27 டிச., 2008

'' போர் அவசியமா ''

தற்போது இந்தியாவும் , பாகிஸ்தானும் ஒருவருக்கு ஒருவர் நான் தாக்கப்போகிறேன் என்றும் , தாக்கினால் திருப்பி தாக்குவேன் என்றும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள் , ஆனால் போர் வந்தால் என்ன ஆகும் என்பதை இருவரும் உணர்ந்துதான் பேசுகிறார்களா ?
மும்பை தாக்குதலைபோல இதற்க்கு முன் எத்தனையோ தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவத இயக்கங்கள் நடத்தி உள்ளன , அப்போதெல்லாம் கோபப்படாத நாம் இப்போது மட்டும் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு போருக்கு தயாராகிறோம் ?
அப்போது செத்ததெல்லாம் அப்பாவி ஏழை இந்தியர்கள் மட்டுமே , ஆனால் இப்போதைய தாக்குதலில் செத்தது பணக்கார இந்தியனும் , இஸ்ரேலியர்களும் , இங்கிலாந்துகாரர்களும் , மற்ற வெளிநாட்டவர்களும் , இதில் சத்ரபதி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளைப்பற்றி எந்த மீடியாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை ,
எனவே இது அப்பட்டமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நம்மீது இந்த போரை வலிந்து திணிக்கப்பார்க்கிறது ,
இதனால் பலியாகப்போகிறது இலட்சக்கணக்கான உயிர்களும் நமது பொருளாதாரமும்தான் .
இதில் உண்மையாகவே நாம் செய்ய வேண்டியது :
பாகிஸ்தான்மீது எல்லா நாடுகளையும் பொருளாதார தடை விதிக்கும்படி வலியுறுத்தலாம் ,நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவை துண்டிக்கலாம் ,நம் பாதுகாப்பை வலுப்படுத்தலாம், மேலும் எம் .கே . நாராயணனிடம் உள்ள துறையை வேறு நல்ல துடிப்பான ஒருவரிடம் ஒப்படைக்கலாம் , உளவுத்துறையை எதிர்கட்சிகள் பற்றி துப்பறிய மட்டும் பயன்படுத்தாமல் தேசத்தின் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தலாம் , புதிதாக உருவாகும் தேசிய புலனாய்வு பிரிவை சுதந்திரமான அமைப்பாக உருவாக்கலாம் ,

மேலும் ,பொதுமக்களுக்கு இந்த போரில் உடன்பாடு உண்டா என்ற கருத்தையும் அவசியம் கேட்க வேண்டும் ,

இனி, போர் என்பது வளர்ந்த மானுடத்தின் வெட்கங்கெட்ட செயல் , அது ஈராக் மற்றும் ஆப்கான் மீது அமெரிக்கா தொடுத்த போராக இருக்கட்டும் ,
பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடுத்த போராகட்டும், தமிழர்கள் மீது இலங்கை நடத்தும் போராகட்டும் எல்லாமே கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனம் ,

மனிதன் அமைதியாக வாழத்தான் விரும்புகிறான் ஆனால் முட்டாள் மத தலைவர்களும் , அரசியல் தலைவர்களும் சுயலாபங்களுக்காக வன்முறைகளை தூண்டுகிறார்கள் அதற்கு அமைதியை உலகுக்கு தொடர்ந்து வலியுறுத்திவரும் நம் தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது ..

புத்தன் , வள்ளுவன் , இராமானுஜன் , காந்தி மற்றும் எண்ணற்ற அகிம்சாவாதிகள் பிறந்த மண் இது ......
தயவுசெய்து போர் வேண்டாம் .......

நன்றி..

கார்கில் போர் பற்றிய சில விபரங்களை இணைத்துள்ளேன் :

கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.
போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிப்யை பதவியில் இருந்து அகற்றினார்.
கார்கில் போரில் உலக வரலாற்றில் முதலாம் தடவை இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
இந்திய அரசு குறித்த கணக்கு:
527 பலி,363 படுகாயம்,1 போர் கைதி
பாகிஸ்தானின் மதிப்பு:
357-4000 பலி(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)
665+ இராணுவ வீரர்கள் படுகாயம்
8 போர் கைதிகள்
நன்றி ( கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)..

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தங்களது இந்த பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

தமிழ். சரவணன் சொன்னது…

அருமையான உண்மைக்கட்டுரை!