அபத்தங்கள்
இந்த தேர்தலின் முன்னணி அபத்தம் கருணாநிதிதான். கடந்த ஐந்தாண்டில் தங்கள் அரசாங்கம் மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு ஓட்டு கேட்கவேண்டிய கருணாநிதி. இன்னொரு முறை இலவசங்களை வாரியிறைப்பேன் என தேர்தல் அறிக்கை விட்டார். பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க வை விடவும் விஜயகாந்தை கட்டம் கட்டுவதற்கு காட்டும் முனைப்பு எரிச்சலை ஏற்ப்படுத்துகிறது. தி.மு.க வின் அடிமட்ட தொண்டர்கள் வரைக்கும் மிகச்சிறந்த பேச்சாளர்களை கொண்ட கழகம் குஷ்பு, வடிவேலு என ரெண்டு காமெடி பீசுகளை களமிறக்கி பிரச்சாரம் செய்கிறது. சென்ற தேர்தல் வரைக்குமே தலைநகரத்தில் செல்வாக்கினை பெற்றிருந்த தி.மு.க இப்போது தலைநகரத்தை விட்டு ஓடிவிட்டது. தேர்தல் நடக்கும்போது தான் ஒரு காபந்து அரசுதான் என்பதனை மறந்து ஐயகோ மக்களே தேர்தல் ஆணையத்தின் அக்கிரமங்களை பாருங்கள் என தினசரி கூவுவது இன்னொரு காமெடி.
அடுத்த அபத்தம் ஜெயலலிதா. தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு அதனினும் கூடுதலாக இலவசங்களை அறிவித்து மக்களை வெறுப்பேற்றியவர். நிச்சயமாக ஜெயிப்பார் என எல்லோரும் நினைத்த நாளில் கூட்டணியை குழப்பி ம.தி.மு.க வை வெளியேற்றி தான் இன்னும் மாறவேயில்லை என தெளிவாக்கியவர். இப்போதும் ஜெயிக்கும் வாய்ப்புகளை தன் வசம் வைத்திருக்கும் இவர் ஜெயித்தபின் செய்யபோகும் அபத்தங்களை நினைத்தால் இப்போதே வயிறுவலிக்கிறது.
அடுத்த அபத்தம் தேர்தல் அறிக்கைகள். இரு கழகங்களுமே மக்களை பிச்சைக்காரர்களாகவே பார்க்கிறது. இரண்டு அறிக்கைகளிலுமே உள்கட்டமைப்பு, மின்சாரம், கல்வி, தண்ணீர், சுகாதாரம் போன்றவை பற்றி எதுவுமே இல்லை. தனியார்ப் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் பெருகிவருகிற சூழலில் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கான அறிக்கைகள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் இருக்கும் மொத்த நூலகங்களுக்கான நிதியை கோட்டூர்புரம் நூலத்துக்கு திருப்பிவிட்டது தி.மு.க அரசு. இம்முறை நூலகங்களுக்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
அடுத்த அபத்தம் விஜயகாந்த். இந்தாளு போதையில் உளறுவதை பார்க்கிறபோது ஆக்சன் நடிகரான இவர் எப்படி காமெடிக்கு மாறினார் என்கிற ஆச்சர்யம் தோன்றுகிறது. இந்தாளு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என மக்களை பார்த்து பேசும்போது. அப்புறம் எதுக்குங்க இவ்வளவு கூச்சல் போடுறீங்க என மக்கள் நினைப்பதை யாராவது அடிவாங்கும் தெம்பிருக்கிற அல்லக்கைகள் நினைவூட்டினால் நல்லது. அ.தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஜெயித்தால் அனேகமாக முதல் ஆப்பு காந்துக்குதான்.
அடுத்த அபத்தம் காங்கிரஸ்காரர்கள் இன்றைக்குவரை யார் தலைவர், யார் தொண்டன் என்று புரியாத புதிராக இருக்கும் ஒரே கட்சி. கருணாநிதியை மிரட்டி 63 தொகுதிகள் வாங்கியவுடனே தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகிற காமெடியன்கள். இவர்களால்தான் தி.மு.க கூட்டணிக்கு மிகுந்த பின்னடைவே.
அடுத்த அபத்தம் வடிவேலு. கிட்டத்தட்ட தனது சினிமா கேரியர் போய்விட்ட நிலையில் சொத்தை காப்பாற்றிக்கொள்ள அடைக்கலம் தேடி தி.மு.க வில் ஐக்கியமாகியிருக்கிறார். முக்கிய தலைவர்களைவிட தி.மு.க மேடைகளில் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெருமையாக நினைத்துக்கொண்டு இவர் பேசுவது முகம்சுளிக்க வைக்கிறது.
அற்புதங்கள்
காலம்காலமாக தேர்தல் வந்தால் நள்ளிரவு வரை காதுகிழியும் கோசங்களை கேட்ட நமக்கு இந்த தேர்தல் ஒரு ஆச்சர்யமான சந்தோசத்தை தருகிறது. எப்படியாவது ஜெயித்துவிடலாம் என தி.மு.க வினர் கண்ட கனவில் தேர்தல் ஆணையம் மண்ணள்ளிப் போட்டுவிட்டது. நிறைய வெளிநாடுகளுக்கு சென்ற என்னைபோன்றவர்களுக்கு எப்போது நம் நாட்டில் இப்படி ஒரு மாற்றம் வரும் என கவலைப்பட்டபோது, இப்போதிருக்கும் நிலையைப்பார்த்தால் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு கவலைதான், அது ஒரு மாதம் தள்ளி தேர்தல் முடிவுகளை அறிவிப்பது என்கிற முடிவு. நம் தேசம் முழுதும் ஊழலில் மலிந்துகிடக்கும் இந்த சூழலில் இது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் இந்த விசயத்திலும் தேர்தல் ஆணையம் மிக உறுதியான நேர்மையை கடைபிடிக்கும் என நம்புவோம்.
தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ராயல் சல்யூட்...
33 கருத்துகள்:
நல்ல பதிவு செந்தில் சார்.
உண்மைவிரும்பி.
மும்பை.
கண்டிப்பாக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டியதுதான்..
இதோ எனது பாராட்டுக்கள்..
திமுக தோற்க ஐந்துக் காரணங்கள் - முக குடும்பம், இலவசம், காங்கிரஸ், குஷ்பூ-வடிவேலு, 2ஜி ஊழல் ............ போதும் தெரிந்துவிட்டது திமுகவுக்கு இம்முறை சங்கு தான் என்று .... !!!
மிகவும் தெளிவான அருமையான கச்சிதமான சொல்லவேண்டியதை அழகாகச்சொல்லியுள்ள பாராட்டத்தக்க பதிவு தான்.
பதிவு செய்த தங்களுக்கும், தாங்களே பாராட்டியுள்ள தேர்தல் ஆணயத்திற்கும் என் பாராட்டுக்கள்.
உண்மையில் ஹீரோ தேர்தல் ஆணையம் தான். ஆணையம் தனது நடவடிக்கைகளை தீவிரமாக்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையை பொறுத்த வரை ஜெயலலிதா இலவச திட்டங்களை விரும்பாதவர் ஆனால் ஆனால் நம் மக்கள் இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாலே திமுகவின் தேர்தல் அறிக்கையை சமாளிக்க இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். எனக்கும் இந்த தேர்தல் தேதி தள்ளி போட்டது தான் மிகவும் பயமாக உள்ளது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நினைத்தால் மீண்டும் மஞ்சள் துண்டு வந்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் எழுகிறது.
நல்ல அலசல்
அரசியல் அபத்தங்களும் அற்பங்களும்ன்னு பேர் வச்சிருக்கலாமோ?
//இரண்டு அறிக்கைகளிலுமே உள்கட்டமைப்பு, மின்சாரம், கல்வி, தண்ணீர், சுகாதாரம் போன்றவை பற்றி எதுவுமே இல்லை//
கட்சிகள் என்ற பார்வைக்கும் அப்பால் செயல்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் இவை.
இவைகளை நிறைவேற்றினாலே உலகத்தரத்தை நோக்கி நாம் நகர்வோம்.
வல்லரசு,2020 ல் இந்தியா மாறிவிடும் போன்றவை கனவுகள் மாத்திரமே.
தேர்தல் ஆணையம் என்ற அற்புதம் சொல்லியிருக்கிறீர்களோ?
அப்ப பதிவின் தலைப்பு பொருத்தம்தான்.
மதுரை கூத்தப் பாருங்க. தேர்தல் பணி குறித்த பதிவு பணிப் புத்தகத்தில் போடக்கூடாதுன்னு உயர் நீதிமன்ற ஆணை இருந்தும் செருப்பு அவுக்க தகறாரு பண்ணாங்க. அதுக்குள்ள சாமி கும்பிட்டு வந்துட்டாங்கன்னு கதை உடுறான். தேர்தல் கமிஷன் இவரு மேல இதுக்கே நடவடிக்கை எடுக்கும். ஆனாலும் எவ்வளவு பயம் இருந்தா இப்படி பொய் புகார் குடுப்பானுவோ.
மதுரை கூத்தப் பாருங்க. தேர்தல் பணி குறித்த பதிவு பணிப் புத்தகத்தில் போடக்கூடாதுன்னு உயர் நீதிமன்ற ஆணை இருந்தும் செருப்பு அவுக்க தகறாரு பண்ணாங்க. அதுக்குள்ள சாமி கும்பிட்டு வந்துட்டாங்கன்னு கதை உடுறான். தேர்தல் கமிஷன் இவரு மேல இதுக்கே நடவடிக்கை எடுக்கும். ஆனாலும் எவ்வளவு பயம் இருந்தா இப்படி பொய் புகார் குடுப்பானுவோ.
அ.தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஜெயித்தால் அனேகமாக முதல் ஆப்பு காந்துக்குதான்.>>>>>>>>>> இதை நேற்று நண்பர் ஒருவரிடம் சொன்னேன். ஜெவுக்கு கேபிடன் கொஞ்சம் அசூயை தான்... உண்மையில் கருணாநிதியை விட இவரைத்தான் ஜெவுக்கு பிடிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ராயல் சல்யூட்...
ஜே வின் அடுத்த ஆப்பு விஜயகாந்த் ...............
ஹி ஹி அவசியம் இல்லை அவர் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வார்.............
//தி.மு.க வின் அடிமட்ட தொண்டர்கள் வரைக்கும் மிகச்சிறந்த பேச்சாளர்களை கொண்ட கழகம் குஷ்பு, வடிவேலு என ரெண்டு காமெடி பீசுகளை களமிறக்கி பிரச்சாரம் செய்கிறது.//
ஆமாய்யா அதான் ஆச்சர்யமா இருக்கு கொய்யால...
// தேர்தல் ஆணையத்தின் அக்கிரமங்களை பாருங்கள் என தினசரி கூவுவது இன்னொரு காமெடி.//
காமெடி இல்லை மக்கா பயம்....
//எப்படியாவது ஜெயித்துவிடலாம் என தி.மு.க வினர் கண்ட கனவில் தேர்தல் ஆணையம் மண்ணள்ளிப் போட்டுவிட்டது.//
மண்ணு மட்டுமில்லை குப்பையையும் சேர்த்தே போட்டு விட்டது...
பகிர்வுக்கு நன்றி தலைவரே
இந்த முறை காங்கிரசுக்கு முக்கியமான தேர்தல் அல்ல என்பது என் கருத்து..........
அதே நேரத்தில் ஜெயிச்சாலும் தோத்தாலும் தானைத்தலைவருக்கு ஆப்பு இருக்கிறது ஹிஹி!
அண்ணே,
இந்த கேவலமான இலவச டிரெண்ட்டை கொண்டுவந்தது கருணாநிதி....
இப்போது மற்ற கட்சியினருன் இலவசத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ள பட்டு உள்ளனர்....
வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் தான் முதல் அபத்தம்
Yellow gone. . . GREEN ON. . . But tamil people?
By www.kingraja.co.nr
உண்மைதான் சார், தேர்தல் ஆணையம் இந்த முறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, நான் கூட என்னடா இது ஸ்கூல் பசங்க பரிச்சை எழுதற நேரத்துல எலக்சன் வருதே படிக்க விடுவாங்களான்னு நினைச்சேன், பரவாயில்ல இப்ப யாரும் பிரச்சாரம் பண்ண வருவதே இல்லை, தேர்தல் ஆணையத்துக்கு ராயல் சல்யூட்
குடும்ப அராஜக அரசியல் , நில ஆக்கிரமிப்பு, சட்டம் ஒழுங்கு, காட்டு தர்பார், ஊழலின் உச்சம், அடிப்படை வசதியின்மை, நாட்டின் நீராதாரம், மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மக்களாட்ச்சியின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரம், எழுத்து பேச்சுரிமை இழப்பு, இன ஒழிப்பில் கள்ளத்தனமான பங்கு என திமுக தமிழக மக்களின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் எதிரியாய் இருக்கிறது. மக்களை அடிமையாய், இலவசங்களுக்கு அலையும் பிச்சைக்காரர்களாய் ஆக்கிவிட்டது. இவர்களுக்கு போடும் ஓட்டு இவற்றை ஒத்துக் கொள்வதாய் அமையும். திமுக வெற்றி 2ஜி விசாரணயைக் கூட மாற்றும் சக்தி கொண்டது. ஆகவே மக்கள் திமுகவின் எதிர் அணிகளுக்கு, குறிப்பாய், கம்யூனிஸ்டு, தேதிமுக போன்றவற்றிக்கு ஆதரவ்ளித்து, அதிமுகவை ஒரு கட்டுக்குள் வெற்றி பெறச் செய்தால், அந்தக் குடும்பங்களின் கைகளில் ஜெயின் குடுமி சிக்காமல், சிறிய வெளிச்சம் தமிழக மக்களுக்கு கிடைக்கலாம்.
1967ல் திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு பலியாகி, காமராஜ் போன்றவர்களை தோற்கடித்த பாவம் தான், நாமும் இந்த தலைமுறையும் கழக ஆட்சிகளின் கீழ் நாற்பதாண்டுகள் சபிக்கப்பட்டு உழல்கிறோம்.
/விஜயகாந்தை கட்டம் கட்டுவதற்கு காட்டும் முனைப்பு எரிச்சலை ஏற்ப்படுத்துகிறது//
கவலை வேண்டாம். விருதகிரி -2 வந்தே தீரும்.
.......
//குஷ்பு, வடிவேலு என ரெண்டு காமெடி பீசுகளை களமிறக்கி பிரச்சாரம் செய்கிறது.//
உடன்படவில்லை. அரசியலில் ஏகப்பட்ட காமெடி பீசுகள் உள்ளனர் பல்லாண்டு காலமாக. நடிகர்கள் என்றால் மட்டும் அனைவரும் கிண்டல் செய்வது ஏன்?
............................
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
அது என்ன அடிமட்ட தொண்டர்கள், காபந்து அரசு..
............................
//இந்தாளு போதையில் உளறுவதை பார்க்கிறபோது ஆக்சன் நடிகரான இவர் எப்படி காமெடிக்கு மாறினார் என்கிற ஆச்சர்யம் தோன்றுகிறது.//
இத்தனை நாள் அவரை நீங்கள் அவரை ஆக்சன் நடிகர் என்று மட்டுமே நம்பி வந்ததற்கு கம்பனி பொறுப்பாகாது.
............................................
//தேர்தல் ஆணையம் மண்ணள்ளிப் போட்டுவிட்டது//
நல்ல வேளை... அந்த மணலை அள்ளிச்சென்று 'மணல் கொள்ளை' அடித்தோம் என்று எதிரிகள் சொல்லாமல் விட்டார்களே...
............................................
//தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.//
சல்யூட் அடித்த நேரத்தில் எவன்டா என் பாக்கெட்ல 1000 ரூவா கவரை சொருவுனது???
...................................
தேர்தல் ஆணையத்தை ப்பற்றி தலைவர் மட்டுமே புலம்புகிறார்...எப்படி..? திருடன் தானே போலிசோட கெடுபிடிக்கு பயபடனும் .. கருணாநிதி தான் இலவசங்களை கொடுத்து தமிழ்மக்களை பிச்சைக்காரர்களாக்கினார்... 5 முறை முதல்வர் ஆனால் இன்னும் கடைசி ஏழை இருப்பதாக பேசுகிறார்... அப்படினா வெண்ணெய் மண்டை இவ்வளவு காலம் என்னத்த கிழிச்ச.. எப்படி உதயநிதியும், தயாநிதியும் இவ்வளவு பணம் வச்சிகிட்டு சினிமா எடுக்கிறானுக... தமிழர்களை பிடித்த தீமை என்றால் அது கருணாநிதி மட்டுமே..
அபத்தங்களும், அற்புதங்களும் \
சிறப்பான ஒரு அலசல்
நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....
--
தேர்தல் ஆணையம் மே 13 வரை இதே கண்டிப்புடன் இருக்கவேண்டும்.
ஆனால் ஒரே ஒரு கவலைதான், அது ஒரு மாதம் தள்ளி தேர்தல் முடிவுகளை அறிவிப்பது என்கிற முடிவு. நம் தேசம் முழுதும் ஊழலில் மலிந்துகிடக்கும் இந்த சூழலில் இது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் இந்த விசயத்திலும் தேர்தல் ஆணையம் மிக உறுதியான நேர்மையை கடைபிடிக்கும் என நம்புவோம்.
...... எல்லாம் இதே விழிப்புணர்வுடன் நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம். தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆமா செந்தில் உண்மையிலேயே அற்புதம்.சல்யூட்.
அநதந்த கட்சி சார்ந்த வலையுலக நண்பர்கள் சென்ற முறை வந்துள்ள கணக்கீடு அடிப்படையில், சென்ற முறை தேர்தல் கணிப்புகள் அடிப்படையில் இந்த முறையும் திமுக தான் வரும் என்கிறார்கள். ஆனால் இந்த முறை தேர்தல் ஆணைய கெடுபிடி காரணமாக மக்கள் மனதில் ஒரு மயான அமைதி நிலவுகின்றது என்பதும் உண்மை. அந்த அமைதி எதற்கு அச்சாரம்?
தி மு க தான் வரும் என்று பலர் சொல்றாங்க.. பார்ப்போம் தமிழனின் தலை எழுத்தை
தேர்தல் ஆணையம் உண்மையில் அற்புதமாக இயங்கி வருகிறது. ஆனால் யார் தோற்றாலும், தோற்கிறவர்கள் தேர்தல் ஆணையத்தைக் குறைதான் கூறப் போகிறார்கள்!
என்ன நடக்ககூடாதுன்னு நினைத்தேனோ அது நல்லா நடக்குதுணா,,இலவசம்னு கொல்றாணுக,,,
கருத்துரையிடுக