30 ஏப்., 2010

முகமற்ற உறவுகள்

பூரணி 
எனக்கு இணையத் தோழி 
சாட்டிங் அலுத்துப்போய் 
தொலைபேசிக்கு
மாறிக்கொண்டோம் 
மணிகணக்கில் நீளும் 
பேச்சில் 
எல்லாமும் இருக்கும்.

இருவருக்கும் 
இருந்த சந்திக்கும் 
விருப்பங்கள் 
வருடங்களை விழுங்கின
சில மாதங்களாய்..,
தொடர்புகளின் 
எல்லைக்கு வெளியே  
அவளது எண்,
உபயோகத்தில் இல்லை 
என்னுடைய எண்..  

சமீபத்தில் ஒரு நாள் 
தஞ்சைக்கு போனபோது 
பெரிய கோவில் 
பிரகாரத்தில் 
குடும்பத்துடன் அமர்ந்து
குழந்தைகளுக்கு 
கதை சொல்லிய குரல் 
கேட்ட மாதிரி இருந்தது?

கருவூரார் சன்னதியில் 
நான் பேசிகொண்டிருந்தபோது 
நீங்கள் செந்திலா?
என விசாரித்த அவளிடம் 
இல்லை என 
ஏன் சொன்னேன்?...

15 கருத்துகள்:

Chitra சொன்னது…

இதுதான் எதார்த்தமோ?
:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அந்த பெண்: நீங்க செந்திலா?
செந்தில்: இல்ல நான் கேஆர்பி செந்தில்

நம்பிட்டோமே..

KUTTI சொன்னது…

DEAR SENTHIL,


THANKS FOR VISITING MY PAGE AND YOUR SWEET COMMENTS.

FRIEND,
MANO

Unknown சொன்னது…

//இதுதான் எதார்த்தமோ?
:-)//
நன்றி சித்ரா.. ஆமாம் எப்படி உங்களால் எல்லா பதிவுகளையும் படிக்க முடியுது?

Unknown சொன்னது…

//அந்த பெண்: நீங்க செந்திலா?
செந்தில்: இல்ல நான் கேஆர்பி செந்தில்//

ஹி...ஹி ..

Unknown சொன்னது…

நன்றி மனோ .

Unknown சொன்னது…

Vasanthakumar Selvarasan - .
சமீபத்தில் ஒரு நாள் தஞ்சைக்கு போனபோது
பெரிய கோவில் பிரகாரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து
குழந்தைகளுக்கு கதை சொல்லிய பூரணி எனக்கு தோழி

இருவருக்கும் இருந்த விருப்பங்கள் சில மாதங்களாய்..,
அவளது எண் தொடர்புகளின் எல்லைக்கு வெளியே
என்னுடைய எண் உபயோகத்தில் இல்லை1

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//கருவூரார் சன்னதியில்
நான் பேசிகொண்டிருந்தபோது
நீங்கள் செந்திலா?
என விசாரித்த அவளிடம்
இல்லை என
ஏன் சொன்னேன்?...//

:)))

Unknown சொன்னது…

நன்றி சங்கவி ..

AkashSankar சொன்னது…

அருமை அருமை மிக அருமை...

ஹேமா சொன்னது…

வாழ்வின் யதார்த்தம்.அனுபவ உண்ர்வு !
கவிதை சொன்ன விதம் அழகு செந்தில்.

Unknown சொன்னது…

நன்றி.. ராசராசசோழன்

Unknown சொன்னது…

நன்றி.. ஹேமா

பாரதி பரணி சொன்னது…

ஏதார்த்தமாக உள்ளது...வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நன்றி பாரதி பரணி