21 ஜூலை, 2010

TED - ஓர் அறிமுகம்.,மற்றும் இரண்டு ஆய்வுகளும் ஒரு சேவையும்..

TED என்பது TECHNOLOGY ENTERTAINMENT AND DESIGN என்ற விரிவின் சுருக்கம்...

உங்களை யோசிக்கவைக்கும் ஒரு பேச்சு, போராட்டக்களம் வாழ்வாக கொண்ட  மனிதர்கள்  அல்லது ஆய்வு அல்லது மாற்றத்திற்கான ஒரு புதிய கண்டுபிடிப்பு பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் எனில் நீங்கள் அவசியம் செல்லவேண்டிய தளம் இது. 

உங்களின் ஆராய்சிகள் மற்றும் சாதனைகள் பற்றி அவர்களுக்கு அனுப்பி வைத்தால் சரியானது என்றால் உடனே பரிசீலிப்பார்கள்.. இதில் இணைக்கப்பட்ட பேச்சுக்கள் அத்தனையும் பிரசித்தி பெற்றவை. நமது இந்தியாவில் நீங்கள் எல்லோரும் பரவலாக அறிந்துள்ள சுனிதா கிருஷ்ணன் மற்றும்  பிரணவ் மிஸ்ட்ரி போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு சுனிதாவின் சேவையும், பிரனவின் அதிசயிக்கத்தக்க கண்டு பிடிப்பும் வெளிவந்துள்ளது..

உலகளாவிய மாற்றங்களை, கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை வெளிக்கொண்டு வருவதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.. நான் பார்த்த ஆயிரக்கணக்கான வலைதளங்களில் முதல் பத்து இடத்தில் முதல் இடத்தை இது  என் மனதில் பிடித்து இருக்கிறது. பெரும்பாலும் வியாபார சம்பந்தமான வலைபக்கங்களை மட்டுமே அதிகம் நாடும் நான் இந்த வலைபக்கதிற்கு வந்த பிறகுதான் உலகளாவிய பொதுவான கண்ணோட்டத்தில் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தேன்..

எல்லா பேச்சுகளுக்கும் ENGLISH SUB TITLE இருக்கிறது. தமிழில் இதுவரை வரவில்லை.. நண்பர்களுடன்  பேசி தமிழையும் அதற்குள் கொண்டு வர ஆவன செய்ய முடியுமா என முயற்சி செய்கிறேன்.

நீங்கள் அனைவரும் கணினியை கையாளத் தெரிந்தவர்கள்.. TED தளம் உங்களுக்கு விருப்பமானதாக அமைந்தால் நீங்கள் கொஞ்சம் மூழ்கிப் பாருங்கள்.. இல்லை நேரமில்லை சில முன்னணி பேச்சுகள் அல்லது ஆய்வுகள் பற்றிய என்னுடைய பார்வையை என் மூலம் அறிந்து கொள்ள விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. முடிந்தவரை அவற்றை உங்களுக்கு தருகிறேன்..

TED வலைபக்கத்தில் உலகின் முன்னணி பத்து உரைகளின் தொகுப்பும், இந்தியாவின் பத்து முன்னணி உரைகளின் தொகுப்பும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. 

இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியை வளர்ந்த மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு திரு. ஹான்ஸ் ரோஸ்லிங் பேசியிருப்பதுடன், நாம் அந்த வளர்ச்சியை எப்போது எட்டுவோம் எனவும் ஆய்வு செய்திருப்பார்.. இதுவும் ஒரு மிக முக்கியமான பேச்சு..

மிக சுவாரஸ்யமான உரையாடலுடன் கூடிய அவரின் பேச்சுகள் நம்மை கவர்ந்திழுக்கும் நிதர்சனம்..

ஆனால் அடிமைகளாய் வாழும் மக்களை கொண்ட தேசமாகவும் நாம்தான் இருக்கிறோம்.. கெவின் பெல்ஸ் உலகளாவிய ஆய்வில் இந்தியா மற்றும் நேபாளையும் பற்றி பேசியிருக்கிறார்.. தலைமுறைகளாக இந்தியாவில்தான் அடிமைகள் இருக்கிறார்கள்..
 

முன்பெல்லாம் வீதிகளில் நீங்கள் கரடிகளை வைத்து வித்தை காட்டுபவர்களை பார்த்திருப்பீர்கள், இப்போது எங்கேயும் நீங்கள் அதனை பார்க்க முடியாது அது ஒரு தனி மனித சாதனை.. கார்த்திக் சத்யநாராயணா கரடிகளை மீட்டதோடு மட்டுமல்லாது, அதை கொண்டு மட்டுமே வாழ்வை நகர்த்தியவர்களுக்கு மாற்று வாழ்க்கை அமைத்து தந்திருப்பார்.

இன்றைய நமது பார்வை கார்த்திக் பற்றியதுதான்.. வெறும் இஸ்லாமிய மத கல்வியை மட்டும் படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமலே கரடியை வைத்து வித்தை காட்டி ஒரு தனிப்பட்ட இனமே இந்தியாவில் வாழ்ந்திருக்கிறது. அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் பிறந்து விட்டாலே ஒரு கரடிக் குட்டியை வாங்கி அவனுடன் பழக விடுவது.. அவனும் கரடியும் வளர்ந்தபின் தேசம் முழுவதும் பயணம் செய்து சம்பாதிப்பது இதுவே அவர்கள் வாழ்வியல் முறை.

திரு.கார்த்திக் இவர்களுடம் பழகி அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களும் இவரை புறிந்து கொள்ள வைத்து நீண்ட போராட்டத்துக்குப் பின் மெல்ல அவர்களின் மனதை மாற்றி இன்றைக்கு தனியாக தொழில் பார்த்து வாழும் அளவிற்கு அவர்களை முன்னேற்றி, மேலும் அவர்களிடம் இருந்த கரடிகளை மீட்டு  அதற்கும் புனர் வாழ்வளித்து அளப்பரிய சாதனைகள் செய்திருக்கிறார்.

இந்திய அரசு மிருகவதை மற்றும் காட்டு விலங்குகளை வைத்திருப்பது போன்றவற்றிற்கான சட்டத்தில் இவர்களை சிறையில் தள்ளியதும், இவர்கள் மாற விரும்பியதற்கு ஒரு காரணம் என மாற்றத்திற்கான முயற்சி வெற்றி பெற்றதைக் குறிப்பிடுகிறார் கார்த்திக். இன்று இவர்கள் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கின்றனர்.. 

நமக்கெதுக்கு பொது நலன் என எல்லோரும் ஒதுக்கிப் போக நினைக்கும் இதே காலகட்டத்தில்தான் சுனிதா கிருஷ்ணன், கார்த்திக் சத்யநாராயணா போன்ற மாமனிதர்களும் இயங்குகிறார்கள்..

34 கருத்துகள்:

Ranjithkumar சொன்னது…

நல்ல பகிர்வு அண்ணா.......

Syed Vaisul Karne சொன்னது…

I love this site very much.
It is very informative and so creative. Of course it inspires me too.

Syed Vaisul Karne சொன்னது…

When we continue to watch TED Talks, definitely we'll be bound to lose our pride.

Jey சொன்னது…

Rare info. nice article. thanks Mr.senthil.

Karthick Chidambaram சொன்னது…

நான் அதிகம் விரும்பும் தளங்களில் ஒன்று. உங்கள் அறிமுகம் அருமை.

Paleo God சொன்னது…

அருமையான பகிர்வுங்க செந்தில்.

உங்களைக் கவர்ந்தவைகளை அவசியம் பகிருங்கள். :)

நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்ல பகிர்வு அண்ணா

ஜோதிஜி சொன்னது…

இரண்டு மட்டும் முழுமையான கேட்டேன்.

தேடல் வியக்கவைக்கின்றது.

மனம் கனத்துவிட்டது.

தொடர வேண்டும்.........

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு..நன்றி..

ஜீவன்பென்னி சொன்னது…

தேவையான பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

செல்வா சொன்னது…

அருமையான பதிவு அண்ணா .. தொடர்ந்து எழுதுங்கள் ..!! புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்யுங்கள் ..!!

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

அச‌த்த‌ல் ப‌திவு

நாடோடி சொன்னது…

அறியாத‌ த‌ள‌ம்... ப‌கிர்விற்கு ந‌ன்றி செந்தில் அண்ணா..

வடுவூர் குமார் சொன்னது…

விய‌க்க‌வைக்கும் ஒலி/ஒளி த‌ர‌ம் பேச்சின் சாராம்ச‌த்தை எளிமையாக‌ விள‌ங்க‌வைத்துவிடுகிற‌து.நானும் ப‌ல‌ நிக‌ழ்ச்சிக‌ளை பார்த்து ம‌கிழ்ந்திருக்கேன்.

ஹேமா சொன்னது…

செந்தில்....அருமையான தேடல்களும் அதை எங்களுக்கு அறிமுகம் செய்வதும்.

VELU.G சொன்னது…

அசத்தல் பதிவு நன்றி செந்தில்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை

ரமேஷ் வீரா சொன்னது…

தங்களின் தேடல் தொடரட்டும் ................... நல்ல பகிர்வு அண்ணா ............ நன்றி கலந்த வணக்கங்களும் ,,,, வாழ்த்துகளும் .....................

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

செந்தில்,
நான் உங்களுக்கு வழங்கிய விருது வயலெட் கலர் ரோஜா... அதில் "thank you friend .... அன்புடன் ஆனந்தி.."ன்னு இருக்குங்க.. கன்பியூஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..

சாரி.. தயவுசெய்து சிரமம் பாராது, மாற்றி கொள்ளுங்க, செந்தில்.. உங்க நட்பிற்கு நன்றி.. :-))

க ரா சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி செந்தில் அண்ணா :)

Jackiesekar சொன்னது…

அற்புதமா எழுதி இருக்க செந்தில்...நல்ல இன்பர்மேசன்..

கமலேஷ் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே...

தமிழ் உதயம் சொன்னது…

அனைவருக்கும் அவசியமான தளம். பகிர்ந்தமைக்கு நன்றி.

நேசமித்ரன் சொன்னது…

மிக அவசியமான பகிர்வு .பதிவுக்குப் பின் இருக்கும் உழைப்பு மிளிகிறது

நன்றியும் அன்பும் செந்தில் சார்

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் சிறப்பாக இருக்கிறது பதிவு நண்பரே . பதிவின் ஒவ்வொரு இடங்களிலும் உங்களின் ரசனை தெரிகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல பதிவு..........வாழ்த்துகள் பிரதர்.....

ராசராசசோழன் சொன்னது…

வரவேற்க தக்க பதிவு...

வினோ சொன்னது…

சின்ன மண்டைக்குள்ள அறிவு வளருதேன்னு பார்த்தேன்... நம்ம KPR அண்ணே தான் காரணம்...அண்ணே பகிர்வுக்கு நன்றி..

காமராஜ் சொன்னது…

ரொம்ப ரொம்ப சுவரஸ்யமானதும்,
தேடுதலுக்கு உத்வேகமளிக்கும் பதிவும்
இது செந்தில்.

அபாரம் தொடருங்கள்.

Unknown சொன்னது…

அருமையான பகிர்வு....

kathir சொன்னது…

மிக அருமையான விமர்சனம் ..தொடருங்கள்

kathir சொன்னது…

மிக அருமையான விமர்சனம் ..தொடருங்கள்

kathir சொன்னது…

மிக அருமையான விமர்சனம் ..தொடருங்கள்