30 ஜூலை, 2010

கேபிள் சங்கரின் பிறந்த நாளும், என் நகரத்தின் கவிதையும் ...

இன்றைக்கு நம் பதிவுலக யூத் கேபிள் சங்கரின் பிறந்த நாள்... இந்த வருடம் அவர் திரைப்படம் இயக்கி, திரையுலகிலும் யூத் எனப் பெயரெடுக்க உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்...

நகரத்து சாலைகளில்...
உனக்கு நீ பேசுவது நியாயம் 
எனக்கு நான் பேசுவது நியாயம் 
சமாதனம் செய்ய வந்தவன் பேசியது மட்டும் 
இருவருக்கும் அநியாயம்...

காகம் கரைகிறது,
கவுளியும் ஆமோதிக்கிறது 
விருந்தினர் வராத 
நகரத்து வீட்டில்..

நகரத்து டீக்கடைகளில் 
எப்போதாவது கிடைக்கும் 
ஒரு நல்ல டீ...

எல்லா பெட்ரோல் பங்குகளிலும் 
இலவசமாய்க் காற்றடிக்க 
ஒரு ரூபாயாவது  தர வேண்டும்..

தொலைதூர பயணங்களில் 
இடை நிற்கும் உணவகத்தில் 
வெந்நீரை டீ என்பான் 
நம்பித்தான் குடிக்கவேண்டும்...

கிராமங்களைப்போல் 
நகரங்களில் மனிதர்கள் 
சிரித்தால் சிரிக்காமல் 
சந்தேகமாய் பார்ப்பார்கள்...

முக்கிய சாலைகளில் 
நடக்கும் இடங்கள் 
மாமூலாக 
சிறு வியாபாரிகளுக்கே..

நகர பேரூந்தில் 
எப்போதும் வாங்க முடிவதில்லை 
மீதி சில்லறை ..

நகரத்து ஆட்டோக்களில் 
மீட்டர் இருக்கும் 
பேரம் பேசித்தான் வருவார்கள்..

மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு 
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான், 
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால் 
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...

இப்படியாக வாழும் எனக்கு 
பிடித்துதான் இருக்கிறது 
நகரங்களின் மனிதர்களை...

29 ஜூலை, 2010

HUMAN NATURE மனித மனங்களைப் பற்றிய ஒரு விரிவான அலசல்..18+

                                                   

Michel Gundry
இந்தப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க தத்துவம் கலந்த நகைச்சுவை படம் எழுதியவர் சார்லி  காப்மன் ( Charlie Kaufman)  இயக்கியவர் மிக்கேல் கொண்ட்ரி (Michel Gundry) ..ஒரு சாதாரண படமாக எடுத்து அதில் மனித நடவடிக்கைகளை நகைச்சுவையாக கையாண்டிருப்ப்பார்கள்.. இதில் படமாகிய சம்பவங்கள் நம்மையே கேலியாக பார்க்க வைக்கும்.. படத்தை நான்கு  பேருடைய பார்வையில் நகர்த்தியிருப்பார்கள், முக்கியமாக டாக்டரின் கேரக்டர் இறந்தபின் பேசுவதாக முழுக்க வெண்மையான பேக் டிராப்பில் படமாக்கியிருப்பார்கள்.. 


மனித மனங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை ஆராயும் படம்..

Charlie Kaufman
மனிதன் இயற்கையாகவே எப்படி விலங்குகளில் இருந்து வேறுபடுகிறான்..? நடவடிக்கைளிலா?, உடைகளிலா?, பழக்க வழக்கங்களிலா?அல்லது மொழிகளிலா? என்று அலசியிருப்பார்கள், படத்தில் நாம் எப்படி இதிலிருந்து வேறுபடுகிறோம் என மிக அழகாக காட்டியிருப்பார்கள்.. மொழியே அறியாத, நகர வாழ்க்கை பற்றி புரியாத ஒருவனுக்கு நாம் நாகரீகம் என நினைப்பதை கற்றுத் தந்தால் அவன் மனநிலை எப்படி மாறும் என அழகாக காட்டியிருப்பார்கள், நம் அந்தமான் தீவிலும் அமேசான் காடுகளிலும் நாகரிக மனிதனை, அவன் வாழ்க்கையை விரும்பாத மனிதர்கள் வாழ்கிறார்கள், படத்தில் இன்னும் சில படி கீழறங்கி மொழியே அறியாத விலங்கினை போல் வாழும் மனிதனின் புரிந்துகொள்ள பழகும் தன்மையும், நகரத்தில் உடல்முழுதும் விலங்குகள் போல் முடி வளர்ந்த பெண்ணின் மன நிலையம், ஆராய்ச்சியாளரான டாக்டரின் மனநிலையும் ஆரய்ச்சிக்கு உதவும் பெண்ணின் மனநிலையும் அடிப்படையில் செக்ஸ் விசயத்தில் எப்படி சுயம் சார்ந்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு கேரக்டர் வாயிலாகவும் உணர்த்தியிருப்பார்கள், படத்தில் முக்கியமானதே கூண்டுக்குள் பழக்கப்பட்ட இரண்டு எலிகளையும் கேரக்டர் ஆக்கியிருப்பது.

நான்கு கதா பாத்திரங்கள் வழியாக மொத்த கதையும் சொல்லியிருப்பார்கள்:

நாதன் ( NATHAN) : உணர்சிகரமான ஆராய்ச்சியாளர் இவர் எலிகளுக்கு டேபிள் மானர்ஸ் பழக்கி ஆராய்பவர்,
லிலா (LILA):  உடல் முழுதும் ஹார்மோன் கோளாறால் முடி வளர்ந்த பெண் 
பப் (PUFF): ஒரு காட்டுவாசி விலங்குகள் போல வாழ்பவன் 
கப்ரில்(GABRIEL) : பிரெஞ்சு உதவியாலப் பெண், டாக்டரின் ஆய்வுக்கு உதவுகிறாள் 
இந்தக் கதையே இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிபடுத்தும் விதம் பற்றி பேசும் படம் 

கதை 

லிலா ஹார்மோன் பிரச்சினையால் உடல் முழுதும் முடி வளர அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு காட்டில் சென்று வசிக்கிறாள், அங்கிருந்தபடி இயற்கையாக உடைகள் எதுவும் அணியாமல் மிருகங்களுடன் பழகிக்கொண்டு ஒரு புத்தகம் எழுதுகிறாள். அதன் பெயர் " FUCK THE HUMANITY" இது நகர பெண்களிடையே மிகவும் புகழ்ப பெறுகிறது. இப்படியான வாழ்வில் தன் உடலில் உள்ள முடிகளை படிப்படியாக நீக்கும் பெண்ணின் உதவியுடன் ஆரய்ச்சியாளர் நாதனை சந்திக்கிறாள், நாதன் எலிகளுக்கு உணவு மேசையில் எப்படி நடந்து கொள்வது எனப் பழக்குபவர், இந்த ஆய்வு வெற்றிபெற்றால் மனிதர்களையும் எளிதாக பழக்கலாம் என்பதே இவரின் ஆய்வு, லைலாவுக்கும் நாதனுக்கும் புரிதல் வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஒருநாள் நாதனை தான் வாசித்த காட்டுக்குள் அழைத்துசென்று காட்டுகிறாள், அப்போது அங்கு ஒரு மனிதனை ஆடையின்றி பார்கிறார்கள், தன்னை ஒரு குரங்காகவே கற்பனை செய்து கொண்ட அம்மனிதன் இவர்களைபார்த்து தப்பிக்கிறான், அப்போது லிலாவும் தன் ஆடைகளை களைந்துவிட்டு அவனைப் பின்தொடர்கிறாள், லிலாவைப் பார்த்ததும் அக்காட்டு மனிதன் சுயமைதுனம் செய்கிறான், அந்த கிறக்கத்திலேயே தவறி விழுந்து மயக்கமுறுகிறான், நாதன் அவனை தன் ஆய்வுக் கூடம் கொண்டு வந்து எலிகளைப் பழக்குவது மாதிரி அவனையும் பழக்குகிறார், ஆனால் லிலா இதனை எதிர்க்கிறாள், அவர் தன் ஆய்வை லிலாவுக்கு தெரியாமல் தொடர்கிறார்.

நாதன் அந்த காட்டு மனிதனுக்கு தன் பிரெஞ்சு உதவியாளரிடம் பெயர் வைக்க சொல்கிறான், அவள் எதற்கு தன்னை பெயர் வைக்க சொல்கிறீர்கள் எனக் கேட்க, அம்மனிதனுக்கு நாம் இருவரும் பெற்றோர் மாதிரி, எனவே நம் குழந்தைக்கு நீயே பெயர் வை என்கிறார், அந்தக் கணம் முதல் கப்ரில் நாதனை காதலிக்கிறாள், அந்தக் காட்டு மனிதனுக்கு தன் செல்ல நாயின் பெயரான பப் என்று பெயர் வைக்கிறாள், நாதன் பப்பை உடலியல் ரீதியாக துன்புறுத்தி அவனுக்கு சாப்பிடுவது, பேசுவது, படிப்பது, பாடுவது என அத்தனையும் கற்றுக் கொடுக்கிறார், ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் பப், இதனைக் கற்றுக் கொண்டால்தான் நம்மை வெளியே விடுவார்கள் எனப் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறான்.

இப்படியான நாட்களில் கேப்ரில் நாதனைக் காதலிப்பதை அவனிடம் சொல்கிறாள், ஆரம்பத்தில் மறுக்கும் நாதன் ஆவலுடன் போனில் பேசும்போது குளியல் அறையில் இருந்துகொண்டு யாரெனக் கேட்க்கும் லிலாவை பார்கிறார், அப்போதுதான் அவள் உடல் முழுதும் முடியுடன் இருக்கும் பெண், யாருக்கும் தெரியாது சவரம் செய்துகொள்கிறாள் எனத் தெரிகிறது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி நாதன் கோபித்துக் கொண்டு லாபிற்க்கு வருகிறார், அங்கிருக்கும் கேப்ரிளுடன் பப் பார்க்க அவன் முன்னிலையில் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். இதனைப் பார்த்த பப் ஒரு முழு சராசரி மனிதனாக மாறுகிறான், அவனை இருவரும் வெளி உலகிற்கு அழைத்தவர அவனுக்கு செக்ஸ் தேவைபட அதற்காக இரவு வேளைகளில் அதற்கான பெண்களைதேடி போவான், இதற்கிடையில் கேப்ரில் நாதனை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவாள்.

நாதன் தன் ஆய்வின் வெற்றியை உலகுக்கு அறிவித்து பப் பற்றி அவனை மீட்டது பற்றி சொல்லும் உரைகள் பிரபலம் ஆக, நாதனும் கேப்ரிலும் மிகவும் நெருக்கமாவார்கள், இதற்கிடையில் லேசர் சிகிச்சை மூலம் தன் உடல் முடியை நீக்கிய லிலா நாதனை தன்னை நோக்கி திருப்ப முயல்வாள். ஆனால் அதற்குள் பப்க்கும் கேப்ரிளுக்கும் ஒரு புரிதல் வரும். இதனை அறியாத லிலா பப் -ஐ கடத்தி சென்று மீண்டும் அவனை காட்டுக்குள் வாழப் பழக்குவாள், அங்கு பபும் லிலாவும் ஆடைகள் இன்றி வாழ்வார்கள். பப்பை தேடி வரும் நாதன் காட்டுக்குள்  லிலாவைப் பார்த்ததும் அவளைக் கொல்ல முயற்சிக்க நடைபெறும் சண்டையில் துப்பாக்கி பபிடம் கிடைத்து நாதனைக் கொன்று விடுவான்.

கொலைப்பழியை லிலா சுமந்துகொண்டு சிறை செல்ல, அதற்கு பரிகாரமாய் பப் தன் வாழ்வை பற்றி உலகிற்கு சொல்லி தான் வாழ்ந்த காட்டு வாழ்கையே சிறந்தது, தான் மறுபடியும் அதே வாழ்க்கைக்கு திரும்புவேன் என சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறாள். பபும் அப்படியே அறிவித்துவிட்டு ஒவ்வொரு உடையாக கழற்றி வீசிவிட்டு காட்டை நோக்கி நடக்கிறான், அதனை அத்தனை டிவி க்களும் லைவாக படம் பிடிக்க சிறையில் இருந்தபடி அதனைப் பார்க்கும் லிலா கண்ணீருடன் சந்தோசப்படுகிறாள்.

காட்டுக்குள் வந்தவிட்ட பப் சிறிது நேரம் கழித்து சாலையில் வந்து பார்க்கிறான், அங்கு யாரும் இல்லாதபோது மெதுவாக ஒரு கார் வந்து நிற்கிறது, அதனை ஒட்டி வரும் கேப்ரிளுடன் சாப்பிட்டு விட்டு முத்தம் கொடுத்தவாறே கார் சென்று மறைகிறது. அப்படியே சாலை ஓரம் நாதனால் பழக்கப்பட்ட எலிகள் இரண்டும் காட்டு வாழ்க்கை பிடிக்காமல் நகரத்தை நோக்கி கிளம்புவதாக படத்தை முடித்து இருப்பார்கள்.

Popular dialogs;

-------------------

Nathan talking himself in his grave:

l don't even know what sorry means anymore. lt's odd. When l was
alive, l knew. Maybe it was all l knew. But here. sorry is
meaningless. Love is meaningless. Jealousy is meaningless.What is love
anyway? From my new vantage point, l realize that love is nothing more
than a messy conglomeration of need desperation, fear of death and
insecurity about penis size. But l'm not judging it. I know how
miserable it is to be alive. Listen.. l don't want to be dead yet.


Once Nathan discussed with another psychologist about his table
manners teaching:

Psychologist:  early childhood indoctrination has something to do with
your interest in table manners in the present?
Nathan:       Seems a tad convenient, don't you think, Wendall?
Psychologist:  Well, do you have any thoughts then on where this
passion -might've come from?
Nathan:       lt's my work. You can't reduce my passion to parental
indoctrination. Why did Picasso paint? Why did Mozart compose?
Psychologist:  Picasso's father was a painter. Mozart's father was a musician.
Nathan:       Yes, okay. Now you're being nasty. Now you rejust
showing off. l really didn't come here to be mocked.
Psychologist:  Well, that certainly wasn't my intention.
Nathan:       lt's my work, Wendall.That's all.


Puff self narrate about his father:

by now that l was raised in the wilderness by an ape. Well, to be
fair, by a man who thought himself an ape. But... it amounts to the
same thing, gentlemen, does it not? After spending years in a mental
hospital for attempting to... take up residence in the ape house of
the local zoo... he did his best to live by your rules. He got a
job... he married a human, they had me. Until a national tragedy
(Kennedy assassinated by human that day) undid all those years of
therapy... and reminded him what the human race was truly about.  Apes
don't assassinate their presidents, gentlemen. So, he stole little me
from my human mother... and raised me with love and tenderness and
respect. Until quite recently gentlemen, l believed myself to be an
ape. Although, l didn't know specifically what type. Apes don't think
in terms of type. lt might be argued, gentlemen... that apes don't
even know they're apes. ln retrospect,  however, l'd say l was a pygmy
chimp.




Others best works For Charlie Kaufman:
1. Being John Malkovich  2. Adaption 3.Eternal sunshine Of The Spotless Mind

Wikipedia:


28 ஜூலை, 2010

அவளா..?

நான் எழுதிய இமிக்ரேசன் அனுபவங்கள்- வாக்களர் அடையாள அட்டை பதிவு அதில் சம்பந்தப்பட்ட நண்பர் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது, மீண்டும் பின்னொரு நாளில் பதிவேற்றுகிறேன்...

எனவே வழக்கம்போல் இன்றைக்கு காலை மட்டும் ஒரு கவிதை.. மாலை Human Nature பற்றி எழுதுகிறேன்.. தயவு செய்து தடங்கலுக்கு மன்னிக்கவும்..

டீக்கடையில் நின்றிருந்தபோது 
எதிர் சந்தில் நுழைந்தது 
அவள்தானா?

அவளாகவே இருந்தாலும் 
என்ன செய்ய முடியும் 
டீக்காசை கொடுத்துவிட்டு 
ஓங்கி மிதித்து 
வண்டியை கிளப்பினேன்..

27 ஜூலை, 2010

THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..

நட்சத்திர பதிவர் ஆனதற்கு உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

பொதுவாகவே உலகில் அதிகம் பயன்படுத்துவது திருட்டு பொருட்களே .. சீனா முழுவதுமே எந்த பொருள் வந்தாலும் உடனே காப்பியடித்து மலிவு விலையில் தந்து விடுவார்கள். உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எல்லாமே மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைப்பதையே விரும்புகிறார்கள். அதிலும் இலவசம் என்றால் ஏழைகளை விட பணக்காரர்களே அதைப் பெறுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள்.

பொதுவாகவே இலவசமாக எதையும் கொடுக்க முடியாது.. அமெரிக்காவில் NO FREE LUNCH எனும் புகழ் பெற்ற பழமொழியே உண்டு.. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் இலவசங்களின் அடிமை.. ஆட்சியாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஒட்டு போடும் முட்டாள்கள் நாம். 

இந்தக் கட்டுரை INTELLECTUAL PIRACY பற்றியது.. MICROSOFT CORPORATION தன் OPERATING TOOL களை திருட்டுத்தனமாய் உபயோகபடுத்துவதை முதலில் அனுமதிப்பார்கள்.. அதற்கு நாம் அடிமையானபின் அதன் மேம்படுத்தப்பட்ட SOFTWARE களை  காசு கொடுத்து வாங்கும்படி சொல்வார்கள்.. நாம் எவ்வளவு பெரிய ஜித்தன்கள் அதனையும் ஆட்டைய போட்டு பயன்படுத்துவோம்..

பொதுவாகவே சினிமா அடிமைகள் நாம்.. கட்டற்ற இணைய உலகில் சுடச்சுட அனைத்து மொழி படங்களும் கிடைக்கின்றன.. அதிகம்பேர் பயன்படுத்தும் ஒரு இணையத்தளம் TORRENT இணையதளம்.. உங்களுக்கு என்ன தேவைபட்டாலும் நொடிப் பொழுதில் தந்துவிடம் இணையதளம் அது.. இதற்க்கு மட்டுமல்ல இதைபோல் திருட்டு விசயங்கள் பெரும்பான்மையானவை அனைத்திற்கும் பொதுவான பின்புலமாக இருப்பவர்கள் இந்த THE PIRATE PAY காரர்கள்தான்.

ஸ்வீடனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த தளம். அந்த அரசாங்கத்தின் சட்டப்படி தடை செய்யப்பட முடியாத தளம். ஆனால் உலகின் மிக முக்கியமான அனைத்து SOFTWARE நிறுவனங்களும் அமெரிக்காவை தலைமை இடமாக அல்லது அமெரிக்கர்களால் நடத்தப் படுபவை. பொறுக்குமா அமெரிக்கா, தன் வல்லரசு பலத்தால் இந்த தளத்தை நடத்துபவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தியது. குற்றத்தை ஏற்றுக் கொண்டு US $ 30 மில்லியன் அபராதம் கட்டினார்கள்.ஜெயில் வாழ்கையும் அனுபவித்தார்கள்.

இவர்களின் முக்கிய சம்பாத்தியமே இலவசங்களை தேடி வருவோரை ஈர்க்க போடும் விளம்பர வருவாய்தான்.

ஆனால் இன்றுவரை இவர்கள் அதனை நிறுத்தவில்லை. இவர்கள் தில்லுக்கு நிறைய சான்றுகள் உள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை, வழக்குரைஞர் நோட்டீஸ்களை வரிக்கு வரி கிண்டல் செய்து அனுப்பும் பதில் கடிதங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம் தருபவை.

இங்கு தமிழகத்தில் சவுக்கு இணையதள நண்பர்கள் உண்மையான திருட்டுகளை பதிவேற்றியதற்கு உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட தகவல்கள் பற்றி அந்த முறைகேடான அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

WIKI LEAKS எனும் இனைய தளத்தில் சவுக்கு தளத்தில் வெளியிட்ட தகவல்களைப் போல் எதனைப் பற்றி வேண்டுமானாலும் வெளியிடலாம், வெளியிட்டவர்களின் தகவல்கள் மிகுந்த ரகசியமாக வைக்கப்படும். உலகம் முழுவதும் நம் இந்தியா உட்பட உள்ள ரகசியத் தகவல்கள்  இதில் உள்ளன. எனவே அரசாங்கத்தை பற்றிய விமர்சனம் இருந்தால் இதில் தைரியமாக வெளியிடலாம்.

உலகம் முழுதும் ஒரே விஷயம்தான் ஜெயிக்கிறது அது " வல்லான் வகுத்ததே வாய்க்கால்"

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கடலில் ஒரு சின்ன மீனை பெரிய மீன் விழுங்கப் போகிறது அப்போது அந்த சின்ன மீன் பெரிய மீனிடம் நானும் உன் இனம்தானே நீ என்னையே சாப்பிடுவது நியாயமா எனக் கேட்க, பெரிய மீனோ உன்னால் முடிந்தால் என்னை சாப்பிடு என்று சொல்லி விட்டு சின்ன மீனை விழுங்கி விட்டது.

பின் குறிப்பு: பதிவின் நீளம் கருதி PIRATES PAY மற்றும் அவர்கள் பதிவிட்ட வக்கீல் நோட்டீஸ் அனைத்தும் இணைப்பாக தந்துள்ளேன். ஆர்வமுள்ளோர் படித்து வயிறு வலிக்க சிரித்துக் கொள்ளுங்கள்.

26 ஜூலை, 2010

தமிழ் சினிமா - பயோடேட்டா


தமிழ்மணம் நட்சத்திர பதிவராக இந்த வாரம் நான்.. தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்கள், மற்றும் வாசக நண்பர்களே 
இதற்கு
 காரணம்.. நான் உங்களுடன் என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்...

பெயர் 
                                  : தமிழ் சினிமா 
 

இயற்பெயர்                        : கூத்துக் கலை 

தலைவர்                             : சூப்பர் ஸ்டார் ராம நாராயணன் 
துணை தலைவர்              :மற்ற சங்கத் தலைவர்கள் 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :தலையில் துண்டு போட்டவர்கள் 
வயது                                   : கிழவர்களை இளமையாக காட்டும் வயது 
தொழில்                              : நடிப்பது மட்டும் 
பலம்                                     : பால் ஊற்றுபவர்களும், கோவில் கட்டுபவர்களும் 
பலவீனம்                             : திருட்டு சி டியில் பார்ப்பவர்கள் 
நீண்ட கால சாதனைகள்        : தமிழ் நாட்டை ஆள்வது 
சமீபத்திய சாதனைகள்           : இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 
நீண்ட கால எரிச்சல்                : கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் 
சமீபத்திய எரிச்சல்                   : நாம் தமிழர் இயக்கம் 
மக்கள்                                          : தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் 
சொத்து மதிப்பு                          : கருப்பும், வெளுப்புமாய்..
நண்பர்கள்                                  : புதிய தயாரிப்பாளர்கள் 
எதிரிகள்                                      : ரெட் கார்ட் தருபவர்கள்  
ஆசை                                           : முதல்வர் ஆக 
நிராசை                                       : இனி வாய்ப்பில்லை 
பாராட்டுக்குரியது                    : மக்களை சந்தோசப்படுத்துவது 
பயம்                                             : அரசியல் பலம் உள்ள தயாரிப்பாளர்கள் 
கோபம்                                        : இணையத்தில் படம் காட்டுபவர்கள் மீது 
காணமல் போனவை              : சினிமா தியேட்டர்கள் 
புதியவை                                    : மண்ணைக் கவ்வும் பிரபல இயக்குனரும், நடிகரும் 
கருத்து                                        : சினிமா பற்றிய புரிதல் இல்லாமலே நிறையபேர் படம் எடுக்க வருவது இத்தொழிலை நசித்துப் போகச்செய்கிறது
டிஸ்கி                                          : சினிமா எடுக்கும் முன் நம் பதிவர் கேபிள் சங்கர் எழுதிய "சினிமா வியாபாரம்" புத்தகம் அவசியம் வாங்கிப் படியுங்கள்..

25 ஜூலை, 2010

பெருங்காமம்..

காரணங்களை ஒளித்துவைத்துவிட்ட 
நம் கை கோர்ப்பில் 
ஊர் மெல்லும் பெருங்கதைகள்..

கனன்று எரியும் காமத்  தீ
ஊர்  வைத்ததுதான்..

சாத்தியங்கள் இல்லாத சாட்சியங்கள்,..

புனைகதைகளில் வரும் 
மூர்க்கத்தனங்களை யாரும் 
கைவிடத் தயாரில்லாத நாளில் 
நாம் 
ஊரை விட்டு ஓடிப்போனோம்..

கள்ளக் காதல் என்று செய்திவரும்,
உன் கணவன் என் மனைவி 
காவல் நிலையம் செல்வார்கள்,
நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும் ,
இன்னும் சில வருடங்கள் ஊரில் சுழலும் 
நம் கதைகள்..

அதனால் என்ன 
நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில் 
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம் 
வா..

24 ஜூலை, 2010

ஓம் கூகுளாய நமக...

கூகுளை பற்றி நண்பர் Drunken Programmer ஒரு கவிதை கேட்டிருந்தார்.. முயற்சி பண்ணிருக்கேன்..


தேடல்களும்
தேடல்களைப் பற்றிய தேடல்களுமாய்
உன்னில் மூழ்கியது உலகம்.

எந்த வரமும் அருளும் கடவுள்..

காணிக்கை வசூலிக்காத கடவுள்..

உண்மையோ, பொய்யோ 
உள்ளதை உள்ளபடி 
தருவோர் அல்லது பெறுவோர் 
விரும்பும்படி அருளும் கடவுள்..

சீனாவின் குறுங் கண்களுக்கு 
இப்பேரழகி தெரியவில்லை ஏனோ..

கவிதைஎன்பதே
தேடல் தானே..
கூகுளை கவிதையென்பேன்..

"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..

கட்டுடைக்கும் 
காட்டாறு வெள்ளமென 
கட்டுபாடுகள் இன்றி 
தகவல் தரும் கூகுள் 

தேடித் தீர்க்க முடியாத காமம்
பாரில் அடங்காத போதை 
உலகப் பேரழகி கூகுள்..

எம் பிழைப்பே நீதான் 
உனையன்றி யார் எமை காப்பார்..

ஓம் கூகுளாய நமக...

23 ஜூலை, 2010

காதல் என்பது ....

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் என் நண்பரை மதுரைக்கு அனுப்பிவிட்டு திரும்பும்போது நான் நினைக்கவில்லை கீதாவை சந்திப்பேன் என்று. ஒரு கணம் ஆடிப்போனேன் ...அவளும்தான்.. சுதாரித்துக்கொண்டு பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். அவளின் விமானம் இரண்டு மணி நேரம் தாமதம் என அறிவித்ததால்  இரண்டாம் தளத்தில் உள்ள சாகர் உணவகத்திற்கு சென்று காப்பி சொல்லிவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

என் நண்பன் வீட்டிற்கு நான் போனபோது அங்கு வந்திருந்த அவன் தங்கையின் தோழிதான் கீதா..பார்த்த கணத்திலேயே எனக்கு காதல் பூத்துவிட்டது.அதற்க்கு அப்புறம் கவனமான திட்டமிடல்களுடன் அவளை நெருங்கிவிட்டேன்.. ஒரு தனிமையான சந்திப்பில் என் காதலை சொல்ல உடனே அவளும் சம்மதம் சொல்ல அந்தக் கணத்தில் உலகமே அழகாகிப் போனது.. அதன் பின் மிகவும் பிரசித்து பெற்றது எங்கள் காதல்.. ஊரில் இதற்க்கு எத்தனை எதிர்ப்புகள்..

கிராமப் பஞ்சாயதாரான என் தந்தை சாதி வெறியர்.. காதல் வேகத்தில் அவளின் சாதி அறியவில்லை நான். மெல்ல காதல் எங்கும் பரவி என் வீட்டில் வந்து நின்றபோது அதற்கு முதல் பலியே என் நண்பனின் குடும்பம்தான்.அங்குதான் எங்கள் சந்திப்பு நடப்பதாக போட்டுக் கொடுத்ததால் நண்பனின் தந்தைக்கு அடுத்த வாரமே மாற்றல் உத்தரவு பறந்தது.. அவரும் விசயம் அறிந்து என் தந்தையிடம் வந்து நின்றார்.. அப்பா யோவ் இன்னிக்கு வந்து நிக்க தெரிகிற உமக்கு உன் வீட்டில் என்ன நடக்கிறது என ஏன் தெரியாம போச்சு என அவரின் பரம்பரையையே கேலியாக பேச, கூனிக் குறுகிய அவர் மறுபேச்சு பேசாமல் ஊரைக் காலி செய்தார். என் தந்தையின் செல்வாக்கு அப்படி..

அடுத்த பலி நான்தான்.. அம்மா மற்றும் தங்கைகளை கூப்பிட்டு அவர்கள் முன்னாடியே நான் இனி அவளை பார்த்தாலே குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார்.. அம்மா அழுதாள், தங்கைகள் கதறினார்..என் தந்தை கண்டிப்பாக செய்வார். அவருக்கு கவுரவம் முக்கியம்.. அதன்பின் அம்மா இனி அவளை பார்க்க மாட்டேன் என ரகசியமாக என்னிடம் சத்தியம் வாங்கினார்.. கடைசி முறையாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருகிறேன் என கீதாவை பார்க்க வந்தேன்..

அவள் புரிந்துகொண்டாள்.. சேர்ந்தால்தான் காதலா.. நான் உன்னை எப்போதும் காதலிப்பேன் இது மாறாது..என அழுதாள். ஒருகணம் அவளை அழைத்துக் கொண்டு ஓடிவிடலாம் எனத் தோன்றியது, அவளிடம் சொல்லவும் செய்தேன். அவள் மறுத்துவிட்டாள், மேலும் என் தந்தை அவள் வீட்டிற்கும் ஆளனுப்பி விஷயத்தை சொல்லி கண்டிக்க சொல்லியிருப்பதால் அவள் வீட்டிலும் மிகுந்த கலவரம் ஆகிவிட்டிருக்கிறது.. 

சட்டென மீண்டும் சுயநினைவுக்கு வந்தபோது காப்பி ஆறிவிட்டிருந்தது. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. இருவரும் எதுவுமே பேசவில்லை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்த்தது இல்லாத கடவுளை நேரில் கண்டது போலிருந்தது எனக்கு. 

சார் வேற எதுவும் வேணுமா? என ஹோட்டல் பையன் கேட்டதும்தான் இருவரும் மீண்டு வந்தோம்..

அதன்பின் அவள் என்னை விசாரிக்க நிறைய யோசித்துவிட்டு  என் திருமணம் குழந்தைகள் பற்றி சொன்னேன். வீட்டிற்கு வரசொல்லி சொன்னேன், அவள் மறுத்தாள் இப்படியே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றாள்.. அவளைப்பற்றி கேட்டதற்கு கணவர், குழந்தைகளுடன் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள்.. சொல்லும்போதே அவளின் கண்ணீரை அவளால் கட்டுபடுத்த முடியவில்லை.. அதற்குள் அவளின் விமான நேரம் வந்துவிட அவசரமாக உள்ளே அனுப்பி வைத்தேன்.. அவள் உள்ளே சென்றவுடன்தான் அடடா அவள் தொலைபேசி என் கூட வாங்கவில்லையே என வருத்தமாக இருந்தது.

வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் சாப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு மாடியில் என் தனியறைக்கு சென்று வெகுநேரம் அழுதேன்.. அம்மா கதவை தட்டினார்கள். திறந்தபோது என்ன ஆச்சுப்பா ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு ஏதாவது பிரச்சினையா என்று கேட்கவும்.. என்னால் மீண்டும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.. அழுது முடிக்கட்டும் எனக் காத்திருந்த அம்மாவிடம் விமான நிலையத்தில் கீதாவை பார்த்ததை சொன்னேன்.. அம்மா ஆவலுடன் அவளைப பற்றி விசாரித்தாள்.. நடந்தவற்றை அப்படியே சொன்னேன்..

ஆழ்ந்த பெருமூச்சுடன் அவள் .. பாருப்பா அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகிபோச்சு.. நீ இன்னமும் அவளையே நெனசுகிட்டு இருந்தா எப்படி.. உனக்கு ஒண்ணுமா இல்ல..உன் அத்தை பொண்ணு இருக்கு கேட்டா மறுக்கவா போறாங்க.. எனக்கும் வயசாச்சு.. என்னால சமைக்க கூட முடியல, கொஞ்சம் யோசிப்பா.. என சொல்லவும்.. சரிம்மா உங்க இஷ்டம் என்றேன். பரபரன்னு சந்தோசம் ஆன அம்மா, என் தந்தைக்கு போன் செய்யப்போனாள்..

ஒரு வகையில் கீதாவிடம் நான் பொய் சொல்லியது சரிதான் எனத் தோன்றியது.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கேட்டால் பதறியிருப்பாள். நிச்சயமா அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும்.. அவள் மனதை புண் படுத்தக்கூடாது, என யோசித்துதான் அப்படி ஒரு பொய்யை அவளிடம் சொன்னேன். இப்ப என் சம்மதம்  நம் வீட்டிலும் சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கு..

விமானம் தரைவிட்டு மேலுழும்பி பறக்க ஆரம்பித்தது.. கீதாவிற்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.. அவரிடம் தன் திருமணம் பற்றி பொய் சொல்லியிருக்ககூடாது என நினைத்தாலும், பொய் சொன்னது சரிதான் உண்மையை சொல்லியிருந்தால்  அது அவரை குற்ற உணர்ச்சியில் தள்ளியிருக்கும் எனத் தோன்றியது. நல்லவேளை அவர் போன் நம்பரைக் கூட வாங்கிக் கொள்ளவில்லை. வாங்கியிருந்தால் அது அவரிடம் நாம் பேசப்போக மீண்டும் அவர் வீட்டில் அதனால் பிரச்சினை ஏற்படலாம். இத்தனை நாளும் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கெஞ்சும் தன் சக அலுவலக நண்பனின் கோரிக்கையை ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என நினைத்தாள்.. நினைக்கும்போதே அவனின் முகம் சந்தோசமாக மனக்கண்ணில் தெரிந்தது.. 

விமானம் இன்னும் மேலேறிப் பறக்க ஆரம்பித்தது...