11 ஜன., 2011

பிச்சைக்கார வாக்காள பெருமக்களே...

தேர்தல் நெருங்கிகொண்டிருப்பதால் ஆளும்கட்சியான தி.மு.க மட்டுமே  அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளை தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறது, அதன் எல்லா வட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி வரும் தேர்தலில் வகுத்திருக்கும் வியூகங்களை தொண்டர்களிடம் தெளிவாக விளக்குகிறார்கள். எல்லோரையும் கவனமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் ஆர்வக்கோளாறு உள்ள தொண்டர் ஒருவர் அவர்களின் திட்டங்களை சொன்னபோது அடப்பாவிகளா என்றிருந்தது. ஏற்கனவே அவர்களின் தேர்தல் வியூகம் பற்றி நானும் பத்திரிகைகளும் எழுதியிருந்தாலும், வரும் தேர்தலில் பணம் புகுந்து விளையாடும் என்றே தெரிகிறது.


தி.மு.க தன் இருப்பை தக்கவைத்து கொள்வதைக்காட்டும் முனைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அ.தி.மு.க காட்டாது இருப்பது, அது அடுத்த ஆட்சியை பிடிப்பதைவிட எதிர்க்கட்சியாக இருக்க விரும்புவதையே காட்டுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக கொடநாட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதா தனக்கு சமீபத்தில் கூடிய கூட்டம் கண்டிப்பாக தனக்கு ஒரு எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுத்தரும் என நம்பி இன்றுவரை கூட்டணி பற்றி கூட கவலைப்படுவதாக தெரியவில்லை. எப்படியும் தான் விரும்பாவிட்டாலும் அ.தி.மு.க என்கிற ஒரு கட்சி மட்டுமே தனக்கு எதிர்கட்சியாக இருப்பதை கலைஞரே விரும்புவார் என்பது ஜெவுக்கு தெரியும், கடந்த ஐந்து வருடங்களில் உருப்படியான எதிர்கட்சியாக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை. 

விருதகிரி படம் கொடுத்த வசூல் தெம்பில் கொஞ்சம் செலவழித்து கூட்டம் கூட்டி தன் பேரத்தை தக்கவைத்துகொள்ள இப்போதுதான் விஜயகாந்த் ஆரம்பித்துள்ளார். அதுல பெரிய நகைச்சுவையே மக்கள் உரிமை மீட்பு மாநாடு அது என்பதுதான். கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணிக்கு போகவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.அதனால் இப்போது முறுக்கு காட்டினாலும், மச்சானும், மனைவியும் வைத்ததே சட்டம் என்பதால் போதையில் உளறுவதாக சொன்னவரை இவர் அன்புச்சகோதரி, புரட்சித்தலைவி என மேடையில் முழங்கப்போகும் நாள் வெகு அருகில்தான்  இருக்கிறது.

பா.ம.க தனது அறிக்கையாக மூன்றாவது அணி அமைத்து அன்புமணியை முதல் அமைச்சர் ஆக்குவோம் என சொல்லியிருக்கிறது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக தி.மு.க வினர் காலில் விழுந்தாவது வருகிற தேர்தலில் இவர்கள் கூட்டணி வைத்துவிடுவார்கள். இவர்கள் வைக்கபோகும் ஒரே நிபந்தனை மீண்டும் மத்தியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி.

காங்கிரஸ் தங்கள் கட்சியின் ஊழலை மறைக்க கலைஞரின் அனுமதியுடன் ராசாவை வீட்டுக்கு அனுப்பிய விவகாரத்தை பத்திரிகைகள் உட்பட அனைவரும் மறக்கத் துவங்கிவிட்டோம். காங்கிரசை பொறுத்தவரை கலைஞர் ஒரு மூத்த ஆலோசகர். அதனால் வெளியில் அவர்கள் அடித்துக்கொள்வதைப்போல நடத்தும் நாடகத்தின் உச்சம் சமீபத்தில் அழகிரியின் ராஜினாமா நாடகம். வருகிற தேர்தலிலும் காங்கிரஸ்,தி.மு.க வுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்ளும். 

வாக்களரில் ஆரம்பித்து, பூத்தில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேருக்கும் வரும் தேர்தல் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. மக்களை இலவசங்களை வாரிக்கொடுத்து வாயை அடைத்த அரசு, தங்கள் சேனல்களின் புரோமோசனுக்காக இலவச தொலைக்காட்சியை தந்து வருமானத்தை பெருக்கிகொண்ட அரசு கடந்த ஐந்தாண்டில் சொதப்பிய அநேக விசயங்களை சரி செய்துகொள்ள வாக்களார் அனைவரையும் வளைப்பதற்கு தெளிவான திட்டங்களை வகுத்துள்ளார்கள். 

மற்ற கட்சியினரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம்தான், அதனை வாங்கிக்கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முந்தய தேர்தல்களில் பேசியதையே இப்போதும் பேசுவார்கள். மக்களை பிச்சைக்காரகள் ஆக்குவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.

ஆனால் ஆளும்கட்சி வரும் தேர்தலில் பயப்படும் ஒரே ஆள் யார் என்றால் அது சீமான் மட்டுமே. தனது வெற்றியைப்பற்றிக் கவலைப்படாத அ.தி.மு.க வுக்கு சீமான் ஆதரவு அளிக்கப்போவதாக சொன்னபோது தி. மு.க வினர் மத்தியில் கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது. காரணம் சீமானிடம் இருப்பவர்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் துடிப்பான இளைஞர்கள். தாங்களால் அ.தி.மு.கவினர் அனைவரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என நம்பும் தி.மு.க வால் சீமான் படையை விலைக்கு வாங்கவே முடியாது. அவர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமானவர்கள் என அவர்களுக்குத்தெரியும். அதனால் பூத் ஏஜெண்டுகளாக சீமான் கட்சியினர் வரவிடாமல் தடுக்கப்பார்பார்கள். மத்திய தேர்தலில் காங்கிரசார் தமிழகத்தில் மண்ணைக்கவ்வியதற்க்கு சீமானே காரணமாக இருந்தார். சமீபத்தில் ஒரு தி.மு.க வினரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சீமான் ஆபத்தானவர், அவர் தீவிர அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் கெட்டுப்போவார்கள், அவர் பேச்சைகேட்டு உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பார்கள் என்றார். கேட்கவே நகைச்சுவையாக இருந்தது. 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்...

45 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல அலசல்... அதிமுகவின் பிராச்சாரம், கூட்டணிடியைப் பொறுத்து வெற்றி அமையும்...

சௌந்தர் சொன்னது…

எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தொண்டர்களிடம் கோஷ்டி பூசல் இருக்காது. தேர்தலில் ஒன்றாக பணியாற்றுவார்கள்...கலைஞர் ஏதாவது பேசி வாக்காளர் மனதை மாற்றி விடுவர்...அரசு பணியாளர்கள்களும் ஆளும் கட்சிக்கே ஆதரவாக இருக்கிறார்கள.. ஆதிமுகவோ இந்த திமுக ஆட்சி நிலைக்காது என்று சொல்லி கொண்டு வந்தார் ஜெயலலிதா ஆனால் திமுக ஆட்சி நல்ல படியாக 5 ஆண்டு முடிய போகிறது...

ஜெயலலிதா வெறும் அறிக்கை மட்டுமே விட்டு கொண்டு இருக்கிறார்..இருந்தார் எதிர் கட்சிதலைவர் என்ற முறையில் எத்தனை முறை சட்டசபையில் கேள்வி கேட்டு இருக்கிறார்...? ஆர்பாட்டம் என்ற எத்தனை தடவை தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி இருக்கிறார்..? எதிர்க்கட்சி தலைவர் வேலையையே ஒழுங்கா செய்யாதே ஜெயலலிதா மீண்டும் ஏன் ஆட்சிக்கு வர ஆசை படுகிறார்....?

சீமான் கட்சி ஆரம்பித்தது எல்லாம் சரி தான் ஆனால் ஜெயலலிதா விடம் போய் சேர்ந்தால் சீமான் MLA பதவிக்கு போட்டி போடனும், அதற்கு ஜெயலலிதாவிடம் சீட் கேட்டால் அவர் தருவாரா என்பது சந்தேகம் தான். நீங்கள் சொல்வது போல சீமான் இடம் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்றீங்க, ஆனால் எத்தனை இளைஞர்கள் இருப்பார்கள் ஒரு லட்சம் இளைஞர்கள் இருப்பார்களா..?

Unknown சொன்னது…

நல்ல அலசல் பாஸ்!

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு செந்தில், தெளிவான ஒரு கண்ணோட்டத்தில் பார்வையை செலுத்தி உள்ளீர்கள். உங்களின் சிந்தனைகள் உங்களை அரசியல் ஆலோசகர் என்கிற ரீதியாக இனம் காட்டுகிறது. நம்முடைய தமிழக தலை எழுத்தை அரசியல் ரீதியாக மாற்றும் சக்தி எதுவென எல்லோரும் ஆவலாய் எதிர்ப்பார்க்கிறோம். நீங்களும் எதுவென சொல்லாமல் முடித்து விட்டீர்கள். இப்போதைக்கு எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்கிற நிலையில்தான் தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள். எப்போ செந்தில் இதை மாற்ற போகிறோம்..?

Unknown சொன்னது…

நல்ல அலசல்

இந்தமுறையும் தொங்கு சட்ட சபையே அமையும் - இது என் கருத்து.

என்னைபொருத்தவரை ஜெ நீங்கள் நினைப்பது போல் அல்ல என்றே கருது கிறேன். அம்மாக்கு இந்த முறை கேப்டன் வந்துவிட்டால் கண்டிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிக்கு போட்டி இருக்கும்.

பாமக - இந்த முறை யாரும் கூட்டணிக்கு சேர்க்கவில்லை என்றால் கடலில் கரைத்த பெருங்காயமே!

தமிழ்க்காதலன் சொன்னது…

மாற்று சக்தியாக ஒரு சக்தி வானத்திலிருந்து வரும் என நாம் நினைத்துக் கொண்டிருப்பது மடமை. நாம்தான் அந்த சக்தியாக உருவெடுக்க வேண்டும். எப்போதுமே நம் சுமைகளை யாருடைய முதுகிலாவது ஏற்றிவிட்டால் தேவலாம் என்கிற மனோபாவத்திலேயே நம் மக்கள் இருக்கிறார்கள். அதை தாண்டி நம் ஒவ்வொருவருக்கும் நம் தேசத்தில் கடமையும், பொறுப்பும், உரிமையும் இருக்கிறது என்கிற உணர்வில் நம்முடைய மக்களை திசை திருப்பாதவரை நம்முடைய தலைவிதி மாறாது. மாற்று வழி கண்டு பிடிப்போம். மாறும் வரை. ஒவ்வொரு தமிழக இளைஞனையும் உருவாக்குவோம்.... நாளைய பிச்சைக்காரனாய் இல்லாமல், இலவசங்களுக்கு சோரம் போகா புத்தியுடன், சொந்த உழைப்பில் குடும்பம் காக்கும் தன்னம்பிக்கை மிக்க தலை முறைகளை உருவாக்குவோம். பிரயாணிகளுக்கும் குவாட்டர்களுக்கும் விலை போகும் மனிதர்களை விளக்கி வைப்போம், சமூகத்தில் அவர்களை ஒதுக்கி வைப்போம். ஒவ்வொரு தகப்பனும் இங்கு தவறிழைக்கிறான். தறுதலைகள் உருவாகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் தவறிழைக்கிறது.. சுயத்தை அறியாத கூட்டம் பெருகி நாட்டையும், பாரம்பரியத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறைகளை உருவாக்குவதில்.
நம்முடைய பிள்ளைகள், தேசம் நேசிக்க, நம் நாட்டை பற்றிய போதிய அறிவையும் அன்பையும் கொடுத்து வளர்ப்போம். நாளைய இந்திய அடிமைகளை பெற்று வளர்க்காமல், குடிமகன்களை கம்பீரமாய் வளர்த்தெடுப்போம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல அலசல் பாஸ்..

இந்த நாற்றத்திற்க்கு, அந்த நாற்றம் பரவாயில்லை என்ற மனோபாவத்துக்கு, மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்..

பேசாமல், இவனுகளே அடிச்சுக்கிட்டு ஆளட்டும் என நினைத்து, மக்கள் எங்காவது அகதிகளாகப்போனால்தான் விடிவு வரும்போல...

:-(

"ராஜா" சொன்னது…

எனக்கு என்னவோ அம்மாவின் அமைதிக்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருப்பது போலவே இருக்கிறது ...

இந்த தேர்தலில் ரஜினி மக்களை குழப்பாமல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும் (தேர்தல் என்றாள் அரசியல்வாதி இல்லை என்றாலும் ஆதரவு அறிக்கை விடும் ரஜினியும் ஞாபகத்துக்கு வருகிறார் அதான் அவர் பெயரை இங்கே குறிப்பிடுகிறேன்)

Chitra சொன்னது…

தெளிவாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள். தேர்தல் நெருங்க... நெருங்க.... அரசியல்வாதிகளின் சுய நலன்கள் வெளிச்சத்துக்கு வருவது சகஜமாகி போச்சு....

Unknown சொன்னது…

தலைப்பே நெத்தியடி..

Unknown சொன்னது…

நிகழ்கால அரசியல் சூழ்நிலையை மட்டுமே மனதில் வைத்து ஓட்டுப்போடும் முடிவுக்கு வந்தால் அதுவும் தற்கொலைக்கு சமமே.

அருண் பிரசாத் சொன்னது…

எல்லாம் சரி....விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றவை கண்டிப்பாய் தாக்கத்தை ஏற்படுத்தும்.....

பெயரில்லா சொன்னது…

நல்ல அலசல் அண்ணே! சீமானின் பிரசாரம் கண்டிப்பாக திமுக விற்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் கருதுகிறேன் அண்ணா!

Arun Prasath சொன்னது…

spectrum பிரசைக்கு அப்பறம் தி. மு. க. க்கு கொஞ்சம் பிரச்சனை தான்

Jawahar சொன்னது…

தேர்தல்லே என்னைக்கும் கொள்கைகள் ஜெய்ச்சதில்லை. கணக்குதான் ஜெயிக்கும். அதிமுக + தேமுதிக > திமுகங்கிறது கடந்து போன தேர்தல்கள் சொன்ன கணக்கு.

http://kgjawarlal.wordpress.com

Madhavan Srinivasagopalan சொன்னது…

// அருண் பிரசாத் சொன்னது…

எல்லாம் சரி....விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றவை கண்டிப்பாய் தாக்கத்தை ஏற்படுத்தும்... //

இந்தியாவுல தேள் கொட்டுனா, மோரீஷியஸ்ல நெறி கட்டுதா ?

chakra சொன்னது…

Good Joke

Seeman or Simon is just a casteist and movie actor. I don't think nothing good will come from cine actors

'பரிவை' சே.குமார் சொன்னது…

செந்தில் அண்ணா....
அருமையான அலசல்.
திமுகவைப் பொருத்தவரை மக்களை இலவசம் என்னும் மாயைக்குள் வைத்து ஜெயிக்கும் வித்தையை கத்து வைத்திருக்கிறார்கள்.
அம்மாவோ ஓய்வெடுப்பது அறிக்கைவிடுவது மட்டுமே அரசியல் என்ற நிலையில் இருக்கிறது. அதற்கு ஆதரவாய் சில கட்சிகள் பெயரளவில் மட்டுமே.
மாற்றாக வருவார் என்று நினைத்த வைகோவோ மானங்கெட்டுக் கிடக்கிறார்.
ஐயா ராமதாசுக்கு மகனுக்கு பதவி கிடைத்தால் போதும். மற்றபடி மக்களைப் பற்றி கவலையில்லை.
விஜயகாந்த் மாற்றாக இருப்பாரா என்று பார்ப்போம். கொஞ்சம் மாறுதல்களை கொண்டு வரும் தலைவராக உருவாகலாம் சரியான பாதையில் சென்றால்...
சீமான், திருமா போன்றவர்கள் இலங்கை வாழ் நம் தமிழர்களின் பெயரைச் சொல்லி குளிர் காய்பவர்கள். சீமானின் பேச்சுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது உண்மைதான். அவர் பின்னே இளைஞர் கூட்டம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு பேர் இருப்பார்கள். எல்லாரும் அவருக்காக வாக்களிப்பார்களா?
மீண்டும் ரஜினி அம்மாவுக்கு ஆதரவாக பேசி அசிங்கப்படாமல் இருந்தால் நல்லது. முடிந்தால் அவர் அரசியலுக்கு வரட்டும். அவர் பின்னாலும்தான் தமிழகமே இருக்கிறது.
மொத்தத்தில் அரசியல் சாக்கடைக்குள் இருக்கும் எல்லாமே தலைகளுமே ஒன்றுதான்.
நாமெல்லாம் செம்மறி ஆடுகள் அண்ணா... நாமாக திருந்தினால்தான் உண்டு. நடக்குமா?

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு..

Jayadev Das சொன்னது…

//ஆனால் ஆளும்கட்சி வரும் தேர்தலில் பயப்படும் ஒரே ஆள் யார் என்றால் அது சீமான் மட்டுமே. தனது வெற்றியைப்பற்றிக் கவலைப்படாத அ.தி.மு.க வுக்கு சீமான் ஆதரவு அளிக்கப்போவதாக சொன்னபோது தி. மு.க வினர் மத்தியில் கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது. // சீமானை வச்சு நீங்க காமடி கீமடி எதுவும் பண்ணலியே?

சசிகுமார் சொன்னது…

அரசியலில் எதுவும் நடக்கலாம் அண்ணா?
சீமானை பற்றி நீங்கள் கூறி இருப்பது உண்மை ஆனால் வரும்போது அனைவரும் இப்படி தான் வருகிறார்கள் அண்ணா. இந்த நாதாரி அரசியல் வாதிங்க நல்லவர்களையும் கெடுத்து விடுகிறார்கள் சீமான் இப்படி ஆகாமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>மற்ற கட்சியினரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம்தான், அதனை வாங்கிக்கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முந்தய தேர்தல்களில் பேசியதையே இப்போதும் பேசுவார்கள். மக்களை பிச்சைக்காரகள் ஆக்குவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.

S S 100 % CORRECT.

raja சொன்னது…

திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செயல்பாடே நாம் இயங்காமல் இருப்பதுதான்(கட்டுரை எழுதுவதும் கூட) உங்களை போன்ற தெளிவான அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் அனைவரும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.(உ.ம்.நீங்கள்,சவுக்கு,உண்னைதமிழன்,வழக்கறிஞர் சுந்தரராஜன்) யாரும் தெருவில் இறங்கி போராடத்தயாரில்லை. நான் பலமுறை கருத்துரைத்து இருக்கிறேன். வலைமனை அளவிலே ஒரு இயக்கம் சாத்தியம் என்று.. நாம் அனைவரும் பொதுவாக அதில் எழுதலாம், தீவிரபிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் வழியாகவே பரப்புரை,மற்றும் புகார்களை அனுப்புலாம். நீங்கள் உங்கள் கைகளை ஒங்காத வரையிலும், நான் என் கைகளை ஒங்காத வரை சொரண்டிகொண்டிருப்பவர்கள் நாம் வாழும் வீட்டையே சுரண்டிக்கொழுக்கப்போகிறார்கள். நீங்கள் கட்டுரை எழுத, என்னைபோன்ற சிலர் பின்னூட்டம் இட்டு காலத்தை நகர்த்தபோகிறார்கள்.

Udayakumar Sree சொன்னது…

சில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே..
காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

--கலைஞர்.

தினேஷ்குமார் சொன்னது…

கருத்துக்கள் ஆயிரமுண்டு
கருத்தரிக்க யாராவதுண்டா
ஒருத்தருக்கும் சுயமில்லா
பொருத்திருக்க காலமுண்டா
கடந்து வரும் பாதையிலே
நிலைத்த நிருத்தர்குறி
ஏதுமுண்டா .........

Denzil சொன்னது…

ஜெயலலிதா பற்றிய விமர்சனம் நச். சீமான் குறித்து நீங்கள் எழுதியிருப்பது உங்கள் நம்பிக்கையே, அது fact அல்ல. தற்போதைய கூட்டணி நிலவரங்கள் ஒரு கடுமையான போட்டி காத்திருப்பதையே காட்டுகின்றன. தொங்கு சட்டசபை?

பெயரில்லா சொன்னது…

SEEMAAN and Cinema Politicians growing their wealth and life by cheating the peoples who admired by a harsh/ high pitch talks!and honey binded the words Tamil, Eezham!
Bullshit! These bleddy b-----'s cann't do anything unless barking in the streets like a Dogs's.
you know barking dog's are not suitable for catching animals.,
Only barking.., barking! barking!
until the last tamilian is going to brave., Ayyo!

Pl visit,
" போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை- சீமானை",

http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_10.html

ஜோதிஜி சொன்னது…

செந்தில் விஜயகாந்த சேலம் பொதுக்கூட்டத்தில் பேச்சை கேட்பதற்காக ஆர்வமாக வீட்டுக்கு வந்தேன். நொந்து போய்விட்டேன்.

1. மக்கள் முட்டாள்கள். தன்னைப் பார்க்கவே கூட்டம் வருகின்றது. உண்மையான விசயங்களை பேசத் தேவையில்லை. கோர்வையாக பேச வேண்டிய அவஸ்யமில்லை. தனிநபர் தாக்குதல்கள் இருந்தால் தான் ரசிப்பார்கள்.

இது போன்ற பல ஆலோசனைகளை பெற்று இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

அப்புறம் ராஜா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டுள்ள கருத்தைப் பார்த்து எனக்குள் சற்று வெட்கம் வந்து போகின்றது. நாம் எல்லாருக்குமே .......படி?

காமராஜ் சொன்னது…

ரொம்ப அலுப்பா இருக்கு செந்தில்.இவர் நீடித்தால் லஞ்ச ஊழல் பெருகும்.அம்மா வந்தால் அத்தோடு சேர்ந்து அராஜகமும் பெருகும்.
சட்டி சுடுதேன்னு தப்பிச்சு அடுப்புக்குள்ள விழுந்த கதைத்தான் தேர்தல் தமிழ்த்தேர்தல்.

தமிழ்மலர் சொன்னது…

// திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செயல்பாடே நாம் இயங்காமல் இருப்பதுதான்(கட்டுரை எழுதுவதும் கூட) உங்களை போன்ற தெளிவான அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் அனைவரும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.(உ.ம்.நீங்கள்,சவுக்கு,உண்னைதமிழன்,வழக்கறிஞர் சுந்தரராஜன்) யாரும் தெருவில் இறங்கி போராடத்தயாரில்லை. நான் பலமுறை கருத்துரைத்து இருக்கிறேன். வலைமனை அளவிலே ஒரு இயக்கம் சாத்தியம் என்று.. நாம் அனைவரும் பொதுவாக அதில் எழுதலாம், தீவிரபிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் வழியாகவே பரப்புரை,மற்றும் புகார்களை அனுப்புலாம். நீங்கள் உங்கள் கைகளை ஒங்காத வரையிலும், நான் என் கைகளை ஒங்காத வரை சொரண்டிகொண்டிருப்பவர்கள் நாம் வாழும் வீட்டையே சுரண்டிக்கொழுக்கப்போகிறார்கள். நீங்கள் கட்டுரை எழுத, என்னைபோன்ற சிலர் பின்னூட்டம் இட்டு காலத்தை நகர்த்தபோகிறார்கள்.//

ராசாவின் கருத்தே என்னுடையதும்.

செங்கோவி சொன்னது…

இந்த முறை போட்டி கடுமையே..

bandhu சொன்னது…

நீங்கள் சொன்னது பெரும்பாலும் சரி என்று தோன்றுகிறது. சீமான் விஷயத்தில் மட்டும் அது கொஞ்சம் wishful thinking போல தோன்றுகிறது!

Philosophy Prabhakaran சொன்னது…

// கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணிக்கு போகவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.அதனால் இப்போது முறுக்கு காட்டினாலும், மச்சானும், மனைவியும் வைத்ததே சட்டம் என்பதால் போதையில் உளறுவதாக சொன்னவரை இவர் அன்புச்சகோதரி, புரட்சித்தலைவி என மேடையில் முழங்கப்போகும் நாள் வெகு அருகில்தான் இருக்கிறது. //

இதை படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது... கேப்டன் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கனக்கானோரில் நானும் ஒருவன்... ஆனால் சேலம் மாநாட்டில் கேப்டன் பேசியதை கேட்கும்போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்னும் என்னென்ன நகைச்சுவைகள் அரங்கேரக் காத்திருக்கின்றனவோ!!!!!!!!

Unknown சொன்னது…

திரு ராஜா அவர்களுக்கு,நாங்கள் பதிவர் சங்கம் துவக்கலாம் என சென்றவருடம் சென்னையில் ஒரு கூட்டத்தை கூட்டினோம், அங்கு நடந்த களேபரங்களும், அதன்பின் நமது சக பதிவர்கள் தங்கள் பதிவில் அடித்த கிண்டல்களும் எங்களை வெறுப்படைய வைத்துவிட்டன. இதில் அதிகம் நொந்து போனது உண்மைத்தமிழன் உள்ளிட்ட மூத்த பதிவர்கள்தான், ஆனாலும் அடுத்த சென்னை பதிவர் சந்திப்பில் மீண்டும் இந்த விவாதத்தை மீண்டும் பேசுவோம்.

நீங்கள் ஆதங்கப்பட்டது மாதிரி எங்களுக்கும் ஆதங்கம் இருக்கு ஆனால் ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும்.

vels-erode சொன்னது…

எல்லோரையும் போலவே சீமானிடமும் ஒரு உருப்படியான கொள்கை இல்லை என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும் என்பது எனது கருத்து.
கஷ்டப் பட்ட காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஆதரவு தரவில்லை தி.மு.க-எனச் சொல்லும் சீமான், ஈழம் என்றாலே எட்டிக் காய் என்று சொன்ன, விடுதலைப் புலிகளைக் கைது செய்வதே அரசின் லட்சியம் எனக் கொண்ட, போர் என்று வந்தால் சாவு சகஜம் எனச் சொன்ன, ஈழ ஆதரவு இயக்கங்க்களுக்கு தடை விதித்த ஜெயலலிதாவுக்கு எப்படி ஆதரவு தருவதாக அறிவிக்கிறார்?
அவருக்குப் பின்னால் எத்தனை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்களாம்? இளைஞர்கள் என்ன விஷய ஞானம் இல்லாத கூமுட்டைகளா?

பெயரில்லா சொன்னது…

எம்.ஜி. ஆருக்கு பிறகு எவரையும் தொடர்ந்து இரண்டாம் முறை சிம்மாசனத்தில் ஏற்ற விரும்பாத தமிழ் மக்கள் இம்முறை என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. இலவசமா அல்லது Anti Incumbency Factor தலை தூக்குமா??? என்ன ஆனாலும் விஜயகாந்திற்கு மட்டும் இம்முறை வாக்களிக்கப்போவதில்லை. காரணத்தை தங்களை வரும் வார இறுதியில் நேரில் வந்து சொல்கிறேன்.... அழகிரி வேறு தனிக்கட்சி ஆரம்பிக்க லோகோ டிசைன் செய்து வருவதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.... வேடிக்கை பார்ப்போம்....

பெயரில்லா சொன்னது…

வாக்களிப்பதில் நம் மக்கள் என்றுமே தெளிவாகத்தான் உள்ளனர். தொங்கு சட்டசபை வரும் நிலைக்கு ஆளாக்காமல். குதிரை பேரம் இல்லாமல் தமிழ் நாட்டு வண்டி பல வருடங்களாக ஓடி வருகிறது. ஆளுங்கட்சி மேல் உள்ள வெறுப்பே எதிர்கட்சியின் அமோக வெற்றிக்கு காரணமாக இருப்பது நாமறிந்ததே. 49 O மின்னணு இயந்திரத்தில் சேர்க்கப்படாத வரை ஜனநாயகம் பற்றி பேசி பயன் இல்லை. ஏதோ என்னால் முடிந்தது...அனைத்து தேர்தலிலும் வாக்களித்து வருகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

உங்க தேர்தல் கண்ணோட்டம் நேர்மையானதா இருக்குங்க தோழரே...

தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

இந்திய தமிழக தேர்தல்களில்,எதிர்ப்பு ஓட்டே மற்ற கட்சி ஆட்சிக்கு வருவது நிகழ்ந்திருக்கிறது.காங்கிரஸ் செய்த தவறுகளால் மே.வங்கத்திலும்,கேரளாவிலும்,பின்பு தமிழ்நாட்டிலும்,ஆந்திராவிலும,மகாராஷ்டிராவிலும், இப்போது எல்லா மாநிலங்களிலும காங்கிரஸ்சின் நிலைமை மிக மோசமே.மக்கள் தமிழகத்தில் எப்போதுமே தெளிவாகத்தான் ஓட்டளிக்கிறார்கள்.கலைஞர் நல்ல பல திட்டங்களை செய்து முடித்துவிட்டு மக்கள் தன்னைத்தான் ஆதரிப்பார்கள் என்று நினைத்தபோது,மக்கள் ஜெ.வை தேர்ந்தெடுத்தார்கள்.உடம்பு பூரா நகைகள்,தத்துபுத்திரன் திருமணம்,ஆகியவை ஜெ.யின் தோல்விக்கு காரணமாயின.இலவசம் மற்றும் ஜெ.யின் தவறான அணுகுமுறை சசி-குடும்ப ஆதிக்கம் மறுபடியும் கருணா-வை ஆட்சியில் அமரவைத்தது.அதுமட்டுமல்ல,ஐந்து ஆண்டுக்கு மேல் ஒருவரை நீடிக்கவிடக்கூடாது என்றும் அதிகமான மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.அதே போல் ஆட்சி மாற்றம் இந்த தடவையும் இருக்கும்.முக்கிய காரணம் விலைவாசி ஏற்றம்.நடுத்தர மற்றும் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பங்கள் கடனில் தத்தளிக்கின்றன.அந்த கோபம் ஓட்டில் தெரியும்.

raja சொன்னது…

எனது கருத்தை ஏற்று பதில அளித்ததற்கு மிக்க நன்றி.. நம் மக்களுக்கு பொது இடங்களில் நடந்து கொள்வது எனும் அடிப்படை தெரியாமல் இருப்பது பெரும் வெட்கக்கேடு. அப்படி ஒரு கூட்டம் நடந்து ஒழுங்கீனங்கள் நடந்தது என்று நீங்கள் சொல்லும் போது நாம் யாரை முன்னோடிகளாக கொள்வது என்றே தெரியவில்லை. உள்ளபடியே வருந்துகிறேன்.ஆனாலும் நாம் சிறுமைகளுக்கு நம் மனதை தளரவிடாமல் தொடர்ந்து எழுதவேண்டும் போராடவும் வேண்டும்.நான் பிளாக்கர் அல்ல ஒரு பொறுப்பான குடிமகனாக எனது ஆதங்களை பின்னூட்டங்கள் வழியே வெளிபடுத்தவே செய்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அறம் உங்களை எப்பொழுதும் காக்கும்.

Prakash சொன்னது…

Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

நீங்கள் கூறியிருக்கும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை ! விஜயகாந்துக்கு வேறு வழியில்லை
இப்போது முறுக்கு காட்டினாலும் யாரோடாவது சேர்ந்து தான் ஆக வேண்டும் ! இனி ஆண்டவனோடு
மட்டும் தான் கூட்டணி என்ற பேச்செல்லாம் எடுபடாது .

Arivazhagan சொன்னது…

/எல்லோரையும் கவனமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் ஆர்வக்கோளாறு உள்ள தொண்டர் ஒருவர் அவர்களின் திட்டங்களை சொன்னபோது அடப்பாவிகளா என்றிருந்தது./
அப்படி என்ன தான் திட்டம் வைத்திருக்கிறார்களாம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல அலசல் தல, ஆனா மறுபடியும் திமுகதான் ஆட்சிய பிடிக்கப் போகுது, சீமானால், கொஞ்சம் சீட்டுகள் குறையலாம். ஈழப்போர் நடக்கும் போதே பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை (காங்கிரஸ் அடிவாங்கியதைத் தவிர). எனது பயமெல்லாம், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கதி?