ஆடுகளயும் பத்திட்டு போவும் பெரியசாமித்தேவர்
பொழுசாய வருவாரு..
கெழவனும் சொத்துபத்த பிரிச்சுட்டு
வாக்கப்பட்டவ போனபின்னே
மருமவகிட்ட கையேந்தாம
கொல்லையில குடிசைபோட்டு ஆடுகளோட
கெடக்காரு..
தேவருக்கு தொடுப்புன்னு ஊரு சனம் பேசும்
செல்லாயி சாதி சனம் அத்தவ ..
ஊரு விட்டு ஓடி வந்து அடைக்கலமானவ,
பாம்பு புடுங்கி புருசன்காரன் செத்துப்போவ
தேவர் தரும் வெத்துலாக்கு போட்டுட்டு
கஞ்சி காச்சி எறக்கி வப்பா...
ஒரு நா தேவரும் பொசுக்குன்னு போவ
பதினாறு நாளும் அழக்கூட இல்லாம
அம்புட்டு வேலையும் ஒத்தையா பாத்து
ஆடுகள பாத்துகிட்டு, ஆருட்டயும் பேசாம
அங்கனயே கெடந்தா...
கெழவனோட குடிசையும்,ஆடும்
யாருக்குன்னு வந்தப்ப..
செல்லாயி எங்க சின்னாத்தா
அவளே அங்கெருந்து பொங்கி தின்னட்டும்
எனக் கெழவனோட பெரிய மவன் சொல்ல,
பெருங்குரலெடுத்து..
நாம் பெத்த மக்கான்னு ஒப்பாரி வச்சா
சின்னாத்தா..
(வெத்தலாக்கு- வெற்றிலை பாக்கு, சின்னாத்தா - இரண்டாம் மனைவி )
ஒரு பகிர்வு: நம் நண்பர், பதிவர், யூத், கேபிள் சங்கரின் எண்டார்ஸ்மெண்ட் சிறுகதை இந்தவார கல்கியில் வந்திருக்கிறது...
34 கருத்துகள்:
இருவரின் வாழ்க்கையை வெகு இயல்பாய் கூறிய விதம்..
கிராமத்தின் வாசனையுடன் வார்த்தைகள்..
ரொம்ப நல்ல இருக்கு...
நம்ம மண்ணின் மணம் மற்றும் இயல்பு மற்றும் எதார்த்தம்
//நாம் பெத்த மக்கான்னு ஒப்பாரி வச்சா
சின்னாத்தா.. //
சின்னாத்தாவின் ஒப்பாரியில் பளீச்...!
எனக்கு பரிச்சயமான வார்த்தைகள்:)
வெகு இயல்பான நடை
மண்வாச வரிகள் + புகைப்படம் அருமை
என்ன கொஞ்சகாலமா கவிதையெல்லாம் தனி மெருகோட வருது? எனிதிங் ஸ்பெஷல்?
அநியாயத்துக்கு ஆல்ரவுண்டரா ஆயிட்டீங்க!
எனக்கு பரிச்சயமான கிராமத்தின் வாசனையுடன் நல்ல இருக்கு...
அருமையோ அருமை:)
அருமை.
//நாம் பெத்த மக்கான்னு ஒப்பாரி வச்சா
சின்னாத்தா.. //
ரொம்ப நல்லாயிருக்கு.
மண்வாசனையோடு கூடிய இயல்பு நடை...
super
சின்னாத்தாவ கேட்டதா சொல்லுங்க.
கவிதைக்குப் பாராட்டு.
படத்துக்கு சபாஷ்.
கவிதை நல்லா இருக்கு செந்தில் அண்ணா!!!
இயல்பான நடை
எங்க ஊருக்கு போயிட்டு வந்தேன்.
எங்க ஊருக்கு போயிட்டு வந்தேன்.
மண் வாசனை நம் கண் முன் தெரியது
எந்த மக்கா என்ன இம்புட்டு சொல்லிபுட்டிங்க......
கவிதை அருமை :)
Oops.... chanceless...!!!
super........
என்ன, கவிதைன்னு போட்டுட்டுக் கதை சொல்லிட்டுப் போறாரேன்னு வாசிச்சேன். //நாம் பெத்த மக்கா//வுல நொறுக்கிட்டீங்க.
அடைக்குந் தாழ் என்ன, அங்கீகாரம் அணை உடைக்கும்.
மண்வாசனையா மனிதாபிமான வாசனையா ? ரெண்டுமே இணைந்த கவிதை.
சின்னாத்தா ... பெரியசாமித்தேவரின் பெரிய மவன் .... மனிதம் உயிர்த்தெழுகின்றது உங்கள் வரிகளில் .....
Good Slang
அன்பின் செந்தில்
அருமை அருமை - மண் வாசனை - மனிதம் தழைக்கும் மண் வாசனை - சின்னாத்தா - நான் பெத்த மக்கா - நெஞ்சம் நெகிழ்கிறது செந்தில்
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
நல்லா இருக்குண்னே கதையுடன் கூடியக்கவிதை.
சின்னாத்தா - கவிதை கதை அருமை.
நல்லாருக்கு செந்தில் சார்
மண்வாசனை கமழ ..
மனிதம் இழையோட...
கேபிளுக்கு வாழ்த்துகள்
ஏனோ, இக்கவிதை படித்ததும்,
'முதல் மரியாதை' சிவாஜியும்,
ராதாவும் மனக்கண்களில்....
யூத் கதையை படிக்க 'கல்கி'
வாங்கி சர்க்குலேஷனை கூட்டிரலாம்.
கவிதையில் ஒரு கதை...நல்லாயிருக்கு செந்தில்..
கருத்துரையிடுக