23 ஜன., 2011

துரோணா... - 1


"காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம் 
 காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் 

 காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் 
 காமமே அனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியும் கத்திதானே".... விவேக சிந்தாமணி.. 133வது பாடல் 

நீங்கள் முதன் முதலில் நேரிடையாக உடல் உறவு காட்சியை பார்த்திருக்கிறீர்களா?  அப்படி ஒரு காட்சியை நீங்கள் எந்த வயதில் பார்த்திருக்கிறீர்கள்? இது அதிர்ச்சியான கேள்வியாக இருக்கிறதா? செக்ஸ் என்பது வாழ்வியலின் இன்றியமையாத ஒரு அங்கமாக இருந்தாலும் இந்தியாவில் அதிலும் தற்கால தமிழ்க்கலாச்சார  சிக்கலில் இது சிரமமான கேள்விதான். முதன்முதலில் இப்படி ஒரு காட்சியை என் நண்பன் ஒருவன் நேரில் கண்டதாக சொன்னபோது எங்கள் இருவருக்கும் பணிரெண்டு வயது. தன் பெற்றோர் தான் தூங்கிவிட்டதாக நினைத்து அரையிருட்டில் முயங்கியதை பார்த்துவிட்டு அவன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எனக்கே ஏதோ மாதிரி இருந்தது. நான் முதன்முதலில் அப்படி ஒன்றை பார்க்க நேர்ந்தபோது பதினேழு வயது எனக்கு. இப்போதெல்லாம் சின்னப்பசங்க இணைய மைய்யங்களில் சர்வ சாதரணமாக பார்க்கிறானுங்க, ஆனா எனக்கு அன்று அது பயம் கலந்த சந்தோசத்தை கொடுத்தது. 

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது புளு பிலிம் பார்க்கும் ஆர்வம் நண்பர்களுக்குள் ஒருமுறை கொழுந்துவிட்டு எரிய அந்த தீயை அணைப்பதற்காக மன்னார்குடியில் ஒரு வீடியோ கடைக்காரனை சரிகட்டி வாடகைக்கு டிவி, கேசட் பிளேயர் (VCR) எடுத்துக்கொண்டு ஒரே ஒரு புளு பிலிம் கேசட் மட்டும்தான் இருக்கறது என கடைக்காரன் கொடுக்கவே, எதற்கும் இருக்கட்டும் என அப்போது வெளிவந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தையும் கொடு என்க்கேட்டபோது நண்பனோ, "டேய் இந்த கேசட்டையே நம்ம பயலுவ மாத்தி மாத்தி பாப்பானுக, அது வேற எதுக்குடா" என என்னை திட்டினான்.

எங்கள் ஊருக்கு பின்பக்கமாக இருக்கும் வடசேரி கிராமத்தின் வயல்காட்டில் இருந்த நண்பனின் மின் மோட்டார் கொட்டகைக்கு நாங்கள் சமாச்சாரங்களை கொண்டு வந்து சேர்த்ததே பெரும்பாடு. எல்லாவற்றையும் செட் செய்து புளு பிலிம் கேசட்டை போட்டால் அதில் கால்பந்து வீடியோ ஓடியது. போலிசுக்காக அப்படி பதிவு செய்திருப்பார்கள் என அனுபவசாலி ஒருவன் சொல்லவே. கடைசிவரைக்கும் மேட்டர் படம் மட்டும் இல்லவே இல்லை. கடைக்காரன் அவசரத்தில் மாற்றிக் கொடுத்துவிட்டான். எனவே எல்லோரின் வசையையும் வாங்கிகொண்டு 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்த்தோம். சொன்னபடி படம் காட்டவில்லை என்பதால் நண்பர்கள் துரோகிகள் ஆக மாறி யாரும் பணம் கொடுக்கவில்லை. நாங்களும் தூக்கி வந்து அவமானப்பட்டதை காரணம் காட்டி கடைக்காரனிடம் இருநூறு ரூபாய் அபராதம் வாங்கிக்கொண்டுதான் விட்டோம்.

இப்படியாக நேரடி அனுபவம் இல்லாத எனக்கு அன்று மணல்திட்டில்  இப்படி ஒரு காட்சி வரப்பிரசாதம் என்றாலும். ' கேபிள் சங்கரின் முற்றுப்புள்ளி' சிறுகதையில் வரும் நாயகனைப்போல் ஒரே நெர்வசாக இருந்தது. பின்னாட்களில் தாய்லாந்தில் லைவ் ஷோக்களை பார்த்தாலும், இந்த முதல் காட்சி போல வரவே வராது. 

அன்று 1988 -ன் ஒரு கோடைக்காலம் ..... 

நள்ளிரவு பணிரெண்டு மணியை தாண்டியிருந்தது. நாங்கள் ஒரு காட்டாற்றின் நடுவே மணல் திட்டில் நான்கு பேர் அன்று மாலை கரும்புக்காட்டில் வெடிவைத்துப்பிடித்த நரியை உரித்து வாட்டிக்கொண்டு இருந்தோம், எங்கள் அத்தனை பேரில் நான் மட்டுமே வயதில் சின்னவன் , நான்கு பேர் திருமணம் ஆனவர்கள், மீதிப்பேர் திருமண வயதை எட்டியவர்கள். நான் எப்படி இவர்களுடன் வந்து சேர்ந்தேன் என்பதை பின்னால் சொல்கிறேன். இப்படி ராத்திரிகளில் நாங்கள் அனைவரும் வயலுக்கு இரவில் நீர்ப் பாய்ச்சுவதாக சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம், அல்லது வயல்காட்டில் கிழங்கு, சோளம், வேர்க்கடலை இப்படி அனைத்து பொருட்களையும் ஆட்டய போட்டு தின்பது எங்களின் பொழுதுபோக்கு. கண்டுபிடித்தாலும் தின்பதற்க்காகத்தான் திருடியிருக்கிறோம் என்பது தெரிந்து திட்டிவிட்டு விட்டுவிடுவார்கள். சமயங்களில் கரும்புக்காட்டில் கிடைக்கும் காட்டுபூனைகள், நரிகள் கிடைத்தால் இப்படி காட்டாறு பக்கம் வருவோம்.

காட்டாற்றின் இன்னொரு பக்கம் மும்முரமாக எங்கள் ஊர் ஆட்கள் சிலர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அப்போது மது விற்பனை தனியார் வசம் இருந்தது. சாராயத்திற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அதனால்  கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடக்கும். எங்கள் ஊரிலேயே போலிஸ் ஸ்டேசன் இருக்கிறது, ஆனால் எங்கள் ஊர் ஆட்களிடம் மட்டும் மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.  நாங்கள் அங்குதான் சாராயம் வாங்கிக்குடிப்போம், அவர்கள் தங்களுக்காக சுத்தமான சாராயம் காய்ச்சி வைத்திருப்பார்கள், அதனை எங்களுக்கு மட்டும் தருவார்கள்,  இலவசமாகத்தான், பதிலுக்கு நாங்கள் நரிக்கறி தருவோம். இது வாரம் ஒருமுறை கட்டாயம் எங்கள் அட்டவணையில் இருக்கும். ஊரில் அரசால் புரசலாக தெரிந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை, அதற்கான காரணம் குடிப்பது ஒரு பெரிய குற்றமாக ஊரில் யாரும் நினைப்பதில்லை.

ஏற்கனவே உள்ளிறக்கிய கொஞ்சம் சாராயம் வயிறை பிரட்டவே தீயில் வாட்டிக்கொண்டிருந்த நரியின் தொடைகளை நண்பனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தாழைப்புதர்கள் பக்கமாக ஒதுங்கினேன். பவுர்ணமி நெருங்கிகொண்டிருந்ததால் முக்கால் நிலா தன்னை மேகங்களில் இருந்து விலக்கி நான் போகும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. கொஞ்சம் நடந்ததும் கேட்ட வித்தியாசமான முனகல் என்னை கவனம் திருப்பவே மெல்ல அதை நோக்கி முன்னேறினேன், தாழைப்புதர்களை தாண்டியதும் மணல்திட்டில் இரு உடல்கள் மும்முரமாக இயங்கிகொண்டிருந்தது. அதனை பார்த்ததும் அப்படியே உறைந்து போய்விட்டேன்.ரகசியமாக படித்த சரோஜாதேவி புத்தகங்கள் தராத அதிர்ச்சியும், சந்தோசமும் ஒன்று சேர்ந்து வயிற்று இரைச்சலை நிறுத்திவிட்டு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். 

மெல்ல நிலவொளியில் உருவங்கள் தெரிய ஆரம்பித்தன. ஒரு ஆள் போய் இன்னொரு ஆள் வந்தான், மூன்றாவது ஆளும் முடித்தபோது அவள் அயர்ச்சியில் போதும்யா கொஞ்ச நேரம் கழித்து பாத்துக்கலாம் என வந்த நாலாவது ஆளிடம் சொல்ல, அந்த நாலாவது ஆள், தான் வைத்திருந்த சாராயத்தை அவளிடம் நீட்டியபோது வாங்கி ஒரே இழுப்பில் முடித்தாள். மற்ற ஆட்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டனர். அந்த நாலாவது ஆள் மட்டும் அவளை மெல்ல சில்மிஷம் செய்ய, அவளோ டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே என உளறினாள்.

அங்கு இருந்த நான்கு ஆட்களும் என் நண்பர்களே. எனக்குத்தெரியாமல் கூட்டி வந்திருக்கிறார்கள், அதிலும் நான்காம் ஆள் என் நெருங்கிய நண்பன் ரவி, எனவே ஆர்வம் என்னை முன்னே தள்ள நான் நேரே அங்கு சென்றேன். அவன் என்னை எதிர்பார்க்கவில்லை,

 "டேய் மசுராண்டி நீ எங்கடா வந்தே... உனக்கு யார்ரா சொன்னது" என பதட்டமானான். 

நான் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முதன்முதலில் ஒரு பெண்ணை நிர்வாணமாக அப்போதுதான் பார்ப்பதால் எனக்கு வினோதமான இறுக்கம் வந்துவிட்டது.

ரவியோ "டேய். போடா இங்கிருந்து"என விரட்டினான். 

நானோ "டேய் ... டேய் ,... நானும் ஒரு தடவைடா..." என்றேன். 

பளாரென ஒரு அறை விழுந்தது எனக்கு...

தொடரும்..

19 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

ரொப்ம வெளிப்படையான ஆளா இருக்கிங்க தோழர்....

அந்த படம் மிக அழகு....(ஆடுமேய்ப்பவர்)

அன்புடன் நான் சொன்னது…

ரொம்ப வெளிப்படையான ஆளா இருக்கிங்க தோழர்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னை மாதிரி குழந்தைங்க இத படிக்கலாமா?

காமராஜ் சொன்னது…

சரி சரி இன்னொரு தளமா அசத்துங்க செந்தில்.எல்லோரையும் வாட்டும் இந்த இடம் நல்லாருக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துங்க மக்கா அசத்துங்க.....

பெயரில்லா சொன்னது…

>>> அனல் காற்று வீசட்டும்!!

உமர் | Umar சொன்னது…

அந்த வீடியோவுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

இப்படி ஒப்பினாக மேட்டர்களை அவிழ்த்துவிட ஒரு தில்லு வேணும்! அது உங்ககிட்ட இருக்கு பாஸ்! நம்ம தியேட்டர சும்மா ஒருவாட்டி எட்டிப்பாருங்க! உங்க பேர கடன்வாங்கி ஒரு மேட்டர் போட்டிருக்கேன்! அப்புறம் இன்டிலியில் ஓட்டும் போட்டிருக்கேன்!!

raja சொன்னது…

மிக அற்புதமாக சம்பவங்களை விவரிப்பது மட்டுமில்லாமல் மனவோட்டங்களையும் அற்புதமாக எழுதுகிறீர்கள்.நாவல் எழுத முயற்சி செய்யுங்கள். நன்றாக உங்களுக்கு வரும் என்பது என் நம்பிக்கை. படைப்பாக்கத்தில்.... சமுக பொறுப்போடு எழுதும் கட்டுரைகளை மறந்துவிடாதீர்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

உங்க முதல் பத்தி கொஞ்சம் பதற வைத்தது... உங்ககிட்ட சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்... மெயில் அனுப்புகிறேன்...

நிகழ்காலத்தில்... சொன்னது…

இயல்பான, யதார்த்தமான பகிர்வுக்கு மகிழ்ச்சி..:))

மாணவன் சொன்னது…

கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை யதார்த்தங்களுடன் வெளிப்படையாகவும் தைரியமாகவும் சொல்லிருக்கீங்கண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

யதார்த்தமா நல்லாயிருக்கே..

பெயரில்லா சொன்னது…

ஆரம்பமே அட்டகாசமா இருக்கு அண்ணே!

Jana சொன்னது…

ஆஹா... நீங்கள் அர்ஜூனன் அண்ணே..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அசத்துங்க... படம் மிக அழகு.

தமிழ் உதயன் சொன்னது…

அன்பில் செந்தில்,

உணர்வு பூர்வமான நிகழ்வுகளை எழுத்தில் வடிக்கும்போது தயவு செய்து உணமை பெயர்களை எழுதாதீர்கள்...

Unknown சொன்னது…

//அதில் கால்பந்து வீடியோ ஓடியது//

சொல்லாம போனில்ல.... அப்பிடிதான் ஓடும் :))

கவி அழகன் சொன்னது…

செந்தில் சென்செர் இல்லை சொன்னதெல்லாம் உண்மை யதார்த்தம்