27 நவ., 2011

நாங்கள் தமிழர்கள்...


வந்தாரை வாழவைப்போம் 
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்போம் 
வீரம் 
அன்பு 
மானம் 
இரக்கம்
எங்களின் மாண்பு..

எங்களிடம் எல்லாம் இருந்தது 
உலகின் உன்னத இனங்களுக்கு நிகராக 
வியாபாரம் 
கல்வி 
கலை
இலக்கியம் 
மருத்துவம் 
ஏராளம் இருந்தது 
மிச்சமும் இருக்கிறது..

வேலு நாச்சியாரும் 
பூலித்தேவனும் '
இராசராச 
இராசேந்திரனும் 
இப்போது பிரபாகரனும் 
எங்கள் வீரத்தின் வித்துக்கள்..

மண்டியிடாத மானம் 
புறமுதுகிடாத வீரமும் கொண்டவர்கள் 
முதுகில் குத்தும் 
சகோதர துரோகத்தை 
வழி வழியாக பார்த்தவர்கள்..

அன்பு எங்களது மொழி 
அறிவு எங்களது மருத்துவம் 
ஆற்றல் எங்களது கலை 
மொழி கடந்த அன்பும் 
இனம் கடந்த கலையும்
நாடு கடந்த அறிவியலையும் மதிப்பவர்கள் நாங்கள்..

இனத்தை இனத்தானே 
காட்டிக்கொடுத்தும் 
இனப்பெண்களை
நடுச்சாலையில் கற்பழித்தவனுக்கு 
ஆதரவுக் குரல் கொடுத்தவனும் 
இனப்பேடிகளாக மாறிப்போனான் தமிழன் இன்று..

ஆனாலும்
இந்தக் களைகள் ஒரு நாள் அழியும் 
மாவீரர்களை பெற்றெடுத்த 
எம் தாய்களே 
நமக்கான நமது மண் 
கிடைத்தே தீரும் 
நாங்கள் தமிழர்கள் 
இலட்சியங்கள் எங்கள் ரத்தத்தால் 
எழுதப்பட்டவை 
அவை 
இம்மண்ணில் உதிர்ந்தபோதும் 
விதைகளாய்த்தான் விழும்.. 

நாங்கள் தமிழர்கள்...

3 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

மாவீரர்களை பெற்றெடுத்த
எம் தாய்களே
நமக்கான நமது மண்
கிடைத்தே தீரும்
நாங்கள் தமிழர்கள்
இலட்சியங்கள் எங்கள் ரத்தத்தால்
எழுதப்பட்டவை
அவை
இம்மண்ணில் உதிர்ந்தபோதும்
விதைகளாய்த்தான் விழும்..
//
உணர்வு கொப்பளிக்கும்(தூண்டும்)வரிகள்.

Sivakumar சொன்னது…

வருவான்....HOPE!

SURYAJEEVA சொன்னது…

உண்மை... தமிழன் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து உலகன் என்ற பெரிய வட்டத்துக்குள் வாருங்கள்.. இனி ஒரு விதி செய்வோம்