மலிவு விலைகளில்
மீந்ததை தலையில் கட்டி அனுப்புவான்
ரங்கநாதன் தெரு கடைக்காரன்..
ஸ்பீக்கர் கட்டி
தெருவை அடைத்து
டாஸ்மாக் உற்சாகத்தில்
நாட்டியம் நடக்கும் சாமிக்கு,
ஆடித் தீர்க்க
தீர்த்தவாரி...
கடை வசூலில்
பங்கு போட்டது போக
கூழ் காய்ச்சி ஊற்றியாயிற்று..
மழையின் சாலைகளில்
நிதானம் தவறி வீடு வரும்
சாமிகளின் அடிமைகள்
ரத்த காயங்களுடன்..
ஆடியில் அழைப்புக்குப் போன
புதுப்பெண் நினைத்து
டாஸ்மாக்கில் புலம்பும் தோழன்
ஒசிக்குடி எனக்கு...
ஆடி வெள்ளி
ஆடி அமாவாசை
ஆடிப்போகும் வியாபாரம்...
என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்...
41 கருத்துகள்:
அண்ணே கவிதை கிளப்புது :)
கடைசி ரெண்டு பாரா எடிட் பண்ணி இருக்கலாமேண்ணா! கட்டுரை வாசனை லேசா வீசுது
இண்ட்டி-மக்கர் பண்ணுதே இப்ப
எது ஆடித்தள்ளுபடி விற்பனையில வாங்க கடைத்தெருக்கு போனீங்களா?
மிரட்டுது படம்..!
படத்துக்கு ஒரு சூப்பர்
கவிதைக்கு டபுள் சூப்பர்...
அண்ணே கடைசி இரண்டு வரி கலக்கல்...
//அண்ணே கவிதை கிளப்புது :)//
ஆமா .. ஆமா
அருமை கவிதை அண்ணே!
ஆடித்தள்ளுபடி?
nice
Really nice senthil
உங்களின் ஆடி தள்ளுபடி பற்றிய விமர்சனம் சூப்பர்
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
நல்லாருக்கு நண்பா! :-)
It's really super. Photo's too good.
//
ஆடியில் அழைப்புக்குப் போன
புதுப்பெண் நினைத்து
டாஸ்மாக்கில் புலம்பும் தோழன்
ஒசிக்குடி எனக்கு...
//
:-):-):-):-)
//என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்..//
உண்மைதான்
என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்..
இதுவும் நல்லாத்தான் இருக்கு
எதிர்கவுஜ
ரங்கநாதன் தெரு மலிவுத் துணி
மூணாவது சலவைல
பாதிநீளம் பாளாப்போச்சி
ஸ்பீக்கர் சவுண்டுல
கட்டிங் போதை
கம்மியாச்சு
கடைவசூல்
கணக்கு கேட்ட காயம்
கூழ்குடிச்சதுல
கொஞ்சம் தேவல
சாமிய எறக்கிவெச்சி
வீட்டுக்குப் போனா
வேப்பிலையோட பொண்டாட்டி
"செறுவாட்டு காசு எங்கடா?"
ஆடி அழைப்புக்கு
பொண்டாட்டி போனா...
புளுஃப்லிம் கேசட்டு
ஃபுல்லு ரம்மு
"ஏண்டா மாப்ளா! அந்த
குட்டி ஷோக்கா கீறாள்ள?"
ஒத்தை அம்மனுக்கு
ஒருவாரத் திருவிழா
நமக்கு
மூணாந்தெரு முப்பாத்தா போனா
நாலாந்தெரு நாகாத்தா..
"அட! அய்யாவு தெரு
புள்ளையார விட்டுட்டமே!"
தெனம் தெனம் திருநாள்தான்
சிட்டிலைப்பு சிலுசிலுப்புதான்
ண்ணா! எதிகவுஜ பாத்துட்டு யாரும் திட்டிறாதீங்க! அது ச்சும்மா லுல்லுல்லாயி!
அருமை யா எழுதுறீங்க செந்தில் ..உங்க இடுகை களை தினமும் படிக்கிறேன் ..
சென்னையிலே சங்கமம் விழா தவிர வேறு எப்போதும் நான் கரகாட்டம் பார்த்தது இல்லை.
எனவே தான் ரங்கந்தான் தெருவும் கரகாட்டமும் எனக்கு ஒட்ட வில்லை.
விந்தை மனிதனின் எதிர் கவிதை அருமை.
அண்ணே கவிதை.. ம் ம் ம் ம் ... கலக்கல்...
அடடா.. ஆடி மாசம் பத்தி....செந்திலின் பார்வையில்...
எங்க படிங்க...
ஓ... பாட்டாவே படிச்சிட்டீங்களா செந்தில்??
சூப்பரா இருக்குங்க.. :-))
உங்கள் கவிதை ஆடியை அழகாய் நினைத்து சந்தோசிக்க வைத்தது...
:)))
ஊருக்கு ஒரு நடை போயிட்டு வந்திரவேண்டியதுதானே..
மலிவு விலைகளில்
மீந்ததை தலையில் கட்டி அனுப்புவான்
ரங்கநாதன் தெரு கடைக்காரன்..///
உண்மைய தான் அண்ணா.....
//என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்...///
பினிஷிங் சரியாயிருக்கு...:)
ஆடியின் நிகழ்வுகள்.. அருமையா இருக்கு செந்தில் அண்ணே...
ஆடி ஆர்ப்பாட்டம் அத்தனையும் வெத்து. ஊர் விழா தொலைச்ச சொத்து:(
//என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்..//
ஆடி கட வெள்ளியான நாளைக்கு நம்ம ஊர்ல கெடா வெட்டு!
ஊரு கெடா வெட்டுல கறியும் சோறும் சாப்பிட்ட மாதிரியே ஒரு உணர்வு...
சூப்பர்னே!
//கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்...
///
ஆமாம் ஆமாம் ..!!
காலத்துக்கேற்ற கவிதை.
வழக்கம் போல நல்ல பதிவு கொடுத்து உள்ளீர்கள் செந்தில் வாழ்த்துக்கள்
//கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்...//
ama... amaaa...
கடைசி இரண்டு வரி கலக்கல்...
// என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்... //
Super appuuuuuuuu...
//என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்..//
உண்மை செந்தில்..
நல்லா எழுதியிருக்கீங்க.
என்றாலும்....
கிராமத்து கெடா வெட்டுக்கு
ஈடாகா..
நகரத்து அம்மன்கள்...///
சார் ,உண்மையிலேயே கிராமத்து குலதெய்வ கேடாவேட்டுக்கு ஈடு எதுவும் கிடையாது , நான் என் நண்பர்களை எல்லா கிடாவெட்டும் ஆஜர் ஆகி விடுவேன்
photo super
ஆடிமாதத்திற்கு ஏற்ற.. அசத்தலான பதிவு...!!
நகரத்தில் அம்மன்கள் மட்டும்தான்., கிராமத்து திருவிழாவின் அடையாளங்களோடு இணைக்கிறது இங்குள்ளவர்களை. ஆனால், கிராமம் திருவிழாவில் கலைக்கட்டுமே அதுவே தனி...
தூரத்தில் இருள் கிழித்து தெரியும் திருவிழா வெளிச்சம். அந்த பலூன் கடைக்காரன்,ராட்டணம், மண்பாண்டகடைகள், விழாவிற்கு காவல் வந்த போலீசுக்கு தூரமாய் வயல்காட்டில் லாந்தர் விளக்கோடு தகரடப்பியில் ஜாலம் செய்யும் கொட்டைபிரட்டுக்காரன். எங்கோ ஒரு மூலையில் பற்றி வெடித்த கலவரம் இரு ஊர் பகையை புதுப்பித்து அடுத்தநாள் ஊரெல்லாம் இளசுகளை தேடித்திரியும் காக்கிசட்டைகள். முதல்நாளில் அமர்களப்பட்ட மாரியாத்தா அமைதியாய் வீற்றிருப்பாள் கலவரமின்றி.
கிராமம் நகரத்தை ஏக்கமாய் பார்க்கிறது., நகரம் கிராமத்தை பெருமூச்சோடு நோக்குகிறது. முதலொன்று கிடைக்காத வசதிகளுக்காக ஏங்குகிறது , இரண்டாமொன்று இழந்தவற்றிக்காக ஏங்குகிறது.... இந்தநிலையில் இழந்தவர்கள் நம்வேர்களை பேசுகிறோம் ஏக்கங்களோடு.
என்றும் ஏக்கங்களோடு .,
இரா.சா..
பதிவுலகின் பாரதிராஜாவே,கலக்கீட்டீங்க
கருத்துரையிடுக