Michel Gundry |
இந்தப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க தத்துவம் கலந்த நகைச்சுவை படம் எழுதியவர் சார்லி காப்மன் ( Charlie Kaufman) இயக்கியவர் மிக்கேல் கொண்ட்ரி (Michel Gundry) ..ஒரு சாதாரண படமாக எடுத்து அதில் மனித நடவடிக்கைகளை நகைச்சுவையாக கையாண்டிருப்ப்பார்கள்.. இதில் படமாகிய சம்பவங்கள் நம்மையே கேலியாக பார்க்க வைக்கும்.. படத்தை நான்கு பேருடைய பார்வையில் நகர்த்தியிருப்பார்கள், முக்கியமாக டாக்டரின் கேரக்டர் இறந்தபின் பேசுவதாக முழுக்க வெண்மையான பேக் டிராப்பில் படமாக்கியிருப்பார்கள்..
மனித மனங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை ஆராயும் படம்..
Charlie Kaufman |
மனிதன் இயற்கையாகவே எப்படி விலங்குகளில் இருந்து வேறுபடுகிறான்..? நடவடிக்கைளிலா?, உடைகளிலா?, பழக்க வழக்கங்களிலா?அல்லது மொழிகளிலா? என்று அலசியிருப்பார்கள், படத்தில் நாம் எப்படி இதிலிருந்து வேறுபடுகிறோம் என மிக அழகாக காட்டியிருப்பார்கள்.. மொழியே அறியாத, நகர வாழ்க்கை பற்றி புரியாத ஒருவனுக்கு நாம் நாகரீகம் என நினைப்பதை கற்றுத் தந்தால் அவன் மனநிலை எப்படி மாறும் என அழகாக காட்டியிருப்பார்கள், நம் அந்தமான் தீவிலும் அமேசான் காடுகளிலும் நாகரிக மனிதனை, அவன் வாழ்க்கையை விரும்பாத மனிதர்கள் வாழ்கிறார்கள், படத்தில் இன்னும் சில படி கீழறங்கி மொழியே அறியாத விலங்கினை போல் வாழும் மனிதனின் புரிந்துகொள்ள பழகும் தன்மையும், நகரத்தில் உடல்முழுதும் விலங்குகள் போல் முடி வளர்ந்த பெண்ணின் மன நிலையம், ஆராய்ச்சியாளரான டாக்டரின் மனநிலையும் ஆரய்ச்சிக்கு உதவும் பெண்ணின் மனநிலையும் அடிப்படையில் செக்ஸ் விசயத்தில் எப்படி சுயம் சார்ந்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு கேரக்டர் வாயிலாகவும் உணர்த்தியிருப்பார்கள், படத்தில் முக்கியமானதே கூண்டுக்குள் பழக்கப்பட்ட இரண்டு எலிகளையும் கேரக்டர் ஆக்கியிருப்பது.
நான்கு கதா பாத்திரங்கள் வழியாக மொத்த கதையும் சொல்லியிருப்பார்கள்:
நாதன் ( NATHAN) : உணர்சிகரமான ஆராய்ச்சியாளர் இவர் எலிகளுக்கு டேபிள் மானர்ஸ் பழக்கி ஆராய்பவர்,
லிலா (LILA): உடல் முழுதும் ஹார்மோன் கோளாறால் முடி வளர்ந்த பெண்
பப் (PUFF): ஒரு காட்டுவாசி விலங்குகள் போல வாழ்பவன்
கப்ரில்(GABRIEL) : பிரெஞ்சு உதவியாலப் பெண், டாக்டரின் ஆய்வுக்கு உதவுகிறாள்
இந்தக் கதையே இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிபடுத்தும் விதம் பற்றி பேசும் படம்
கதை
லிலா ஹார்மோன் பிரச்சினையால் உடல் முழுதும் முடி வளர அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு காட்டில் சென்று வசிக்கிறாள், அங்கிருந்தபடி இயற்கையாக உடைகள் எதுவும் அணியாமல் மிருகங்களுடன் பழகிக்கொண்டு ஒரு புத்தகம் எழுதுகிறாள். அதன் பெயர் " FUCK THE HUMANITY" இது நகர பெண்களிடையே மிகவும் புகழ்ப பெறுகிறது. இப்படியான வாழ்வில் தன் உடலில் உள்ள முடிகளை படிப்படியாக நீக்கும் பெண்ணின் உதவியுடன் ஆரய்ச்சியாளர் நாதனை சந்திக்கிறாள், நாதன் எலிகளுக்கு உணவு மேசையில் எப்படி நடந்து கொள்வது எனப் பழக்குபவர், இந்த ஆய்வு வெற்றிபெற்றால் மனிதர்களையும் எளிதாக பழக்கலாம் என்பதே இவரின் ஆய்வு, லைலாவுக்கும் நாதனுக்கும் புரிதல் வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஒருநாள் நாதனை தான் வாசித்த காட்டுக்குள் அழைத்துசென்று காட்டுகிறாள், அப்போது அங்கு ஒரு மனிதனை ஆடையின்றி பார்கிறார்கள், தன்னை ஒரு குரங்காகவே கற்பனை செய்து கொண்ட அம்மனிதன் இவர்களைபார்த்து தப்பிக்கிறான், அப்போது லிலாவும் தன் ஆடைகளை களைந்துவிட்டு அவனைப் பின்தொடர்கிறாள், லிலாவைப் பார்த்ததும் அக்காட்டு மனிதன் சுயமைதுனம் செய்கிறான், அந்த கிறக்கத்திலேயே தவறி விழுந்து மயக்கமுறுகிறான், நாதன் அவனை தன் ஆய்வுக் கூடம் கொண்டு வந்து எலிகளைப் பழக்குவது மாதிரி அவனையும் பழக்குகிறார், ஆனால் லிலா இதனை எதிர்க்கிறாள், அவர் தன் ஆய்வை லிலாவுக்கு தெரியாமல் தொடர்கிறார்.
நாதன் அந்த காட்டு மனிதனுக்கு தன் பிரெஞ்சு உதவியாளரிடம் பெயர் வைக்க சொல்கிறான், அவள் எதற்கு தன்னை பெயர் வைக்க சொல்கிறீர்கள் எனக் கேட்க, அம்மனிதனுக்கு நாம் இருவரும் பெற்றோர் மாதிரி, எனவே நம் குழந்தைக்கு நீயே பெயர் வை என்கிறார், அந்தக் கணம் முதல் கப்ரில் நாதனை காதலிக்கிறாள், அந்தக் காட்டு மனிதனுக்கு தன் செல்ல நாயின் பெயரான பப் என்று பெயர் வைக்கிறாள், நாதன் பப்பை உடலியல் ரீதியாக துன்புறுத்தி அவனுக்கு சாப்பிடுவது, பேசுவது, படிப்பது, பாடுவது என அத்தனையும் கற்றுக் கொடுக்கிறார், ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் பப், இதனைக் கற்றுக் கொண்டால்தான் நம்மை வெளியே விடுவார்கள் எனப் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறான்.
இப்படியான நாட்களில் கேப்ரில் நாதனைக் காதலிப்பதை அவனிடம் சொல்கிறாள், ஆரம்பத்தில் மறுக்கும் நாதன் ஆவலுடன் போனில் பேசும்போது குளியல் அறையில் இருந்துகொண்டு யாரெனக் கேட்க்கும் லிலாவை பார்கிறார், அப்போதுதான் அவள் உடல் முழுதும் முடியுடன் இருக்கும் பெண், யாருக்கும் தெரியாது சவரம் செய்துகொள்கிறாள் எனத் தெரிகிறது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி நாதன் கோபித்துக் கொண்டு லாபிற்க்கு வருகிறார், அங்கிருக்கும் கேப்ரிளுடன் பப் பார்க்க அவன் முன்னிலையில் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். இதனைப் பார்த்த பப் ஒரு முழு சராசரி மனிதனாக மாறுகிறான், அவனை இருவரும் வெளி உலகிற்கு அழைத்தவர அவனுக்கு செக்ஸ் தேவைபட அதற்காக இரவு வேளைகளில் அதற்கான பெண்களைதேடி போவான், இதற்கிடையில் கேப்ரில் நாதனை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவாள்.
நாதன் தன் ஆய்வின் வெற்றியை உலகுக்கு அறிவித்து பப் பற்றி அவனை மீட்டது பற்றி சொல்லும் உரைகள் பிரபலம் ஆக, நாதனும் கேப்ரிலும் மிகவும் நெருக்கமாவார்கள், இதற்கிடையில் லேசர் சிகிச்சை மூலம் தன் உடல் முடியை நீக்கிய லிலா நாதனை தன்னை நோக்கி திருப்ப முயல்வாள். ஆனால் அதற்குள் பப்க்கும் கேப்ரிளுக்கும் ஒரு புரிதல் வரும். இதனை அறியாத லிலா பப் -ஐ கடத்தி சென்று மீண்டும் அவனை காட்டுக்குள் வாழப் பழக்குவாள், அங்கு பபும் லிலாவும் ஆடைகள் இன்றி வாழ்வார்கள். பப்பை தேடி வரும் நாதன் காட்டுக்குள் லிலாவைப் பார்த்ததும் அவளைக் கொல்ல முயற்சிக்க நடைபெறும் சண்டையில் துப்பாக்கி பபிடம் கிடைத்து நாதனைக் கொன்று விடுவான்.
கொலைப்பழியை லிலா சுமந்துகொண்டு சிறை செல்ல, அதற்கு பரிகாரமாய் பப் தன் வாழ்வை பற்றி உலகிற்கு சொல்லி தான் வாழ்ந்த காட்டு வாழ்கையே சிறந்தது, தான் மறுபடியும் அதே வாழ்க்கைக்கு திரும்புவேன் என சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறாள். பபும் அப்படியே அறிவித்துவிட்டு ஒவ்வொரு உடையாக கழற்றி வீசிவிட்டு காட்டை நோக்கி நடக்கிறான், அதனை அத்தனை டிவி க்களும் லைவாக படம் பிடிக்க சிறையில் இருந்தபடி அதனைப் பார்க்கும் லிலா கண்ணீருடன் சந்தோசப்படுகிறாள்.
காட்டுக்குள் வந்தவிட்ட பப் சிறிது நேரம் கழித்து சாலையில் வந்து பார்க்கிறான், அங்கு யாரும் இல்லாதபோது மெதுவாக ஒரு கார் வந்து நிற்கிறது, அதனை ஒட்டி வரும் கேப்ரிளுடன் சாப்பிட்டு விட்டு முத்தம் கொடுத்தவாறே கார் சென்று மறைகிறது. அப்படியே சாலை ஓரம் நாதனால் பழக்கப்பட்ட எலிகள் இரண்டும் காட்டு வாழ்க்கை பிடிக்காமல் நகரத்தை நோக்கி கிளம்புவதாக படத்தை முடித்து இருப்பார்கள்.
Popular dialogs;
-------------------
Nathan talking himself in his grave:
l don't even know what sorry means anymore. lt's odd. When l was
alive, l knew. Maybe it was all l knew. But here. sorry is
meaningless. Love is meaningless. Jealousy is meaningless.What is love
anyway? From my new vantage point, l realize that love is nothing more
than a messy conglomeration of need desperation, fear of death and
insecurity about penis size. But l'm not judging it. I know how
miserable it is to be alive. Listen.. l don't want to be dead yet.
Once Nathan discussed with another psychologist about his table
manners teaching:
Psychologist: early childhood indoctrination has something to do with
your interest in table manners in the present?
Nathan: Seems a tad convenient, don't you think, Wendall?
Psychologist: Well, do you have any thoughts then on where this
passion -might've come from?
Nathan: lt's my work. You can't reduce my passion to parental
indoctrination. Why did Picasso paint? Why did Mozart compose?
Psychologist: Picasso's father was a painter. Mozart's father was a musician.
Nathan: Yes, okay. Now you're being nasty. Now you rejust
showing off. l really didn't come here to be mocked.
Psychologist: Well, that certainly wasn't my intention.
Nathan: lt's my work, Wendall.That's all.
Puff self narrate about his father:
by now that l was raised in the wilderness by an ape. Well, to be
fair, by a man who thought himself an ape. But... it amounts to the
same thing, gentlemen, does it not? After spending years in a mental
hospital for attempting to... take up residence in the ape house of
the local zoo... he did his best to live by your rules. He got a
job... he married a human, they had me. Until a national tragedy
(Kennedy assassinated by human that day) undid all those years of
therapy... and reminded him what the human race was truly about. Apes
don't assassinate their presidents, gentlemen. So, he stole little me
from my human mother... and raised me with love and tenderness and
respect. Until quite recently gentlemen, l believed myself to be an
ape. Although, l didn't know specifically what type. Apes don't think
in terms of type. lt might be argued, gentlemen... that apes don't
even know they're apes. ln retrospect, however, l'd say l was a pygmy
chimp.
Others best works For Charlie Kaufman:
1. Being John Malkovich 2. Adaption 3.Eternal sunshine Of The Spotless Mind
Wikipedia:
Human Nature - Trailer
Human Nature - Restaurant Scene
29 கருத்துகள்:
எப்படிண்ணே இந்த மாதிரி படம்லாம் உங்களுக்கு கிடைக்குது. நல்ல விமர்சனம்..
அறிமுகப்படுத்தியதற்கு நன்றிண்ணே. டோரண்ட்ல போட்டுட்டேன் பார்க்கவேண்டியதுதான்...
பகிர்ந்தமைக்கு நன்றி.
கலக்கல் படம் போல.... உங்கள் விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். இனி தான் பார்க்க வேண்டும்.
வித்தியாசமான படம். விரிவான அலசல். அருமை.
ஆனால் நடுநடுவே சொன்னதையே சொல்வது விறுவிறுப்பைக் குறைக்கிறது.
//பப்பை தேடி வரும் நாதன் காதுக்குள் லிலாவைப் பார்த்ததும் அவளைக் கொள்ள முயற்சிக்க //
இந்த வரியில் எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்.
வாழ்த்துக்கள்.
முதல் விமர்சனம் தான் நானும் சொல்ல நினைத்தது.
இதெல்லாம் எங்கே போய் இங்கே தேடுறது?
தல பாலாக்கிட்டே கேட்டுட்டு வர்றேன்.
நல்ல விமர்சனம்..
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,நல்ல படத்திற்கான ஒரு நல்ல விமர்சனம்.
சீக்கிரம் பார்க்க வேண்டியது தான். அண்ணே cd இருந்தா கொஞ்சம் அனுப்புங்களேன்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..........கே.ஆர்.பி.செந்தில்
பார்த்துடறோம்...
அப்ப டோரன்டை பிடிச்சிட வேண்டியதுதான்..
கலக்கல் படம் போல.... உங்கள் விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
அப்ப டோரன்டை பிடிச்சிட வேண்டியதுதான்..
எப்போதும் ஆப்லைன், போன் பண்ண ஸ்விச் ஆப். இப்போதான் தெரியுது இவர் எப்போதும் படம் பார்த்து கொண்டுஇருக்கிறார்....
உள்ளேன் ஐய்யா
செந்தில் யூ ட்யூப் ல பாக்கலாமா இந்தப் படத்தை
விரிவான அலசல் உங்களுக்கே உரிய பார்வை
தட்டச்சுப் பிழைகளை சரி பாருங்கள் தோழர்
கே பாக்யராஜ் மாதிரி திரைக்கதையை விளக்கமா சொல்லீட்டீங்க,இனி படம் பார்க்கத்தேவை இல்ல.நல்ல விமர்சனம்
நலல விமர்சனம் அண்ணா ..!! எப்படி இந்த மாதிரி படம் பாக்குறீங்க ..!!
பகிர்ந்தமைக்கு நன்றி.
வீடு(காடு ) திரும்புதல் தவிர்க்கமுடியாத ஒன்று தானே !?
கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய எனது லிஸ்ட்டில் குறித்துக் கொண்டேன் .
நன்றிகள் தோழர் !
நல்ல விமர்சனம்... தேடிப்பிடித்து பார்க்கிறீர்கள்... பகிர்விற்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி செந்தில்
அருமையான படம், அருமையான விமர்சனம், முழுப்படமும் பார்த்த திருப்தி! வாழ்த்துக்கள் சார்! கலக்குறீங்க!
பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
அண்ணே நீங்க எங்கியோ போயிட்டீங்கண்ணே!
அன்பின் செந்தில்
பகிர்வினிற்கு நன்றி - நல்லதொரு விமர்சனம்
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
வாழ்த்துகள் செந்தில், தங்களின் இந்த விமர்சனம், யூத்புல் விகடனில் நல்ல வலைப்பகுதி (குட் ப்ளாக்ஸ்) யில் வந்துள்ளது, தொடர்ந்து உங்களின் பணம் தொடரும் இது போல் விரிவடைய வாழ்த்துகள், தொடர்பிற்கு: http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp
உங்களுக்கும்... விகடனுக்கும்..
மிகுந்த நன்றிகள் மார்கண்டேயன்..
கருத்துரையிடுக