11 ஆக., 2010

நானும், கடவுளும்...

நான் பிறக்குமுன்பே ஜோசியக்காரன் நான் பூர்வீக வீட்டில் பிறந்தால் அண்ணனுக்கு ஆகாது என்று சொன்னான் என்பதற்காக எங்கள் சொந்த வீட்டை விட்டு அம்மாவின் அப்பா கொடுத்த (சும்மாதான்) இடத்தில் வீடு கட்டிக்கொண்டு (இதுவும் தாத்தாவின் உபயம்தான்)வந்துவிட்டார்கள்..
பிறந்து ஒரு வருடத்தில் என்னை பழனி முருகனுக்கு தத்து கொடுத்துவிட்டனர் (அப்பவே தண்ணி தெளிச்சு விட்டாச்சு).அதனால் அப்பாவோ ,அம்மாவோ நான் தப்பு செய்யும்போது அடித்தால் ..ஐயோ முருகா ..நீ பார்த்துக்கோ .. என்று சாபம் கொடுப்பேன் ..
கொஞ்சம் வால் முளைத்தவுடன் ..என்னுடைய வீட்டை சுற்றியும் இருக்கிற அநேக வீடுகள் மாமன் ,மச்சான் வீடுகள்தான் அங்கு உள்ள பெண்டுகளுடந்தான் எப்போதும் விளையாடுவேன் (அப்பா ,அம்மா விளையாட்டெல்லாம் இல்லங்க! )பெரும்பாலும் கோவில் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் ,திருவிழா பண்ணுவோம் .. வீட்டில் காசு கேட்டு தொந்தரவு செய்வதால் நல்லா பாட்டு விழும் .. மற்றபடி தேவையான பொருட்களை அவங்கவங்க தெறமைக்கு தக்கன மாதிரி ஆட்டைய போட்டுட்டு வருவாங்க ...
அஞ்சாப்புக்கு (ஐந்தாம் வகுப்பு ) பிறகு செட்டு மாறிடுச்சு ..அப்புறம் பம்பரம் ,கபடி ,தட்டுகோடு ,கிட்டிபுள்ளு ,விளையாடுறதுக்கே நேரம் சரியாப்போகும் ..இடையில் ஜூனுக்கு பிறகு ஆத்துல தண்ணி வந்துரும் ..அப்புறம் என்ன ஸ்கூல் விட்டு வந்தவுடன் நேரா ஆத்துக்குதான் அங்க போனவுடன் டவுசர கழட்டி கரையில் போட்டுவிட்டு இருட்டறவரைக்கும் ஒரே கும்மாளம்தான் ...நம்மளோட தோஸ்துல தஞ்சாவூரானும் ஒருத்தன்.
சிங்கப்பூர் வந்தபிறகும் அடிக்கடி கோவிலுக்கு போவதுண்டு ,மறுபடியும் ஒரு ஜோசியக்காரனின் அறிவுரைப்படி சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயனுக்கு விரதம் இருக்கும்படி அம்மாவின் கடிதம் வந்தது ..
சிங்கப்பூர்ல எப்படி விரதம் இருக்கிறது ..ரொம்ப கஷ்டம் ...சீனங்க கீரையிலகூட நெத்தலி கருவாடு போட்டுத்தான் சமைப்பாங்க ..எனவே காலையில இருந்து சாப்பிடாம இருந்துட்டு சாயந்தரம் தேக்கா வந்து காளியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயனை வணங்கிவிட்டு கோமள விலாசில் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிப்பேன். ஆனால் சனிக்கிழமை லீவாக இருந்து நண்பர்களை சந்திக்க நேர்ந்துவிட்டால் விரதத்தை ஒருவாரம் ஒத்தி வைத்துவிடுவேன். (காரணமெல்லாம் கேக்கபுடாது ) இப்படியாக பதினோரு வாரம் இருக்கவேண்டிய விரதம் மாதக்கணக்கில் நீண்டது ..

1995-
 
ல் ஊர் வந்தவுடன் அம்மா வேண்டுதலின்படி எங்க ஊர் மாரியம்மனுக்கு காவடி எடுத்தேன் .. இரவு நேர காவடி , வழக்கமான காவடி பாட்டு கிடையாது. ஒரே டப்பாங்குத்துதான. எனக்கு நண்பர்கள் அதிகம் ..அதிலும் சிங்கப்பூர் ரிட்டன் வேறு .. எல்லோருக்கும் தண்ணி ..பட்டை.,பிராந்தி ,விஸ்கி ஆறாக ஓடியது .. தண்ணில அவங்க போட்ட ஆட்டத்துல எங்க ஊரு மாரியம்மனே அன்னைக்கு ஊரே விட்டு ஓடியிருக்கும் .. சேக்காளிக ஆடியே என் மேல் குத்தி வச்சிருந்த செடல் அத்தனையும் அறுத்து, அந்தக் காயம் என் உடம்பெல்லாம் இருக்கு.
அதன்பின் என் நண்பன் சபா.ரவி அவனுக்கு ஜோசியம் பாக்கனும்னு என்னையும் கூட்டிக்கிட்டு போனான்.. எனக்கும் பாத்துருவோமே அப்படின்னு என்னோட ஜாதக நோட்டையும் எடுத்துட்டு போனேன் ..அவரோ உனக்கு நேரம் பிரமாதமா இருக்கு ஆனாலும் ஒருமுறை ஆலங்குடி குரு கோவிலுக்கு போயிட்டுவான்னார் .. இந்த ஜோசியக்காரர் நீ அக்கா மகளைத்தான் திருமணம் செய்வாய் என்று சொல்லி ,அது எங்க வீட்டுல பெரிய புயல உண்டு பண்ணுச்சு (எனக்கு நாலு அக்கா அதில ரெண்டு அக்காவுக்கு கட்டிகொடுக்கிற வயசுல பொண்ணுங்க ..கேக்கனுமா )... இப்ப ஒரு அக்கா மவளதான் கட்டிருக்கேன்.
என்னோட இன்னொரு கூட்டாளி கணேச அழைச்சுக்கிட்டு ஆலங்குடி கோவிலுக்கு போனோம் .. அங்கு முறைப்படி அர்ச்சனைக்கு வேண்டிய அனைத்தும் வாங்கிக்கொண்டு வரிசைகட்டினோம் ..எங்கள்முறை வரும்போது வாசலில் ஒரு டாட்டா சுமோ வந்து நின்னது ..உடனே அர்ச்சனை செய்த ஐயரில் ஒரு ஆள் அவர்களை நோக்கி ஓடினார்.,
அவர்களை அழைத்துவந்து தலையில் பரிவட்டம் கட்டி ..மாலை ஒன்றை கழுத்தில் போட்டுவிட்டு அரைமணிக்கும் மேலாக அவர்களுக்கு மட்டும் அர்ச்சனை நடந்தது ..கடைசியில் டாட்டா சுமோக்காரன் ஒரு பத்து ரூபாயை தட்டில் போட்டான் .. எனக்கு பத்திக்கொண்டு வந்தது ..உடனே என் அர்ச்சனை சாமான்களை நண்பனிடம் கொடுத்துவிட்டு எனக்கு தலைவலிக்கிறது என சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டேன்..
அர்ச்சனை முடிந்து வந்த நண்பன் என்னிடம் தந்த பொருட்களை வாசலில் இருந்த பிச்சைகாரனிடம் அப்படியே கொடுத்தேன் ..பதறிய என் நண்பன் என்னடா பண்றே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போகவேண்டாமா என்றான் ...மௌனமாக மறுத்துவிட்டு ஊர் வந்தேன் ..
ஆலங்குடியிலேயே தெரிந்துவிட்டது கடவுள் கோவிலில் இல்லை என்று..

இப்படியாக தொடர்ந்த என் கடவுள் தேடல் திடீரென என் நண்பன் ஊரில்  தீ மிதி திருவிழா வடிவில் ஒரு சோதனை வைத்தது, வேடிக்க பாக்க போன நானு வாய வச்சுட்டு சும்மா இருக்காம மாப்ள நானும் தீ மிதிக்கிறேன்னு அடம்புடிக்க, அவனுகளோ டேய் அதுக்கு வெரதமெல்லாம் இருக்கணும், செருப்பு போடாம ஒரு வாரமாச்சும் நடக்கணும்,அப்பத்தான் கால் பழகும் அப்படின்னு எச்சரிக்க, கடசீல எனக்கும் ஒரு மஞ்ச வேட்டி வாங்கிட்டு வந்தானுக..

ரொம்ப வீரமா பேசுன நான், கவுண்டமணி ஒரு படத்துல பூ மிதிப்பாரே அப்புடி நெருப்பு மேலே ஒரே ஓட்டம்தான், என் ஓட்டத்தை அந்த வருடம் முழுதும் மக்க கிண்டலடிக்க, அதற்குள் நான் தீவிர பெரியாரிஸ்டாக மாறிவிட அதுக்கப்புறம் கடவுள் இல்லேன்னு சொல்லிட்டு நிதானமா நெருப்புல நடந்து காட்டினேன்..

நண்பன் தியானம் மூலம் கடவுளைக் காணலாம் என்று அறிமுகப்படுத்தியது ''வாழ்க வளமுடன் '' என்ற வேதாத்திரியின் அறக்கட்டளையை ..அங்கு படிப்படியாக தியானம் பழகினேன் ..அகத்தாய்வு மூன்றாம் நிலைவரை பயிற்சி எடுத்துக்கொண்டேன் ..

அங்கிருந்து என் கடவுள் மறுப்பு கொள்கை தீவிரமானது ..பெரியாரை இன்னும் படிக்க ஆரம்பித்தேன் ..நண்பன் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற புத்தகம் தந்தான்..என் வாழ்கையை புரட்டிபோட்டது அந்த புத்தகம் .. 
அதன்பின் ஜே.கே யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஓஷோ புத்தகங்கள் இன்னொரு பாதையை காட்டியது ...
என் திருமணமே சந்தர்ப்பவசத்தால் நான் விரும்பியபடி நடந்தது ..தாலி கட்டாமல் ,ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டேன் ...

ஆனால் இன்னைக்கு வரைக்கும் கடவுள் சம்பந்தமான அத்தனை புத்தகமும் படிக்கிறேன், இருநூறு வருடத்துக்கு முந்தைய கோவில்கள் பார்த்தால் அதனை உள் சென்று ஆராய்கிறேன். 

தஞ்சை சென்றால் பெரிய கோவில் செல்லாது, ஊர் திரும்பியதில்லை. அடிக்கடி திருவண்ணாமலை போவேன், கோவிலுக்கு உள்ளே இருக்கும் ரமணர் பீடத்தில் தியானம் செய்வேன், மறுநாள் காலை மலை மீது ஏறுவோம். அது ஒரு வித்தியாச அனுபவம், திருவண்ணாமலை, மற்றும் பர்வதமலை பயணங்களை தனிப்பதிவாக எழுதுகிறேன்..

பதிவுலகில் கடவுளைப் பற்றி தீவிரமாக அலசும் அளவுக்கு ஆட்கள் வெகு குறைவு, பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான் என நண்பர் சொல்வார், அதற்கு இங்கு கடவுள் மறுப்பை பற்றி பேசினால், அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, முட்டாள்தனமாக சண்டைக்கு வருகிறார்கள். இவர்கள் போல் ஆட்கள்தான் கடவுள் பெயரால் நடக்கும் அத்தனை மோசடிகளுக்கும் துணை நிற்பதே.

மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும். 

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த தம்பி சௌந்தருக்கு என் நன்றிகள்...

70 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

தமிழ்ப் பதிவுலகுல இன்னொரு நல்ல கதைசொல்லி... மேல்பூச்சு இல்லாத எழுத்துக்கள்... நேற்றைய பதிவுல கவிஞர் ராஜசுந்தரராஜன் சொன்னது உண்மைன்னு நிரூபிக்கிறீங்க.... நடத்துங்க உங்க ஆவர்த்தனத்த!

vinthaimanithan சொன்னது…

கொஞ்ச நாளா அழுவாச்சியா எளுதிட்டு இருந்த அண்ணன் இன்னிக்கு நார்மலுக்கு வந்துருக்காரு! எல்லாரும் வாங்கப்பா!

vinthaimanithan சொன்னது…

ரொம்ப நாளைக்கு பொறவு இன்னிக்கிதான் கும்மியடிக்கிற மாதிரி எழுதியிருக்காரு.... கும்மியடிக்கும் பதிவரெல்லாம் சீக்கிரமா வாங்கப்பா! சாமி மலையேறுறதுக்குள்ள காவடிச்சிந்து பாட ஆரம்பிக்கலாம்! மச்சான் நீ வாயேன்! மாமு நீ வாயேன்! மாப்ள நீ வாயேன்!

vinthaimanithan சொன்னது…

ஓட்டு மட்டும் போட்டுட்டு கமெண்ட் போடாம எஸ்ஸாகி கிட்டு இருக்குற ஜாக்கிசேகரையும், ராமசாமி கண்ணனையும் வன்மையாக ( வேணா மென்மையான்னு கூட வெச்சுக்கோங்க!) கண்டிக்கிறேன்!

vasu balaji சொன்னது…

பதிவுலகில் கடவுளைப் பற்றி தீவிரமாக அலசும் அளவுக்கு ஆட்கள் வெகு குறைவு, பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான் என நண்பர் சொல்வார், அதற்கு இங்கு கடவுள் மறுப்பை பற்றி பேசினால், அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, முட்டாள்தனமாக சண்டைக்கு வருகிறார்கள். இவர்கள் போல் ஆட்கள்தான் கடவுள் பெயரால் நடக்கும் அத்தனை மோசடிகளுக்கும் துணை நிற்பதே.//

சரியாச் சொன்னீங்க செந்தில். விஷயத்தை விட்டு தடம் மாறி பெரிய ஊர்ச்சண்டைய இழுத்து விடும். அது சாமி இருக்கோ இல்லையோ. தேடலுக்கு நீங்க பதமாயிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

வினோ சொன்னது…

அசத்தல் பதிவு..

அண்ணே இருக்கு இல்லேன்னு பேசினா ஒரு நூறு பதிவு வருமா?

Thamizhan சொன்னது…

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் அவர்கள் வாழ்க்கையை முறைப்ப்டுத்தி மகிழ்வுடன் உழைத்து வாழ்கின்றனர்.கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்று ந்ம்பி வாழ்பவர்கள் அமைதியாகத் தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ்கிறார்கள். கடவுளிடம் பேரம் பேசுகிறவர்களும்,கடவுளை வைத்து ஏமாற்றிக் கொள்ளையடித்து வாழ நினைப்பவகளுந்தான் நாட்டை,மக்களை ஏன் தங்களையேக் கெடுத்துக் கொண்டு அலைகிறார்கள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//தாலி கட்டாமல் ,ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டேன் ...//

;)

ஹாட்ஸ் ஆஃப்...!

ஜெய்லானி சொன்னது…

//மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும். //

ஆக முடியது சரிதான், ஆனா கடவுள் தன்மைன்னா ..?

நேசமித்ரன் சொன்னது…

செந்தில் சார்

கொஞ்ச நாளாவே எதுவும் எழுதப் பிடிக்கல பாட்டு கேட்டுட்டு புத்தகம் படிச்சிட்டு ஓடுது நாட்கள்

எழுதத் தோணின வரிகளைக் கூட எழுதாம மிதக்கட்டும் இருக்குது

உங்க சமீபத்து பதிவுகள் அட வாசிப்பு ருசியோடவே இருக்கட்டுமேன்னு இருக்கும் நினைப்பை இன்னும் அழுத்தமாக்குது

ரொம்ப நல்லா இருக்குங்க சார் எழுதுங்க

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மிகவும் அருமையான பதிவு...

இன்று கடவுள் இல்லையென்று வாதாடுபவர்கள் அனைவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்கியிருக்கிறார்கள்... என்பது உண்மை தான் போலிருக்கிறது...

அண்ணே கடைசியா என்ன சொல்ல வறீங்க..

கடவுள் இருக்காரா இல்லையா...

கடவுள் தன்மைன்னா என்ன ?

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

ம்ம்ம்ம்......

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு அண்ணே..
இன்னும் விரிவாக கடவுள் பத்தி நீங்க எழுதணும்...

sakthi சொன்னது…

கோவிலில் உள்ள ஆஞ்சநேயனை வணங்கிவிட்டு கோமள விலாசில் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிப்பேன்.

குட் ::))))

கோவி.கண்ணன் சொன்னது…

//பதிவுலகில் கடவுளைப் பற்றி தீவிரமாக அலசும் அளவுக்கு ஆட்கள் வெகு குறைவு, பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான் என நண்பர் சொல்வார், அதற்கு இங்கு கடவுள் மறுப்பை பற்றி பேசினால், அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, முட்டாள்தனமாக சண்டைக்கு வருகிறார்கள். இவர்கள் போல் ஆட்கள்தான் கடவுள் பெயரால் நடக்கும் அத்தனை மோசடிகளுக்கும் துணை நிற்பதே.//

அருமை

ஜோதிஜி சொன்னது…

பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான்

சரியான சமயத்தில் சரியான வார்த்தைகள்.

எல் கே சொன்னது…

//மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும். ///

உண்மை.. நல்ல நேர்மையான பகிர்வு செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மதுமிதா எங்கிருந்தாலும் இங்கே வரவும். செந்தில் அண்ணனை வருத்தெடுக்கணும்..

நாடோடி சைத்தான் சொன்னது…

நானும் கடவுளும்னு டைட்டில் வச்சுட்டு நாமதான் கடவுள்னு முடிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. லைப்ப பாஸ்ட் பார்வேர்டுல ஓட்டி பார்த்த மாதிரி இருந்துச்சு.. நைஸ்..

- நாடோடி

காமராஜ் சொன்னது…

இன்னும் நிறைய்யஎழுதனும் செந்தில். ஊர்ப்பேச்சு ரொம்ப நல்லாவே இருக்கு.மனிதர்களை நம்புவோம்.

சௌந்தர் சொன்னது…

இங்கு கடவுள் மறுப்பை பற்றி பேசினால், அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, முட்டாள்தனமாக சண்டைக்கு வருகிறார்கள். இவர்கள் போல் ஆட்கள்தான் கடவுள் பெயரால் நடக்கும் அத்தனை மோசடிகளுக்கும் துணை நிற்பதே///

உண்மையா சொன்னிங்க அண்ணா...
என் அழைப்பை ஏற்று எழுதியதற்கு ரொம்ப நன்றி அண்ணா

Prathap Kumar S. சொன்னது…

//பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான் //

உங்க நண்பர் வாய்ல சர்கக்ரைத்தான் போடனும்...அவ்ளோ கரீட்டா சொல்லிருக்காரு...

இதைப்பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கலாம் கடைசில ஆனால் கடைசில பிரச்சினைலத்தான் போய் முடியும்... அதனால இதைப்பத்தி விவாதிககாம இருப்பதே நல்லது. அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அசத்தல் பதிவு

நாடோடி சொன்னது…

க‌ட‌வுளை ப‌ற்றிய‌ உங்க‌ளின் புரித‌ல் ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணா... இன்னும் கொஞ்ச‌ம் விரிவாக‌ ம‌ற்றும் ஒரு க‌ட்டுரையில் எதிர்பார்க்கிறேன்..

முனியாண்டி பெ. சொன்னது…

நானும் கடவுளும் உள்ளதை உள்ளபடியே சொன்னதற்கு ஒரு சல்யூட். ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்பதையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

//மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும்.//

உண்மையான வார்த்தைகள். நல்ல பதிவு

VELU.G சொன்னது…

//அதற்கு இங்கு கடவுள் மறுப்பை பற்றி பேசினால், அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, முட்டாள்தனமாக சண்டைக்கு வருகிறார்கள். இவர்கள் போல் ஆட்கள்தான் கடவுள் பெயரால் நடக்கும் அத்தனை மோசடிகளுக்கும் துணை நிற்பதே.
//

நான் வழிமொழிகிறேன் செந்தில்

ஆதவா சொன்னது…

கடவுள் அனுபவம் என்பது பலருக்கு உங்களைப் போன்றே இருக்கும்.
தீவிரமாக இருந்தவர்கலே, நாத்திகர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
அழுந்த அழுந்த, பீறிடுவது போல.

Palani velu சொன்னது…

டாடாசுமொகரந்தான் ஐயருக்கு கடவுள். ஜோசியகரனுக்கு நாம்போடும் காசுதான் கடவுள். இதையெல்லாம் கடந்து மெய்யான கடவுளை, நம்மை எல்லாம் படைத்த கடவுளை, தேட வேண்டும் என நினைதீர்பாருங்கள் அங்குதான் உண்மை ஆரம்பமாகிறது! மேலும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் கண்டுபிடிக்கலாம். நான் அப்படி மதங்களுக்கு அப்பால் சென்று கண்டதால் சொல்கிறேன். கடவுளை மதங்கள் சிலுவையில் அறைந்துவிட்டு மூடநம்பிக்கைகளை கடவுள் பெயரால் பாமர ஜனங்களுக்கு விற்கின்றனர். உங்கள் பிரயாசம் நிறைவேற வாழ்த்துக்கள்.

தமிழ்போராளி சொன்னது…

அருமையான பதிவு தோழர். தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதுங்கள்.சில பேராவது இதை படித்து திருந்த முயற்சி செய்யட்டும்.வால்காவிலிருந்து கங்கைவரை என்ற புத்தகம் பற்றி எனக்கு விபரம் தேவைபடுகிறது, தெரிய படுத்தவும் நன்றி.

AKM சொன்னது…

தினத்தந்தி வாசகர் என்றால் என்ன மட்டமா..? செய்தியில் தன் கருத்தையும் தன் பத்திரிகை சார்ந்த கொள்கையையும் கலந்து “செய்திக்கட்டுரைகளாக” வரும் பத்திரிகைகளின் நடுவில் செய்தி மட்டும் தரும் தினத்தந்தி ஒரு நல்ல வகை என்பது என் கருத்து. அதிலும் சில குறைகள் உண்டு என்றாலும் தினத்தந்தி வாசகர்கள் மட்டமில்லை என்பது என் தாழ்மையான கருத்து .. சரி அது ஒருபக்கம்.. உங்கள் கட்டுரை ஒரு நல்ல அலசல்.. முடிந்தால் அன்பே சிவம் படம் ஒரு முறை பார்க்கவும்..

Sabarinathan Arthanari சொன்னது…

நண்பரே,

கட+உள் இல்லையா ? அப்படியெனில் தியானம் செய்வது ஏன் ? ;)

கண்டிப்பாக நாத்திகம் என்பதும் தியானம் என்பதும் ஒரு போதும் ஒன்றிணையாது.

கட+உள் என்பது பின்னூட்டதில் விவாதம் செய்யும் அளவிற்கு சிறிய தத்துவமல்ல. எனினும் சுருக்கமாக கூற முயற்சி செய்கிறேன்.

சாந்தோக்ய உபநிடதம்
http://www.jeyamohan.in/?p=6100

சித்தர்கள் பாடல்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உலகாயுத ரீதியான God எனும் பொருளில் நம் முன்னோர்கள் என்றுமே வழிபட்டதில்லை. கட+உளை தான் வழிபட்டார்கள்.

கீதை கூட பக்தி,வழிபாட்டிற்கு மாற்றாக கர்மம் (தொழில், கடமை) வாழ்வின் முக்கிய தத்துவமாக சொல்கிறது. உபநிடதங்கள் படியுங்கள் மேலும் புரியும்.

கர்ம யோகம் 10
http://www.jeyamohan.in/?p=7117

தூய அத்வைதம்
http://www.jeyamohan.in/?p=7583

ஆத்திகம் http://www.jeyamohan.in/?p=124

Unknown சொன்னது…

நண்பர் AKM, தினத்தந்தி என்றால் மட்டம் என்று யார் சொன்னது.. அது அடிப்படைக்கான விசயம்..மேலும் தந்தை ஆதித்தனார் இல்லை என்றால் இன்று நிறைய பேருக்கு எளிய தமிழ் சென்று சேர்ந்திருக்காது..

ஆனால் தீவிர அலசல்களுக்கு நாம் இன்னும் மேல்நோக்கி செல்லவேண்டும் அல்லவா...

Unknown சொன்னது…

நண்பர் சபரினாதனுக்கு,
நான் இப்போது யோகா பயிற்சி மட்டும் எடுத்துக் கொள்கிறேன் ஆனால் அதனுடன் அடிப்படை பயிற்சியாக தியானம் அவசியமாகிறது, ஏன் கருத்து கடவுள் கோவில்களில் இல்லவே இல்லை என்பதுதான்..

மற்றபடி ஜெமோவின் தீவிர வாசகனான நான் அவற்றை படித்திருக்கிறேன்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ...

கோவி.கண்ணன் சொன்னது…

//கீதை கூட பக்தி,வழிபாட்டிற்கு மாற்றாக கர்மம் (தொழில், கடமை) வாழ்வின் முக்கிய தத்துவமாக சொல்கிறது. உபநிடதங்கள் படியுங்கள் மேலும் புரியும்.//

சபாஷ் !

மோடி கூட மேற்கோள்காட்டி கர்மயோகம் பற்றிப் பேசி இருக்கிறார். அதாவது மலம் அள்ளுபவன் தன் கருமத்தை செவ்வனே செய்தால் அவனுக்கு சொர்க ப்ராப்தி உண்டு என்று.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// AKM கூறியது...

தினத்தந்தி வாசகர் என்றால் என்ன மட்டமா..? செய்தியில் தன் கருத்தையும் தன் பத்திரிகை சார்ந்த கொள்கையையும் கலந்து “செய்திக்கட்டுரைகளாக” வரும் பத்திரிகைகளின் நடுவில் செய்தி மட்டும் தரும் தினத்தந்தி ஒரு நல்ல வகை என்பது என் கருத்து. அதிலும் சில குறைகள் உண்டு என்றாலும் தினத்தந்தி வாசகர்கள் மட்டமில்லை என்பது என் தாழ்மையான கருத்து .. சரி அது ஒருபக்கம்.. உங்கள் கட்டுரை ஒரு நல்ல அலசல்.. முடிந்தால் அன்பே சிவம் படம் ஒரு முறை பார்க்கவும்..//

என்னைப் பொருத்த அளவில் தினமலர் வாசகர்கள் 'டீக்கடை பெஞ்சு' என்றால் தினதந்தி 'முடித்திருத்தக பெஞ்ச்'. பெருசா ஒண்ணும் வேறுபாடு இல்லை, ஆனாலும் தினமலர் பேஷா இருக்கிறதாத்தான் சொல்லுவா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அசத்தல் பதிவு..

சசிகுமார் சொன்னது…

சபாஸ் சரியான போட்டி

Sriakila சொன்னது…

'மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும்'
அருமையான வரிகள். கடவுள் நம்பிக்கையில் போலித்தனம் தேவையில்லை.

S.M.Raj சொன்னது…

'மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக மாற முடியாது, கடவுள் தன்மையை மட்டுமே அடைய முடியும்'

செல்வா சொன்னது…

///ஆனால் இன்னைக்கு வரைக்கும் கடவுள் சம்பந்தமான அத்தனை புத்தகமும் படிக்கிறேன், இருநூறு வருடத்துக்கு முந்தைய கோவில்கள் பார்த்தால் அதனை உள் சென்று ஆராய்கிறேன்.
///
உண்மைலேயே இதுதான் அண்ணா வேண்டும் ..!! கடவுள் இல்லை என்று கூறுவதிலும் ஆராய்ச்சி தேவை ..!! வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் தொடர ..!!

Unknown சொன்னது…

//அங்க போனவுடன் டவுசர கழட்டி கரையில் போட்டுவிட்டு இருட்டறவரைக்கும் ஒரே கும்மாளம்தான்//

சவ்வாதி (சபாபதி) தாத்தா டவுசர ஒளிச்சு வச்சா, டிங் டிங்குனு மணிய ஆட்டிகிட்டு போய் கெஞ்சுறத போடல மாப்ஸ்!!

//ஜோசியக்காரர் நீ அக்கா மகளைத்தான் திருமணம் செய்வாய் என்று சொல்லி//

நம்மூருகாரப் பாதிப் பயலுவளுக்கு இந்த ஜோசியம் பலிக்குமே.

//நண்பன் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற புத்தகம் தந்தான்//

என் தாத்தா (அம்மா வழி) இந்தப் புத்தகத்தப் படிக்க ஆரம்பிச்சு, முடிக்குறதுக்குள்ள இறந்துட்டாரு. அப்போ எனக்கு 15 வயசு. இந்தப் புத்தகத்தப் பத்தி தெரியாது. படிச்சுருவோம்!

மத்தபடி, இந்தக் காலகட்டத்துக்கு பணம்தான் கடவுள்!

தமிழ் உதயம் சொன்னது…

நிஜமான பகுத்தறிவை அவரவர்களே உணர்ந்து கொள்ளலாம்.

ஒசை சொன்னது…

கடவுளை மற... மனிதனை நினை... சொல்ல வேறொன்றும் இல்லை

பெயரில்லா சொன்னது…

உங்கள் எழுத்தும் என்னமும் உயர்வானது வளர்க உமது எழுத்து அ.மாணீக்கவேலு

dheva சொன்னது…

ஆயிரம் விசயம் நடக்கட்டும்...ஆனால் பதிவுலகம் விவாதத்துக்குரிய ஒரு கருத்துக்களமாக இல்லை. மிகைப்பட்டவர்கள் புரியாவிட்டாலும் புரிஞ்ச மாதிரி கமெண்ட் போட்டுடு போறது ஒரு பழக்கமா இருக்கிறது.

கடவுள் பற்றி பேசினால் நாத்திகர்கள் நேர்மையாக வந்து கருத்து சொல்வதும் கடவுளுக்கு சப்போர் செய்பவர்கள் அனானியாய் வந்து அத்து மீறுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தினத்தந்தி வாசகர்கள் மட்டமில்லை....ஆனல் தினத்தந்தியே படித்துக்கொண்டிருந்தால் போதுமா?

உங்கள் கடவுள் பற்றிய பார்வை ஆரோக்கியமாகவே எனக்குப்படுகிறது செந்தில்!

பனித்துளி சங்கர் சொன்னது…

//////பதிவுலகில் கடவுளைப் பற்றி தீவிரமாக அலசும் அளவுக்கு ஆட்கள் வெகு குறைவு, பதிவுலகமே கிட்டத்தட்ட தினத்தந்தி வாசகர்கள்தான் என நண்பர் சொல்வார், ///

நீங்கள் சொல்லித்தான் பதிவுகில் விவாதிக்க ஆட்கள் குறைவு என்று தெரிந்துகொண்டேன் . பூனை கண்களை மூடியதும் உலகம் இருண்டுபோவது உண்மைதானோ !

இந்த பொன்மொழியை சொன்ன நண்பர் யார் என்று தெரிந்துகொள்ளலாமா !?????

sweet சொன்னது…

அட அட என்ன ஒரு கட்டுரை
படிச்சு புல்லரிச்சு போய்ட்டோம்
சிலிர்க்க வச்சுட்டீங்க
எப்படி இப்படி எல்லாம் வருது?
வழக்கம் போல கடவுள் இல்லை என்று ஒப்பாரி
நாங்க கடவுளை நினைக்குறதை விட நீங்க ரொம்ப நினைச்சு இப்படி பரதேசியா (பரதேசி சுத்தமான தமிழ் வார்த்தை அய்யா, பயணங்களை மேற்கொள்பவன் பரதேசி தானே, உடனே எப்படி சொல்லலாம் என்று எகிறுபவர்கள் என்னுடைய மெயில்-க்கு மெயிலவும் )
முதலில் நான் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஆதாரத்தோட, (நேரில் ரெண்டு kannaala paarttha aadharangal).... appuram நீங்க unga பரதேசி payanatthai thodarungal
Origins - Where did life and humanity originate?

The Problem - Why is there suffering, sickness, and death?

The Solution - What is the cure for man's suffering, esp. his existential lonliness?

How does an atheist assign meaning to human activity? Is all meaning subjective, or do some activities have self-evident and objective worth and meaning. If so, what are these activities, and how to you arrive at their value?

Are humans of more intrinsic value than animals? Why or why not?

How does an atheist determine what is moral or immoral, right or wrong. Is there any objective standard or principles?

What type of government does atheistic philosophy translate into? How does it understand the relationship between man and government? What type of government structures flow from an atheistic world view? Does it merely rely on someone else's system of thought, like the assumptions of naturalistic science?

How does atheism view religions and religious faith? What about metaphysics? Is atheism purely materialistic and naturalistic?

Who are the authoritative writers/books of atheism? What are the central tenets of atheism, and if they have a "greatest commandment," what is it? For example, arguably, Christianity's is "Love the Lord your God with all of your heart, mind, soul and strength, and love your neighbor as yourself."

10. What happens after we die?

idhukku pathil ellathaiyum sollittu unga payanatthai thodaravum

solla theriyala entral enna pannalam? ahh

MADHUMIDHA

Sabarinathan Arthanari சொன்னது…

//கோவி.கண்ணன் கூறியது
மோடி கூட //

மோடி தான் கீதை எழுதியவர் என்பது தெரியாமல் போய் விட்டதே ;))

நான் கண்ணனின் கருத்தை பரப்புகிறேன். நீங்கள் மோடியின் கருத்தை பரப்புகிறீர்கள். ;)

நன்றாக இருக்கிறது உங்கள் பணி :))

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் கண்ணனின் கருத்தை பரப்புகிறேன். நீங்கள் மோடியின் கருத்தை பரப்புகிறீர்கள். ;)

நன்றாக இருக்கிறது உங்கள் பணி :))//

மோடிதான் இந்தியாவின் மாதிரி முதல்வராமே, அதனால் தான் பரப்பலாமே என்று பரப்பினேன்.

Unknown சொன்னது…

Dear Sweet Madhumidha,

நமக்கு தொர (தில்லு தொர இல்லீங்..) அளவுக்கு இங்கிலிபீசு தெரியாதுங். இருந்தாலும், இந்த எச்சாம் நானும் ட்ரை பண்ணி பாக்றேங்..

Origins - Where did life and humanity originate?

தெரியலிங்..

The Problem - Why is there suffering, sickness, and death?

நம்ம கவுதமனக் கேட்டுட்டு சொல்றேனுங்..

The Solution - What is the cure for man's suffering, esp. his existential lonliness?

ஆனந்தாமயமாக்கலுங்களா...? கஞ்சா...ரஞ்சி தா...?

How does an atheist assign meaning to human activity? Is all meaning subjective, or do some activities have self-evident and objective worth and meaning. If so, what are these activities, and how to you arrive at their value?

a. Call Taxi or b.Calculator. கரெக்டுங்களா?

Are humans of more intrinsic value than animals? Why or why not?

ஏதாவது ஒரு கேள்விகேட்டாத்தான் எனக்கு பதில் சொல்ல தெரியும்.

How does an atheist determine what is moral or immoral, right or wrong. Is there any objective standard or principles?

அஸ்கு புஸ்கு... ஸ்டோரி சொன்னாத்தான் மாரல் என்னான்னு சொல்லுவேன்.

What type of government does atheistic philosophy translate into? How does it understand the relationship between man and government? What type of government structures flow from an atheistic world view? Does it merely rely on someone else's system of thought, like the assumptions of naturalistic science?

ஒண்ணும் பிரியல. கொஸ்டின் அவுட் ஆஃப் சிலபஸ்ஸுங்களா?

How does atheism view religions and religious faith?

லென்ஸ் வழியா.

What about metaphysics?

மெட்டாகேஃப் தெரியும். இது தெரியாதுங்.

Is atheism purely materialistic and naturalistic?

அக்ரிகல்சுரலிஸ்ட்.

Who are the authoritative writers/books of atheism?

சட்னி மில்டன், நொல்லி, காராபூந்தி மிக்ஸ்.

What are the central tenets of atheism, and if they have a "greatest commandment," what is it? For example, arguably, Christianity's is "Love the Lord your God with all of your heart, mind, soul and strength, and love your neighbor as yourself."

மிதமானமது போதை தரும்.

10. What happens after we die?

டண்டாண...டர்ணா...ஏ டண்டணக்கு டர்ணா...

எனக்கு என்ன மார்க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்... பதில் தப்புன்னா, கோணார் உரை கொத்தணார் தரை ஏதுனா இருந்தா ரெகமன்ட் பண்ணுங்க ப்ளீஸ்..

vinthaimanithan சொன்னது…

ஏம்மா(ப்பா) மதுமிதா, மொதல்ல நீ ஆணா, பொண்ணா, இல்ல அர்த்தநாரியா? ஆண்டவனை ஐடெண்டிஃபை பண்றதை விட உன்னை ஐடெண்டிஃபை பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும் போலயே!

அது சரி, இங்கிலீசுல நான் கொஞ்சம் டம்மி பீஸு, நீ ஸ்ட்ரெய்ட்டா உன்னோட கொஸ்டின எல்லாம் எடுத்துட்டு நேரா என்னோட ப்ளாக்குக்கு வா.. வெலாவரியா விருந்து வெக்கிற மாதிரி பேசுவோம்... ஆனா ஒண்ணு... பேச்சு பேச்சா இருக்கணும்... அந்த கோட்ட தாண்டி நீயும் வரப்படாது... நானும் வரமாட்டேன்... செரியா?

நீ மெட்டாஃபிஸிக்ஸ் பேசு. நான் டயலக்டிக் மெட்டீரியலிஸம் பேசுறேன்.... பாக்கலாம் ஒரு கையி.... சவால்லாம் இல்ல தாயி.... சொம்மா ஒரு நட்போடதான் கூப்டுறேன்

vinthaimanithan சொன்னது…

யம்மா மதுமிதா....
மொதல்ல உன்னோட இங்கிலிபீசப் பாத்து அப்படியே கொல்லப்பக்கமா குதிச்சி ஓடிப் போயி பின்னூட்டம் போட்டுட்டேன்....

இப்பதான் நம்ம அரகொற அறிவ யூஸ் பண்ணி (என்ன பண்ணி? யூஸ் பண்ணி.... யூஸ் பண்ணி) பாத்தாக்க... அய்யே! ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு

யம்மாடி, நீ மெட்டாஃபிஸிக்ஸுன்னு எளுதியிருந்தத பாத்து கொஞ்சம் அரண்டுதான் போயிருந்தேன்! இனி ஒண்ணுமில்ல... சீக்கிரம் வாம்மா, மின்னலு!

Unknown சொன்னது…

நல்ல பதிவு. பின்னூட்டங்களை பார்த்தால் ஆரோக்யமான விவாதங்கள் தொடருமா என்ற சந்தேகம்?

vinthaimanithan சொன்னது…

அதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க நந்தா.. அண்ணனோட ப்ளாக்க அப்டில்லாம் விட்ருவோமா? ஆரோக்கியம் கொறஞ்சா குளுக்கோஸ் ஏத்தி சரி பண்ணிடுவோம்!

Tirupurvalu சொன்னது…

On Periyar period lot of collapse in Hindus.He try to revolution in hindu religion but he not know much about yoga .So still now peoples who refuse to believe god also refuse to believe yoga.The peoples who refuse god please go to VALAGA VAZHAMUDAM yoga center and sit for 30 minites .You will came to know yoga and god is separate in this center.Nobody talk about god or about anybody .They just explain all questions which rised by others here especially Madhumitha

To all i asking 1 question can anybody answer to me except Hindu religion peoples in Muslim,christians any peoples refuse to believe their god .

Bibiliobibuli சொன்னது…

//What happens after we die?//
இதிலிருந்து ஒன்று தெரிகிறது நீங்கள் "அந்நியன்" படம் பார்க்கவில்லை. :)

//Origins, The Problem, The Solution,//

ம்ம்ம்ம்... "அன்பே சிவம்" சினிமா பாருங்க பதில் தெரிய வாய்ப்புண்டு.
(Please, don't jump into conclusion that I am a communist.)

"Religion.... the sentiment of a heartless world......" இதுக்கு நீங்க என்னைய திட்ட முடியாது Karl Marx ஐயாவைத்தான் திட்டனும்.

தருமி சொன்னது…

//நிதானமா நெருப்புல நடந்து காட்டினேன்..//

எப்பூடி?

vinthaimanithan சொன்னது…

//To all i asking 1 question can anybody answer to me except Hindu religion peoples in Muslim,christians any peoples refuse to believe their god . //

என்ன வாலு சார்! நாத்திகர்கள் மதங்கடந்து பரவியிருப்பது உங்களுக்கு தெரியாதா?!

ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லைங்க... கடவுள் இல்லைன்னு சொன்னா ஏன் இவ்ளோ கோவம் வரணும்? நிஜமாகவே "எந்நாட்டவர்க்கும் இருக்கும் இறை" நாத்திகர்க்கும் சேர்த்துத் தானே இருக்க முடியும்... நாத்திகத்தையும் அந்த இறைதானே படைத்துக் காத்திருக்க வேண்டும்?

மதுமிதாக்களுக்கும், திருப்பூர்வாலு போன்ற நண்பர்களுக்கும் ஒரு வார்த்தை!

நீங்கள் நம்பும் இறை பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதை உறுதியாக நம்பினால் அது நாத்திகர்களுக்குள்ளும் நிறைந்திருக்க வேண்டும். நீங்கள் அவர்களிடம் இறை தொடர்பாகக் கோபிப்பது இறையைக் கோபிப்பது போலத்தான்! நாத்திகர்களைவிட மோசமாக நீங்கள்தான் இறையை இழிவுபடுத்துகின்றீர்கள்!

//"Religion.... the sentiment of a heartless world......"//

ரதிக்கா.. ஒரு வார்த்தைன்னாலும் திருவார்த்தை!

Unknown சொன்னது…

Hi, You can these 10 questions here also

http://www.twoorthree.net/2005/05/10_questions_at.html

Unknown சொன்னது…

taken from http://www.twoorthree.net/2005/05/10_questions_at.html
HeathenAngel said...

Katie, these questions are not really that difficult, and they are certainly not something that has never been asked or answered. I can imagine you getting all excited, walking or driving home from your Sunday school class, full of these questions that your pastor/youth leader just read off a list and thinking you had some novel idea. Sorry to disappoint.

1. Science allows for the answer "I don't know". It's ok to answer with that. It it is a LOT better than "god_did_it". That's the worst answer one can give because it not only puts a stop to a thinking mind, it only creates more questions.
2. There is nothing mystical about suffering, sickness and death. Death comes to us all. Rich and poor, old and young, healthy and infirmed. It is, in literary terms "The Great Leveler". It makes us all equal.. but it is not something full of supernatural garbage. Bodies, be they plant or animal break down, they become susceptible to illness and disease. Grief or suffering at the loss of a loved one, or physical suffering from pain is not a mysterious thing either. There is really nothing difficult about this question. A 12 year old could answer it.
3. Personally, I have no existential loneliness. I believe you are trying to project your own onto others. And why is it up to someone other than the individual in question to cure their own loneliness? Loneliness occurs in the mind, if one is in control of their own mind, they can control their own loneliness.
4. Which activities would you call valuable and which would you not? Is cupping a child's face valuable? Sure, to some. How about stroking a puppy's fur? Cooking a meal? Serving a meal? Sex? Individuals place their own value on behavior. Don't try to ascribe supernatural or mystic importance to things that are very much natural.
5. Humans are what they are. It's pretty simplistic, but there it is.
6. Atheists don't need a book, an imaginary friend or a priest to tell them what is wrong and what is right. We are quite capable enough to determine that KILLING is wrong.. stealing, not a good idea.
7. I like democracy, myself. I can't answer for others.
8. I view religion as silly and unnecessary. If by materialistic and naturalistic you mean, do I require proof.. then Yes.
9. Again, we do not need to rely on some imaginary deity to think for us. We can do it ourselves. As for a central tenet. I think, "Value rational thought, reason and critical thinking before all else. Myth and superstition are not a basis for legislation." works for me.
10. Depending on what plans each individual makes with their family.. you are either dropped into a hole, 6 ft. deep, placed in a family crypt, or cremated, as I have chosen. I'm sure you mean, metaphysically, spiritually... to answer that question.. "nothing". When you die.. you're dead. That's it. Nothing exciting. Not pretty, but then again, it doesn't have to be.. it is reality.. and I value it over the imaginary any day of the week, and twice on sunday.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

another set of are answeres from GOD :)
god helped us to find these links :)
taken from : http://www.twoorthree.net/2005/05/10_questions_at.html
another set of worthy answers: http://community.livejournal.com/atheism/752312.html

Good questions for a believer to pose, lets answer them.

1. Life originated on earth. We don't know exactly how it started, but we are working on it. Once we have single celled critters with DNA, evolution got us to where we and all other life on the planet is now. As for humanity, we descended from the same ancestors as apes. Homo Sapiens got its start about 150,000 years ago and our civilization started about 7000-8000 years ago.

2. Suffering sickness and death are a natural part of life. Sickness tends to be the product of other lifeforms messing with us (tapeworms, bacteria, viruses etc), deficiencies in our own physiology (cancer, genetic conditions) or accident (broken bones, etc). Suffering tends to come from either side effects of the above (which are unpleasant so that we know these are bad things) or from empathy towards our fellow humans (such as watching a family die of cancer).

3. Cures for suffering are many and varied. Modern medicine does a damn good job at treating most suffering but i suspect you mean suffering in a less physiological way. Friendship, family, support from fellow humans as well as positive thinking and coping techniques help humans beat suffering. As for existensial loneliness, friends, family and lovers tend to do it for me. Being part of a community also helps.

4. Yes, all meaning is subjective. Atheists assign meaning to human activities via they subjective world view. This includes such things as where we are raised, how e are bought up, what philosophical system we follow (if any) and such like. I, for instance, am a transhumanist as well as an atheist. I think certain endeavours such as stem cell research and genetic manipulation are not only acceptable, but necessary. A humanistic atheist might not necessarily agree with me.

5. Humans are of more intrinsic value than animals. Again this is my subjective belief. Other people disagree. I put us above animals because
a) we are the only intelligent creature on earth that we know of. and
b) I am a human, i value myself more than other animals. I extend this to members of my own species.
That said, i do think that animals get a bad deal from mankind and as the only intelligent species on this planet we have a responsibility to care for them as wise stewards.

Unknown சொன்னது…

6. Atheistic morals tend to be kinded by the golden rule (what you would not like done to you, do not do to others). We are also, as social creatures, empathic and we tend to shy away from cruelty and inflicting pain. For the most part. My morals have been developed by my parents, my teachers, my friends and my experiences. There is no objective standard as a quick glance at history will clearly show.

7. Atheistic philosophy has nothing to say about government (other than theocracy is bad). That said, as an atheist the best form of government on the planet for me is clearly a social democracy such as Swedens. This government assures a safety net for the least well off without preventing people from working hard to achieve their full potential. It keeps religion and other irrational believes out of governance and bases its decisions on evidence rather than emotion. Like all institutions it is not perfect. It requires work to maintain.

8. Atheism is naturalistic, materialistic and scientific. Metaphysics i view as pure bunk, much like theology. Religions and religious belief i see as curious relics from mankinds past that we have outgrown but oddly decide to hang onto. They are clearly earlier attempts to explain the universe we inhabit, but they have been utterly supplanted in this regard by science. I personally think they retard good thinking practice, inhibit good moral growth and are a dangerous cancer in politics and society. They have been on the wrong side of every social change in the last 1000 years (and sometimes, simutaneously on the right side). We are best off without them. At the same time i find them fascinating as i find history fascinating. What i find strange is that people actually believe any of them.

9. Atheism means "a lack of belief in god". There are many strands of atheism and some people lionised by atheists are depised by other atheists. I, for instance, find Christopher Hitchens to be a hideous drunken bore. But i admire and respect Richard Dawkins. I disagree with much of Sam Harris' work but find myself very much in accord with other thinks he says. There are no definitive books on atheism as it is not a coherent organized movement, more an unwieldy mass of different opinions united by one central tenant ("we don't believe in god"). My personal choices for good atheist fodder are the God Delusion (Richard Dawkins), The End of Faith (Sam Harris), The Bible (if you actually read it all and not cherry picked bits from your preacher) and pretty much anything exploring the origin of religion or comparative religion. The greatest, and indeed only, commandment of atheism is "We do not believe in the existence of god". Everything else is negotiable.

10. After we die, we are disposed of in whatever way our next of kin/state decide. I know you don't really mean our physical remains with this question, but really thats it. Our personality, our memories, our will is simply the product of the amazing organ known as the brain. When we die the brain turns off and never turns back on again. There is nothing after death simply because death means the end of us. This is a pretty good reason to live a good life here and now as there is no other. Its also a good reason to demand justice and fairness in this life as there is no punishment or hellfire for the wicked after death.

GOD supporters group :)

ssk சொன்னது…

ராகுல சங்கிருதயாயன் (வால்கா முதல் ....) நூலை படிக்கச் அனைத்து புளுகு க(கீ)தைகளும் சாயம் வெளுத்து சிரிக்கும்.
பெரியாரை தேடி போக சொல்லும்.

மக்களை மடையர்களாக்கி வைத்து இருப்பதில் ஓர் கூட்டத்துக்கு ஆனந்தம்.
- மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்பதற்கு டார்வின் தத்துவம் பதில் தரும்.
- மனிதனின் சுகவாழ்வு அவன் கையில் உள்ளது. யாரோ எங்கோ உட்கார்ந்து எழுதியதல்ல. எத்தனையோ ஆண்டு உள்ள சரஸ்வதி கடவுள் இருந்தும் பெரியார், காமராஜ் வந்து கல்வி கண் திறக்க வேண்டி இருந்தது.
(நாக்கை நீட்டி உட்கார்ந்திருக்க சிலருக்கு மட்டும் எழுதியதல்ல )

- வாழ்விலே ஒழுக்கம் என்பது, தான் எதிர் பார்ப்பதை மற்றவர் எதிர் பார்க்க அனுமதிப்பது.
(நான் செய்தால் தலை முழுகு, நீ செய்தால் தலையை எடு தத்துவம் அல்ல)

- விலங்குக்கும் மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முளை/மன வளர்ச்சியினால் மனிதன் ஆக்குகிறான்.
கேள்வி கேட்டு பதில் தருவது நாத்திகம் . கேள்வி கேட்க கூடாது
என்பது கடவுள் நம்பிக்கை.

- சரி , தவறு என்பதெல்லாம் மனதின் சேட்டைகளே. இன்று தவறு என்பது நாளை சரியாகும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நாளை பலருக்கு ஒருவன் என்பதாக மாறலாம். எதோ காரணத்தால் ஆண்கள் பெருமளவு அழிவுற அரசே இதை ஊக்குவிக்கலாம்.
(விலங்குகளிடம் எதாவது சரி, தவறு என்று உண்டா? )

- இந்திய அரசின் கோட்பாடுகளே மிகவும் முன்னேற்ற பாதையை கொண்டது. மக்களை அறிவியல் பாதையில் செலுத்த வேண்டுவது அரசின் கடமை என்கிறது.
(ராக்கெட் விடும் விஞ்ஞானி தேங்காய் உடைப்பது, திறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் கத்தி,புத்தியை விடுத்தது கடவுளை வேண்டி கொண்டு இருப்பது..)
அரசு என்பது மனிதர்கள் தங்கள் வசதிக்காக செய்த அமைப்பு. சட்டங்கள் மனிதர் செய்தவையே.
சிலருக்கு மட்டும் என்று இருபதினாயிரம் வருடம் முன்பு எழுதியதல்ல...கல்லால் செய்த ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தியதே சிலர் ஆயிரம் ஆண்டு முன்பு தான். ( சில லட்சம் ஆண்டு முன்பு பாலம் கட்டியதாக அளப்பு... )

- நாத்திகம் மதங்களை குப்பை என்று நினைக்கும். குப்பையை என்ன செய்யலாம் ?....

- நாத்திகத்தின் தலைமையகம் தமிழ்நாடு.. பல தலைவர்கள்..சித்தர்கள்,..அயோத்திதாசர், தந்தை பெரியார்.(அறிவு தாகமுள்ளோர் அவரை தந்தை என ஏற்பார்) வெளிநாட்டிலும் பலர் உள்ளனர்.தற்போது ரிச்சர்ட் டாவ்கின்ஸ்.

- ஒரு செடி வாடி இருந்து விட்டால் அதன் சத்து போய்விட்டது என்பார். அது போல் மனிதனின் சத்து போவதை இறப்பு, மறைவு என்கிறோம். ஆத்மா, அது இது, மேல், கீழ் எல்லாம் அளப்பு. அவனவன் மனதில் அந்த அந்த காலகட்டத்தில் வந்தவைகளை
அவனவன் வசதிக்காக, சுக வாழ்விற்காக எழுதியே ஏமாற்றியது ஒரு கூட்டம். உண்மையை அழித்து எழுதுதியே வந்தது அன்று. இன்றும் செய்வது அடுத்த கைங்கர்யம்.