18 ஆக., 2010

பகிர்ந்தவை....

சொற்கள் நடனமிடும் கவிதையாய் 
சிக்கிக்கொள்ளும் நீ...
கைம்மாறாக கேட்ட அது,
என்னிடமும் இல்லாத ஒன்றல்லவா...

பிரதி வெள்ளிக்கிழமை 
சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு 
பிரகார வெளியில் ஜோடி சேரும் 
இரு ஜதை காலணிகள்..

உள்ளே சாமியும் 
சாமியின் ஓங்காரமும் 
ஓம்காரத்தின் உள்ளுணர்வும் 
கடந்து வரும் தெய்வீகம் நீ...

சாலையின் எதிர்ப்புற சந்திப்பில் 
பரிமாறும் புருவ மடல்களில்,
ஆடும் செவியின் தொங்கல்களில் நான்..

சலிக்கவே இல்லாத ''நின்னையே பாரதி'
பிங்க் நிற சல்வார்,
முதல் கடிதம்
சிவப்பு ரோஜா..

இப்போதும் இருக்குமா
உன் கணவனோடு நான் கை குலுக்கிய 
புகைப்படம்..

18 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

இன்னும் மிச்சமிருக்கின்றன
நம் பகிரப்படாதவை
நாய்வசம் தேங்காய்போல

எனக்கும் ஆகாமல்
உனக்கும் உதவாமல்...

க ரா சொன்னது…

உசுப்பி விடறதே உங்களுக்கு எல்லாம் வேலையா போச்சு :)

வினோ சொன்னது…

நிகழ்வுகள் மறக்கா நினைவுகள் இருப்பின், காலங்கள் கடந்தாலும் இருக்கும் அண்ணே..

கவிதை கொஞ்சம் சிலரை இளமை காலத்திற்கு கொண்டும் போகும்...

நசரேயன் சொன்னது…

//இராமசாமி கண்ணண் சொன்னது…
உசுப்பி விடறதே உங்களுக்கு எல்லாம்
வேலையா போச்சு :)//

அப்படித்தான் தோணுது

Chitra சொன்னது…

சாலையின் எதிர்ப்புற சந்திப்பில்
பரிமாறும் புருவ மடல்களில்,
ஆடும் செவியின் தொங்கல்களில் நான்..

.... :-) nice!

காமராஜ் சொன்னது…

ஆஹா செந்தில் அது கவிதைமுளைத்த காலங்களில்லையா? என்ன அருமையான நினைவலைகள்.
நினைக்கையில் இனிக்கிற கல்லெழுத்து அது.படிக்கிற போது தன்னால பின்னால இழுத்துக்கொண்டு ஓடும் மனக்குதிரை.ஓட வைத்த செந்திலுக்கு வந்தனம்.

Unknown சொன்னது…

//பிரதி வெள்ளிக்கிழமை
சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு
பிரகார வெளியில் ஜோடி சேரும்
இரு ஜதை காலணிகள்..//

அருமை

Asiya Omar சொன்னது…

நினைத்து பார்த்தால் நித்தம் இனிக்கும்.நல்ல கவிதை.

பெயரில்லா சொன்னது…

அருமை அண்ணா!
//சாமியின் ஓங்காரமும்
ஓம்காரத்தின் உள்ளுணர்வும்
கடந்து வரும் "தெய்வீகம்"...//
உங்க கிட்ட இருந்தா!!?

bogan சொன்னது…

அந்த கடைசி ட்விஸ்ட் தான் யதார்த்தம் இல்லையா..கிரேட்.

Unknown சொன்னது…

அருமையான கவிதை... உண்மையிலே அது ஒரு மழைக் காலம்

Prapa சொன்னது…

இந்த பச்சை புள்ளையின் பதிவுகளை பார்க்காமல் இருந்து , இந்த பிஞ்சு நெஞ்சை உடைசிடாதீங்க,,, வாங்க வந்து பாருங்க... வந்தால் சொக்கா, பிக்கா எல்லாம் தருவான்.. ஹீ ஹீ..

vasu balaji சொன்னது…

அருமை நனவோடை:)

நாடோடி சொன்னது…

க‌டைசி வ‌ரிக‌ள் தான் எதார்த்த‌ம்.. ந‌ல்ல‌ இருக்கு செந்தில் அண்ணே.

ஈரோடு கதிர் சொன்னது…

||இப்போதும் இருக்குமாஉன் கணவனோடு நான் கை குலுக்கிய புகைப்படம்||

இல்லையென்றால் அதை மனது எப்படி ஏற்கும் ?

Unknown சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க..

செல்வா சொன்னது…

//உள்ளே சாமியும்
சாமியின் ஓங்காரமும்
ஓம்காரத்தின் உள்ளுணர்வும்
கடந்து வரும் தெய்வீகம் நீ...
///
அது சரி ..!!

என்னது நானு யாரா? சொன்னது…

அண்ணே! கொன்னுடீங்க! அதுவும் கடைசி வரி! Super! நீங்க எப்பண்ணே புத்தகம் போட போறீங்க?

உங்கள் எழுத்துகளும் கேபில் அண்ணனை போன்று புத்தகங்களாக வர வேண்டும் என வாழ்த்தறேண்ணே!

நன்றி!