அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேநீருக்காக இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...
கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..
தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசிக் குட்டியை
கவ்விச்சென்ற பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...
46 கருத்துகள்:
i'm the first
எப்படி உங்களால் மட்டும் எதையும் கதைக்கு கவிதைக்கு கருப்பொருளாக்க முடிகிறது...நன்று.
நகைசுவை கலந்த கவிதை!!! ம்.. நடத்துங்க அண்ணே! நடத்துங்க! படம் அருமையா இருக்கு!
புது பதிவு போட்டிருக்கிறேன். வாறீகளா? எப்போ வாறீக?
முதல் முறை புரியவில்லை.
இரண்டு முறை திரும்பப் படித்தேன்..
ரசித்தேன்.
சாதாரணமாய் நடக்கும் சம்பவத்தை அழகான வரிகளில் அடைத்துள்ளீர்கள்..
நல்லாயிருக்கு..
சரி கதையை எப்படி முடிச்சீங்க...
ஹி ஹி ஹி
பூனை கதையா கவிதையா
ஐயோ சாமி ..
எப்படியெல்லாம் எழுதறாங்க..
நல்லா இருக்கு அண்ணா..!!
அப்புறம் அந்த பூனைய என்ன பண்ணுனீங்க.
ஒரு நல்ல வில்லனா போட்டிருக்கலாம்ல..
அந்த கதாநாயகி ஓடிப்போயிருக்க மாட்டா..
எப்படிங்க இது....டாப்பு...
நல்லாயிருக்கு
Super..
hahaha.:)
first class செந்தில்
மிக ரசித்தேன்
:)) Nice one senthil
அண்ணே கலக்கல்...
செம....முதல் முறை படிச்சிட்டு..என்னடா சொல்ல வர்ராறுன்னு நினைச்சேன்..மறுபடியும் படிச்சேன்...அசத்தியிருக்கிறீங்க....
கவிதைக்கு கதையா? கதைக்கு கவிதையா? மிக அருமை!!!
ஆஹா...
அருமையா இருக்கு.
நல்லாயிருக்குங்க செந்தில்...
good na
செந்தில் தனிப்பட்ட முறையில் இந்த கவிதைக்கு சங்கர் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.
கவிஞர்ஜி!
kavinar senthil vaalga vaalga
:)
நகைசுவை கலந்த கவிதை.
சரி கதையை எப்படி முடிச்சீங்க..!
ஹி... ஹி... ஹி..!
செந்தில்,
நல்லாயிருக்குங்க...
எனக்குப் பிடித்திருக்கிறது கதை அல்லது கவிதை//
நெடுங்கதை என்பது வாழ்வு.
வாழ்வு பல படிமங்களைக் கொண்டிருக்கிறது
நேர்கோட்டில் பயணிக்கும் புள்ளி, வழிமாறி தொலைந்து போனால் கோடுகள் அழிந்துவிடுவதில்லை. விட்ட இடத்தில் இன்னொரு புள்ளி..
முதல் புள்ளிக்கு வாரிசு.
வாரிசுகள் என்றுமே ஒன்றாய் இருப்பதில்லை.
படிமங்கள் மாறுகின்றன. எழுதிவைத்தவன் பிரஞ்ஞையற்றிருக்க,
வாழ்வு இழிவெனப்படுகிறது.
பூனையின் கதை... கதையில் அது ஒரு பிரதி.
தொடருங்கள் செந்தில்!!
அருமையான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தல சான்சே இல்ல
எப்படி இப்டியெல்லாம் எழுதுறீங்க ??
ரசித்தேன்
Super..
தோழரே கவிதை மிக அருமையான நடையில் இருக்கு.
அந்த படம் மிக கவர்கிறது.
பாராட்டுக்கள்.
அமர்க்களமான கவிதை செந்தில்.
பூனையின் விமர்சனம்
கவிதை அழகா இருக்கு... இருந்தாலும் எதிர்கவுஜ போடாட்டி எனக்கு கை அரிக்குமே....ஸோ
என்கதைமேல் சிறுநீர்
கழித்த பூனையின்
வாயில் இருந்த
குட்டியை வெறிக்கையில்
வில்லனோடு சல்லாபிக்கும்
நாயகியின் ஸ்தனங்களில்
இருந்து வழிந்தது
கதாநாயகனின் கண்ணீர்
கதை தொடர்ந்தது
அறுபத்தியோராம் பக்கத்தில்!
கே ஆர் பி அண்ணே,கவிதையும்,படமும் நச்
Nice
அருமைங்க :)
கவிதை செம ஜாலி-ஆ இருக்குங்க..
ரசித்துச் சிரித்தேன்.. :-))))
கவிதை படிச்சேன்....பின்னூட்டங்களையும் படிச்சேன்... நேர்மையா....பின்னுட்டமிடனும்...அதுவும் என் புரிதலைச் சொல்லணும்.......ம்ம்ம்ம்ம்ம் செந்தில் சும்மா எழுதியிருக்கமாட்டார்னு ....மனசு சொன்னுச்சு....
எனக்கு என்னமோ....பூனை சிறு நீர் கழித்தது திருப்புமுனையாய் பட்டது.....கதையின் திருப்புமுனையை எதார்த்த திருப்பு முனை..வென்று விட்டதாக ஒரு கீறல் விழுந்தது மனதில்.....
இது கவிதை.
பூனை கதையான கவிதை நல்லா இருக்கு.. :)
செந்தில்...கதை போச்சா...!
இது க(வி)தையல்ல வாழ்வு !
இந்த கவிதைல்லாம் எப்படி எழுதுறதுன்னு சொல்லிக் கொடுங்க பாஸ்! அருமையா இருக்கு!!
மிக ரசித்தேன்....
நடத்துங்க அண்ணே! நடத்துங்க! படம் அருமையா இருக்கு!
அண்ணே இது மீள்ஸ் தான?
மறுபடி படிச்சாலும் அருமை அருமை தானே!
டீ குடிக்க போன நாயகன் வரவே இல்லியா???
கருத்துரையிடுக