நேற்றைய தினம் தமிழகமே ஸ்தம்பித்தது.. சென்னையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் காரணம் ஆளுங்கட்சியான தி.மு.க வினரின் போராட்டம். சொத்து குவிப்பு வழக்கில் 13 வருடங்களாக வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவை கண்டித்து மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்பட்டது..
இதற்க்கு நன்றி தெரிவித்து துணை முதல்வர் அறிக்கை விட்டிருக்கிறார். வர வர சினிமாக் காமெடியன்களை மிஞ்சுகிறது, இவர்களின் அரசியல் காமெடி. இப்பதான் பெட்ரோல் விலை ஏறியது, அப்புறம் விலைவாசித் தொல்லை கட்டுகடங்காமல் போய்விட்டது. அதற்கெலாம் போராட்டம் இல்லை, நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு அது. அதற்கு போராட்டம்.
ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு கட்சிகாரர்களை விட பொது மக்கள் அதிகம் கூடினர் என்று தெரிகிறது. அதற்கு காரணம் என்னவென்று யோசிக்காமல் ஜெயலலிதாவை குறிவைத்து நடக்கும் இந்தப் போராட்டம் உங்களை மேலும் பின்னடைய செய்யாதா?.
அதில் உச்சபட்ச காமெடியே தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுதான், பொது மக்கள் அப்படின்னு ஒரு கூட்டம் இருக்குதே அதபத்தி நீங்க கவலைபடுறதே இல்லையே ஏனுங்க. அரக்க பறக்க அலுவலகம் செல்லும் நாங்கள் 30 ரூவாய்க்கு பெட்ரோல் போட்டுகிட்டு போறோம், இப்படி அலவலக நாட்களில் நீங்கள் நடத்தும் போராட்டங்களில் சிக்கி தாமதமாக முடிக்கும் வேலைகளால் நாங்கள் வாங்கும் திட்டுக்கள் உங்களுக்கு கேட்டால் நீங்கள் அரசியலை விட்டே விலக வேண்டி வரும்.
நீங்கள் ஆட்சி அமைத்து கடந்த நான்கரை வருடங்களில் கொடநாட்டில் ஓய்வெடுத்து அடுத்த தேர்தல் நெருங்குகிறபோது அரசியல் செய்யும் ஜெயலலிதா போன்ற எதிர்கட்சிகள் நடத்தப் போகும் போராட்டங்கள் நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இனி உங்க அலப்பரைகள் தாங்க முடியாது. இனி மாற்றி மாற்றி எல்லா கட்சிகளும் இருப்பை நிரூபிக்க தெருவை அடைத்து கோசம் போடுவீர்கள். நாங்கள்தான் பாவம் சிரித்துக் கொண்டே வாழப் பழகிக்கணும்.
உண்மையான அக்கறை இருந்தால் இந்த வழக்கை துரிதபடுத்த சொல்லி நீதிமன்ற வாசல்களிலும், ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள். வீதிகள் எல்லோருக்குமானவை அதனை அவசரமாய், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட பயன்படுத்தும், பல உயிர்கள் சாலையில் தவிக்கும்.
போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்.. இதை கலைஞர் அரசே செய்வதுதான் வருத்தம் தருகிறது.
38 கருத்துகள்:
அய்.. இன்னைக்கு நானா?.. இருங்க படிச்சுட்டு வரேன்...
உண்மையான அக்கறை இருந்தால் இந்த வழக்கை துரிதபடுத்த சொல்லி நீதிமன்ற வாசல்களிலும், ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள். வீதிகள் எல்லோருக்குமானவை அதனை அவசரமாய், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட பயன்படுத்தும், பல உயிர்கள் சாலையில் தவிக்கும்.
//
பட்டவர்தனமான உண்மை. ஆனா பண்ணமாட்டாங்க..
”மக்களை , நெருக்கி கசக்குவதில் உள்ள சுகம்”...ஆகா..அது அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் தெரியும் பாஸ்..
ஸ்டாலினை பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்த என்னை, அவரை மோசமான அரசியல் வியாதியாய் காட்டியது நேற்றைய போராட்டம்.
நேற்று நான் பார்த்த காட்சிகள் சில.
அந்த பகுதி முழுவதும் ரௌடிகள்,
மதுக்கடைகளில் திமுக கொடிகள்,
பெண்களிடம் கிண்டல்,
வாகனங்களை அடித்தல்,
பொலிசாரின் அமைதி.
கலைஞர் மீண்டும் ஒரு தவறான காரியத்தை செய்திருக்கிறார்.
// நாங்கள் வாங்கும் திட்டுக்கள் உங்களுக்கு கேட்டால் நீங்கள் அரசியலை விட்டே விலக வேண்டி வரும்//
பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!
தேர்தல் பிரசாரத்தை இப்பவே தொடங்கியாச்சா?... ):
:))
இதற்க்கு நன்றி தெரிவித்து துணை முதல்வர் அறிக்கை விட்டிருக்கிறார். வர வர சினிமாக் காமெடியன்களை மிஞ்சுகிறது, இவர்களின் அரசியல் காமெடி.
போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்.. இதை கலைஞர் அரசே செய்வதுதான் வருத்தம் தருகிறது.
......ஜெய் ஹோ! தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க....
//போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்.. இதை கலைஞர் அரசே செய்வதுதான் வருத்தம் தருகிறது.//
இந்த மாதிரி எதிர்ப்புகளை நாம் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்.
தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சி
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
தலையெழுத்து:(
ம்ஹூம்...ஒண்ணும் நடக்காது... ஆட்சிப்பண்றது...காமராஜர் அல்ல செந்தில் சார்...
இவர்கள் ஆளும் கட்சி என்பதால் உடனே அனுமதி வாங்கி அந்த போராட்டம் நடத்தி விட்டார்கள் போது மக்களை இடையுறு
ஆமாம்னா .. எங்க ஊர்லயும் இதே கருமத்தைத்தான் செய்தார்கள் ..
இங்கே நான் கருமம் என்று குறிப்பிடுவது கடமை..!! யாரும் தவறாக என்ன வேண்டாம் ..!!
போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்///
அல்ட்டிமேட் ! ஆள்பவர்களே எதற்கு போராட்டம் நடத்தவேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
\\
ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு கட்சிகாரர்களை விட பொது மக்கள் அதிகம் கூடினர் என்று தெரிகிறது\\
போற போக்க பார்த்தா தி.மு.க காரங்களே அம்மாவ ஜெயிக்க வெச்சுடுவாங்க போலயிருக்கு.
எல்லாத்தையும் சகிச்சுகிட்டு தான் போகணும் ... வேற வழி...
//சினிமாக் காமெடியன்களை மிஞ்சுகிறது, இவர்களின் அரசியல் காமெடி. இப்பதான் பெட்ரோல் விலை ஏறியது, அப்புறம் விலைவாசித் தொல்லை கட்டுகடங்காமல் போய்விட்டது. அதற்கெலாம் போராட்டம் இல்லை, நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு அது. அதற்கு போராட்டம்.//
ரம்பா வேற கர்ப்பமா இருக்காங்களாம்... எந்த கட்சி அதுக்காக போராட்டம் நடத்துமோன்னு திக் திக்ன்னு இருக்கு ....
அரசியலின் பரிணம வளர்ச்சி
ஆளும் கட்சியே போரட்டம் நடத்துவது.
கோவை கூட்டத்திற்குப்பின்,
இந்த ஆளும்கட்சி ஆர்ப்பாட்டம்,
'ஜெ'யின் பழைய,செருப்பு,
புடவை, நகை, வளர்ப்பு மகன் திருமணம்
இவற்றை மறு ரிலீஸ் செய்தால், மக்கள் குழம்பி
(எல்லாம் ஒரே குட்டை...)இவர்கள் படங்களை
மற்படியும் ஒகே செய்யலாமென்ற வாய்ப்பை உருவாக்கலாம்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
அந்த அம்மா 13 வருடமா வாய்தா வாங்கிட்டு வந்தா....வாய்தா கொடுக்குற கோர்ட்டுக்கு முன்னால போயி ஆர்ப்பாட்டம் பண்ணுங்க..இல்லேண்ணா அந்த அம்மா வீட்டுக்கு முன்னால போய் ஆர்ப்பாட்டம் பண்ணுங்க...
சரி சரி...அடிக்கிறதுக்கு ஆள் இல்லேண்ன கிடைக்கிறவன புடிச்சு அடிக்கிற மாதிரி பொதுமக்கள் தான் இருக்காங்கல்ல இளிச்சவாயங்க நாம ரோட்டுல போராடுவோம்....ட்ராபிக் ஜாம் ஆன அது பத்தின் நமக்க் என்ன கவலை....!
அவங்க ரெண்டு பேரு கதையை சேர்க்கவே கூடாது செந்தில்.
சின்னப்பிள்ளைங்க மாதிரி !
புலனாய்வுக்கட்டுரை மாதிரி கலக்கறீங்களே
திருந்தமாட்டார்கள். சாக்கடை
// ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள் //
தோழர் உடன்பிறப்பு ...
தலைவர்ட்ட சொல்லுங்க ...
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை..... தி மு க வின் அபார வளர்ச்சி.
என்ன பிரச்சனை என்று பார்த்தல் சாத்தனுக்கும் பிசாசுக்கும் பைப்படி தகராறு.. இவர்கள் மோதிக்கொண்டதில் குடங்கள் உடைந்து கூவம் வீதிகளில் ஓடுகிறது. எந்த தரப்பு ஆனாலும் தான் என்ற அகங்காரம் தலைக்கேறி அரியாசனத்தில் இருக்கும்வரை ஒன்றும் அறியா சனங்களாகவே மக்களை பேணும் நாடகத்தின் மற்றுமொரு கட்டம். அந்தரங்கத்தில் ... ரகசிய உடன்பாட்டில்., டாஸ்மார்க் வெற்றிநடைபோட, தெருக்களில் அரங்கேற்றி....மக்களுக்கு மேலும் ஒரு நாடகம். வாழ்க ஜனநாயகம். கேட்பாரற்ற குழந்தையாய் அழுதுதிரிகிறது நேர்மையின் ஆன்மா. ஏதோ ஒரு சவுக்கு மட்டும் போதாது., ஒவ்வொரு கையிலும் சாட்டை வேண்டும்.
இவன்னுங்க மாற மாட்டாங்க... மக்கள் தான் அவதிபடனும்....
"போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்.. இதை கலைஞர் அரசே செய்வதுதான் வருத்தம் தருகிறது.".
நிறைவான வரிகள், தாம் ஆளும்கட்சியாய் இருந்து கொண்டே இலங்கைத் தமிழரின் துயர் துடைக்க கடையடைப்பும், காலை உணவிற்குப் பின் மதிய உணவிற்குள் "உண்ணாநிலைப்போராட்டம்". இவர்கள் அரசியல் நடத்துவதற்கு நாம் (மக்கள்) தான் பகடைக்காய்கள். நாம் பகடைக்காய்கள் ஆக்கப்படுகின்றோம் என்று உணராமல் அவர்களுக்கே வாக்களிப்பது தான் அவமானமாய் இருக்கின்றது. .
//அரக்க பறக்க அலுவலகம் செல்லும் நாங்கள் 30 ரூவாய்க்கு பெட்ரோல் போட்டுகிட்டு போறோம்//
????
அண்ணே இங்க இருக்கும் பெரும்பாலோர் தினமும் 30 ரூவாயிக்குதான் பெட்ரோல் போடுறாங்க..
RAAMAN AANDLUM RAAVANAN AANDALUM
POTHUMAKKAL SUTHIRAN THAAN.
FOND NOT WORKING.
இது நல்ல காமெடியா இருக்கே. எல்லாத்தையும் ஏத்துவாங்களாம், பின்னாடி போராட்டமும் நடத்துவாங்களாம் பொதுமக்களுக்கு பயன் தராத விசயத்துக்கு.
:)
உண்மையான அக்கறை இருந்தால் இந்த வழக்கை துரிதபடுத்த சொல்லி நீதிமன்ற வாசல்களிலும், ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள். வீதிகள் எல்லோருக்குமானவை அதனை அவசரமாய், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட பயன்படுத்தும், பல உயிர்கள் சாலையில் தவிக்கும்
சரிதான் ,ஆனா யாரு கண்டுக்க போறாங்க ?
மஹாத்மா காந்தி என் காதுக்குள் சொன்னது...
“எதற்காக நாங்கள் ,அரும்பாடு பட்டு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோமோ.....எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிற்றே...”
இந்த கருமாந்திரமெல்லாம், ஆத்தாவிற்கு கோவையில் கூடிய கூட்டத்தை ஊடகங்கள் ஆஹோ ஓஹோ என்று ஊளையிட்டதின் விளைவு.
ஒழுங்காக வித்தியாசமான அரசியல்வாதியாக இருந்த ஸ்டாலினையும் கெடுத்தாச்சு என்பதுதான் இதில் உள்ள சோகம்.
எனக்கு சந்தேகம் இந்த போராட்டம் யாரை எதிர்த்து வாய்தா வாங்கும் அந்த அம்மாவை எதிர்த்த இல்லை இத்தனை ஆண்டுகளாக வாய்தா கொடுக்கும் நீதிமன்றத்தை எதிர்த்த? இந்த அளவு கூட்டத்தை ஈழ தமிழர் சென்ற ஆண்டு பட்ட போது வேதனையின் கூட்டி இருந்தால் நடுவண் அரசு கொஞ்சம் அசைந்து கொடுத்து இருக்கும். இந்த இரு சாத்தான்களையும் ஒழித்தால் தான் தமிழகம் உருப்படும்.
நீ தமிழன் நான் தமிழன் நாம் தமிழர் ....................
ஆள்பவர்களே எதற்கு போராட்டம் நடத்தவேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
என்ன ரவி உங்களுக்குமா இன்னும் புரியல?
எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஜெயலலிதாவை ஜெயலலிதா என்கிறீர்கள். அப்புறம் ஏன் கருணாநிதியை கலைஞர் என்கிறீர்கள். வயதின் காரணம் என்று வைத்தால்கூட அந்த அம்மாவுக்கும் 60 தாண்டிவிட்டதே. கலைஞர் என்று யார் எழுதினாலும் அவர்கள் தி.மு.க ஆதரவாளர்கள்தான். ஆகையால் இது போன்ற பொய் நடுநிலைமை பதிவெல்லாம் வேண்டாம். நீங்கள் கறுணாதிக்கே ஆதரவளியுங்கள். ஆனால் இது போன்ற பதிவு எனக்கு அறிவிலி என்ற ஒரு ஜால்ராவை ஞாபகப்படுத்துகிறது.
கருத்துரையிடுக