9 ஏப்., 2010

தீராக்காதல் 5 - கீதாஞ்சலி

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலைஎழுத்தை யாரால் மாற்ற முடியும்.


காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான்.

அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி,

/என்ன மாப்புளே இந்த நேரத்துலே/ என்றார்..

அவரை பார்த்ததும் நான் அழுதேன், /

என்னடா முட்டாளா நீ/

எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பெரும் உன்னைநம்பிதானே இருக்காங்க, கண்ணனோ குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்க்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம் என் டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார்.

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி..

அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, ..

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்..

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார், மலர் வீட்டு அத்தான் ஐயாயிரம் கொடுத்தார். 1992 ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்தேன்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான். அங்கு சென்றும் நான் உண்டு என் வேலையுண்டு என இருந்தவரை நன்றாகத்தான் இருந்தேன், ஆனால் பிரச்சினை என் நண்பன் கணேசன் வடிவில் வந்தது, எத்தனை பிரச்சினைகள் இதுவரை வந்து போயிருக்கின்றன.

பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர்.

தற்போது யோகா மற்றும் தியானம் பயின்று வருகிறேன், அது என்னை மறுபரிசீலனை செய்யவைத்தது, இப்போதுதான் தெரிகிறது என்னுடய வெளிப்படையான பேச்சு எல்லோரையும் காயபடுத்துகிறது என்பதை, மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடும் குணம் எனக்கு.. அது யாருக்கும் பிடிக்கவில்லை என இப்போதுதான் தெரிகிறது. என்ன செய்ய என்னை மாற்றிக்கொள்ள முயற்சிசெய்கிறேன்..

என் வெளிப்படையான பேச்சுதான் அன்று அவளுக்கு பிடித்தது.. அதே பேச்சுதான் இன்று எல்லோருக்கம் பிடிக்கவில்லை...

5 கருத்துகள்:

senthil thesingh சொன்னது…

yes,it's 100 pre right.....

Unknown சொன்னது…

நிச்சயம் புதிய இடுகைகளை இணைக்கிறேன்,

Unknown சொன்னது…

நன்றி தம்பி

tsekar சொன்னது…

படித்த முடித்தபின் -கண்ணில் -ஒரு துளி கண்ணீர் கடைசீயில் வந்துவிட்டது !!!

-tsekar

Unknown சொன்னது…

//படித்த முடித்தபின் -கண்ணில் -ஒரு துளி கண்ணீர் கடைசீயில் வந்துவிட்டது !!!//

இது என் வாழ்க்கை சேகர்....