22 ஏப்., 2010

வினவு - பயோடேட்டா

பெயர்                                            : வினவு
இயற்பெயர்                                 : ம.க.இ.க
தலைவர்                                       : மருதய்யன்
துணை தலைவர்                       : காளியப்பன்  
மேலும் துணை தலைவர்கள் : தோழர்கள் அனைவரும்
வயது                                             : அடித்து நொறுக்கும் வயது
தொழில்                                        : அநீதிக்கு எதிராக போராடுவது
பலம்                                              :  துணிச்சல்
பலவீனம்                                     : பிரச்சினைகளை கடுமையாக செய்வது
நீண்ட கால சாதனைகள்   : நல்ல விசயங்களுக்கு தோள் கொடுப்பவர்கள்
சமீபத்திய சாதனைகள்        : ரகளை செய்தது
நீண்ட கால எரிச்சல்           : இடது, மற்றும் வலது  
சமீபத்திய எரிச்சல்               : லீனா மணிமேகலை
மக்கள்                                       : ஆதிக்க வெறிக்கு ஆளானவர்கள்
சொத்து மதிப்பு                       :  எதுவும் இல்லை    
நண்பர்கள்                                : பதிவர்கள்
எதிரிகள்                                    : பார்பனர்கள், தேவர்கள், பி.ஜே.பி , ஆர்.எஸ்.எஸ் , மற்றும் திருமாவளவன்  
ஆசை                                         : எல்லோரிடமும் சென்று சேர்வது
நிராசை                                      : கூட்டம் குறைகிறது
பாராட்டுக்குரியது                 : சுயநலமில்லா தோழர்கள்
 பயம்                                            : இல்லவே இல்லை
கோபம்                                       : இவர்களின் போராட்ட முறையை பார்த்திருக்கிறீர்களா?
காணமல் போனவை            : விமர்சனங்களை ஏற்றுகொள்வதை
புதியவை                                 : பதிவர்கள் மத்தியில் பிரபலம்
கருத்து                                        : மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு இது, அதனால் இவர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
டிஸ்கி                                         : ஒன்றும் இல்லாததையும் பெரிதாக்கியவர்கள் , பத்து பேர் படித்ததை லட்சம் பேரை படிக்க வைத்தது.     



35 கருத்துகள்:

இளமுருகன் சொன்னது…

//பத்து பேர் படித்ததை லட்சம் பேரை படிக்க வைத்தது//

இது சரிதான்

vinthaimanithan சொன்னது…

//மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு இது, அதனால் இவர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை//
கொஞ்சம் யோசிக்க வைக்கிற பாயிண்ட்தான்
//எதிரிகள் : பார்பனர்கள், தேவர்கள், பி.ஜே.பி , ஆர்.எஸ்.எஸ் , மற்றும் திருமாவளவன் //
ஆதிக்கவெறி கொண்ட அனைவருமே..

Unknown சொன்னது…

//பத்து பேர் படித்ததை லட்சம் பேரை படிக்க வைத்தது//

இது சரிதான்..."

நன்றி இளமுருகன் ...

Unknown சொன்னது…

"ஆதிக்கவெறி கொண்ட அனைவருமே.."

நன்றி தம்பி ...

ஏழர சொன்னது…

செந்தில் ரொம்ப முக்கியமான விசயம், வினவு தளத்திலேயே குறிப்பிட்டுள்ளபடி வினவு ம.க.இ.க ஆதரவாளர்களால நடத்தப்பெறும் தளம்.. ம.க.இ.கவின் அதிகாரபூர்வ தளம் அல்ல..

அப்புறம்

@@@ மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு இது, அதனால் இவர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.@@@

இந்த முடிவுக்கு எப்படி வந்திங்க, இது பிழையான கருத்து.. இப்ப நீங்க செஞ்சிருக்கறது கூட விமரிசனம் தானே.. வினவு தளத்தை பார்த்திருக்கீங்க இல்ல,
அதுல வினவை திட்டி விமரிசனம் செய்து வரும் பின்னூட்டங்கள் எத்தனை.. எனக்கு தெரிந்த வரை பதிவுலகில் வினவை மட்டும்தான் தாராளமாக யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்ய முடியும். அவங்க தனிநபர் தாக்குதல் ஒப்பாரியெல்லாம் வைக்கமாட்டாங்க :-)

பெயரில்லா சொன்னது…

தேவரை விமர்சனம் பண்ணுவாங்க... தேவருக்கு மாலை போட்ட சீமானை சீண்டிப்பார்க்க முடியாது....

ஆரம்பத்திலேயே கலை எடுக்க வேண்டியவர்களை கண்டுக்காம விட்டுவாங்க.... ஏன்னா அவங்க வளர்ந்து வந்தா தானே இவங்க சும்மா கிருக்க முடியும்....

ஏழர சொன்னது…

@@@தேவரை விமர்சனம் பண்ணுவாங்க... தேவருக்கு மாலை போட்ட சீமானை சீண்டிப்பார்க்க முடியாது....

ஆரம்பத்திலேயே கலை எடுக்க வேண்டியவர்களை கண்டுக்காம விட்டுவாங்க.... ஏன்னா அவங்க வளர்ந்து வந்தா தானே இவங்க சும்மா கிருக்க முடியும்....
@@@

சுத்தமா புரியல.. யார களை எடுக்கனும்கறீங்க சீமானையா இல்ல வினவயா

Unknown சொன்னது…

"@@@ மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு இது, அதனால் இவர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.@@@"


இதன் உள்ளர்த்தம் லீனாவின் கவிதைக்கான வினவின் எதிர்ப்பு,...
அதைதான் சொன்னேன் எழர..
அப்புறம் ம.க.இ.க ஆதரவில் நடத்தப்படும் இணையதளம் என்றீர்கள்,
நானும் அதைதான் சொல்கிறேன் தி.மு.க ஆதரவில் நடத்தப்படும் கலைஞர் டிவி போல...
வருகைக்கு நன்றி எழர..

Unknown சொன்னது…

"தேவரை விமர்சனம் பண்ணுவாங்க... தேவருக்கு மாலை போட்ட சீமானை சீண்டிப்பார்க்க முடியாது...."

சீமானை பற்றிய இவர்களின் விமர்சனத்தை நீங்கள் படித்ததில்லை என நினைக்கிறேன்...

NO சொன்னது…

பெயர் : வினவு
இயற்பெயர் : ம.க.இ.க (மாவோ கடவுளை இந்த்தியாவில் காட்டும் கழகம்)
தலைவர் : வினவு என்ற ஏழரை என்ற, மரண அடி என்ற.....இன்னும் பல பல சீன மற்றும் ரஷ்ய பெயர்களை கொண்ட ஒருவர்!!
துணை தலைவர் : திரு கலகம் என்ற ஒருவர் என்று நினைக்கிறேன்! மிக கீழத்தரமாக எழுதும் அவர்தான் இதற்க்கு பொருத்தமானவராக இருப்பார் என்பதால்!
மேலும் துணை தலைவர்கள் : ஒரு பத்து பேரு, ஆனால் பல விதமான பேர்களில்!!
வயது : பலரை திட்டுவதற்கு நேரம் உள்ள வயது!
தொழில் : திட்டுவது!
பலம் : யாரும் இவர்களை சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள், ஒன்றும் நடக்காது என்ற புரிதல்
பலவீனம் : தமிழர்கள் மடையர்கள் இல்லை என்பது
நீண்ட கால சாதனைகள் : திட்டுவது, சாடுவது,குமபலாக கத்தி விட்டு, அடித்து துரத்தி விட்டோம் பார் என்று கதை விடும் கலையை பலருக்கு சொன்னவர்கள்!
சமீபத்திய சாதனைகள் : இன்னும் விடாமல் இதையே செய்வது!
நீண்ட கால எரிச்சல் : வினவா, அப்படினா என்ன??? மா கா ஈ கா வா??? என்னங்கே இது???
சமீபத்திய எரிச்சல் : மாவோவிச்டுகளை மதிய அரசு வேட்டை ஆடுவது!
மக்கள் : மடையர்கள், மாவோவை கொண்டாட தெரியாத மூடர்கள், ஸ்டாலினை ஆராதிக்காத பாசிச அடிவருடிகள்!
சொத்து மதிப்பு : அது சீனா காரர்களைதான் கேட்கவேண்டும்!
நண்பர்கள் : மாவோவை தெய்வம் என்று கும்பிடுபவர்கள்!
எதிரிகள் : பொது மக்கள்
ஆசை : மக்கள் விரோத மாவோ, ஸ்டாலின் ஆட்சிபோல இந்தியாவில் ஒன்றை நிறுவுவது!
நிராசை : அது எந்த ஜன்மத்திலும் தைகள் ஆசை நடக்காது என்று புரிந்து கொண்டது!
பாராட்டுக்குரியது : Binocular, Microscope, பூதக்கண்ணடி, compound eyes, infra red camera, vibration detector, seismograph, என்ற எதை வைத்து தேடினாலும், பார்த்தாலும் கிடைக்காதது!
பயம் : எல்லாம் சரி, இப்படி வெட்டியாக புரட்சி கீதம் பாடிக்கொண்டு இருந்தால் நாளைக்கு சோறுக்கு என்ன செய்ய என்ற உள்ளுணர்வு!
கோபம் : இவர்களுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! தெருவில் இருக்கும் கல்லிற்கு கோபம் வந்தால் யாராவது கவலைபடுவார்களா??
காணமல் போனவை : நல்லவை ஏதாவது இருந்தால்தானே காணாமல் போகும்!
புதியவை : புது புது வசவுகள்!
கருத்து : பொய்க்கு உண்மை முலாம் பூசுவது!
டிஸ்கி : ஒரு நூறு பேரு நூறு முறை படித்து லட்சம் பார் என்று கும்மி அடிப்பது!

Unknown சொன்னது…

நன்றி நண்பர் NO அவர்களே,
உங்கள் கருத்தை நண்பர் எழர அவர்களுக்கு அனுப்புகிறேன்

pichaikaaran சொன்னது…

"சொத்து மதிப்பு : எதுவும் இல்லை '

தவறு ...

சொத்து மதிப்பு : தமிழ்நாடு முழுதும் இவர்கள் சொத்துதான்... ( எதிபாராத இடங்களில் கூட ரகளை செய்யும் ஆற்றலை நீங்கள் பாத்தது இல்லையா )

பெயரில்லா சொன்னது…

NO, நீ இதுவரைக்கும் புடிங்குன புடுங்க கொஞ்சம் சொல்லு.

உடன்பிறப்பு சொன்னது…

பத்து பேர் படித்ததை லட்சம் பேரை படிக்க வைத்தது

/\*/\

நானும் இந்த மேட்டருக்கு பின்னர் தான் வினவு வாசிக்க ஆரம்பித்தேன் இப்போது வாசிப்பது கிடையாது

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

வினவின் எழுத்தின் மீது கோபம் இருக்கலாம் சிலருக்கு...
ஆனால் வினவு எழுதுவது எழுத்து நடை அருமையிலும் அருமை...

அன்புடன்
ஆட்டையாம்பட்டி அம்பி

Unknown சொன்னது…

சொத்து மதிப்பு : தமிழ்நாடு முழுதும் இவர்கள் சொத்துதான்... ( எதிபாராத இடங்களில் கூட ரகளை செய்யும் ஆற்றலை நீங்கள் பாத்தது இல்லையா)

பார்த்திருக்கிறேன் பார்வையாளன்...

Unknown சொன்னது…

"நானும் இந்த மேட்டருக்கு பின்னர் தான் வினவு வாசிக்க ஆரம்பித்தேன் இப்போது வாசிப்பது கிடையாது"

வினவு நிறைய சரியான விசயங்களைத்தான் எழுதுவார்கள், தொடர்ந்து படியுங்கள்,
ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட கருத்துகளையும் பொது கருத்தாக எழுதிவிடுகிறார்கள்.
லீனா மணிமேகலை கவிதை பற்றிய விசயமும் தேவையில்லாத ஒன்று என்பதே என் கருத்து.

வருகைக்கு நன்றி உடன்பிறப்பு..

Unknown சொன்னது…

"வினவின் எழுத்தின் மீது கோபம் இருக்கலாம் சிலருக்கு...
ஆனால் வினவு எழுதுவது எழுத்து நடை அருமையிலும் அருமை..."

நன்றி ஆட்டையாம்பட்டி அம்பி....

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

Fellow Bloggers,

I am new to blogging. Could anyone help me how to publish in "TamilManam" directly???

I have subscribed to Tamil Manam but do not know how to proceed to publish my articles directly..

BTW, I am new to blogging in Tamizh...please bear with me for writing in English for a while!

Any help is sincerely appreciated.

நன்றி!
ஆட்டையாம்பட்டி அம்பி

Unknown சொன்னது…

ஆட்டையாம்பட்டி அம்பி.

give me your mail id

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

Dear கே.ஆர்.பி.செந்தில்,

My apologies... I thought I provided my email address on my blog. Sorry!

My email address is:

aataiyampatti.ambi@gmail.com

Thanks for helping me...

ஆட்டையாம்பட்டி அம்பி.

pichaikaaran சொன்னது…

"லீனா மணிமேகலை கவிதை பற்றிய விசயமும் தேவையில்லாத ஒன்று என்பதே என் கருத்து'

தங்கள் தலைவரை அசிங்க படுத்தினால் கோப படத்தான் செய்வார்கள் .

ஆனால், வில்லனுடன் மோதும் அதே உக்கிரத்தை , ஒரு காமேடியனிடம் காட்டி இருக்க வேண்டியதில்லை...

Unknown சொன்னது…

ஆனால், வில்லனுடன் மோதும் அதே உக்கிரத்தை , ஒரு காமேடியனிடம் காட்டி இருக்க வேண்டியதில்லை...

எனது கருத்தும் இதேதான்

? சொன்னது…

சீட்டு விளையாட்டில் துருப்புச் சீட்டுக்கு ஜோக்கர்னும் அர்த்தம் உண்டு.

Radhakrishnan சொன்னது…

பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள் எனும் தைரியம் தானே. எழுதுங்கள். படித்து மகிழட்டும் பலர்.

ஜோதிஜி சொன்னது…

ஆசை : எல்லோரிடமும் சென்று சேர்வது

அவஸ்யமும் கூட

Unknown சொன்னது…

//பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள் எனும் தைரியம் தானே. //

அண்ணே நான் சந்திக்காத பிரச்சினைகள் இல்லை.. அத்துனையும் என் மன உறுதியில் சமாளித்து வந்தவன்...

வருகைக்கு நன்றி ..

Unknown சொன்னது…

நன்றி .....

ஜோதிஜி

பெயரில்லா சொன்னது…

ஏழரை வந்து நல்லவன் மாதிரி "நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்" ரேஞ்சுக்கு "விமர்சனத்தை ஏற்றுக் கொள்வோம் அப்படீன்னு சொல்லிட்டுப் போனப்புறம் நோ நக்கல் பண்ணியிருக்காரு..பாப்போம் எதிர் வினையை :)

NO சொன்னது…

Follow up Bio data - புதிய காப்பி!
----------------------------------

பெயர் : புனைவு
இயற்பெயர் : வசவு!
தலைவர் : பூணூல் அவுத்தவர்!
துணை தலைவர் : இப்போதைக்கு புதிய துணைத்தலைவர் ஒருவரை நியமிதிருக்கிரார்கள்!! அவரு பதிவும் நல்லா போடுவார் பூணூலும் நல்லா போடுவார் என்று கேள்விப்பட்டேன்!!!
வயது : பூணூல் போடும் வயது!
தொழில் : பலருக்கு பூணூல் போடுவது! (பார்பனிய அடிவருடி, பாப்பார சொம்பு என்று)
பலம் : பூணூல் இல்லை பார்!
பலவீனம் : பாக்கெட்டுல தெரியுதே அது என்ன (என்று யாராவது கேட்ப்பார்களோ என்ற பயம்) ??
நீண்ட கால சாதனைகள் : பாரதியாருக்கே பூணூல் போட்டது (இரெண்டாவது முறையாக)!!
சமீபத்திய சாதனைகள் : பூணூலை அவுத்தாலும் அப்பப்போ அதை பத்தி நினைத்து வருந்துவது!
நீண்ட கால எரிச்சல் : பூணூல அவுத்தும் ஏங்க எங்கள இப்படி??
சமீபத்திய எரிச்சல் : ரெண்டு பூணூல் சேர்ந்து மூன்றாவதா ஒருத்தனை பார்த்து பூணூல் டேய் என்று திட்டுரத பார்த்து உலகமே சிரிப்பது!
மக்கள் : பூணூல் போடாதவர்கள்
பதிவர்கள்: பூணூல் போட்டவர்கள் (ஏறக்குறைய எல்லோரும்)
சொத்து மதிப்பு : ஒரு பூணூல் விலை சுமார் மூன்று ருபாய்! அந்த மினிமம் பாலன்சு எப்பவும் இருக்கும்!
நண்பர்கள் : பூணூல் போட்டவர்கள் அல்ல (என்று சொல்லிக்கொள்கிறவர்கள்)
எதிரிகள் : ஹி ஹி வேற யார்.. பூணூல் போட்டவர்கள்!
ஆசை : எல்லோருக்கும் பூணூல் போட்டு அழகு பார்த்து, அப்புறம் அறுத்து, அதற்க்கு புரட்சி பார் என்று பெயர் வைப்பது!!!
நிராசை : பூணூல் கலரை மறக்கவேண்டும் என்ற நினைப்பு!!
பாராட்டுக்குரியது : பூணூலை போடாதவனையும் கூட பூணூல் போடவைத்தது!
பயம் : ஆவனியாவிட்டம்!
கோபம் : மாவோ திவசத்திர்க்காவது நாங்க......படாதா !!!
காணமல் போனவை : எத்தனை முறை சொல்லுவது!!
புதியவை : பூணூல் என்னக்கு தெரிந்து பல ஆயிரம் வருடமாக ஒரே கலரில்தான் வருகிறது!!
கருத்து : பூணூலை அவிழ்த்து வாழ்வாரே வாழ்வார், அவிழ்க்காதவர்களேல்லாம் அதிலேயே தூக்கு மாட்டி சாவார்! !
களப்பணி : ஒரு பூணலை வைத்து மற்ற பூணூல்களை அடிப்பது!

மிக முக்கிய டிஸ்க்கி - சத்தியமாக சொல்லிபுட்டேன் நான் எந்த ஒரு பிரிவினருக்கும் எதிரி அல்ல, காழ்ப்புணர்ச்சி கொண்டவனும் இல்லை, மேலும் முற்போக்கு வேடம் போடுவதற்காக டுபாகூர் பேசுபவனும் அல்ல!! நான் எழுதியதை படித்தவர்களுக்கு இது தெரியும், புரியும்! மேலே எழுதப்பட்டது கிண்டலுக்காக மட்டுமே!

பெயரில்லா சொன்னது…

miga unmai avargal pathivu padithathu oru sex book paditha effect irunthadu kevalam

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

யார் வேண்டுமானாலும் வினாவில் கருத்து சொல்லலாம் .....சில கருத்துகளுடன் முரண்
படுகிறேன் ..................... ஒண்ணுமில்லாத விடயம் என்று சொன்னது தவறு

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

லீனாவிற்கு எதிர் கவிதை போட்டது பெண்ணியத்தால் அல்ல ...........கருத்து மோதல் ............................அந்த கவிதையை நீங்கள் எழுதி பாருங்கள் தோழர்கள் உங்களையும் விசாரிப்பார்கள் . அது சித்தாந்த மோதல் அங்கே ஆணாதிக்கம்
அல்ல ....ஆனால் முல்லை விடயத்தில் தனிநபர் தாக்குதல் ...........அங்கே ஆணாதிக்கம் , நரசிம் சித்தாந்தத்துடன்
மோத வில்லை ............. நரசிம் பதிவை முல்லையை தவிர உங்களுக்கு பொருத்தி பார்க்க முடியுமா அங்கே ஆணாதிக்கம் ....இப்பொழுது ஜெயலலிதாவை எதிர்த்தால் ஆணாதிக்கமா அதே போல் தான் .................

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

லீனா கவிதையே பெண் குறி சம்பந்த பட்டது அவர் எழுதியதையும் போடுங்கள் ............ஏன் அந்த எதிர் கவிதை வந்தது என்று தெரியும் ..................................

ஏழர சொன்னது…

இங்கே பெயிரல்லாவுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். சந்தனமுல்லைக்காக பதிவுலகம் திரள வில்லை, லீனாவுக்கத்தான் திரண்டார்கள், லீனாவுக்காகத்தான் திட்டினார்கள். தயவு செய்து விவரத்துடன் பேசவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கவிஞர் தணிகை http://marubadiyumpookkum.wordpress.com/ இங்கே இருக்கிறார். தன்னுடைய இந்த கவிதையை பிரபலப்படுத்த வினவை பயன்படுத்திருக்கிறார் அவ்வளவே

வணக்கம் நோ அவர்களே, உங்கள் பூ னூ ல் பத்திரம்