அதீத கோபத்தின்
புதிய பார்வைகளை தருகிறாய் நீ..
புரிதலின் நேர்க்கோட்டில்
நிற்கிறேன் நான்..
பின்னொரு நாள்
தவறுதலாக பேசிவிட்டேன் என வரும்
உன்
நேர்கோடுகளில்
நான் இல்லாமல் போகலாம்..
பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வாழ்வியல் ....
பறவையின் மொழிகேட்பவனிடம்
எதிர்காலம் அறியச்சென்றேன்
அறைக்கு வெளியேவந்து
அட்டைகளை கலைத்த
பறவை
கணிக்க இயலா தருணமொன்றில்
விருட்டென பறந்துவிட்டது...
பிடிக்க முடியாத வெறுப்புடன்
ரெக்கை வெட்டி நாளாச்சு
இன்னொன்னுதான் வாங்கனுமென்றான்
அவன்..
மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்
எதிர்காலம் அறியச்சென்றேன்
அறைக்கு வெளியேவந்து
அட்டைகளை கலைத்த
பறவை
கணிக்க இயலா தருணமொன்றில்
விருட்டென பறந்துவிட்டது...
பிடிக்க முடியாத வெறுப்புடன்
ரெக்கை வெட்டி நாளாச்சு
இன்னொன்னுதான் வாங்கனுமென்றான்
அவன்..
மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்
நான்...
குறிப்பு : இது ஒரு மீள் பதிவு
35 கருத்துகள்:
///அதீத கோபத்தின்புதிய பார்வைகளை தருகிறாய் நீ..புரிதலின் நேர்க்கோட்டில்நிற்கிறேன் நான்..///
கோபம், உறவுகளை சிதைக்கிறது! அருமை! அருமை!
"அடைக்கும் தாழ்...."
நன்றாக இருக்கிறது..!ந்ம்ம பக்கத்தையும் வந்து பாருங்க
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/2010/08/blog-post_27.html
அருமை!
அற்புதம் செந்தில்!இந்தக் கவியுணர்வை எல்லாம் பயோடேட்டா எழுதி வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.வாழ்வியல் அனுபவங்கள் மொழி ஆளுமை இரண்டும் பொருந்தி வருவது அரிது.இது உங்களுக்கு இருக்கிறது.உங்கள் எழுத்தை இன்னும் கொஞ்சம் தீவிரமாகப் பாவிக்கவேண்டும் நீங்கள்...
Nice...
nallayirukku anna..
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..//
சூப்பர் அண்ணே!
மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்
நான்...
......அருமையான கருத்துக்களுடன் நல்ல கவிதைகள்.... பாராட்டுக்கள்!
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது.//
ஆமாம். அளவற்ற அன்பை மிகச்சிறிய ஈகோ அடைத்து விடுகிறது.
பாராட்டுக்கள்..........
கவிதைகள் அருமை.
very nice man....
இரண்டும் பிடித்திருக்கிறது.
மன மூடிகளை திறந்தாலே எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்.. நல்லா இருக்கு கவிதைகள்.
what a mind blowing rhyme k r p sir had done.congrats sir.((sorry for english coments,tamil font not working)
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..//
அருமை.
//
மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்நான்...//
மிக அழகு.
அண்ணே எனக்கு இன்னும் கோனார் நோட்ஸ் வரலை...
ரெண்டும் அபாரம். ரெண்டாவது ரொம்ப ரொம்ப பிடிச்சது
///அதீத கோபத்தின்புதிய பார்வைகளை தருகிறாய் நீ..புரிதலின் நேர்க்கோட்டில்நிற்கிறேன் நான்..///
கவிதை அருமையாக இருக்கிறது.
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது.//
உண்மைதான்.
அண்ணே இரண்டும் அருமை அண்ணே... இரண்டாவது சூப்பர்...
கருத்துள்ள அருமையான வரிகள்.
உபயோகமான தகவல்கள்
இரு கவிதைகளும் அருமை
நல்லாயிருக்குண்ணே :)
நல்ல கவிதை. நல்ல கருத்து. வாழ்த்துக்கள் நணபரே.
நெஞ்சிளிருந்து மீளா பதிவு....வாழ்த்துகள்
மரக்கதவை சிறு தாழ்பாள் ஆளும்.
மனக்கதவை ஆள்வது சிறகுகளா?
மனக்கதவில் அடைபட்டது சிறகுகளா?
KRP செந்தில், எனக்கே புரியும்படியாய் கவிதை.
திரும்பத் திரும்பப் படிக்க வேறு வேறு கருத்துக்களில் வெளிப்படுகிறது இரணடு கவிதைகளும்.
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..//
அருமை! அருமை!
excellent!
அருமை நண்பா
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..
//
நல்ல சிந்தனை
பெரிய தவறான முடிவுகள் சின்னச் சின்ன விஷயங்களை தீர்க்கமுடியாமலேயே வருகின்றன.
//
மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்நான்...
//
தீர்க்கமான முடிவு
//பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..
//
சிறிய தாழ்ப்பாளை திறப்பதற்கு நிறையப்பேருக்கு மனம் வருவதில்லை.
விருது வெயிட்டிங்...
http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_30.html
//பிடிக்க முடியாத வெறுப்புடன்
ரெக்கை வெட்டி நாளாச்சு
இன்னொன்னுதான் வாங்கனுமென்றான்
அவன்..//
ஆஹா ..இரண்டாவது கவிதை கலக்கல் அண்ணா ..!!
கருத்துரையிடுக