25 டிச., 2008

''சிங்கப்பூர் துரைராஜ் ''சிங்கப்பூர் துரைராஜ் ,
இவர் என்னுடைய நீண்ட கால நண்பர் ,
சிங்கப்பூர் தொலைக்காட்சி நடிகர் மற்றும்,
தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார் ,
விஷயம் என்னவென்றால் , சிங்கப்பூரிலும் ,மலேசியாவிலும் தமிழ் சினிமாதான் எல்லாம் ,
இங்கு சென்னையில் வந்து ஒரு படத்தில் நடித்துவிட்டால் போதும்
அங்கு நிறைய பாராட்டுவார்கள் , தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் எல்லாம் செய்திகள் வரும் .
நண்பர் துரைராஜ் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னைக்கு வந்து போகிறார் , இதுவரை செலவு செய்த காசில் அவரே சொந்தமாக ஒரு படம் எடுக்கலாம் ,
நானே அவருக்காக அவர் கொடுத்து அனுப்பியபொருள்களையும் பணத்தையும் இங்கு சென்னையில் உள்ள பல துணை இயக்குனர்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.
ஒருமுறை இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனர் ஆக இருந்த ஒருவர் சேரனின் அடுத்த படத்தில் ஒரு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அவரிடம் செல்போன் ஒன்று வாங்கிக்கொண்டார், (எத்தனை செல்போன் )அதன் பிறகு தானே ஒரு படம் ஹீரோவாக நடித்து இயக்க போகிறேன் அதில் நிச்சயம் உங்களுக்கு நல்ல கேரக்டர் ஒன்று தருகிறேன் என சொல்லிவிட்டார் , ஒருமுறை நண்பர் துரைராஜ் சென்னை வந்தபோது நாங்கள் அந்த உதவி இயக்குனரை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்திருந்தோம் , வந்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுக்கும் பார்சல் கட்டிக்கொண்டு சென்றார் , தற்சமயம் அவர் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார் ஆனால் நண்பருக்கு அதற்க்கு பிறகு அழைப்பே இல்லை ,
இதைப்போல் நிறைய கதைகள் உண்டு ,
ஆனால் ஒருவர் மட்டும் சொன்னபடி அவருக்கு வாய்ப்பு தந்தார் , அவர் இயக்குனர் செல்வா , அவருடைய எல்லா படத்திலும் எப்படியும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார் , அதற்க்கு சம்பளமும் கொடுத்துவிடுவார் , சினிமா உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ,
சிங்கப்பூரில் இருந்து நடிக்க ஆசைப்பட்டு வருகிறார் என்பதற்காகவே வாய்ப்பு கொடுக்கும் செல்வா போன்றவர்களும் உண்டு ,
இவர் எடுத்த '' தோட்டா '' ''நான் அவன் இல்லை'' போன்ற படங்களில் நடித்திருக்கிறார் ,
இப்போது நாங்களே நண்பன் வர்கோத்தமன் இயக்கத்தில் ஒரு படம் எடுக்க போகிறோம் , தயாரிப்பாளர்களில் நானும் ஒருவன் ,
அதில் ஒரு பெரிய கேரக்டர் நண்பருக்காக வைத்துள்ளோம் , படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை , ஒரு சுபயோக சுபதினத்தில் அறிவிப்பு வெளியாகும் ,
படத்தை அவசியம் பாருங்கள் ,
பின்குறிப்பு ;
சினிமா சம்பத்தப்பட்ட தகவகல்களை தவிர வேறு கட்டுரைகள் எழுத சொல்லி நண்பர்கள் அன்பு கட்டளை இட்டதால் ( இல்லேன்னா படிக்கமாட்டங்க பாருங்க )
அடுத்த கட்டுரை பொது பிரச்சினை பற்றி எழுதலாம்ன்னு இருக்கேன்

நன்றி .....


2 கருத்துகள்:

tsekar சொன்னது…

வாழ்த்துக்கள் !!!ஷூட்டிங் ஒரு நாள் பார்க்க அனுமதி கிடைகுமா ?

-த சேகர்

Unknown சொன்னது…

படம் கைவிடப்பட்டது அண்ணே, ஆனாலும் சூட்டிங் பார்க்க வேண்டும் எனில் மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்