15 ஆக., 2010

ஒரு கவிதை ... மூன்று கோணங்களில்...

சாதாரணமாய்..

இரா முழுதும் பரவிய தனிமையில் 
போதுமானதாக இல்லை வாங்கி வந்த சரக்கும்,
பைத்தியக்காரத்தனமான முடிவெடுத்து விட்டான் என நண்பர்களும் 
போய்ச்சேர வேண்டியவன்தான் என வெறுப்பவர்களும் 
அய்யோ போயிட்டியே ராசா என பெத்தவளும் 
இன்னும்..
இன்னும் ..
அத்தனை பேச்சுக்கும் தீனி போட 
செத்து விடலாம்தான்..?

அசாதாரணமாய்...

இராத் தனிமைக்கு 
போதுமானதாயில்லை அரை நெப்போலியன்.
வெற்றாக வாழ்வதிலும் 
விரக்தியின் உச்சம் என்னைத் 
'தொங்கிரு'... எனத் துரத்த 
கோட்டி புடிச்ச பய 
சாவுக்கு வந்த கேடுன்னு ஊர் சனம் பேச 
விழுந்தடிச்சு அழுவா பெத்தவ....

பின் நவீனத்துவமாய்....

நீளும் இரா 
கிலேசக்கிறுகிறுப்பில் அமிழ்ந்த மனம்
துரத்தும் ஒப்பாரி வீச்சில்
பிரேதக்களை பொருந்திய முகங்கொண்ட தாய்...
மனப்பிறழ்வின்  வீச்சம் சுமக்கும் காற்றில் சொற்களின் நடனம்
மயானத்திலும்...

41 கருத்துகள்:

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

இது நான் எழுத வேண்டிய கவிதை ...
இன்று மதியம் முதலே மனம் சரியில்லை ...

Unknown சொன்னது…

அன்பின் நியோ,

எதுவாக இருப்பினும் தீர்வு உண்டு ...

அருண் பிரசாத் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை அண்ணே!

க ரா சொன்னது…

ஏண்ணே எல்லாம் நல்லாத்தான போயிட்டு இருக்கு ..

வினோ சொன்னது…

அண்ணே, என்ன ஆச்சு...?

முனியாண்டி பெ. சொன்னது…

ஒரே விஷயம் மூன்று கோணத்தில் வெவ்வேறு கவிதை. நன்று

vinthaimanithan சொன்னது…

மயானக்கவிச்சி வேண்டி
நடனமிடும் மனப்பிறழ்வின்
உடைந்த சொற்கள்
தாய்முகத்தின் பிரேதக்களை
தாலாட்டும் ஒப்பாரியில்
மேலெழும் கிலேசங்கள்
இவ்வாறாக
கனவுகளுள்
நீள்கிறதென் இரா...

vinthaimanithan சொன்னது…

அட! திருப்பிப் போட்டாலும் தோசை நல்லாத்தான் வருது!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// அன்பின் நியோ,
எதுவாக இருப்பினும் தீர்வு உண்டு ... //
மணி நான்காகியும் என்னால் இன்னமும் தூங்க முடியவில்லை. அழுததாலும் ஆத்திரத்தாலும் ரத்தச் சிவப்பாயிருக்கிறது கண்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி கூறுகிறேன்.

vasu balaji சொன்னது…

விதம் வேறாயினும் வலி ஒன்றுதானே? அல்லது வலியிலிருந்து சுதந்திரம் மூன்றா?

ஆதவா சொன்னது…

[B]கோணம் என்ற சொற்பிரயோகம் தவறானது. கோணம் என்பது ஒரு கவிதையை நாம் எந்த மனநோக்கில் பார்த்து விளங்கிக் கொள்கிறோம் என்பது. நீங்கள் குறிப்பிட்டது ஒரு அழகியல் இயக்கம். [/B]

[B]மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. இரண்டாம் கவிதை சின்ன சறுக்கல்!![/B]

[B]இந்தமாதிரியான முயற்சிக்கு வரவேற்ப்பு உண்டு![/B]

அன்பரசன் சொன்னது…

சூப்பர் தல.. :)

vinthaimanithan சொன்னது…

தோழர் நியோ,
"இது நான் எழுதவேண்டிய கவிதை" என்ற உங்கள் வரியிலேயே தெரிகிறது உங்கள் வலி.

வலியின் வேதனை அனுபவிப்பவர்க்குத் தான் தெரியும். வெற்று ஆறுதல்கள் எந்தப் பலனையும் தந்துவிடா!

ஆனால் ஒருவார்த்தை. ஏறத்தாழ மூன்றுமாதங்களாக நானும் சாவுக்குச் சமமான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மானுடம் மீதான என் நம்பிக்கை, வாழ்தலின் மீதான என் பிடிப்பு எல்லாவற்றையும் தூள்தூளாக்கிய வலியது. "எனக்கு வலிக்கிறது!" என்று யாரிடமும் பகிரவும் முடியாத வலி! குளிக்காமல் ஏன் பல்கூடத் துலக்காமல் பலநாட்களைக் கழித்திருக்கிறேன். (இன்றுகூட நான் குளித்து நான்கு நாட்களாகின்றன)

என் துயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுதல் என்ற போதை கொண்டு ஆற்றி வருகிறேன். இப்போதும் இருக்கிறது வலி! ஆனால் முன்போல நீடித்து நிற்பதில்லை! சட்டென்று இதயத்தில் ஓர் ஊசியாய் நறுக்கென்று குத்தும்.கொஞ்சநேரம் சென்று மறுபடியும் திரும்புவேன்!

என் வலியை ஓரளவேனும் குறைத்துத் தோள்தடவி ஆறுதல் அளித்த செந்தில் அண்ணனுக்கு என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தோழர் நியோ! உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு கவிதையினை இங்கு பகிர விரும்புகிறேன்! லீனா மணிமேகலையினுடையது.

"வாழ்தலின்
பயணத்தில்
உதிர்த்துவிட நேர்கிறது
உறவுகளை.
ரத்தம் சொட்டச் சொட்ட
தலைகளை
மிதித்துக் கொண்டே
எடுத்து வைக்கிறேன்
அடுத்த அடிகளை.
உதிக்க நேரும்
புதிய உறவுகளில்
மெல்லத்தேயும்
ரத்தவாடை!"

பயணங்கள் தொடரும் தோழர்! மீளுயிர்ப்போம்! ஆறுதலல்ல! ஒரேபடகில் பயணிப்பவனின் பகிர்தல்!

ஜோதிஜி சொன்னது…

இந்த கவிதையில நான் தினந்தந்தி வாசகன் செந்தில்.

அன்புடன் நான் சொன்னது…

முதல் கோணம் மிக அருமை
இரண்டாம் கோணம் புரியுது
மூன்றாம் கோணம் புரியல

பகிர்வுக்கு நன்றி தோழர்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அண்ணா சூப்பரா இருக்கு... வித்தியாசமான சிந்தனை...

நாடோடி சொன்னது…

வாழ்க்கையின் விளும்பில் பிற‌க்கும் க‌விதைக‌ள்.. ந‌ல்லா இருக்கு அண்ணே..

pichaikaaran சொன்னது…

Super boss

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அன்பின் நியோ

எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு உண்டு..
உங்கள் வருத்தம் ஏன் எனத் தெரியாது..ஆனாலும் சொல்கிறேன்..எந்த ஒரு சிறு பொருளையும் கண்கள் அருகே வைத்துப் பார்த்தால்..பெரிதாய்த் தான் தெரியும்.சிறிது தள்ளி வைத்து பாருங்கள்..சிறிதாய் தெரியும்..ஆகவே நம் பார்வையில் தான் எல்லாம்.
நாளை என்னவோ என பயம் வேண்டாம்..இன்று என்பது நேற்றைய நாளை..ஆகவே நடப்பது நடந்தே தீரும்.
ஆகவே எந்தத் துன்பத்தையும் எதிர் கொள்வோம். அதனின்று மீள்வோம்.
நீங்கள் வயதில் சிறியவர்..ஆகவேதான் கலக்கம் என எண்ணுகிறேன்.
கலக்கம் வேண்டாம்..நம்முடன் வரும் நிழல் கூட.."ச்..சீ..போ..என ஒதுக்கினால்..நம் பின்னாலேயே வரும்.
விந்தைமனிதன்..உங்களுக்கும் இது பொருந்தும் என எண்ணுகிறேன்.
தனியாக மின்னஞ்சல் பண்ண ஆசை..ஆனால் முகவரி தெரியவில்லை

சௌந்தர் சொன்னது…

அண்ணா புதிய சிந்தனை

கமலேஷ் சொன்னது…

வித்தியாசமான முயற்சி...நல்லா இருக்கு...

Ahamed irshad சொன்னது…

Different Br.Krp...Well

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

விந்தை மனிதரும் , டி வி ஆர் அவர்களும் , தயவு செய்து எனது நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றவும், எடை போட்டு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவும் மட்டுமே தகுதியானவர்கள் கல்வித்துறையில் அமர்ந்து கொண்டு நாகரீகமாக புன்னகைத்துக் கொண்டு நளினமாக கழுத்தை அறுக்கிறார்கள். சென்னையில் பொறியியற்கல்லூரி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அனித்ரா பற்றி நான் முன்பொருமுறை பதிவிட்டிருந்தேன். எனக்கும் பதிவுலகில் யாரேனும் அஞ்சலி செலுத்தும் நிலை வந்து விடுமோ என நேற்று பேரச்சம் தோன்றியது.... சற்று முன் தான் தூங்கி எழுந்தேன். மனம் சற்று இலகுவாயிருக்கிறது. எனது உரிமைகளை கேட்பதற்கு நான் ஏன் அச்சப் பட வேண்டும்? தமிழ் ஓவியா அவர்களிடம் பேசியது சற்று தெம்பாக இருந்தது. உதவி கேட்டு நான் மிகவும் மதிக்கும் ஒருவருக்கு இன்றிரவு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.நல்லதே நடக்கும் என்பதே எனது நம்பிக்கை. ஆனால் ஒன்றை உறுதியாக மாணவனாக சொல்வேன். கல்வித்துறை அழுகி சீரழிந்து முடை நாற்றமடித்துக் கிடக்கின்றது..... தங்கள் அமைப்பின் நிறுவனரின் , தலைவரின் கொள்கைகள் என்ன - எந்த அடிப்படைக்காக எதனை முன்னிறுத்தி கல்வி நிறுவனம் செயல் பட்டு வருகின்றது என்பதையெல்லாம் அறிந்து கொள்ள புரிந்து கொள்ள செயல் படுத்த விரும்பாதவர்கள் ஒருபோதும் எனது மரியாதைக்குரியவர்கள் அல்லர். அவர்கள்எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.என் எதிர்காலத்தோடு எனது கடைசி நம்பிக்கையோடு எனது ஒற்றை மூலதனத்தோடு தாயம் விளையாடுவதற்கு யாரையும் நான் இந்த முறை அனுமதிக்கப் போவதில்லை.

Unknown சொன்னது…

அன்பின் நியோ,
உங்கள் பிரச்சினை எதுவானாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்க நான் தயாராக இருக்கிறேன்... எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்..

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் கே ஆர் பி , உங்கள் வரிகள் நெகிழச் செய்கின்றன எனது கண்களை ... சில நாட்கள் கழித்து உங்களை நான் தொடர்பு கொள்கிறேன் தோழர் ... தற்போது தைரியம் கைகூடியுள்ளது ... சட்டை பேன்ட் பனியன் போன்றவற்றை காலம் உருவிய போதெல்லாம் கலங்காமல் புன்னகைத்தவன் தான் நான் ... ஜட்டியையே உருவ நினைத்தால் மூடிகிட்டு போய்விட முடியுமா ... (நிர்வாணம் அசிங்கமல்ல என்பது வேறு விஷயம்)...தமிழ் ஓவியா அவர்களிடம் இன்றிரவு மீண்டும் பேச வேண்டும் ... இன்னொரு மதிப்புக்குரியவருக்கு மின்னஞ்சல் ...நாளை நல்ல படியே நடக்குமென்பது எனது நம்பிக்கை ... சலுகையோ இரக்கமோ அல்ல நான் கேட்பது உரிமை எனது உரிமை ... இன்று சுதந்திர தினமாம் ...அப்படியா தோழர் ?????...காஷ்மீருக்கும், கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டு வரும் மாணவ மாணவியருக்கும் அந்த பொருள் 'சுதந்திரம்' எப்போது கிடைக்கும்????.... கொஞ்சம் தூங்கினால் நன்றாயிருக்குமென நினைக்கிறேன் ... குட் நைட்தோழர் ... (பாக்கு ,சிகரெட் ,தண்ணி,விலைமாதர்,கடவுள் -இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட நற்பழக்கங்கள் இருப்பது சில சமயங்களில் நல்லது என்று சொன்ன எனது நண்பன் ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறான் ) ... மன்னியுங்கள் தோழர் ... உங்களை இம்சிக்கிறேன் ... தயவு செய்து மன்னியுங்கள் ... தூங்க போகிறேன் ... தேங்க்ஸ் பாஸ்

Unknown சொன்னது…

அன்பின் நியோ,
உங்கள் சொந்த சகோதரனாக கேட்கிறேன்.. உங்கள் மொபைல் என் கொடுங்கள் .. நான் உங்களுடன் பேசவேண்டும்...

vinthaimanithan சொன்னது…

தோழர் நியோ, நானும் உங்களிடம் பேச விழைகிறேன். கண்டிப்பாக மறுக்கவேண்டாம். தமது வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளுமின்றி நூலறுந்தக் காற்றாடியாய்ப் பலர் வாழ்கின்றனர். மிகச்சிலர் மட்டுமே தமது பாதையைத் தெரிவு செய்து தமக்கும் சமூகத்துக்கும் பலனுள்ளதாய் மாற்றிக் கொள்கின்றனர். அவர்களது அறிவும் திறனும் சமூகத்தின் சொத்து. தனிமனிதனுடையதல்ல. உங்கள் அறிவையும் திறனையும் வீணடிக்க உங்களுக்கே உரிமையில்லை. அவற்றுக்கு ஊறுநேரும்போது எதிர்த்து நிற்பதே எம் போன்றோர் கடமை! உங்களுக்கே தெரியாமல் பதிவுலகில் பலர் உங்களுக்குத் தோள்கொடுக்கத் தயாராய் உள்ளனர். மறுக்காமல் முன்வரவும்.

ரமேஷ் வீரா சொன்னது…

அன்பின் நியோ,
உங்கள் பிரச்சினை எதுவானாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்க நான் தயாராக இருக்கிறேன்... எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்..





பதிவுலகம் மொக்கை போடுவதற்கு மட்டுமல்ல .............. மற்றவரின் சோகத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு ............ தங்களின் இந்த சேவை தொடரட்டும் ......... வாழ்த்துகள் ....... இதுபோன்ற கவிதைகள் எழுத எனக்கும் கற்றுகொடுங்கள் அண்ணா ..........

என்னது நானு யாரா? சொன்னது…

கவிதைகளில் விரக்தியின் வலி நன்றாகவே வெளிபடுத்தியுள்ளீர்கள். அந்த வலி நெஞ்சை சுருக்கென்று தைத்ததென்னமோ உண்மை.

வாழ்க்கை சில நேரங்களில் அப்படி தான். நம்மை கையறு நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. b என்று தான் வாழ வேண்டும். இது போராட்டத்திற்கான காலம். எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் இப்படியான நெருக்கடி நேரங்கள் சம்பவிக்கவே செய்கின்றன.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தூங்க போகிறேன் என்று சொன்னது வழக்கமாக சொல்லும் தூங்கப் போகிறேன் என்ற அர்த்தத்தில் தான் தோழர். உங்களை கலவரப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தோழர். இங்கு இது வரை பெய்து கொண்டிருந்த மழை நின்று போய் சூரியன் புன்னகைக்கிறது... தெருவில் கண் தெரியாதவர் ஒருவர் கம்பினால் தடவி தடவி மெல்ல நகர்ந்து சென்று ஊதுபத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் ... நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன் தோழர் ...நம்பிக்கையுடனே இருக்கிறேன் தோழர் .... நான் எனது அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை ... சொந்த சகோதரனாய் என்று நீங்கள் சொன்னது என்னுள் ஏதோ செய்கின்றது ... நன்றி சகோதரரே நன்றி நன்றி ... சில தினங்களில் கண்டிப்பாக உங்கள் அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி உங்களோடு பேசுகிறேன் தோழர் ... பிரச்சனை என்று ஒன்று இருந்தால் தீர்வு என்று ஒன்றும் இருக்கும் என்பது எனக்கு இப்போது புரிகிறது தோழர் ...நான் செய்ய வேண்டியதெல்லாம் சுவரில் போய் முட்டாமல் கதவுகளை தேடுவது தான்... நீங்கள் என் குறித்து பதட்டம் கொள்ள வேண்டாம் ... நான் தற்போது நலம் ... வரும் காலங்களில் நலமோ நலம் ... பின்னர் அலை பேசுகிறேன் ... உடனேயே தொடர்பு கொள்ளாமைக்கு என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் தோழர் ... பின்னொரு தினம் தொடர்பு கொள்கிறேன் ... நன்றி என்ற சொல் உங்களை வருத்தம் கொள்ளச் செய்யும் என்பதால் இனி சொல்வதாயில்லை ... இப்போது எனக்கு தேவை தூக்கம் .... பின்னர் வருகிறேன் தோழர்!

Unknown சொன்னது…

தம்பி தூங்கி எழுந்தவுடன் உங்கள் மொபைல் SMS பாருங்கள், எனக்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

விந்தை மனிதருக்கும் ,ரமேஷ் வீராவிற்கும்,
நான் ஒரு போதும் உங்கள் தளத்திற்கு வந்தது இல்லை;பின்னூட்டியதில்லை;ஓட்டும் போட்டதில்லை. நீங்கள் என் மீது கொள்ளும் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? என்ன தான் என்னால் செய்ய முடியும்? பின்னொரு தினம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.மின்னஞ்சலும் செய்கிறேன்.அலைபேசி எண் கேட்டு வாங்கி பேசுகிறேன் தோழர்ஸ்.
நான் ஏற்கெனவே உங்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறேன் தோழர்ஸ் .அதிகரித்து விடாதீர்கள் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். வருகிறேன் தோழர்ஸ்.

தமிழ் ஓவியா சொன்னது…

உங்கள் சேர்க்கை தொடர்பாக உரியவரிடம் பேசிவிட்டேன். கண்டிப்பாக நீங்கள் தொடர்ந்து படிக்க முடியும் என்ற உறுதியை வழங்குகிறேன்.

என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். வேண்டிய உதவிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

நினைத்தது நடக்க வில்லையே என்று உணர்ச்சி வசப்படாமல் பக்குவப்பத்துடன் நடந்து தீர்வை நோக்கி சிந்திக்க வேண்டுகிறேன் நியோ.

உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.ஆர்.பி.செந்தில் உங்களப் பற்ரி விசாரித்தார்.அவரின் நல்ல எண்ணத்திற்கும் மிக்க நன்றி

பா.ராஜாராம் சொன்னது…

கவிதைகளும், பின்னூட்டங்களும் மிக நெகிழ்த்துகிறது...

துயரங்களை இரக்க நண்பனின் தோள் மாதிரி நல்ல இடம், வேறு உண்டா?

பதிவுலகம் எனும் நல்ல குடும்பத்தில் பிறந்த தெம்பு, தற்சமயம்.

யோவ்.. எல்லோரும் வெளிய வாங்கய்யா...தெருவில் ஸ்டெம்ப் ஊண்டி கிரிக்கெட் விளையாடலாம்.

எல்லாம் சரியாப் போகும்.

Bibiliobibuli சொன்னது…

Neo, lots of luck with your studies. Keep smiling.

KANA VARO சொன்னது…

நன்றாக உள்ளது கவிதையும் கருத்துரையாடல்களும்

Vela சொன்னது…

செந்தில், இங்கு நீங்கள் படையல் போடுவது "தமிழ்" மட்டும் அல்ல.. அன்பும் தான்.. இந்த கலந்துரையாடல் என்னை மிகவும் நெகிழச் செய்கிறது..

நெல்லுக்கு இரைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

இது தான் நினைவுக்கு வருது...

priyamudanprabu சொன்னது…

வித்தியாசமான சிந்தனை அண்ணே!

dheva சொன்னது…

பின் நவீனத்துவத்தில் இது சூப்பர்!

செல்வா சொன்னது…

அட சாமி ..எல்லாம் கலக்கலா இருக்கு ..
அந்த பினவீனத்துவம் தான் எனக்கு விளங்க மாடேங்குது ..!!