி எந்த மீடியாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை ,
எனவே இது அப்பட்டமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நம்மீது இந்த போரை வலிந்து திணிக்கப்பார்க்கிறது ,
இதனால் பலியாகப்போகிறது இலட்சக்கணக்கான உயிர்களும் நமது பொருளாதாரமும்தான் .
இதில் உண்மையாகவே நாம் செய்ய வேண்டியது :
பாகிஸ்தான்மீது எல்லா நாடுகளையும் பொருளாதார தடை விதிக்கும்படி வலியுறுத்தலாம் ,நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவை துண்டிக்கலாம் ,நம் பாதுகாப்பை வலுப்படுத்தலாம், மேலும் எம் .கே . நாராயணனிடம் உள்ள துறையை வேறு நல்ல துடிப்பான ஒருவரிடம் ஒப்படைக்கலாம் , உளவுத்துறையை எதிர்கட்சிகள் பற்றி துப்பறிய மட்டும் பயன்படுத்தாமல் தேசத்தின் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தலாம் , புதிதாக உருவாகும் தேசிய புலனாய்வு பிரிவை சுதந்திரமான அமைப்பாக உருவாக்கலாம் ,

மேலும் ,பொதுமக்களுக்கு இந்த போரில் உடன்பாடு உண்டா என்ற கருத்தையும் அவசியம் கேட்க வேண்டும் ,

இனி, போர் என்பது வளர்ந்த மானுடத்தின் வெட்கங்கெட்ட செயல் , அது ஈராக் மற்றும் ஆப்கான் மீது அமெரிக்கா தொடுத்த போராக இருக்கட்டும் ,
பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடுத்த போராகட்டும், தமிழர்கள் மீது இலங்கை நடத்தும் போராகட்டும் எல்லாமே கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனம் ,

மனிதன் அமைதியாக வாழத்தான் விரும்புகிறான் ஆனால் முட்டாள் மத தலைவர்களும் , அரசியல் தலைவர்களும் சுயலாபங்களுக்காக வன்முறைகளை தூண்டுகிறார்கள் அதற்கு அமைதியை உலகுக்கு தொடர்ந்து வலியுறுத்திவரும் நம் தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது ..

புத்தன் , வள்ளுவன் , இராமானுஜன் , காந்தி மற்றும் எண்ணற்ற அகிம்சாவாதிகள் பிறந்த மண் இது ......
தயவுசெய்து போர் வேண்டாம் .......

நன்றி..

கார்கில் போர் பற்றிய சில விபரங்களை இணைத்துள்ளேன் :

கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.
போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிப்யை பதவியில் இருந்து அகற்றினார்.
கார்கில் போரில் உலக வரலாற்றில் முதலாம் தடவை இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
இந்திய அரசு குறித்த கணக்கு:
527 பலி,363 படுகாயம்,1 போர் கைதி
பாகிஸ்தானின் மதிப்பு:
357-4000 பலி(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)
665+ இராணுவ வீரர்கள் படுகாயம்
8 போர் கைதிகள்
நன்றி ( கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)..

25 டிச., 2008

''சிங்கப்பூர் துரைராஜ் ''



சிங்கப்பூர் துரைராஜ் ,
இவர் என்னுடைய நீண்ட கால நண்பர் ,
சிங்கப்பூர் தொலைக்காட்சி நடிகர் மற்றும்,
தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார் ,
விஷயம் என்னவென்றால் , சிங்கப்பூரிலும் ,மலேசியாவிலும் தமிழ் சினிமாதான் எல்லாம் ,
இங்கு சென்னையில் வந்து ஒரு படத்தில் நடித்துவிட்டால் போதும்
அங்கு நிறைய பாராட்டுவார்கள் , தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் எல்லாம் செய்திகள் வரும் .
நண்பர் துரைராஜ் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னைக்கு வந்து போகிறார் , இதுவரை செலவு செய்த காசில் அவரே சொந்தமாக ஒரு படம் எடுக்கலாம் ,
நானே அவருக்காக அவர் கொடுத்து அனுப்பியபொருள்களையும் பணத்தையும் இங்கு சென்னையில் உள்ள பல துணை இயக்குனர்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.
ஒருமுறை இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனர் ஆக இருந்த ஒருவர் சேரனின் அடுத்த படத்தில் ஒரு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அவரிடம் செல்போன் ஒன்று வாங்கிக்கொண்டார், (எத்தனை செல்போன் )அதன் பிறகு தானே ஒரு படம் ஹீரோவாக நடித்து இயக்க போகிறேன் அதில் நிச்சயம் உங்களுக்கு நல்ல கேரக்டர் ஒன்று தருகிறேன் என சொல்லிவிட்டார் , ஒருமுறை நண்பர் துரைராஜ் சென்னை வந்தபோது நாங்கள் அந்த உதவி இயக்குனரை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்திருந்தோம் , வந்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுக்கும் பார்சல் கட்டிக்கொண்டு சென்றார் , தற்சமயம் அவர் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார் ஆனால் நண்பருக்கு அதற்க்கு பிறகு அழைப்பே இல்லை ,
இதைப்போல் நிறைய கதைகள் உண்டு ,
ஆனால் ஒருவர் மட்டும் சொன்னபடி அவருக்கு வாய்ப்பு தந்தார் , அவர் இயக்குனர் செல்வா , அவருடைய எல்லா படத்திலும் எப்படியும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார் , அதற்க்கு சம்பளமும் கொடுத்துவிடுவார் , சினிமா உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ,
சிங்கப்பூரில் இருந்து நடிக்க ஆசைப்பட்டு வருகிறார் என்பதற்காகவே வாய்ப்பு கொடுக்கும் செல்வா போன்றவர்களும் உண்டு ,
இவர் எடுத்த '' தோட்டா '' ''நான் அவன் இல்லை'' போன்ற படங்களில் நடித்திருக்கிறார் ,
இப்போது நாங்களே நண்பன் வர்கோத்தமன் இயக்கத்தில் ஒரு படம் எடுக்க போகிறோம் , தயாரிப்பாளர்களில் நானும் ஒருவன் ,
அதில் ஒரு பெரிய கேரக்டர் நண்பருக்காக வைத்துள்ளோம் , படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை , ஒரு சுபயோக சுபதினத்தில் அறிவிப்பு வெளியாகும் ,
படத்தை அவசியம் பாருங்கள் ,
பின்குறிப்பு ;
சினிமா சம்பத்தப்பட்ட தகவகல்களை தவிர வேறு கட்டுரைகள் எழுத சொல்லி நண்பர்கள் அன்பு கட்டளை இட்டதால் ( இல்லேன்னா படிக்கமாட்டங்க பாருங்க )
அடுத்த கட்டுரை பொது பிரச்சினை பற்றி எழுதலாம்ன்னு இருக்கேன்

நன்றி .....


18 டிச., 2008

"நான் கடவுள் " ஒரு முன்னோட்டம்





நான் தி.நகர் வாசி , தினமும் உஸ்மான் சாலையை கடக்க வேண்டி வரும் ( நான் கடவுளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? தொடர்ந்து படியுங்கள் )
உஸ்மான் சாலையில் நிறைய பிச்சைகாரர்கள் உண்டு , அதில் இரண்டு கை மற்றும் கால்கள் இல்லாத இருவர் உட்பட நிறைய பேரை தினமும் சந்திக்க வேண்டிய கஷ்டம் எனக்கு,
அப்போதுதான் நான் என்னுடைய நண்பன் இளங்கோ ( சினிமாவில் உதவி இயக்குனர் ) மற்றும் தம்பி வக்கீல் சாமிதுரை மூவரும் இந்த பிச்சைகாரர்களை பற்றி ஒரு ஆவண படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம் , அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்தால் அது எங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ,
இந்த விவரங்களை அண்ணன் சரத் சூர்யாவிடம் (இவர் பச்சை மனிதன் என்ற காவிரி பிரச்சினை பற்றிய படம் எடுத்தவர் ) பகிர்ந்தபோது , அவர் நீங்கள் இந்த படத்தை செய்ய வேண்டாம் , நீங்கள் ஜெயமோகனின் ''ஏழாம் உலகம்'' படியுங்கள் அதில் இதனை பற்றி அவர் விரிவாக எழுதியிருக்கிறார் , மேலும் அதனைத்தான் ''நான் கடவுள்'' படமாக பாலா எடுக்கிறார் என்றார் ,
உடனே ஏழாம் உலகம் வாங்கி படித்தேன் , என்னால் நான்கு நாட்கள் தூங்கவே முடியவில்லை, அதில் போத்திவேலு பண்டாரம் போல ஆட்கள் நீங்கள் யோசிக்கவே முடியாத ஒன்று மேலும் முத்தம்மை , மாங்கண்டி சாமி ,தொரப்பன் , குய்யான் , எருக்கை , மற்றும் பெருமாள் பாத்திரங்கள் படைக்கப்பட்ட விதம் , மொழிநடை எல்லாமே உண்மை ,

''நாம் வாழும் உலகுக்கு
அடியில் வெகு ஆழத்தில்
உள்ள இன்னொரு உலகம் .
குரூரத்தால் வலியால்
சிறுமையால் எழுதப்பட்டது இது .
மானுடம் என்ற மகத்தான
சொல்லின் நிழல்.
ஒரு கோணத்தில் நமது அனைத்துச்
செயல்பாடுகளையும் மௌனமாக
அடிக்கோடிடும் கருமை.

சரளமும் நுட்பமும் கொண்ட
மொழியில் நேரடியாக சொல்லப்படும்
இந்நாவல் வாழ்வு குறித்தும்
பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக
நாம் எழுப்பிக்கொள்ள சாத்தியமான
எல்லா வினாக்களையும்
தூண்டக்கூடியது ."
இது அந்த புத்தகத்தின் பின்னட்டையில் உள்ள வாசகம் .

எனவே முடிந்தால் அந்த புத்தகம் வாங்கி படியுங்கள் அல்லது " நான் கடவுள்" வரும்வரை காத்திருங்கள்.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில் சந்திக்க கூடிய இந்த மனிதர்களின் இன்னொரு பக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது ,
இதனை பாலா நிச்சயம் மிக சிறப்பாகவே செய்திருப்பார் ,
மனிதம் மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசுகிற நாம் இந்த படத்தை பார்த்தால் வெட்கி தலைகுனிவோம் என்பது மட்டும் நிச்சயம் ,
நன்றி ....










17 டிச., 2008

பொம்மலாட்டம்

நீண்ட நாளைக்கு பிறகு வந்துள்ள பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் பார்த்தேன் ( T.nagar krishnaveni theatre ), சும்மா சொல்லக்கூடாது படம் ஆரம்பிச்சதுல இருந்து ஒரே கொசுத்தொல்லை போங்க , நாங்களும் பாரதிராஜா படம் ஆச்சேன்னு படம் முடியிறவரை சகிச்சுக்கிட்டோம்,
நானா படேகர் நடிப்பு அற்புதம் , அப்புறம் ஒரு சாதரண கொலை கேசுக்கு ஏன் மத்திய புலனாய்வு குழு (C.B.I) வர்ராங்கன்னு தெரியல ,
இந்த படத்துக்கு முன்னாடி "கண்களால் கைது செய் " படத்துல வர்ற flash back போலவே இந்த படத்துலயும் பிச்சு பிச்சு போட்டுருப்பார் ,
மிகசரியான ஒரு கதை ஆனால் ஹோலிவூட் ஸ்டைலில் எடுத்திருக்கிறார்
இது ஒரு சராசரி சினிமா ரசிகனை போய் சேருமா?
மணிவண்ணன் அவருக்கு குடுத்த விஷயத்தை நன்றாக செய்துள்ளார் ,
காஜல் அகர்வால் கவிஞர் ஆக வருகிறார் , அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் , விவேக் கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார் ,அர்ஜுன் செய்யும் investication இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் , நானா படேகரை விசாரிக்கும்போது நானே படேகர் அர்ஜுனை திருப்பி தாக்குவது அதற்க்கு அர்ஜுன் நெளிவது இங்கெல்லாம் பாரதிராஜா பிரமாதபடுத்தி இருக்கிறார் , இசை சுமார்தான் , ஹிந்தியிலும் எடுப்பதற்க்காக சில இடங்களில் தமிழ் ரசிகனை குழப்புகிறார் ,
கதா நாயகி ருக்மணி நல்ல தேர்வு , ஒரிஜினல் திருநங்கை ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம், ரஞ்சிதா கட்சிதம் , நாம் படிக்கிற சினிமா கிசு கிசுவெல்லாம் நிஜம்தான் போல.
மொத்தத்தில் சராசரி தமிழ் ரசிகனை சென்று சேரும்படி இல்லை என்றாலும் இதனை தைரியமாக வுலக சினிமாவுடன் ஒப்பிடலாம் ,
இருந்தாலும் எங்களுக்கு முதல் மரியாதையை தந்த பாரதிராஜாவே வேண்டும்
நானா படேகர் வரும்போதல்லாம் பாரதிராஜாவே தெரிகிறார் , நிழல்கள் ரவி குரல் கொடுத்துள்ளார் ,
நேரம் கிடைத்தால் அவசியம் சென்று பாருங்கள் ,
நன்றி ....







கும்பிடுறேங்க...

வணக்கம் ,
என்னுடைய முதல் முயற்சி இந்த போஸ்ட் , ரொம்ப நாளா நம்ப நண்பன் ராஜா ஒன்னோட யோசனை எல்லாத்தியும் கொஞ்சம் தட்டி வுடுடான்னு சொன்னான்
அதனால நானும் வந்துட்டேங்க,
இனிமே அடிக்கடி வருவேங்க படிச்சிட்டு கருத்த தட்டி விடுங்க
நன்றி