உனக்கு என்னை கடுகளவாவது பிடிக்குமா?..
உன் குடும்பத்தை நேசிக்கிற மாதிரி நன்றாக நடிப்பேன்,
நீ யாரையாவது நேசித்திருக்கலாம்,
நானும் சிலரை முயற்சித்திருக்கிறேன்,
ஏழேழு லோகத்திலும் நீதான் அழகி (நெசமாத்தான்)
ஆனாலும் நீதான் எனக்கு மனைவியாக வேண்டும்.
நம் திருமணத்தில் வரதட்சிணையாக,
உங்கப்பாவிடம் உனக்கு வேண்டிய மட்டும் கறந்து விடலாம்.
என் அம்மாவிடம் நீ சண்டை போட்டு நாம் தனிக்குடித்தனம் போகலாம்,
நீ விரும்பினால் மட்டும் வேலைக்கு போகலாம்,
சீக்கிரம் வீடு வாங்கலாம், அதை உன் பெயரில் பதிவு செய்யலாம்,
சமைக்க, துவைக்க ஆள் வைத்துக் கொள்ளலாம்,
இரண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்,
உனக்கு பிடித்த பெயர்கள் வைக்கலாம்,
நீ விரும்பினால் மட்டும் குடிக்கவோ, புகைக்கவோ, நட்பவோ செய்வேன்.
என் வீட்டுக்கு நீ சொன்னால் மட்டுமே போவேன்.
உன் வீட்டிலிருந்து யார் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ,
நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்.
என் சம்பளப் பணம் முழுதும் நீயே வைத்துகொண்டு,
என் செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும் .
உன் சம்பளப் பணம்(ஒரு வேளை வேலைக்கு போனால்) உனக்கு நகையாக வாங்கிக்கொள்,
பெண் பெற்றால் அதற்கு உதவும் அல்லவா.. .
உன் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் நாமே பார்த்துக் கொள்ளலாம் .
என் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் என் தங்கை வீட்டுக்காரன் பாத்துக்குவான் (அத்தை மவன்).
ஆகவே யோசிக்காமல் பட்டென்று முடிவெடுத்து உன் அப்பனிடம்,
கட்டினால் இவனைத்தான் கட்டுவேன் என என்னைக் கை காட்டு...
மக்களே..
இப்படியாகவும் எழுதலாம்
காதல் கடிதத்தை...!
31 கருத்துகள்:
அடிமை கடிதம் மாதிரியே இருக்கு
//.உன் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் நாமே பார்த்துக் கொள்ளலாம் .என் அப்பா, அமாவுக்கு ஒன்றென்றால் என் தங்கை வீட்டுக்காரன் பாத்துக்குவான்//
வியாபாரக் காதல்!!!!!
//உன் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் நாமே பார்த்துக் கொள்ளலாம் .
என் அப்பா, அமாவுக்கு ஒன்றென்றால் என் தங்கை வீட்டுக்காரன் பாத்துக்குவான் //
மாம்ஸ் கொஞ்ச துப்பிக்கிடறேன் த்தூ...
நிஜமா இப்போ இதான் நடக்குது...!
அப்ப உங்கள எழுதி கொடுத்தாச்சி, அப்புறமும் கவிதையா,
அண்ணே,
இது காதல் கடிதமா? இல்ல
அடிமை சாசனமா?
நல்ல சொல்லிக் கொடுக்கிறாங்கையா.. :(
Descending Order of Importance என்கிற தலைப்பு யதார்த்தமாக, நன்றாகவே பொருந்துகிறது. உங்களுக்கு என்ன விருது கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன்......!!! :)
//நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்.//
ஒரு அடிமை சிக்கிருச்சு.
அப்புறம்
Descending Order of Importance சூப்பர்
"*$அண்ணே?!#@*^# :((
சும்மா நச்சுன்னு இருக்கு அண்ணே கவிதை!
என்னாங்கண்ணே செய்றது, காமம் கண்ணை மறைக்குது. எல்லாத்தையும் பொண்டாட்டிக்கிட்ட இழந்துட்டு, சீக்கிரம் நோய் வந்து செத்தும் போறான்.
நிதரசனத்தை கண்முன்னால கொண்டுவந்திருக்கீங்க!
இப்படித்தான் நிறைய பயபுள்ளைக சுத்திக்கிட்டு இருக்குது..
அண்ணே அடிமை சாசனம் கலக்கலா இருக்கு...
ஹி ஹி ஹி. உண்மைநிலை
ஆகா... இப்டி ஒரு மெத்தட் இருக்கா? சரியாப்போச்சு...
கடிதம் எழுதினது நீங்கதானா?
ஆஹா உண்மை உண்மை அத்தனையும் உண்மை.
சூப்பர் சார் கலக்கல், உண்மை இன்று நாட்டில் நடந்து கொண்டுள்ளதை அப்படியே செதுக்கி உள்ளீர்கள்
நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்///
அது சரி......
எப்படியாவது,எதையாவது,எழுதி வலைச்சிட்டாத் சரிதான்.
செந்தில் இதுதான் இன்றைய நிலை.வெட்கமாவும் இருக்கு.
ஆனா நிறையப் பேர் கொப்பி பண்ணி வச்சிருப்பாங்க இந்தக் கடிதத்தை !
செந்தில், இப்படி வாழ்வதற்க்கு சந்நியாசியாவதே மேல்.. (நான் சொல்ல)
“பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டாயின்
எத்தாலும் கூடியிருக்கலாம் - சற்றேனும்
ஏறுமாறாக யிருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்”
- ஔவையார் -
///உன் குடும்பத்தை நேசிக்கிற மாதிரி நன்றாக நடிப்பேன்,//
அட பாவமே ..!!
சத்தியமா பட்டைய கிளப்பிட்டீங்க அண்ணா ..!!
இந்த மாதிரியும் நிறைய நடக்குது.
அத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் அவள் மணவறையில் நான் கல்லறையில் அப்படின்னே எழுதறது ..?!?
நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்.
என் சம்பளப் பணம் முழுதும் நீயே வைத்துகொண்டு,
என் செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும்
சூப்பர்ப்ப்ப்ப்ப்
செந்தில் @
எல்லாம் படிச்சேன்...ரொம்ப நல்லா இருந்துச்சு... ! மனைவியை பத்தி எதுவும் சொல்லாம ரொம்ப நாசுக்கா இருக்கு....கொடுத்துடலாம் யாருக்காச்சும்..ட்ரை பண்ணிதான் பார்போமே....!
( நீங்க கல்யாணம் ஆகாதவங்க மட்டும் தான் எழுதணும்னு சொல்லலேல்ல...)
//நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்.//
நல்ல சாசனம்...எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?
இதுதான் பெரும்பாலும் நடக்கிறது..
இந்த கடிதத்தை கொண்டு போய் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. அப்படியே வச்சிட்டு ஒரு கல்லறைல படுத்துகிட்டா பின்னாடி வர்ற சமூகமாவது உருப்படும்!!! (இது கவிதையின் கருத்துக்கு மட்டுமே. ) ஆனாலும் அதில் உள்ள எதார்த்தத்தை மறுக்க முடியவில்லை..
ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... இப்படியும் எழுதலாம் ஒரு கவிதையை!
நாடோடி சொன்னது…
இப்படித்தான் நிறைய பயபுள்ளைக சுத்திக்கிட்டு இருக்குது..
அதே தான்!
இதுதான் புதிய காதல் புரட்சியினு சொல்லுங்க .
வணக்கம்
நல்ல காதல் கடிதம். இப்படி கடிதம் எழுதினால் எளிதில் பெண்களை கவர்ந்து விடலாம் அப்படிதானே
http://marumlogam.blogspot.com
நல்லாயிருக்கு சார் நல்லாயிருக்கு!
நடப்பை நல்ல கிழித்து இருக்கிங்க கவிதை என்ற பெயரில். நடக்கடும் இதபாத்து நாலுபேரு நல்லான நல்லது. இதவே பயபுள்ள எழுதி காதலித்தால் அந்த பாவம் உங்களை சும்மாவிடாது. (இல்லாத) சாமீ கன்னகுத்தும்.
கருத்துரையிடுக