27 ஏப்., 2010

நாய்பிழைப்பு

தெரு நாய்களுக்கு லைசன்ஸ் இல்லை 
முதலாளிகளும் இல்லை 
கிடைத்தவற்றை சாப்பிடும் 
கொடுப்போருக்கு வாலாட்டும் 
தான் வாழும் தெருவை 
தன் உலகமாக கருதும்
பக்கத்து தெரு நாய்கள் நுழைந்தால் 
பஞ்சாயத்துகள் நடக்கும் 
சமயங்களில் சண்டைகளில் முடியும் 
கூட்டமாய் வாழும் 
கார்த்திகை மாதங்களில் 
எல்லோரும் முகம் சுளிக்க அல்லது 
ரகசியமாய் ரசிக்கும்படி 
தெருவிலேயே கூடும் 
பின் 
குட்டிகள் நிறைய போடும் 
வாகனங்களில் அடிபட்டு  செத்தது போக 
சில ஊனங்களும் உண்டு.
நள்ளிரவுக்குப்பின் யாரும் வந்தால் 
ஊரையே கிளப்பும் 
அடிக்கடி சிலரை கடித்தும் விடுவதால் 
நாளிதழில் செய்திகளாய் வரும்.
மறுநாள் மட்டும் வரும் 
கார்பரேசன் ஆட்கள் 
கிடைத்தை பிடித்து போவர்.
காயடித்து விடுவதாய் சொன்னாலும் 
போனவை திரும்பியதில்லை 
நன்றியின் இலக்கணம் வளர்ப்பு நாய்கள்
மட்டுமே.
தெரு நாய்கள் சனியன்கள்..  

16 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

//தெரு நாய்களுக்கு லைசன்ஸ் இல்லை
முதலாளிகளும் இல்லை//

எங்கையே இடிக்குதே...

Unknown சொன்னது…

//எங்கையே இடிக்குதே..//

அப்படிதான் ஜெய்லானி..
லைசன்ஸ் (குடும்ப அட்டை) ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கமெண்ட் போடலைனா நாயை விட்டு கடிக்க விட மாட்டீங்களே?

Unknown சொன்னது…

//கமெண்ட் போடலைனா நாயை விட்டு கடிக்க விட மாட்டீங்களே?//

ஏன்னே.. இந்த கொலவெறி

pichaikaaran சொன்னது…

" எல்லோரும் முகம் சுளிக்க அல்லது
ரகசியமாய் ரசிக்கும்படி"

இதில் நீங்கள் எப்படி ?

நான் ? ஹி ஹி

நர்சிம் சொன்னது…

ரசித்தேன்.

Unknown சொன்னது…

//ரசித்தேன்.//

நன்றி நர்சிம்..

Unknown சொன்னது…

//இதில் நீங்கள் எப்படி ?

நான் ? ஹி ஹி //

நானும்தான் ...

pichaikaaran சொன்னது…

ரசித்தேன்.//

நன்றி நர்சிம்..

****************
கவிதையைத்தான் ரசித்து இருப்பார் என நினைக்கிறேன்... நாம் ரசித்ததை அல்ல ... அவர் நம்மை மாதிரி இல்லை ..ஹி ஹி

Unknown சொன்னது…

//நாம் ரசித்ததை அல்ல//

அப்படியா ......?

CS. Mohan Kumar சொன்னது…

தெரு நாய்கள் பெரும் தொந்தரவே; நானும் இவ்வாறு உணர்ந்துள்ளேன்

Unknown சொன்னது…

நன்றி மோகன் குமார்

ராஜ நடராஜன் சொன்னது…

எனக்கே கவிதை புரியுதுன்னா பார்த்துக்கோங்களேன்:)

Unknown சொன்னது…

நன்றி ராஜ நடராஜன்

தமிழ் மதுரம் சொன்னது…

நக்கல் கலந்த நகைச்சுவைக் கவிதை அருமை.

தமிழ் மதுரம் சொன்னது…

கவிதை ஒரு தலைப்பினூடாக இரு பொருளை விளக்குதே.. எங்கேயோ உதைக்குது.