20 ஜூலை, 2010

பயோடேட்டா - சீமான்


பெயர்                                   : சீமான் 


இயற்பெயர்                        : செபஸ்டியன் சீமான் 
தலைவர்                             : நாம் தமிழர் இயக்கம் 
துணை தலைவர்             :வெளி கட்சில இருந்து ஆள் வரலை 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :XXXXXXXX
வயது                                   : தலைவர் ஆகும்  வயது 
தொழில்                              : சினிமா
பலம்                                     : மாற்று அரசியலை விரும்புகிறவர்கள் 
பலவீனம்                             : உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடுவது 
நீண்ட கால சாதனைகள்        : சிறந்த பேச்சாளர் 
சமீபத்திய சாதனைகள்           : மாணவர்கள் விரும்பும் தலைவர் 
நீண்ட கால எரிச்சல்                : சிங்களர்கள் மற்றும் மலையாளிகள் 
சமீபத்திய எரிச்சல்                   : சோனியா அரசுக்கு தாளம் போடும் கலைஞர் 
மக்கள்                                          : தன் மானத்துடன் வாழ வேண்டியவர்கள் 
சொத்து மதிப்பு                          : எதுவும் இல்லை 
நண்பர்கள்                                  : பிரபாகரனையும், தமிழையும் நேசிப்பவர்கள் 
எதிரிகள்                                      : ராஜபக்சே ஆதரவாள இந்திய அரசியல்வாதிகள் 
ஆசை                                           : தமிழீழம் அமைய 
நிராசை                                       : சினிமா 
பாராட்டுக்குரியது                    : துணிச்சலும், நல்லதமிழில் உறவுகளே என உரையாடுவதும்  
பயம்                                             : பயம் இருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார் 
கோபம்                                        : கூடப்பிறந்தது..
காணமல் போனவை              :  பிரபாகரன் மட்டுமல்ல.. தமிழர்களின் வீரமும்தான் 
புதியவை                                    : தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் சிறை சென்றது.. 
கருத்து                                        : செத்துப் போன மீனவர்களுக்காக இந்திய அரசும், தமிழக அரசும், மக்களும் கவலைப்படாதபோது இவர் மட்டும் கொடுத்த எதிர்ப்புக் குரலை  பாதிக்கப்பட்ட மீனவர்களும் கவனிக்காமல் விட்டது ஆச்சர்யமே..
டிஸ்கி                                          : இரண்டு பெரிய இயக்கங்களாலும், இதர சுயநல இயக்கங்களாலும் வெறுத்துப்போன நடுநிலையாளர்களை மற்றும் மாணவர்களை  ஈர்க்கும் அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது..

47 கருத்துகள்:

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

சீமான் தே.பா.ச .வில் கைது செய்யப்பட்டமைக்கு எனது தனிப்பட்ட கண்டனங்கள் ...

பெயரில்லா சொன்னது…

காணமல் போனவை : பிரபாகரன் மட்டுமல்ல.. தமிழர்களின் வீரமும்தான்//முற்றிலும் உண்மை...சீமான் பெசவே கூடாது என்ற அடிபடையில் நடந்திருக்கும் கைதை கண்டிக்கிறேன்.

Karthick Chidambaram சொன்னது…

//அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால்// - தேர்தல் அரசியல் தேவையா ?

பெயரில்லா சொன்னது…

ஆதரவில்லாமல் சீமானின் குரல் பலவீனமாய் ஒலிக்கிறது. எங்கே போய் விட்டார்கள் இந்த சுரணை கெட்ட தமிழர்கள் எல்லாம் ..... எவன் செத்தால் என்ன எவன் பிழைத்தால் என்ன, என்ற எம் தமிழினத்தின் எப்போ மாறும் .....

நாடோடி சொன்னது…

உண்மையில் இவ‌ருடைய‌ பேச்சின் வீரிய‌ம் அதிக‌ம்.... ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளில் நானும் பிர‌மித்து இருக்கிறேன்...

ராசராசசோழன் சொன்னது…

சீமானை ராஜ்தாக்ரே மாதிரி பார்கிறார்கள் அது மிகவும் தவறு...மகாராஷ்டிரா( மும்பாய்) என்றோ பல கலாச்சாரங்களை ஏற்றுக் கொண்டு விட்டது...நமது மாநிலம் அப்படியல்ல...

ஜில்தண்ணி சொன்னது…

சிறந்த பேச்சாளர் அதுவும் தமிழினத்துக்காக குரல் கொடுப்பவர் சீமான்

இரு பெறும் இயக்கங்களின் பணத்திற்க்கும்,அதிகாரத்திற்க்கு முன் இவரை தூள் தூளாக்கிவிடுகின்றனரே

பார்ப்போம் வருங்காலத்தில்

vasu balaji சொன்னது…

டிஸ்கி மிகச்சரி:)

தமிழ் உதயம் சொன்னது…

நடுநிலையாளர்களை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது////

நடக்குமா. நடக்க வாய்ப்புள்ளதா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருமையான BIODATA

Jey சொன்னது…

பார்ப்போம், ஏதும் மாற்றம் ஏற்படுகிறதாஎன்று...

பதிவு(பயோடேட்டா) அருமை.

அருண் பிரசாத் சொன்னது…

தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் தமிழன் மதிக்கமாட்டான் என்பதற்கு நல்ல உதாரணம், சீமான்

தனி காட்டு ராஜா சொன்னது…

சீ"மான்" அல்ல சிங்கம் .....

ஜோதிஜி சொன்னது…

கருத்து : செத்துப் போன மீனவர்களுக்காக இந்திய அரசும், தமிழக அரசும், மக்களும் கவலைப்படாதபோது இவர் மட்டும் கொடுத்த எதிர்ப்புக் குரலை பாதிக்கப்பட்ட மீனவர்களும் கவனிக்காமல் விட்டது ஆச்சர்யமே..

குறையொன்றும் இல்லை......

சசிகுமார் சொன்னது…

கண்டிப்பாக மாற்றத்தை விரும்புகிறேன், வருவாரா அரசியலுக்கு.

vasan சொன்னது…

டிஸ்கி
/இரண்டு பெரிய இயக்கங்களாலும், இதர சுயநல இயக்கங்களாலும் வெறுத்துப்போன நடுநிலையாளர்களை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது/
மிக‌ச்ச‌ரியான‌ கருத்து, மேலும் சில‌
ஒத்த‌க‌ருத்தின‌ரை அர‌வ‌ணைக்க‌வும்
வேண்டும். முத்துக்குமாரின் தியாக‌ம்
முன்னிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.
இந்தி எதிர்ப்பு போர‌ட்ட‌த்திற்கே,
க‌ழ‌க‌ அமைப்புக்கு,எல்லாத்
த‌லைவ‌ர்களையும் தாண்டி,
சின்ன‌ச்சாமியின் தீக்குளிப்பு தேவைப்ப‌ட்ட‌து.
'டிஸ்கி' அர்த்த‌ம் என்ன‌ ஆர்கேபிசெ?

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

//இரண்டு பெரிய இயக்கங்களாலும், இதர சுயநல இயக்கங்களாலும் வெறுத்துப்போன நடுநிலையாளர்களை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது//
சீமான் ஏன் முதல்வருக்கு எதிராய் ஏன் பேசுவதில்லை .
சரி ஏன் சூர்யா நடிக்கும் படத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார் அதை தடை செய்ய மாட்டேன் அது தம்பியின்
படம் என்கிறாரே செந்தில் ...............??????????????? இது எப்படி நியாயம்

நேசமித்ரன் சொன்னது…

இரண்டு பெரிய இயக்கங்களாலும், இதர சுயநல இயக்கங்களாலும் வெறுத்துப்போன நடுநிலையாளர்களை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் அரசியல் பாதையை சீமான் தேர்ந்து எடுத்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது

முற்றிலும் உண்மை

Ranjithkumar சொன்னது…

நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்லுறது சரியா தானே இருக்கு.....

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பயோடேட்டா அருமை

சௌந்தர் சொன்னது…

வழக்கம் போல் பயோடேட்டா சூப்பர்

Unknown சொன்னது…

கருத்து //கருத்து: செத்துப் போன மீனவர்களுக்காக இந்திய அரசும், தமிழக அரசும், மக்களும் கவலைப்படாதபோது இவர் மட்டும் கொடுத்த எதிர்ப்புக் குரலை பாதிக்கப்பட்ட மீனவர்களும் கவனிக்காமல் விட்டது ஆச்சர்யமே..//

ஆச்சர்யமே இல்லை

தமிழன் தமிழன்தான்.

ஜெய்லானி சொன்னது…

@@@சசிகுமார்--//கண்டிப்பாக மாற்றத்தை விரும்புகிறேன், வருவாரா அரசியலுக்கு. //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

theyvarajan சொன்னது…

tamilnattin aanmagan seeman

Bibiliobibuli சொன்னது…

சீமான், கடந்தவருடம் ஈழம் வீழ்ந்த போது தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தவர். உங்கள் டிஸ்கி தான் என் கருத்தும்.

ஆனாலும், தமிழ்நாட்டில்/இந்தியாவில் இவர்மீது மட்டும் சட்டங்கள் எட்டுக்கால் பாய்ச்சலில் நியாய தர்மமின்றி பாய்வது இந்திய ஜனநாயகத்துக்கே இழுக்கு. வேதனைக்குரியது.

சில சமயங்களில் யாவாராயினும் நா காக்க, காவாக்கால் அது தமிழினம் சீமானை இழக்க வைத்து விடும் என்று எங்களை கவலைப்படவும் வைக்கிறார்.

எனக்குப் பிடித்த இன்னோர் பயோடேட்டா, நன்றி.

Mohamed Faaique சொன்னது…

பலம்: தமிழ் , தமிழர் என்று உணர்ச்சியூட்டி பேசினால் பின்னல் வர ஒரு வேலையில்லாக்கூட்டம் இருப்பது..
சாதித்தது : சொந்தக்கட்சி (ஈழத்தமிழர்களுக்கு எதுவுமில்லை)

ரமேஷ் வீரா சொன்னது…

ஆக்கபூர்வமான , அருமையான பதிவு,,,,, வாழ்த்துகளும் வணக்கங்களும் ...........அண்ணா .........
அப்துல்கலாம் பற்றி ஒரு biodata போடுங்கள் அண்ணா

vinthaimanithan சொன்னது…

தமிழ்த்தேசிய அரசியல் இச்சூழலில் மிக அவசியமான ஒன்று என்றாலும்கூட அதை முன்னெடுக்க சீமான் போன்ற உணர்ச்சிக்குவியலாய் இருப்போர் எந்தளவுக்குத் திறன் வாய்ந்திப்பார்கள் என்று புரியவில்லை. அவரது பின்புலம் என்ன? அவர் முன்னெடுக்கும் கொள்கைகள் யாவை? தமிழ்த்தேசியம் என்று அவர் வரையறுப்பது எதை? எனப்பலப்பல கேள்விகள்! விடைகளின்றி அவரை ஆதரிப்பதென்பது மேலும் தமிழினத்தை ஆக்கப்பூர்வமானதென்றெண்ணுகிறீர்கள்ளா?

vinthaimanithan சொன்னது…

தமிழ்த்தேசிய அரசியல் இச்சூழலில் மிக அவசியமான ஒன்று என்றாலும்கூட அதை முன்னெடுக்க சீமான் போன்ற உணர்ச்சிக்குவியலாய் இருப்போர் எந்தளவுக்குத் திறன் வாய்ந்திப்பார்கள் என்று புரியவில்லை. அவரது பின்புலம் என்ன? அவர் முன்னெடுக்கும் கொள்கைகள் யாவை? தமிழ்த்தேசியம் என்று அவர் வரையறுப்பது எதை? எனப்பலப்பல கேள்விகள்! விடைகளின்றி அவரை ஆதரிப்பதென்பது மேலும் தமிழினத்துக்கு ஆக்கப்பூர்வமானதென்றெண்ணுகிறீர்கள்ளா

vinthaimanithan சொன்னது…

அவசரத்தில் எழுத்துப்பிழைகள் மலிந்து தட்டச்சி விட்டேன். மன்னிக்கவும்

அன்புடன் நான் சொன்னது…

அண்ணன் நேர்மையான கோபக்காரர்.
அவரின்... ஆர்வம்,மொழிக்காதல்,ஈழவேட்கை,
பேச்சு... அத்தனையும் வியப்பவன் மதிப்பவன்....

மீனவர்களுக்கு குரல் கொடுத்தும் ... அண்ணனின் கைதுக்கு அவர்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது... எவ்வளவு முரண்பாடாக உள்ளது... பாத்தீர்களா செந்தில்?

அண்ணனை பற்றிய பகிர்வுக்கு என் நன்றி.

vinthaimanithan சொன்னது…

ஆமாம்... சீமான் எந்தவகையில் மாற்று அரசியலை முன்னெடுக்கின்றார் என்று கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா?

vinthaimanithan சொன்னது…

ஆமாம்... சீமான் எந்தவகையில் மாற்று அரசியலை முன்னெடுக்கின்றார் என்று கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா?

Thamiz Priyan சொன்னது…

வெறும் வாய்ப்பேச்சு வீரம் மட்டுமே அவரிடம் உள்ளது.. ஒரு அமைப்பையோ, உறுதியான கொள்கைகளையோ கொண்டுள்ள இயக்கத்தை நடாத்தும் திறமை அவரிடம் இல்லை.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

I like seeman !!

i like this post too ..

ராஜ நடராஜன் சொன்னது…

டிஸ்கிக்கு எனது ஓட்டு!

கூடவே தனிமனித விருப்பத்திற்கு வளையும் தேசிய பாதுகாப்புக்கு சட்டத்திற்கு எனது கண்டனங்கள்.

வால்பையன் சொன்னது…

ஜனநாயக நாடுங்கிறனுங்க பேசுனா அரெஸ்ட் பண்றானுங்க!

Aathavan சொன்னது…

செத்துப் போன மீனவர்களுக்காக இந்திய அரசும், தமிழக அரசும், மக்களும் கவலைப்படாதபோது இவர் மட்டும் கொடுத்த எதிர்ப்புக் குரலை பாதிக்கப்பட்ட மீனவர்களும் கவனிக்காமல் விட்டது ஆச்சர்யமே

ஹேமா சொன்னது…

அத்தனையும் உண்மை செந்தில்.
உங்களையும் பேசவிடாமப் பண்ணிடுவாங்க.பத்திரம்.

Unknown சொன்னது…

சீமான் சிறந்த பேச்சாளர்.

ரோஸ்விக் சொன்னது…

சீமான் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்று நானும் நம்புகிறேன். அது நடக்கவேண்டும்... நன்றி செந்தில்.

sasibanuu சொன்னது…

///சொத்து மதிப்பு : எதுவும் இல்லை


"எதுவும் இல்லை" யா ?? இல்லை "தெரியவில்லை" யா ??

sasibanuu சொன்னது…

///சொத்து மதிப்பு : எதுவும் இல்லை
"எதுவும் இல்லை " யா ?? இல்லை "தெரியவில்லை" யா ??

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பாராட்டுக்குரியது : துணிச்சலும், நல்லதமிழில் உறவுகளே என உரையாடுவதும் //

யெஸ் மாம்ஸ் மதுரையில் என்னோட உறவினர் ஒருவரின் திருமணத்திற்க்கு வந்து உரையாற்றினார் பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்... பாவம் தமிழ்...