மறுநாள் காலை ஹோட்டலில் அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தங்குவதற்கான பணத்தைக் கட்டினேன். மொரிசியசில் ரோஸ்ஹில்ஸ் என்ற இடத்தில்தான் தங்கினோம். அந்த ஹோட்டலில் ஒரு வசதி இருந்தது, ஒரு பெட்டுக்கு தினமும் நூறு ரூபாய் வாடகை, அங்கிருக்கும் பொதுக் கிச்சனில் நாம் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம், சாப்பிட்டுவிட்டு தட்டுகளையோ, பாத்திரங்களையோ கழுவ வேண்டியதில்லை. அப்படியே சிங்கிள் போட்டுவிட்டால் அவர்களே ஆள் வைத்து கழுவிகொள்வார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அவர்கள் பிரச்சினை முடியும்வரை அவர்கள் கூடவே தங்குவது என முடிவு செய்தேன்.
மொரிசியஸ் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டேன். மொரிசியசின் பிரதான மொழி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் சொந்த மொழி கிரியோல், இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர், மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். முக்கிய தொழில் கரும்பு விவசாயம். ஆடை தயாரிப்பு மற்றும் சுற்றுலா. அங்குள்ள பொட்டானிக்கல் கார்டனில் 150 ஆண்டுகளுக்கு மேல் வயதான ஆமைகள் இருக்கிறது, மேலும் இந்தியாவில் இருந்து வருவோருக்கு அங்கு இந்திரா காந்தி நட்ட மரத்தை அவசியம் காட்டுகின்றனர். ஹாலிம் என்றொரு கஞ்சி தெருக்களில் விற்கும் அதனை ஹாட் பிரட்டுடன் சாப்பிடுவார்கள் மிகவும் அருமையாக இருக்கும். பிரியாணிக்கு புளி தொட்டு கொள்ளும் வழக்கமும் உண்டு. கங்கை நீரை கொண்டுவந்து ஒரு மலை குளத்தில் கலந்து இருப்பார்கள். மிகப் பெரிய சிவன் சிலை நான் போனபோது அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஏராளமான பீச்சுகளும் ரிசாட்டுகளும் உள்ளன.
மேலும் அங்கு ராணுவம் கிடையாது. போலீசையே அதன் மாதிரி ஒரு அமைப்பாக வைத்திருப்பார்கள். இதற்கு மேல் சொல்வது மெயின் மேட்டரை பாதிப்பதால்...
இரண்டு நாள் கழித்தும் அவர்களை அழைக்க யாரும் வரவில்லை. ஏஜென்டிடம் பேசினால் அவன் என்னை அங்கிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருந்தான். நான் தினமும் காலையில் கிளம்பி விடுவேன். இரவுதான் வருவேன். நான்காம் நாள் அவர்களிடம் உங்கள் ஏஜென்டிடம் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என விசாரித்தேன். ஆளுக்கு தலா மூன்று லட்சம் அட்வான்சும், பிரான்ஸ் சென்ற பிறகு இரண்டு லட்சம் கொடுப்பதாக பேசியிருக்கிறோம் என்றனர். நான் அவர்களிடம் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள், உடனே ஊரில் இருந்து ஆள் அனுப்பி அவன் மேல் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுங்கள் என்றேன்.
கொடுமை என்னவென்றால் இன்னமும் அவர்கள் அவனை நம்புவதாகவும் எப்படியும் தங்களை அனுப்பி வைப்பன் எனவும், தங்களுக்கு நீண்ட நாள் பழக்கம் உள்ளவன். பகலில் அவனிடம் அவர்கள் பேசியதாகவும், அவன் மொரிசியஸ் ஏஜென்ட் பிரான்சில் இருக்கிறான், இன்னும் இரண்டு நாட்களில் அவர்களை கூட்டிச் செல்வான் என சத்தியம் செய்ததாகவும், நான் செலவு செய்த தொகையை என் வீட்டில் கொடுப்பதாகவும் சொன்னார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் அவனை நம்பினார்கள்.
எனக்கு அவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது. சரிங்க உங்க நம்பிக்கைய நான் கெடுக்க விரும்பல, ஆனாலும் கொஞ்சம் உங்களுக்குள் யோசனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கடுத்த நாட்களில் நான் பிஸியாகிவிட்டேன். பொதுவாகவே அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். மேலும் அங்கு மதுபான வகைகள் விலை குறைவாக இருக்கும். ஹிந்திப் படங்கள் அங்கு பிரபலம். தமிழ் படங்கள் dvd களாக கிடைத்தது. இப்போது எப்படி எனத் தெரியவில்லை. பொதுவாகவே தமிழ் தெரிந்த ஆட்கள் அரிதாகவே தென்பட்டனர். விசாரித்தபோது இப்போதுதான் அதற்கான அவசியத்தை உணர்கிறோம் என்றனர். இது நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இப்போது எப்படி என படிப்பவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
இப்படியாக நான் ஊர் வரும் நாள் வந்துவிட்டது. அந்த ஐவரும் அன்றுதான் தங்கள் நிலையை உணர்ந்தார்கள். என்னுடனே வரவேண்டும் என பிடிவாதம் பிடித்தனர். ஏர்லைன்சுக்கு பேசினால் சீட் இல்லை என கைவிரித்து விட்டனர். அதைக் கேட்டதும் அழவே ஆரம்பித்து விட்டனர். எப்படியாவது இங்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி கெஞ்சினார்கள். எனக்கு பாவமாக இருந்தது. ஆனால் அன்று மாலை நான் ஊருக்கு கிளம்பியாக வேண்டும். அவர்களுக்கு மேலும் ஒரு வாரத்திற்கான ஹோட்டல் வாடகை கட்டிவிட்டு, சமையல் பொருட்கள் வாங்கி கொடுத்துவிட்டு. ஆளுக்கு நூறு யு.எஸ் டாலர் கொடுத்தேன். மேலும் அங்கு நான் பயன்படுத்திய சிம் கார்டையும் கொடுத்தேன்.ஒரு வாரத்திற்குள் உங்கள் ஏஜென்ட் வரவில்லை என்றால் தயவு செய்து ஊருக்கு வந்துவிடுங்கள், நான் ஊருக்கு சென்று உங்கள் ஏஜெண்டை பிடிக்கிறேன் என விடை பெற்றேன்.
ஆனால் ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சண்டை ஆரம்பித்தது. அதைப் பற்றியும் ஊருக்கு வந்து அந்த ஐவருக்காக நான் அலைந்ததையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
21 கருத்துகள்:
பாவம் அந்த ஐவர் - இப்படி சொல்லனும் என்று நினைத்தாலும் ஒரு பக்கம் அவர்கள் மீது கோபம் வருகிறது.
பதிவிலேயே மொரிஷீசியஸ் பற்றி பல விபரங்கள் கொடுத்துள்ளீர்கள்.
நான் மிண்டும் வருவேன்.........
அந்த ஐந்து பேரின் நிலமையை நினைத்தால் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது,, தொடருங்கள்..
ore posta podalamla thala
//மேலும் அங்கு மதுபான வகைகள் விலை குறைவாக இருக்கும்.//
எங்க போனாலும் எங்க செந்தில் அண்ணே காரியத்துல கண்ணதான் இருப்பாங்க.
பாவம் அந்த ஐந்து பேரும்
மூன்று பதிவும் இன்று தான் வாசித்தேன்,தொடருங்கள்.அந்த 5 பேரின் கதி ..படிக்க ஆவல்..
@ krp
ஏற்கனவே சொன்னது போல,நான் தற்போது மோரீசியஸஇல் தான் வசிக்கிறேன். விரைவில் இந்த நாட்டை பற்றியும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் எழுதுகிறேன். பொதுவாக இந்த நாட்டு மக்கள் மிக நல்ல மக்கள். எந்த பிரச்சனையும் செய்யமாட்டார்கள்.ரொம்ப friendly
இந்த நம்பிக்கைதானே ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி. எத்தனை முறை ஏமாந்தாலும் நம் மக்கள் சலிக்காமல் திரும்பத் திரும்ப ஏமாறுவார்கள்.
good writing...
நினைக்கவே கஸ்டமாயிருக்கு.எங்களவர்களும் இப்படிக் கஸ்டப்பட்டதுண்டு(1982 - 87) ஆரம்பக் காலங்களில்.ஐஸ் ல் கஸ்டப்பட்டு இறந்தவர்கள் கூட உண்டு.ஏஜெண்டுக்கள் ஏமாற்றிவிட இடைநடுவில் எத்தனையோ நாடுகளில் மாட்டுப்பட்டுக்கொண்டவர்களும் நிறையவே.
தொடருங்க
தங்களின் பொறுப்புணர்ச்சியை... வியந்தேன்.
தொடருங்க.
டென்ஷனா இருக்கு; சீக்கிரம் எழுதுங்க!
போட்டோலா எங்க இருந்து எடுகிறீங்க...சரியா இருக்கு...தொடருங்கள்...
ஐவரின் மீதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதற்க்கு என் வந்தனம்...
Aduthu enna nadanthathu? Seekirame pathividungal. Sari, oru honeymoon spot ku mouritius eppadi irukum?
3 லட்சம் பணம் எனும் போது அவர்கள் நிலை யோசிக்க தக்கது தான்.
ஆனால் உண்மையில் பாவம் நீங்கள் தான்
தொடருங்கள் செந்தில்
அனுபவங்களை படித்தவர்கள் ...
//பதிவிலேயே மொரிஷீசியஸ் பற்றி பல விபரங்கள் கொடுத்துள்ளீர்கள்.//
நன்றி வடுவூர் குமார் .. மொரிசியஸ் பற்றி நிறைய விபரங்கள் உண்டு தனிப் பதிவாக எழுதுகிறேன் ..
//நான் மிண்டும் வருவேன்.........//
நன்றி சௌந்தர் ..
//அந்த ஐந்து பேரின் நிலமையை நினைத்தால் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது,//
நன்றி நாடோடி ... உலகம் முழுதும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது ..
//ore posta podalamla தல//
நன்றி எல்.கே பதிவின் நீளம் கருதியும் என் சோம்பேறித்தனமும் .. நான்கு பதிவுகள் ஆகிவிட்டன..
//எங்க போனாலும் எங்க செந்தில் அண்ணே காரியத்துல கண்ணதான் இருப்பாங்க.//
நன்றி ரமேஷ் .. நமக்கு குடி ரொம்ப முக்கியம் ...
//மூன்று பதிவும் இன்று தான் வாசித்தேன்,தொடருங்கள்.அந்த 5 பேரின் கதி ..படிக்க ஆவல்.//
நன்றி ஆசியா ஓமர் .. நாளைக் காலை முடிக்கிறேன் ...
//பொதுவாக இந்த நாட்டு மக்கள் மிக நல்ல மக்கள். எந்த பிரச்சனையும் செய்யமாட்டார்கள்.ரொம்ப பிரின்ட்லி//
உண்மைதான் அருண் பிரசாத் .. நான் வியந்த அனுபவங்கள் நிறைய உண்டு .. உங்கள் பதிவில் அவற்றை எதிர்பார்கிறேன் ..
//இந்த நம்பிக்கைதானே ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி//
நன்றி ஜெயந்தி ... இன்னமும் ஏமாறுகிறார்கள் ...
//good writing..//
நன்றி பார்வையாளன் ..
//கஸ்டப்பட்டு இறந்தவர்கள் கூட உண்டு.//
ஆமாம் ஹேமா ... ஈழத் தமிழர்கள் நிறையபேர் இறந்துபோன பைத்தியமாகிப்போன சமபவங்கள் நிறைய ...
//தொடருங்க//
நன்றி பிரியமுடன் பிரபு ...
//தங்களின் பொறுப்புணர்ச்சியை... வியந்தேன்.//
நன்றி கருனாகராசு அண்ணே .. நம்ம ஆளுங்க அதான் விட்டுவிட மனசில்லை..
//டென்ஷனா இருக்கு; சீக்கிரம் எழுதுங்க!//
நன்றி ஹூசைனம்மா ..முடித்துவிட்டேன் இரவு பனிரெண்டு மணிக்கு போஸ்ட் செய்கிறேன் ...
//போட்டோலா எங்க இருந்து எடுகிறீங்க.//
நன்றி கமலேஷ், நண்பர்கள் அனுப்பிவைக்கின்றனர் .. இதில் பயன்படுத்தும் அனைத்தும் சிங்கப்பூர் கணேசன் அனுப்பியது ..
//ஐவரின் மீதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதற்க்கு என் வந்தனம்...//
மிக்க நன்றி நிகழ்காலத்தில் சார் ..
//Aduthu enna nadanthathu? Seekirame pathividungal. Sari, oru honeymoon spot ku mouritius eppadi irukum?//
நன்றி ரீனா .. ஹனிமூனுக்கு மொரிசியஸ் ஒரு அற்புதமான ஸ்பாட்...
//ஆனால் உண்மையில் பாவம் நீங்கள் தான்//
நன்றி சபரிநாதன் சார் .. என்ன செய்ய நிர்கதியாய் விட்டுவிட மனசில்லை ..
//தொடருங்கள் செந்தில்//
நன்றி TVR ஐயா...
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....
அந்த ஐந்து பேரின் நிலையை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கு நண்பரே !
/////ஆனால் ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சண்டை ஆரம்பித்தது. அதைப் பற்றியும் ஊருக்கு வந்து அந்த ஐவருக்காக நான் அலைந்ததையும் அடுத்த பதிவில் சொல்கிறேன். //////
என்ன சொல்றீங்க நண்பரே மீண்டும் ஒரு சண்டையா ! ஆஹா ம்ம் அடுத்தப் பதிவிற்கு டானு வந்துவிடுகிறேன்.
நானும் அடுத்த பதிவிற்கு டாண்ணு நானும் வந்திடறேன்..
கருத்துரையிடுக