18 டிச., 2008

"நான் கடவுள் " ஒரு முன்னோட்டம்

நான் தி.நகர் வாசி , தினமும் உஸ்மான் சாலையை கடக்க வேண்டி வரும் ( நான் கடவுளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? தொடர்ந்து படியுங்கள் )
உஸ்மான் சாலையில் நிறைய பிச்சைகாரர்கள் உண்டு , அதில் இரண்டு கை மற்றும் கால்கள் இல்லாத இருவர் உட்பட நிறைய பேரை தினமும் சந்திக்க வேண்டிய கஷ்டம் எனக்கு,
அப்போதுதான் நான் என்னுடைய நண்பன் இளங்கோ ( சினிமாவில் உதவி இயக்குனர் ) மற்றும் தம்பி வக்கீல் சாமிதுரை மூவரும் இந்த பிச்சைகாரர்களை பற்றி ஒரு ஆவண படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம் , அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்தால் அது எங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ,
இந்த விவரங்களை அண்ணன் சரத் சூர்யாவிடம் (இவர் பச்சை மனிதன் என்ற காவிரி பிரச்சினை பற்றிய படம் எடுத்தவர் ) பகிர்ந்தபோது , அவர் நீங்கள் இந்த படத்தை செய்ய வேண்டாம் , நீங்கள் ஜெயமோகனின் ''ஏழாம் உலகம்'' படியுங்கள் அதில் இதனை பற்றி அவர் விரிவாக எழுதியிருக்கிறார் , மேலும் அதனைத்தான் ''நான் கடவுள்'' படமாக பாலா எடுக்கிறார் என்றார் ,
உடனே ஏழாம் உலகம் வாங்கி படித்தேன் , என்னால் நான்கு நாட்கள் தூங்கவே முடியவில்லை, அதில் போத்திவேலு பண்டாரம் போல ஆட்கள் நீங்கள் யோசிக்கவே முடியாத ஒன்று மேலும் முத்தம்மை , மாங்கண்டி சாமி ,தொரப்பன் , குய்யான் , எருக்கை , மற்றும் பெருமாள் பாத்திரங்கள் படைக்கப்பட்ட விதம் , மொழிநடை எல்லாமே உண்மை ,

''நாம் வாழும் உலகுக்கு
அடியில் வெகு ஆழத்தில்
உள்ள இன்னொரு உலகம் .
குரூரத்தால் வலியால்
சிறுமையால் எழுதப்பட்டது இது .
மானுடம் என்ற மகத்தான
சொல்லின் நிழல்.
ஒரு கோணத்தில் நமது அனைத்துச்
செயல்பாடுகளையும் மௌனமாக
அடிக்கோடிடும் கருமை.

சரளமும் நுட்பமும் கொண்ட
மொழியில் நேரடியாக சொல்லப்படும்
இந்நாவல் வாழ்வு குறித்தும்
பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக
நாம் எழுப்பிக்கொள்ள சாத்தியமான
எல்லா வினாக்களையும்
தூண்டக்கூடியது ."
இது அந்த புத்தகத்தின் பின்னட்டையில் உள்ள வாசகம் .

எனவே முடிந்தால் அந்த புத்தகம் வாங்கி படியுங்கள் அல்லது " நான் கடவுள்" வரும்வரை காத்திருங்கள்.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில் சந்திக்க கூடிய இந்த மனிதர்களின் இன்னொரு பக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது ,
இதனை பாலா நிச்சயம் மிக சிறப்பாகவே செய்திருப்பார் ,
மனிதம் மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசுகிற நாம் இந்த படத்தை பார்த்தால் வெட்கி தலைகுனிவோம் என்பது மட்டும் நிச்சயம் ,
நன்றி ....


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அன்பின் செந்தில் வணக்கம்,
உங்கள் வலைத்தளம் மற்றும் விமர்சனம் படித்தேன் மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வலைத்தள டெம்ப்ளேட்டை கொஞ்சம் முயற்ச்சித்து அழகுபடுத்தவும்.
நன்றி!
அன்புடன்,
மதுமணி,
அபுதாபி.