18 ஏப்., 2010

மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்

இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்  மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர்.

 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது நகரங்களில் டீ ஆத்திகொண்டிருகிறார்கள். இந்த சட்டம் மூலம் இனி நம் சொந்த விதைகளைகூட பயன்படுத்த முடியாது.

கர்நாடகாவில் பாலேக்கரின் தனிப்பட்ட முயற்சியால் கிட்டத்தட்ட பாதி கர்நாடக விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறிவிட்டனர், அங்கெல்லாம் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் மிகுந்த லாபத்தை ஈட்டித்தர ஆரம்பித்து இருக்கிற வேளையில் இந்த கருப்பு சட்டம் அவர்களை முடக்கிவிடும், தமிழகத்திலும் நாம்மாழ்வார் அவர்களின் தனிப்பட்ட தொண்டால் கால்வாசி விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறி இப்போதுதான் விவசாயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றனர்.

இயற்க்கை விவசாயத்தை மேம்படுத்தி இந்தியாவை உலகிற்கே முன்னுதாரணம் ஆக்கி காட்டுவதை விட்டுவிட்டு இப்படி அடிமை வேலை பார்க்கும் மன்மோகனும், சோனியாவும் முதலில் மான்சோட்டா மூலம் விளைந்தவற்றை சாப்பிட்டு காட்டட்டும், அதன்பிறகு எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம்.

ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.

காசு வாங்கிட்டு ஒட்டு போடுறமே, பிறகு அவன் எப்பிடி நம்மை வழிநடத்துவான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மக்கள் இப்படிதான் நோய் பிடித்த உணவை சாப்பிட்டு சாகவேண்டும், மன்மோகன் அமெரிக்காவிலும், சோனியா இத்தாலியிலும் சென்று வாழ்வார்கள், நாமெல்லாம் எங்கே போக...

மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு நாடெங்கும் மின்வெட்டை அமல்படுத்தும் இந்த அவலத்தை எப்போது நாம் பொறுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அப்போதே அவர்களின்  கொட்டம் ஆரம்பித்துவிட்டது.

ஆட்சியாளர்கள் ஒரு வகையில் மக்களை பிரதிபலிப்பவர்கள், இங்கு மக்கள் சுயநலம் கூடிவிட்டதால் ஆள்பவர்களும் அப்படிதான் இருப்பார்கள். நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார். இன்னமும் நிலைமை மாறவில்லை. கூடித்தான் போயிருக்கு.

17 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

”படித்தவன் பாவமும் சூதும்
பண்ணினால்
போவான் போவான்
ஐயோவென்று போவான்”- பாரதி.

நம்மைப் போன்று ஓரளவு அரசியல் சதுரங்கத்தின் போக்கு புரிந்தவர்கள் நம் வாழ்க்கையை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ள ஓடுவதை நிறுத்தும் வரையிலும், அன்றாட வாழ்வுக்கு அல்லாடும் ‘ஓடப்பர்’ எல்லாம் ‘உதையப்பர்’ ஆகும் வரையிலும் இந்த ம்ன்மோகன், சிதம்பரம் வகையறா புரோக்கர்களின் கொட்டம் போய்க்கொண்டுதானிருக்கும்

Unknown சொன்னது…

நன்றி தம்பி

raja சொன்னது…

மன்மோகன் சிங்..னு சொல்லீட்டிங்கள அது போதும்.. அப்புறம் எதுக்கு அந்த அயோக்கியதனம்...?

Unknown சொன்னது…

நன்றி ராஜா.. நன்றாக சொன்னீர்கள் ....

தமிழ் நாடன் சொன்னது…

சரியான கருத்தை கூறி இருக்கிறீர்கள். ஆளும் வர்க்கத்தினர் மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருக்கின்றனர். அமரிக்காவின் அடிவருடிகளான இவர்கள் நமது மக்களின் சுயசார்பு நிலையை திட்டமிட்டே நாசமாக்குகிறார்கள். உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அனு உலைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை எடுத்துக்கொண்டாலும் இவர்களது மனத விரோத தேச விரோத போக்குகள் எளிதில் விளங்கும். ஆனால் இவர்களால்தான் தேசம் கட்டியமைக்கபடுவதாக பிதற்றுபவர்களை என்னவென்று சொல்ல? இவர்களின் விவசாய விரோத போக்கை முன்பே எழுதியிருக்கிறேன். http://jakartananban.blogspot.com/2008/12/blog-post_15.htmlஆதங்கம்தான் மிஞ்சுகிறது.

பெயரில்லா சொன்னது…

நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார்.
a real thing

Jackiesekar சொன்னது…

நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.// உண்மைதான் செந்தில்...

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி தமிழ்நாடன் அண்ணா..

Unknown சொன்னது…

நன்றி ஜாக்கி அண்ணே

குரு சொன்னது…

நல்ல கருத்துக்கு நன்றி.

//ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம்.//

எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகத்தான் பெரும்பான்மையான நம்மக்கள் அரிசி சோறு உண்ணுகிறார்கள். 'அரிசி'தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்கிறார்கள். 'பசுமைப்புரட்சி'யால் வந்த நெல்மணியால் தான் என்கிறீர்கள். சரியா எனத்தெரியவில்லை.

Unknown சொன்னது…

"எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகத்தான் பெரும்பான்மையான நம்மக்கள் அரிசி சோறு உண்ணுகிறார்கள். 'அரிசி'தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்கிறார்கள். 'பசுமைப்புரட்சி'யால் வந்த நெல்மணியால் தான் என்கிறீர்கள். சரியா எனத்தெரியவில்லை."

ஆதாரங்கள் கைவசம் இல்லைதான், தேடி தருகிறேன் அண்ணே ...

vinthaimanithan சொன்னது…

குரு சொல்லிட்டாரு, இனி எல்லா பயபுள்ளையும் கேப்பைக்கூழும், கம்பங்கஞ்சியும் மட்டும்தான் குடிக்கணும்.
எலிக்கறி திங்கச்சொன்னவனும், ரொட்டியில்லன்னா கேக்கு தின்னுனு சொன்னவனும் செத்துட்டாப்ல நெனச்சோம்!!!

பெயரில்லா சொன்னது…

பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்
பதிவேற்றியது தமிழரங்கம் Sunday, 18 April 2010 13:28 புதிய ஜனநாயகம் 2010

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6958:2010-04-18-12-36-53&catid=326:2010

Unknown சொன்னது…

//பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்
பதிவேற்றியது தமிழரங்கம் Sunday, 18 April 2010 13:28 புதிய ஜனநாயகம் 2010//

தெளிவான பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கருத்து

mkr சொன்னது…

சகோதரர் விந்தை மனிதன் சொல்வது தான் சரி.எந்த அரசாங்கமும் வந்தாலும் அது அமெரிக்காவின் அருவடியாஅக தான் இருக்கும்.மாற்றம் நம் கையில் தான் இருக்கிறது

sssimi சொன்னது…

india vai americavuku virkum muthalai than manmohan singh