17 ஜன., 2011

எங்கே போகிறது இந்தியா - பகுதி நான்கு...

இந்தியாவைப்பற்றிய பெருமிதம் நம் அனைவருக்குமே இருக்கிறது,. மன்னராட்சி முடிந்து இங்கிலாந்து நம் தேசத்தை கைப்பற்றியவுடன் ஆப்பிரிக்க நாடுகளைப்போல் நம்மை சுரண்டாமல் நமக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்தார்கள். இன்றுவரைக்கும் அவர்கள் அமைத்துத் தந்ததைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்குமேல் நாம் செய்த அத்தனை வேலைகளும் தொலைநோக்கு பார்வை இல்லாது அத்தனை நகரங்களும் ஒழுங்கான கட்டமைப்புகளை கொண்டிராது மக்கள் நெரிசலில் பிதுங்கி வழிகிறது. நமது அரசியல்வாதிகள் தொலைநோக்குப் பார்வையில் எதையும் திட்டமிடாமல் செய்யும் ஒரே காரணம் மீண்டும் மீண்டும் செய்த வேலையையே திருப்பிச்செய்து கமிசன் அடிக்க வேண்டும் என்கிற காரணம்தான். சென்னையின் பெரிய சாலைகளில் நடுவில் இருக்கும் சாலை தடுப்புகள் இப்படித்தான் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இடித்து கட்டப்படுகிறது. 

ஹான்ஸ் ரோஸ்லிங் என்கிற ஆராய்ச்சியாளர் அனைத்து நாடுகளின் வளர்ச்சியையும், பொருளாதாரம், மருத்துவம், கல்வி என அனைத்துப்பிரிவுகளிலும் 1800 ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து அதனை நமக்கு எளிமையாக கிராபிக்ஸ் மூலம் விளக்கியிருக்கிறார். சீனா, ஜப்பான் ஆக்கிரமிப்பு, மற்றும் இங்கிலாந்து நடத்திய கொகேயின் வார் இரண்டாலும் இந்தியாவை விட மிகுந்த பின்னடைவை சந்தித்தாலும் அது மீண்டும் தொடர்ந்து இந்தியாவை பின்னுக்குத்தள்ளிவிட்டு தன்னை கட்டியெழுப்பி இருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சியே நகைச்சுவையானது. முந்தய காலத்தில் அங்கு யாரும் சுலபமாக தொழில் தொடங்கிவிட முடியாது. அதிலும் சாதாரண ஆட்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆள்வோரின் கட்டுப்பாடுகளை எப்படியாவது உடைத்துக்கொண்டுதான் மெல்ல தொழில் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் மெல்ல மெல்ல நாம் நமது ஜனநாயக உரிமைகளை இழந்துகொண்டு வருகிறோம். குறிப்பிட்ட ஒரே குடும்பம் அதிகாரத்தை தக்கவைத்திருப்பது நாட்டை நிச்சயம் தவறான பாதைக்குத்தான் இட்டுச்செல்லும். வெளிப்படையான அரசாங்கம் இப்போது இல்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை மக்களிடம் கருத்துக்கேட்டு செய்வதில்லை. உலக வங்கியிடமும், உலக கார்ப்பரேட்டுகளிடமும் நமக்குத்தெரியாமல் நாம் அடகுவைக்கப்பட்டு இருக்கிறோம். கருப்புப் பணம் வைத்திருப்பதில் உலகில் முதலிடத்தில் நாம்தான் இருக்கிறோம். அடிப்படை உணவுப் பொருட்ககளின் விலை அடிக்கடி தாறுமாறாக ஏறி இறங்குவதும், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே இருப்பதும் தவறான பொருளாதாரக் கொள்கையின் பலன்களே.

சென்றவருடம் நம்மால் சமாளிக்கக்கூடிய அளவைத்தாண்டிவிட்டது விலைவாசி. இனி இந்தவருடம் என்ன ஆகப்போகிறதோ!.


சமீபத்தில் ஈழத்தில் இருந்து வந்திருந்த இருவரை சந்தித்தேன். "மொத்த இலங்கையும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடப்போகிறது, அதுதான் எங்கள் வருத்தம்" என்றனர். நான் சிரித்துக்கொண்டே "ராஜபக்சேக்கு சீனா மேல்தான்" என்றேன். "எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது" என்றார். நானோ "இவ்வளவு பெரிய இந்தியாவை இத்தாலிதான் ஆளுகிறது, நாங்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்" என்றேன். புரிந்துகொண்டு வெகுநேரம் சிரித்தார்கள்.. 

16 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மை நிலையை உரக்கச் சொல்லும் பதிவு அண்ணா

//"இவ்வளவு பெரிய இந்தியாவை இத்தாலிதான் ஆளுகிறது, நாங்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்" //

ஹா... ஹாஹா...
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...

Cable சங்கர் சொன்னது…

raightu...

பொன் மாலை பொழுது சொன்னது…

// "இவ்வளவு பெரிய இந்தியாவை இத்தாலிதான் ஆளுகிறது, நாங்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்" என்றேன். புரிந்துகொண்டு வெகுநேரம் சிரித்தார்கள்.. //

வேறு என்னதான் நாம் பெர்சா செய்துவிட முடியும். புரட்சி????
நினைக்கவே பயங்கர டமாஸுதான் போங்க.

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னதான் பண்ணுறது.. ?
எனக்கும் வெளெங்கல சார்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சுதந்திரம் அடைந்தவுடன் மெல்ல மெல்ல நாம் நமது ஜனநாயக உரிமைகளை இழந்துகொண்டு வருகிறோம்///

சரிதானய்யா....

தமிழ் உதயம் சொன்னது…

நம்மையும் விட ஊழல் புரியும் தேசங்கள், நம் சர்வாதிகாரிகளையும் விட மோசமான சர்வாதிகாரிகளை அமைய பெற்ற தேசங்கள், நம்மையும் விட மிக மோசமாய் பிறரிடம் தங்கள் தேசத்தை அடகு வைக்கும் தேசங்கள் - இவர்களை பார்த்து நாம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். வேறென்ன சொல்ல.

ஆர்வா சொன்னது…

அந்த சிரிப்புக்கு பின்னாடி ஆயிரம் அர்த்தங்கள் இருக்குது...

ஜோதிஜி சொன்னது…

ஈழம் தொடர் எழுதிய போதே நான் எழுதிய வார்த்தைகள்.

ஈழத்தின் எதிர்காலம் சீனர்களின் கையில்.

Jana சொன்னது…

சில உண்மைகள் உறைக்கின்றன. தேவவையான ஒரு தொடர்.

ஹேமா சொன்னது…

ஈழத்தில் இனி சைனீஸ் மொழிலதான் தேசிய கீதம் பாடப்படும்ன்னு சொன்னாலும் அதிசயமில்ல !

ஈரோடு கதிர் சொன்னது…

வட இலங்கையில் கால் பதிக்கும் சீனாவின் முதல் இலக்கு சென்னையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

ஹேமா சொல்வது போல் சென்னை, கடலோரவாசிகளும் சீன மொழி கற்றுக்கொள்வதும் முக்கியமாகிவிடுமோ!

raja manickam சொன்னது…

பார்த்து சொல்லுங்கkrp இந்திய இறையாண்மை சட்டம்,உங்க மேலயும் பாயும்.சாப்பாடுல கொஞ்சம் உப்ப குற்ய்ங்க

Chitra சொன்னது…

சிந்திக்க வைக்கும் தொடர்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சிந்திக்க வைக்கும் தொடர்

ANaND சொன்னது…

நமக்கு option நே இல்ல ...
என்ன பண்ணுறது நு தெரியல

Unknown சொன்னது…

இந்த கருத்து உங்களின் முந்தய பகுதியில் உங்களால் சொல்லப்பட்டது.
//ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் சமூக ஆர்வலர்கள் போட்டியிட்டு வருகிறார்கள், தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளியுங்கள். இங்கு நடுநிலையாலர்கள்தாம் அதிகம்பேர் இருக்கிறோம். நம்மால் நிச்சயம் ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இது வழி வகுக்கும். //
நண்பரே, இது மாற்றத்தை ஏற்படுத்தாது, ஏமாற்றத்தைத்தான் தரும்.
என்னுடைய ஆசை எல்லாம், நாம் ஏன் வருகின்ற 2011-தேர்தலில் ஓன்று அல்லது இரண்டு "சமூக ஆர்வலர்கள்" யாரென்று அறிந்து அவர்களின் பினால் அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது தான். நம்மில் எத்தனை பேர் இதற்கு தயார்!!!

http://www.shansugan.net/2011/01/12/india-tamilnadu-polatical-change-in-your-han/