2 ஜூலை, 2010

இவர்களை பெற்றவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் என்ன செய்யலாம்?..


படங்கள் உதவி : சண்முகம் கணேசன், சிங்கப்பூர் ...

37 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

படங்கள் வருந்த செய்கின்றன. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்போம்... இதற்கு வழி இன்றைய என் இடுகையை பாருங்கள்... வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

இவர்களுக்கும் basic needs கிடைக்காதபடி தடையாய் இருக்கும் காரணகர்த்தாக்களை கண்டறிந்து கொள்ள வேண்டும்.... அதன் பின் வேண்டிய நடவடிக்கை எடுப்பது எளிது.

ஹேமா சொன்னது…

அத்தனை படங்களும் உயிரோட்டமாய் கலங்க வைக்கிறது செந்தில்.சொல்லிக்கொண்டே இருக்காமல்.தடுக்க வழி தேடணும்.

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

இதற்க்கு காரணம் முதலாளித்துவ உலகம் , அதை ஒழிக்க வேண்டும் என்றால்
போராட்டம் அவசியம் . தயாரா சித்ரா அவர்களே ???? முதாலாளித்துவம் இந்த
குழந்தைகளை மட்டும் அல்ல , உலகில் உள்ள எல்லாரையும் பாதித்து கொண்டு இருக்கிறது ..........
நீங்கள் சொல்வது போல அது அவ்வளவு எளிது அல்ல ...................

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

எப்படி தடுப்பீர்கள் ஆளாளுக்கு ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்பீர்காலா???????ஹேமா
மற்றும் சித்ரா அவர்களே . இது எளிமையான பிரச்சனை அல்ல . அப்படி தத்து எடுப்பாதால் பிரச்சனைகளை
தீர்க்க முடியாது , முதாலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதே முதல் இலக்கு , போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல

Bibiliobibuli சொன்னது…

இது வெறும் Basic Needs கிடைக்காத பிரச்சனை அல்ல என்பது என் கருத்து. இது சமூக களங்கம். காலங்காலமாய், தலைமுறையாய் வறுமையை, பசியை தவிர வேறெதையும் அனுபவித்திராத வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த, வாழும் மக்களின் கண்ணீர் சரித்திரம்.

Slum Dog Millionaire விருதுகளுக்காக சந்தோசப்பட்டவர்கள், அது சொன்ன சுடுகிற உண்மையை மறந்து போனதேனோ?

எப்படி இலங்கைக்கு GSP Plus மூலம் தமிழர்கள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் பாடம் எடுக்கிறார்களோ; அதே போல் இந்தியாவின் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் உலகிற்கு அறியத்தாருங்கள். UNICEF போன்ற அமைப்புகளுக்கு இவர்களின் கண்ணீர் கதைகளை சொல்லுங்கள். ஏதாவது நடந்தாலும் நடக்கும்.

செந்தில், ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம் என்பார்கள். இந்தப்படங்கள் ஒவ்வொன்றும் ஓராயிரம் கண்ணீர் கதைகள் சொல்கிறது.

Karthick Chidambaram சொன்னது…

அரசாங்கங்களின் திட்டங்களிலும் சட்டங்களிலும் அதனை நடைமுறைபடுத்துவதில் உள்ள முறையிலும்தான் இதை ஒழிக்கமுடியும்

Unknown சொன்னது…

இவர்கள் படிக்க வழி செய்ய வேண்டும். அதற்கு முன் இவர்களைப் பெற்றவர்களின் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும். சோற்றுக்கு வழியில்லாமல் தானே இவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.

Syed Vaisul Karne சொன்னது…

To make a game(capitalism) obsolete, everybody has to play the same game(become a capitalist) well without blaming the game(capitalism).
Apart from this, we cannot do anything by struggling against Capitalism and Capitalists.
So we should become a better capitalist to help first ourselves then these poor children to get educated.


The parents of these poor children must have the awareness of birth control if they cannot come out from the poverty. I know this looks rude.. This is what I'll do.. that's all.

சௌந்தர் சொன்னது…

இந்த வேலையை பெரியவர்கள் செய்வதே கடினம்.
நீங்கள் போகும் கடையில் சின்ன பசங்க இருந்தா அந்த கடையில் எந்த பொருளும் வாங்காதீர்கள்.
முடிந்தால் இவர்களை தொண்டு நிறுவனங்களில் சேர்த்துவிடுங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அரசு 400 கோடிக்கு விழா எடுப்பதை விட்டுவிட்டு அந்த காசை இவர்கள் மறு வாழ்வுக்கு பயன்படுத்தலாம். இத சொன்னா நம்மள கேணப்பசங்க சொல்லுவாங்க

seethag சொன்னது…

silanerangaLil kile ulla project kuda thavarillai enruthaan thonrum. yarum kaththa vendam, naangal ippadi kuzanthaigalai parththathaal thaan kuzanthaigal perrukkolavillai.



Project Prevention
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search
The neutrality of this article is disputed. Please see the discussion on the talk page. Please do not remove this message until the dispute is resolved. (May 2010)

Project Prevention (founded and formerly known as Children Requiring a Caring Kommunity [sic] or C.R.A.C.K.) is an American non-profit organization which also has a presence in the United Kingdom, which pays drug addicts cash for volunteering for long-term birth control, including sterilization. Since January 2006 Project Prevention has offered US$300 (£200 in the UK) to each participant. As of 26 April 2010 Project Prevention said it had paid 3,388 "clients" including 1,260 women sterilized by tubal ligation, 4,428 abortions and 47 men having vasectomies.[1][2] These and other statistics, including ethnic background, are cited on the PP website, with the description "The following numbers were obtained through our Client Survey Form which all participants fill out. These numbers are prior to obtaining long-term birth control through our program".

Barbara Harris founded the organization in 1997 after she and her husband adopted four children from a drug-addicted mother. After the experience of helping the children through withdrawal and other health problems, she attempted to get legislation passed in California which would have mandated sterilization for mothers who gave birth to drug-addicted babies. After this failed, she opted instead to start what is now called Project Prevention.

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

//The parents of these poor children must have the awareness of birth control if they cannot come out from the போவேர்ட்டி// ஏழைகள் குழந்தைகள் பெற்று கொள்ளக்கூடாது என்க்கிறாரா ??? என்ன
அநியாயம் .......... இது ஒரு தனிமனித பிரச்சனை அல்ல பிரச்சனை பெற்றோர் அல்ல அந்த பெற்றோரை உற்பத்தி
செய்யும் சமூகம் ............ ஒரு ஏழை பெற்றோரால் என்ன முடிந்ததோ அதை தான் செய்கிறார்கள் .......சரி அப்படி
என்றால் இந்த கூற்று பிரகாரம் ஏழைகள் கொலை செய்யப்படலாம் பணக்காரன் மட்டுமே வாழ தகுதி உள்ளவன் என்பது போல் அந்த கருத்து உள்ளது ......................................... முதல்லாளித்துவதை அழிக்க வேண்டும் அது மட்டுமே எல்லா விடயத்திற்கும் தீர்வு ................!!!!!!! அமைப்பை மாற்றாமல் தனி தனியாய் ஒவொவொரு மனிதனாய் திருத்தி கொண்டே போக முடியாது ...........

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

//முடிந்தால் இவர்களை தொண்டு நிறுவனங்களில் சேர்த்துவிடுங்கள்.// எத்தனை குழந்தைகளை நீங்கள்
தொண்டு நிறுவனத்தில் சேர்த்து விட முடியும் ........ நிரந்தர தீர்வு என்ன என்று யோசிக்க வேண்டாமா ????

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

அந்த குழந்தைகள் முகத்தில் உள்ள சோகம் நெஞ்சை சுடுகிறது. நிழல் படமாய் பார்க்கும் போது சோகம், நம் கண் முன்னே இருக்கும் இந்த மாதிரி சிறுவர்களுக்காவது ஏதும் செய்கிறோமா, அதை செய்ய தொடங்கினாலே போதும், புது வழி பிறக்கும்.

ஜோதிஜி சொன்னது…

தினந்தோறும் ஒன்று என்று போட்டு தாக்கினாலும் ஒவ்வொன்றும் உலுக்க வைக்கின்றது செந்தில்.

இதில் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கம் என்ற பேச்சே தேவையற்றது.
தனிமனிதனின் அக்கறையின்மையும் அளவு கடந்த சகிப்புத்தன்மையுமே முக்கிய காரணம்.

இங்கு தொடக்கத்தில் குடும்பத்தில் உள்ள நான்கு முதல் 6 பேர்கள் பல நிறுவனங்களில் பணி புரிந்தார்கள். வயது பொருட்டே அல்ல. 12 வயது பையன் பெட்டிக்கடையில் வாயில் புகையிலையும், கையில் சிகரெட்டுமாய் மீதி சில்லறை மாற்றிக்கொண்டு பீர் பாட்டிலை வாயலே உடைத்து உள்ளே ஊற்றிக் கொண்டதை பார்த்த போது விக்கித்துப் போய் இருக்கின்றேன்.

தினந்தோறும் அவன் செலவளிக்கும் நூறு ரூபாய் என்பது அவனுக்கு சர்வசாதரணம். குடும்பத்தினர் வார இறுதியில் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டால் அவன் பாடு எப்போதும் போல ஜாலி தான். திருப்பூரில் இப்போது அந்த பப்பு எல்லாம் வேகாது. உள்ளே இருப்பது தெரிந்தால் முதலாளிகள் தன்னுடைய சொத்தை எழுதி வைத்தாலும் பிரச்சனை தீரவே தீராத அளவிற்கு கொண்டு போய் விட்டு விடும். லஞ்சம் வாங்கிய அதிகாரி ஆயுளுக்கும் மறக்க முடியாத அளவிற்கு அவருக்கும் ஆப்பு.

தொடக்கத்தில் படிக்காமல் இன்றைக்கு முதலாளிய இருக்கற அத்தனை பேர்களும் தாங்கள் செய்த அத்தனை தவறுகளையும் உணரத்தான் செய்கிறார்கள். காரணம் ஆங்கிலம் படுத்தும் பாடு.

இந்த பிரச்சனை இந்தியா முழுக்க இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் காரணமல்ல. வறுமையும் கூட காரணமல்ல. பொறுப்பாய் இருக்க வேண்டியவர்கள் தான் முக்கிய காரணம். அன்றைக்கு சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளுக்காக மொத்தமாக ஒரு தலைமுறையையே அடகு வைத்து விட்டு தன்னைக் காப்பாற்றி கொள்ளுதல்.

ஆசைகள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் படிக்க அனுப்புங்கள் என்று வந்து கேட்கும் தன்னார்வ மக்களை நாரசாரமாக திட்டும் பெற்றோர்களை பல முறை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். வறுமை யாருக்குத்தான் இல்லை.

ஜோதிஜி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜோதிஜி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜோதிஜி சொன்னது…

தொடக்கத்தில் படிக்காமல் இன்றைக்கு முதலாளிய இருக்கற அத்தனை பேர்களும் தாங்கள் செய்த அத்தனை தவறுகளையும் உணரத்தான் செய்கிறார்கள். காரணம் ஆங்கிலம் படுத்தும் பாடு.

இந்த பிரச்சனை இந்தியா முழுக்க இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் காரணமல்ல. வறுமையும் கூட காரணமல்ல. பொறுப்பாய் இருக்க வேண்டியவர்கள் தான் முக்கிய காரணம். அன்றைக்கு சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளுக்காக மொத்தமாக ஒரு தலைமுறையையே அடகு வைத்து விட்டு தன்னைக் காப்பாற்றி கொள்ளுதல்.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் பத்ரிக்கைகளை விட இந்த வலைதளம் வீச்ச. கூகுள் தரும் விபரப்படி எத்தனையோ கண்களுக்குத் தெரியாத தீவுக்குள் இருந்தெல்லாம் இந்த வலையை மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மறுபக்கமும் இந்தியாவில் உண்டு என்பதை இதைப் போலவே வேறொரு பதிவில் காட்டுங்கள்.

பம்பாயில் நடந்து கொண்டுருந்த தாஜ்மகால் ஹோட்டல் சண்டையை நேரிடையாக பார்த்துக்கொண்டுருந்த துருக்கி, இங்கிலாந்து மக்கள் பேசும் போது சொன்னது

பாரு உங்க நாட்ல எப்படி சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கு. எப்படி அங்க வரச்சொல்றன்னு பேசுற முட்டாள் வெள்ளைக்கூட்டமும் இருப்பதால் வேறொரு இந்திய எதிர்மறையை போக்கும் நேர்மறை படங்களையும் தாருங்கள்.

வந்து பின்னூட்டம் இடுபவர்கள் உங்கள் உழைப்புக்கு கிடைத்த மரியாதை.

ஜோதிஜி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜோதிஜி சொன்னது…

Pls check this comments box set up.

Unknown சொன்னது…

கருத்துக்கு நன்றி ஜோதி கணேசன் சார்.. பின்னூட்ட பெட்டியை இப்போது சற்று மாற்றி அமைத்திருக்கிறேன்

தமிழ் உதயம் சொன்னது…

ஜோதிஜி சொன்னதை எல்லாம் ஆமோதிக்கிறேன்.

ஜெயந்தி சொன்னது…

சின்னப்பிள்ளைகள் உழைத்து வாழ வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

siva சொன்னது…

கண்ணீர் மல்க செய்கிறது ஐயா. விவாதம் பண்ணுவதை நிறுத்திவிட்டு, இவர்களுக்கு உதவி கிடைக்கசெய்தால் போதும் ஏதோ ஒரு வழியில்
ஆயிரம் தீர்வுகளும், திட்டங்களும் உருவாக்கப்டலாம். ஆனால் ஒரு போதும் ஏழைகளுக்கு போய்ச்சேராது. இது ஆராய்ச்சி செய்யும் நேரமில்லை.

அருண் பிரசாத் சொன்னது…

"இவர்களை பெற்றவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் என்ன செய்யலாம்?.."

அன்னியன் போல கொடுரமாக கொல்லவேண்டியதுதான்

Ranjithkumar சொன்னது…

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

வால்பையன் சொன்னது…

செருப்பாலயே அடிக்கலாம்!

வால்பையன் சொன்னது…

குழந்தைகள் வருமானம்,
பெற்றோர்க்கு அவமானம்!

http://rkguru.blogspot.com/ சொன்னது…

இதயத்தை குலுக்கும் முகங்கள் நம் முகத்திற்கு காட்டியதற்கு உங்கள் உங்க பதிவு முகம் தெரிகிறது

பெயரில்லா சொன்னது…

முதலாளித்துவத்தை ஒழிப்பது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அப்படியே முன்ன வந்தாலும், அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அரசியலில் சேரவேண்டும் என்று சொன்னால் லூசா நீ என்று என்னைப் பார்த்து சிரிப்பவர்கள் அதிகம். எங்கோ சில வரிகளைப் படித்தது ஞாபகம் வருகிறது; "சாபப்பட்ட பூமியில் வாழ்ந்து தான் தொலைப்போமே". இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், மாதத்தில் இரண்டு பேர் என்றாலும் ப்ரோப்போஸ் பண்ணுவார்கள். பதில் சொல்ல முதலேயே 'குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்' என்றது வரை பேசுவார்கள். "அப்படியா, எனக்கு பெருசா கொள்கைகள் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும்" என்று நான் கூறி முடிக்க முதலே பிறங்கால் (குதிக்கால்) பிடறியில் அடிபட ஓடி விடுவார்கள். அதற்கு பிறகு நடப்பது கொடுமை. நான் ஏதோ சொல்லக் கூடாததை சொல்லியது மாதிரி ஒரு இரண்டு வாரத்துக்கு ஒரு மாதிரி பார்ப்பார்கள். இன்ஃபக்ட் நான் படிப்பது ஆஸ்ரேலியாவில். பல இன மக்களும் படிக்கற பல்கலைக்கழகம். கிரீஸ்காரனில் இருந்து இலங்கையர் வரை யாருமே குழந்தையை தத்தெடுக்க தயாராகவில்லை. இதற்கு என்ன சொல்கிறீர்கள். Btw, மாற்றம் என்பது வீட்டில் ஆரம்பிப்பது. அதுவும் உங்களில், பின்னர் உங்கள் குடும்பத்தில், என்று கடைசியாக நாட்டில் முடியும்.

பெயரில்லா சொன்னது…

குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்கக் கூட வேண்டாம். ஒரு குழந்தைக்கான செலவையாவது நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமே. பார்ட்டி என்று குடி வகைக்கு எவ்வளவு செலவு செய்கிறோம். அதில் கொஞ்சத்தைக் கிள்ளிக் கொடுக்கவா முடியாது.

vasan சொன்னது…

ஆளும் குடும்ப‌ங்க‌ளின் வாரிசுக‌ள் நாடாள‌, ப‌யிற்சியில்,
காஷ்மீர் முத‌ல் தென்கோடிவ‌ரை(ஷேக் அப்துல்லா டு க‌ருணாநிதி)
கடைக்கோடி ம‌க்க‌ளின் வாரிசுக‌ள், ப‌சியாற‌, ப‌ட்ட‌ரையில்,
குப்பைக‌ளில்,கூலிக‌ளாய். ராஜாஜியின் "த‌க‌ப்ப‌ன் தொழில் பிள்ளைக்கு"
திட்ட‌ம் தீர்க்க‌மாய். அவ‌ர் 'தீர்க்க‌த‌ர‌சி' தான்,

ரமேஷ் வீரா சொன்னது…

இவர்கள் வாழ்கையை மாற்ற வேண்டிய அரசு ......... எபோதும் வளர்ந்துகொண்டே இருக்கும் தமிழை வளர்கிறதாம்...........................................................என்ன கொடுமை அண்ணா ..... இவர்களும் இந்த தேசத்தின் குடிமக்கள்தானே .........................................எப்போது மாறும் இந்த நிலை ?.. விடை தெரியா வினாவுடன் ??....

கபிலன் சொன்னது…

ஏழ்மையை இயன்றவரை போக்க அரசாலேதான் முடியும்.
இவர்களுக்கு அதைவிட நிறைய வேலைகள் இருக்கிறதே.
போராட்டமெல்லாம் இவர்களுக்கு முன் எடுபடாது.
ஒரு மணி நேரத்தில் நம்மையும் படமாக்கி விடுவார்கள்.
எனக்கு தெரிந்ததெல்லாம், நம்மால் முடிந்ததை (அவர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி )
தொடர்ந்து செய்ய வேண்டும். என் அலுவலக நண்பர்கள் நிறையபேர் நிறுவனம் அமைத்து இயங்குகிறார்கள்.
நாங்களும் எங்களால் இயன்றவரை செய்கிறோம்.
மனிதாபிமானமுள்ள அரசு நம்மக்கு எட்டா கனியே.

பெயரில்லா சொன்னது…

குழந்தை தொழிலாளர் முறை நம்முடைய நாட்டில் இருப்பது அறிந்த செய்தி.ஆனால் இங்கு புகைப்படங்களாக பார்க்கும் போது மனம் கனக்கிறது.பெற்றொர்களை விட அரசாங்காம் தான் முக்கிய காரணம் என்று சொல்வேன்