தெரு நாய்களுக்கு லைசன்ஸ் இல்லை
முதலாளிகளும் இல்லை
கார்த்திகை மாதத்தில்
எல்லோரும் முகம் சுளிக்க அல்லது
மறுநாள் மட்டும் வரும்
நன்றியின் இலக்கணம்
வளர்ப்பு நாய்கள் மட்டுமே.
முதலாளிகளும் இல்லை
கிடைத்தவற்றை சாப்பிடும்
கொடுப்போருக்கு வாலாட்டும்
தான் வாழும் தெருவை
தன் உலகமாக கருதும்
பக்கத்துத் தெரு நாய்கள் நுழைந்தால்
பஞ்சாயத்துகள் நடக்கும்
சமயங்களில் சண்டைகளில் முடியும்..
கார்த்திகை மாதத்தில்
எல்லோரும் முகம் சுளிக்க அல்லது
ரகசியமாய் ரசிக்கும்படி
தெருவிலேயே கூடும்
பின்
குட்டிகள் நிறைய போடும்
வாகனங்களில் அடிபட்டு செத்ததுபோக
சில ஊனங்களும் உண்டு..
நள்ளிரவுக்குப்பின் யாரும் வந்தால்
ஊரையே கிளப்பும்
அடிக்கடி சிலரை கடித்தும் விடுவதால்
நாளிதழில் செய்திகளாய் வரும்..
மறுநாள் மட்டும் வரும்
கார்ப்பரேசன் ஆட்கள்
கிடைத்தை பிடித்துப்போவர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து பின்
தெருவில் விடுவதாய் சொன்னாலும்
தெருவில் விடுவதாய் சொன்னாலும்
போனவை திரும்பியதில்லை..
நன்றியின் இலக்கணம்
வளர்ப்பு நாய்கள் மட்டுமே.
தெரு நாய்கள்
எல்லோருக்கும் எப்போதும் சனியன்களே..
எல்லோருக்கும் எப்போதும் சனியன்களே..
15 கருத்துகள்:
தெரு நாய்களின் குரலை “நாய்ப்பிழைப்பு” என்ற தலைப்பில் அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.
//எல்லோரும் முகம் சுளிக்க அல்லது ரகசியமாய் ரசிக்கும்படி //
இந்த வரிகள் ரசிக்கும்படியாகவே உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். அன்புடன் vgk
//தெரு நாய்கள்
எல்லோருக்கும் எப்போதும் சனியன்களே.. //
சூப்பர்னே வாழ்த்துக்கள்
குடும்பக் கட்டுப்பாடு செய்து பின்
தெருவில் விடுவதாய் சொன்னாலும்
போனவை திரும்பியதில்லை..//
அப்படியா?
very good
MANOHARAN PONDICHERRY
அன்றாடம் நாம் கடந்து செல்லும் உயிருள்ள ஒரு நண்பர்கள் பற்றி உயிரோட்டமான வரிகள்.
தெருநாய்களால் பல விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த வேளைகளில் சனியன்களாக மட்டுமன்றி எமனாகவும் மாறுகின்றன.
இதுக்கு என்ன பின்னூட்டம் போடுவதென்று புரியவில்லை நான் நாய்களின் ரசிகன் ......
கொஞ்ச நேரம் என்னை செயல் படாமல் வைத்து விட்டீர்கள் நன்றி ...........
என்னாமா யோசிக்கராங்க.... கவிதை கவிதை, நாய் கவிதை... இந்தளவுக்கு யாரும் அக்கறை எடுத்துகல நாய்களின் மீது... அருமையான கவிதை அப்படினு நா சொல்லலனா நீங்க அடிப்பிங்களா... எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க எங்க அப்பா அதலாம் கத்து கொடுக்கல... :):):):)
அண்ணே... உங்களை மாதிரி ஆளுங்க தெரியாத்தனமா நேரடியா ஏதாவது எழுதினாலும் அதுல ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோன்னு யோசிக்கத் தோணுது... மெய்யாலுமே இந்த பதிவு நாய்கள் பற்றியது தானா... குறியீடுகள்...???
KRP இஸ் எ வெரி டேஞ்சரஸ் மேன். எந்த பதிவர் மேல கோபமோ யார் கண்டா..
இதுபோல மனிதர்களுக்குள்ளும் பாகுபாடு உண்டு..
நாய்களின் நாடி பிடித்தது நாய்பிழைப்பு!!
தெரு நாய்களுக்காக ஒரு பதிவா. நல்லா
தான் இருக்கு.
Philosophy Prabhakaran சொன்னது…
அண்ணே... உங்களை மாதிரி ஆளுங்க தெரியாத்தனமா நேரடியா ஏதாவது எழுதினாலும் அதுல ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோன்னு யோசிக்கத் தோணுது... மெய்யாலுமே இந்த பதிவு நாய்கள் பற்றியது தானா... குறியீடுகள்...???
ரிப்பீட்டு....
ஆளையே காணோம்னு பார்த்த கேபில் கூட ஊர் சுத்துரேளா??
அய்யா கே.ஆர்.பி.
தலைப்பே ஆயிரம் அர்த்தங்களை சொல்லுதேப்பு!
அருமையான கவிதை .ரசித்தேன்
மாமா... இதுக்கு எதாவது உள்ளர்தம் இருந்தா.. ரகசியமா போன்ல சொல்லுங்க...!!!!
கருத்துரையிடுக