பெயர் : சூப்பர் ஸ்டார்
இயற்பெயர் : சிவாஜிராவ் கைக்வாட்
தலைவர் : ரசிகர்களுக்கு மட்டும்
துணை தலைவர் : லதா ரங்காச்சாரி
மேலும் துணை தலைவர்கள் :ரஜினி என்று தன் பெயரின் முன்னாள் போட்டுக்கொள்பவர்கள்
வயது : டூயட் ஆடும் வயதல்ல
தொழில் : நடிப்பு (சினிமாவில், ஆன்மீகத்தில், அரசியலில்)
பலம் : இன்னமும் நம்பர் ஒன்
பலவீனம் : தனியாளாய் உண்ணாவிரதம்
நீண்ட கால சாதனைகள் : அரசியல் வேடம் ( படங்கள் வெளியாகும்போது மட்டும்)
சமீபத்திய சாதனைகள் : எழுந்து நின்று கைதட்டியது
நீண்ட கால எரிச்சல் : தன் ஆன்மிகம் செல்லுபடி ஆகாதது
சமீபத்திய எரிச்சல் : அறிக்கை விட்டவர்கள்
மக்கள் : பிளாக் டிக்கெட்டில் படம் பார்ப்பவர்கள்
சொத்து மதிப்பு : ஜாக்கி ஜானுக்கு அடுத்த சம்பளம்
நண்பர்கள் : கர்நாடகாவில் இருக்கிறார்கள்
எதிரிகள் : தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்
ஆசை : தமிழ்நாட்டை ஆள
நிராசை : இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை
பாராட்டுக்குரியது : மனதில் பட்டதை பேசிவிடுவது
பயம் : பாராட்டு விழா
கோபம் : ஜெயலலிதாவிடம் மட்டும்
காணமல் போனவை : நதி நீர் இணைப்பு
புதியவை : எந்திரன்
கருத்து : இவர் நடித்த ஜானி, முள்ளும் மலரும், தளபதி, ஆறிலிருந்து அறுபதுவரை, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்னமும் பேசப்படுபவை.
டிஸ்கி : இவரும் ஒரு போலி ஆன்மிகவாதி.
31 கருத்துகள்:
என்னதான் பயோடேட்டா போட்டாலும் உங்க பையன்கூட ரஜினின்னா “சும்மா அதிருதுல்ல”னு சொல்லத்தான் போறான்...
எம்.ஆர்.ராதா டயலாக் ஞாபகம் இருக்கா?? சினிமா நடிகனும் கூத்தாடிதான். அவனுக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கணுமோ அந்த அளவுதான் கொடுக்கணும்.... இது மக்கள் மனசில பதியாதவரை தமிழ்நாட்டுமக்கள் தங்கள் மீட்பரை சினிமா கொட்டகையில்தான் தேடுவார்கள்
//ரஜினி என்று தன் பெயரின் முன்னாள் போட்டுக்கொள்பவர்கள்//
இத படிச்சதும் சுரேஷ் நித்யானந்தா ,வாசு நித்யானந்தா ன்னு நீங்க சொன்னது நியாபகம் வருது..
//என்னதான் பயோடேட்டா போட்டாலும் உங்க பையன்கூட ரஜினின்னா “சும்மா அதிருதுல்ல”னு சொல்லத்தான் போறான்...//
இதுதான் ரஜினியின் வெற்றி
நீங்க ரஜினி ரமேஷ் இல்லையே
//கோபம் : ஜெயலலிதாவிடம் மட்டும் //
இன்னுமா ? !!!
//இன்னுமா??//
கலைஞர்கிட்ட காட்டமுடியலியே
" இவரும் ஒரு போலி ஆன்மிகவாதி "
ஒருவர் உண்மையான ஆன்மீகவாதியா, உண்மமயான நாத்திகவாதியா என்பதெல்லாம், அவரரவர் மனசாட்சிக்கு தான் தெரியும்,.,,,
ஆன்மிகம் என்பதே பொய் என சொல்வது வேறு விஷயம்..
அனால், மற்றவரை போலி ஆன்மிகக வதி அல்லது உண்மையான ஆன்மிகவாதி என கணிப்பதற்கு , நாம் பெரிய ஆன்மிக வாதிகளாக இருக்க வேண்டும்...
நண்பர் என்ற முறையில், அவரை சரியாக கணிக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறது என நான் ஒப்புகொள்கிறேன்...
//ஒருவர் உண்மையான ஆன்மீகவாதியா, உண்மமயான நாத்திகவாதியா என்பதெல்லாம், அவரரவர் மனசாட்சிக்கு தான் தெரியும்,.,,,
ஆன்மிகம் என்பதே பொய் என சொல்வது வேறு விஷயம்..
அனால், மற்றவரை போலி ஆன்மிகக வதி அல்லது உண்மையான ஆன்மிகவாதி என கணிப்பதற்கு , நாம் பெரிய ஆன்மிக வாதிகளாக இருக்க வேண்டும்...
நண்பர் என்ற முறையில், அவரை சரியாக கணிக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறது என நான் ஒப்புகொள்கிறேன்..//
சமீபத்தில் பிரபஞ்சன் சொன்னார் சாமியார்களில் நல்ல சாமியார் கெட்ட சாமியார் கிடையாது.,
சாமியாருன்னாலே அயோக்கியனுங்கதான்., அது போல இவரும்.........?
கலக்கல்.உறைத்தாலும் பல உண்மைகள் உண்டு.
:)))
ஆன்மீகத்தில், உண்மை ஆன்மிகம் - போலி ஆன்மிகம் என்றெல்லாம் கிடையாது..ஆன்மிகம் என்பதே மோசடி என்பது உங்கள் பார்வை என்றால், பயோ டாடாவில், எந்த முரண்பாடும் இல்லை ... நன்றாக இருக்கறது...
////கோபம் : ஜெயலலிதாவிடம் மட்டும் //
இன்னுமா ? !!! //
//கலைஞர் கிட்ட காட்ட முடியலயே//
இதுவும் சும்மா அதிருதில்ல.
//கலக்கல்.உறைத்தாலும் பல உண்மைகள் உண்டு.//
நன்றி சதீஷ்
:)))
நன்றி ஐயா
//ஆன்மீகத்தில், உண்மை ஆன்மிகம் - போலி ஆன்மிகம் என்றெல்லாம் கிடையாது.//
நன்றி பார்வையாளன்
இதுவும் சும்மா அதிருதில்ல.
நன்றி ராஜ நடராஜன்
இத போஸ்டர் அடிச்சி ஒட்டுனா கூட யாரும் திருந்த போறதில்ல...இதையும் வச்சு அரசியல் பண்ற திறமை வேணா நம்ம ஆளுங்ககிட்ட நிறைய இருக்குன்னு ஒதுக்குவேன்.
வயது மற்றும் துணை தலைவர்கள் பற்றிய கமெண்ட் டில் இருந்த நையாண்டி மற்ற இடங்களிலும் இருந்திருக்கலாம் .. ஜெயா விடம் கோபம் எனபது ரொம்ப பழைய கதை யாச்சே..அவர் இவங்கள தைரிய லட்சுமின்னு பராட்டுனதும் ,ஜெயா இவர் மகள் கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுத்ததையும் மறந்தாச்சா?
//இத போஸ்டர் அடிச்சி ஒட்டுனா கூட யாரும் திருந்த போறதில்ல..//
நன்றி பாரதி பரணி .....
//அவர் இவங்கள தைரிய லட்சுமின்னு பராட்டுனதும் ,ஜெயா இவர் மகள் கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுத்ததையும் மறந்தாச்சா//
அந்த கோபம் ஏன் கலைஞர் மீது காட்ட முடியவில்லை ?
நன்றி கிருஷ் குமார் ..
He is an excellent business man as he knows the pulse of Tamilians, and also how to make money from them. His ONLY goal in money..money...
very nice
புதியவை : எந்திரன்
பெயர்: பிரபாகரன்
தலைவர்: அவரே
துனை தலைவர் : அதுவும் அவரே
மேலும் துணை தலைவர்கள்: இதுவும் அவரே
ஆசை: தனி ஈழம்
நிராசை: இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை
வயது: சண்டை போடும் வயதல்ல
தொழில்:அப்பாவி பொதுமக்களை கொல்வது
நண்பர்கள்: உடன் இருப்பவர்கள்
எதிரிகள்: அங்கே சண்டை நடக்கும் போது இங்கே அறிக்கை விடுபவர்கள்.
பயம்: ராஜபக்ஷ்சே
கோபம்: கருணாநிதி
டிஸ்கி: இவரும் ஒரு போலி புரட்சிவாதி
இந்த விளையாட்டு நல்லா இருக்குல்ல? மத்தவங்களுக்கு பிடிச்வங்களை பத்தி என்ன வேணும்னாலும் எழுதுறது
நன்றி அம்பி, நீங்கள் சில சந்தேகங்கள் கேட்டிருந்தீர்கள், நிறைய ஆணி இருந்ததால் பதில் எழுத முடியவில்லை
//இந்த விளையாட்டு நல்லா இருக்குல்ல?//
ஆமாம் ஐயா , அது ஏன் டுமில் டுமில்ன்னு பெயர்
போலி ஆன்மிக வாதி என்றால் அது நித்யானந்தா வை குரிக்கும்.ஆனால் ரஜினி என்ன ஆசிரமம் நடத்தியா ஏமாற்றினார்.ஊடகங்கள் தான் அவர் எந்த சாமியை கும்பிடுகிரார்.என வெளிச்சம் போட்டுக்கொண்டே இருந்தது.அவர் இந்த சாமியை கும்பிடுங்கள் என்று நிர்பந்திக்க வில்லையே...அரசியல் ஆசை இருந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவர் முதலமைச்சர் ஆக முடியும்.தன் சக்தியை, ரசிகர்களை அவர் தவறாக பயன்படுத்தவில்லை.இதெல்லாம் தெரியாமல் விஜய் பற்றி எழுதுவது போல் எழுத வேண்டாம்
என்னடா இதை யாரும் சொல்லலியேன்னு பாத்தேன்,
சதீஷ் அவரு பாபா படத்துக்கு பண்ண அலப்பறை பாக்கலியா..
இவரு தனியா இமயமலைக்கு போனாரு, அது எப்புடி வீடியோவா வந்தது ,
நீ ஆன்மீகத்தை நம்பினால் அது உன் தனிப்பட்ட விஷயம் அதை ஏன் விற்பனை செய்கிறாய்,
அப்புறம் அவர் ஆட்சியை பிடிப்பார் என்பது காமெடி,
அதெல்லாம் முடியாதுன்னு அவருக்கே தெரியும் தல,
பிரிச்சு மேயுறீங்க நண்பா
:)
:-))
நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு ;பொய்யான ஆண்மீகவாதியெனில் , நித்யானன்தவை போல காட்டப்பட்டு இருப்பார்.. அதோடு, அவர் நடிகனாக அனைவராலும் ரசிக்கப்பட்டதை போல, தனி மனித வாழ்விலும் ரசிகப்படுவார்;
கருத்துரையிடுக