வந்து விடும்
முன் அறிவிப்பற்ற விருந்தாளிகள்
சூழ்ந்த என் வீட்டில்
இருப்பை தொலைத்தது
குட்டிகளுடன் ஒரு பூனையும்..
அவசரத்தில் பூட்ட மறந்த இன்னொரு
நாளில்
எடுத்து செல்ல எதுவும் வைக்காத
வீடென திட்டி எழுதிச் செல்லவில்லை
வந்து போன திருடனும்..
மாதக் கடைசி, முதல், நடு
என
எப்போதும் ஒரே மாதிரியாய்
வேலையற்றவனின் வீடு..
சமரசங்களை ஏற்றுக்கொண்டு
பனிந்த வேலை" யில்
மதியம் சாப்பிடுவதில்லை
என்ற கொள்கையும் ஒட்டிக் கொள்ள
அட்வைஸ் மழை பொழிகிறது..
இப்படியாக நகர்த்தும் நாட்களில்
தினமும் வருகிறார்கள்
விற்பனை பிரதிநிதிகள்
வாங்குவேன் என்ற நம்பிக்கைகளுடன்...
32 கருத்துகள்:
கையிருப்பு இல்லாத வீடு... வறுமையில் வாடும் வீடு...
இல்லாத கொடுமையை அழகாக சொல்லிவிட்டீர்கள்.
//அட்வைஸ் மழை பொழிகிறது//
கவுஜ எழுத வேண்டாமுனா ?
//தினமும் வருகிறார்கள்
விற்பனை பிரதிநிதிகள்
வாங்குவேன் என்ற நம்பிக்கைகளுடன்//
நல்ல வரிகள்
பதிவை விட படம் ரொம்ப பயபுருத்துது....நல்ல பதிவு வாழ்த்துகள் தோழரே
அண்ணே புகைப்படம் அருமை... சற்று நேரம் அதையே பார்த்தேன்...
கவிதை சிக்கிரம் முடிந்த மாதிரி இருக்கு... முதல் பாதிக்கு இன்னும் கொஞ்ச அழுத்தம்...
//
அவசரத்தில் பூட்ட மறந்த இன்னொரு
நாளில்
எடுத்து செல்ல எதுவும் வைக்காத
வீடென திட்டி எழுதிச் செல்லவில்லை
வந்து போன திருடனும்..
//
அருமை.....
//இப்படியாக நகர்த்தும் நாட்களில்
தினமும் வருகிறார்கள்
விற்பனை பிரதிநிதிகள்
வாங்குவேன் என்ற நம்பிக்கைகளுடன்...//
எதார்த்தமான வரிகள்..வாழ்த்துக்கள்
///மாதக் கடைசி, முதல், நடு
என
எப்போதும் ஒரே மாதிரியாய்
வேலையற்றவனின் வீடு..///
நிதர்சனமான உண்மை.....
துவக்கமும் முடிவும் அழகாக கோர்த்தவிதம் பிடித்திருக்கிறது செந்தில் சார்
ஒன்னாங்க்ளாசாணு சாரே:)நன்னாயிட்டுண்டு.
அண்ணே புகைப்படம் அருமை...
அருமை. :-)
உங்கள் கவிதைகளில் இன்னுமொரு மாஸ்டர்பீஸ். அருமையா வந்திருக்கு
அருமையான கவிதை.
நீங்கள் ஒரு கவிதை தொகுப்பு வெளியிடலாம்.
யதார்த்தமான வரிகள் அருமை...
எல்லோரும் சேர்ந்து உங்களை கொண்டு போய் வேறு இடத்ல நிப்பாட்ட போறாங்க.
தீராநதி,கணையாழி க்கு போயீடுவீங்க போலிருக்கு.
மக்கள் சோர்வாயிடுங்கன்னு மாறி மாறி எழுதுற விதம் மட்டும் எனக்கு பிடிக்கல செந்தில். அந்த தொடர் எங்கே?
அவலம்..... உணர்வுகளை வெளிபடுத்திய விதம் அருமை..
கையிருப்பு இல்லாத வீடு...யதார்த்தம்
மிக அருமை
கவிதை கதை சொல்லுகிறது....
நல்ல வரிகள்
//இப்படியாக நகர்த்தும் நாட்களில்
தினமும் வருகிறார்கள்
விற்பனை பிரதிநிதிகள்
வாங்குவேன் என்ற நம்பிக்கைகளுடன்...//
கவிதை கதை சொல்லுகிறது.
கவிதை அருமை.
வார்த்தைகளில் கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்தால் மேலும் மெருகுறும்.
உதாரணம் - பனிந்த, அட்வைஸ்
///மாதக் கடைசி, முதல், நடு
என
எப்போதும் ஒரே மாதிரியாய்
வேலையற்றவனின் வீடு..
///
உண்மையான வரிகள் அண்ணா ..!!!
///இப்படியாக நகர்த்தும் நாட்களில்
தினமும் வருகிறார்கள்
விற்பனை பிரதிநிதிகள்
வாங்குவேன் என்ற நம்பிக்கைகளுடன்...
///
அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு ..!!
//அவசரத்தில் பூட்ட மறந்த இன்னொரு
நாளில்
எடுத்து செல்ல எதுவும் வைக்காத
வீடென திட்டி எழுதிச் செல்லவில்லை
வந்து போன திருடனும்..//
//மாதக் கடைசி, முதல், நடு
என
எப்போதும் ஒரே மாதிரியாய்
வேலையற்றவனின் வீடு..//
படித்து முடித்தாலும் மனதை விட்டு அகல மறுக்கின்ற பதிவு..
ரொம்ப நல்லாருக்கு செந்தில்!
:)
யதார்த்தமான வீடு தன்னுடன் என்னையும் உள்ளே அழைத்து சென்றது.... அழகு...!!!
கவிதை தட்டின் முள் சம நிலையில் இருக்கின்றது ...
நான் உங்கள் தளத்தில் இது வரை படித்ததில் ஆகச் சிறந்த கவிதை இது ...
அன்பின் அரவணைப்பு தோழருக்கு !
வார்த்தைகள் எழவில்லை...!
விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் வயிறும் பசியும் கவிதையில் சொல்லப்படவை போலவேதானே !
Beautiful Boss!
பிடித்த கவிதை மாம்ஸ்!
கருத்துரையிடுக