26 ஜன., 2011

குடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்...


விடிந்தால் 62 ஆவது குடியரசுதினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் துவங்க இருக்கின்ற வேளையில் குடியரசு பற்றிய சிந்தனைகள் ஒரு ஓட்டை அரசாங்கப் பேருந்தில் முக்கி முக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது எனக்குள் கிளைக்கத் தொடங்கின.

நேற்று(25.01.2011) காலை 10 பத்து மணிக்கு திருச்சியிலிருந்து அரசுப் பேருந்தில்( சூப்பர் டீலக்ஸ் ஏர்பஸ்ஸாம்!) சென்னைக்குக் கிளம்பிய நான் இரவு ஏழு மணிக்கு பெருங்களத்தூர் வந்து சேர்ந்தேன். இடையில் எங்கள் பஸ்ஸை முந்திச் சென்ற டிவிஎஸ் ஃபிஃப்டி வண்டியைப் பார்த்து அதிர்ச்சியான நான் ட்ரைவரிடம் சென்று "அண்ணே! கொஞ்சூண்டு வேகமாப் போலாமே?" என்றபோது அவர் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு " ஏங்க! நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்! சட்டில இருந்தாத்தானேங்க ஆப்பையில வரும்?" என்றபோது 'வாழ்க ஜனநாயகம்' என்று ஒரு அசரீரி எனக்குள் ஒலித்தது. வழியில் வரும்போது சாலையில் இருபுறங்களிலும் ஆட்களே இல்லாத வனாந்திரங்களிலுங்கூட 'தென்னகத்துப் பிரபாகரன்(!) திருமா, 'தளபதி' இசுடாலின், சின்ன மற்றும் பெரிய அய்யாக்கள் (தர்மதொரைக்கள் கணக்காக) சுவர்களிலும், ஃப்ளக்ஸ்களிலும் புன்னகை சிந்தி நவீன ரட்சகர்களாக அவதரித்திருந்தனர்.

இப்படியாகப்பட்ட உபதெய்வங்களுடனும், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேக தெய்வத்துடனும் இன்னுமொரு குடியரசுதினவிழா பாண்டுவாத்தியங்களுடனும், அணிவகுப்புக்களுடனும், 'விடுமுறைதின சிறப்பு' நிகழ்ச்சிகளுடனும் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கின்றது. வழக்கம்போல நாமும் சிறிது சாக்லேட்களுடன் 'தேசப்பற்றை' வெளிப்படுத்த இருக்கிறோம்.

நம் பதிவுலக அறிவுஜீவிகளும் 'மெய்சிலிர்க்க' இந்தியக்குடியரசு தினத்தைப்பற்றி 'தேசப்பற்று' பொங்கிட பதிவுகளை எழுதத் துவங்கி இருப்பார்கள். 

நான் ஒருவழியாக வீடுசேர்ந்து சலிப்பாக 'முட்டாள்பெட்டி'யைத் திறந்தால் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. முந்தாநேத்து செத்துப்போன மீனவனுக்காக இலங்கைத் தூதரகத்தின் முன்பு நம்ம திருமா ஆட்கள் குருமா கிண்டப்போக (மாணவர்கள் மற்றும் நாம் தமிழர் இயக்கம் போன்று நிஜமான உணர்வாளர்களைத் தவிர்த்துவிடுவோம்) எல்லோரும் 'அடையாள'க் கைது செய்யப்பட்டதாக செய்தி ஓடிக்கொண்டிருந்தது. 'என்ன ஆச்சர்யம்! தமிழனுக்கும் சூடுசொரணை  வந்திருச்சே! ஒருவேளை 'கிரிஸ்டல் உப்பு'க்குப் பதில் ஒரிஜினல் உப்பைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டானோ?' என்று கையைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.

ஆக ஒருவழியாய் இன்னுமொரு சம்பிரதாயக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. சன், ஜெயா, கலைஞர், விஜய் உள்ளிட்ட அத்தனைக் காட்சி ஊடகங்களும் 'சுதந்திரத்துக்காக' (ஆடைக்குறைப்பில் மட்டும்!) பாடுபடும் 'சமூகச் சிந்தனை'க் குறிக்கோள்களை உடைய 'ஐ டோண்ட் நோ டாமில்' நடிகைகளின் பேட்டிகளை ஒளி மற்றும் ஒலி பரப்பத் தயாராகிவிட்டன. இந்த நகைச்சுவைக்(அவலச்சுவை) காட்சிகள் அரங்கேறும் வேளையில் இந்தியத் திருநாட்டின் சீரும் சிறப்புமான (செருப்புமான!) முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

மத்திய மாநில அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் இவர்களது ரதகஜதுரக பதாதிகளான புரோக்கர்கள், அல்லக்கைகள், தொண்டர்கள்(குண்டர்கள்) முன்பெல்லாம் கடமையை மீறுவதற்கு மட்டுமே காசுகேட்ட நிலை போய் இப்போது கடமை என்று உச்சரிக்கவே காணிக்கை தரவேண்டியுள்ள சூழலில், அரசாங்கமானது மக்களின் சொத்துக்களை நவீன 'சமூகசேவகர்'களாக அவதாரம் எடுத்திருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தொழில் அதிப மனைவியருக்குத் தாரைவார்த்தும், இன்னும் ஸ்வான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை விலையில் மொத்தச் சொத்தையும் ஏலம்போட்டும் அப்படியும் மிச்சம்மீதியிருக்கும் கனிமவளங்களை பெருமுதலாளிகளுடன் கூட்டுப் பங்கு போட்டும் தேசத்தின் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் நட்சத்திர ஓட்டல் பார்களின் சைட் டிஷ்ஷாக மாற்றி விட்டனர்.

சச்சின் டெண்டுல்கர்கள் சதமடிக்கும்போது 'பீறிட்டெழுவது' மட்டுமே தேசபக்தி என்று நவீன அகராதிகள் அர்த்தம் கூறும் காலத்தில் மத்திய இந்தியாவில் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் எளிய மக்களைக் காசுகொடுத்து (நம்மூர்ல ஓட்டுக்கு ரெண்டாயிரமாம்!) வாங்க முடியாமல் 'நக்ஸலைட்' என்று புதிய நாமகரணம் சூட்டி அவர்களை துப்பாக்கி சுடும் பயிற்சி இலக்குகளாக்கியும், கற்களையும் கைகளையும் மட்டுமே ஆயுதங்களாக்கித் தெருவில் இறங்கி நிற்கும் காஷ்மீரிகளை 'தேசத்துரோகி'களாக்கியும், மான்சாண்டோ முதலாளிகளின் மரபணுமாற்ற விதைகளை(விஷங்களை) இறக்கி மொத்த இந்திய மக்களையும் ஆண்மையற்றவர்களாக்கக் காயடிக்கும் முயற்சிகளையும் செய்துகொண்டே கதர்க்குல்லாய் மாட்டி ஜெய்ஹிந்த் முழக்கம் போடுகின்றது இத்தாலித்தாயாரை சூத்ரதாரியாகவும், தலைப்பாக்கட்டுக்காரரை (நீயெல்லாம் ஒரு சீக்கியன்!) பொம்மையாகவும் கொண்டு தினம் ஒரு நாடகம் நடத்தும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சீரிய முயற்சியில் நிகழ இருக்கும் அறுபத்தி இரண்டாம் குடியரசு தின வாழ்த்துக்களை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஹெஹ்ஹே...!

போஃபர்ஸ் பேரத்தில் கொஞ்சமாகத்தான் 'அடித்தோம்' என்ற வருத்தத்தைப் போக்கி, பாஜகவின் பங்காரு லட்சுமணன்களையும்( வீடியோ வைத்து லஞ்சம் வாங்கும் நெஞ்சுரம் கொண்டவர்!) மிஞ்சிநிற்கும் சவாலை ஏற்று காமன்வெல்த்தை 'கல்மாடி' வெல்த்தாக மாற்றியும், கார்கில் விதவைகளின் வீட்டை 'ஆட்டை'யைப் போட்டும், அலை அலையாக அலைக்கற்றைகளை அள்ளிவீசி லட்சம்கோடி ரூபாய்களை கூமுட்டை இந்தியனுக்கும் அறிமுகப்படுத்தியும் தேசத்தை உலகத்தரத்துக்கு முன்னேற்றிச் செல்லும் தியாகப்பயணத்தில் இதுகாறும் இணைந்து இருக்கும் டமிளினத் தல கலைஞ்சர் மற்றும் இளவரசனார் இசுடாலின், மூமூமூமூமூத்த இளவரசனார் அளகிரி, இளவரசியார் கனிமொளி மற்றும் இணைவதற்காக ஏங்கி 'சீச்சீ!இந்தப்பளம் புளிக்கும்' ரேஞ்ஜுக்கு ஆளாகிப்போன கொடநாட்டுக்கோமகள் கோமளவல்லி அம்மையார்(நன்றி: ஈரோட்டு இளங்கோவன்), அவரது 'இணை'பிரியாத் தோழியும் மிடாஸ் முதலாளியுமான 'சின்னம்மா' சசிகலா நாச்சியார், இன்னும் டுப்பு டுப்பென்று தீபாவளித் துப்பாக்கி சுடும் 'கேப்டனார்', ஈழத்தை மீட்கும் சுந்தரபாண்டியர்கள் திருமா மற்றும் வைக்கோ(ல்), 'ராஜ்யசபா' வியாதியினால் பீடிக்கப் பட்டிருக்கும் பெரிய மற்றும் சிறிய மருத்துவர்கள்( லேகிய டாக்டர்கள்) ஆகியோர் புடைசூழ இந்திய ஜனநாயகமும் 'தேசபக்தி'யும் கனஜோராய் மார்கழி மாசத்துச் சுண்டல் கணக்காய் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கின்றது. 

உலகின் 'பெர்ர்ர்ர்ரீஈஈஈய' குடியரசு நாட்டின் 'குடி'ஜனங்களாகிய நாமும், தினம் தினம் குருவிக்குப் பதிலாகச் 'சுட்டுச்சுட்டு' விளையாடப்படும் ராமேஸ்வரத்து மீனவனுக்கு 'த்சொ,த்சொ' கொட்டிக்கொண்டும்,  செத்தவன் குடும்பத்துக்கு அஞ்சுலட்சம் கொடுத்து சரிக்கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் மாசத்துக்கு பத்துமுறை தவணைக்கு ரெண்டுரூபாவீதம் உயர்த்தப்படும் பெட்ரோலை முணகிக்கொண்டு வாங்கி அன்றாட 9-5 ஜீவனத்தை கவனித்தபடியும், 'இவனுங்களையெல்லாம் நிக்கவைத்துச் சுடணும்' வசனத்தை நாளுக்கு நூறுமுறை ஜெபித்தபடியும் இன்றைய குடியரசுதினத்தை மிட்டாய் சகிதம் 'கொண்டாடி' மகிழ்வோமாக!

பின் மற்றும் முக்கியமான குறிப்பு : 'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசபக்தி'ச் சிசுபாலர்கள் இந்தத்தளத்தை விட்டு விலகி அவரவர் ஊரில் இருக்கும் 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் கருணைகூர்ந்து வழங்கப்படும் மிட்டாய்களைச் சப்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

69 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

என்னை ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு போகும்போதே நெனச்சேன்... தலிவரு ஃபுல் ஃபார்ம்ல போனாரேன்னு(ஆனா ஆஃப் வி.எஸ்.ஓ.பி தானே உள்ள எறங்குனிச்சி?!). வாழ்க டாஸ்மாக்! ஒழிக டாஸ்மாக்!! செம்ம நக்கலு, செம்ம லந்து!!!

Cable சங்கர் சொன்னது…

அட்டகாசம்.

Thekkikattan|தெகா சொன்னது…

செம்ம ச்சூடு...

எல்லா இடத்திலும் என்னால பல்ல காட்ட முடியும் என்பதால்.

Chitra சொன்னது…

'இவனுங்களையெல்லாம் நிக்கவைத்துச் சுடணும்' வசனத்தை நாளுக்கு நூறுமுறை ஜெபித்தபடியும் இன்றைய குடியரசுதினத்தை மிட்டாய் சகிதம் 'கொண்டாடி' மகிழ்வோமாக!


.... :-(

ஹேமா சொன்னது…

இவ்ளோ கோவப்பட்டா நம்க்குத்தான் கூடாது செந்தில் !

பெயரில்லா சொன்னது…

>>> 'குடி' அரசு தினம்... டாஸ்மாக் வியாபாரம் எகிறட்டும். பஜ்ஜி பார்சலுடன் வீட்டுக்கு சென்று குடிமகன் மனைவியை அடித்து துவைக்கட்டும். வாழ்க சனநாயகம்!!

ஜோதிஜி சொன்னது…

அட்டகாசம்.

எல்லா இடத்திலும் என்னால பல்ல காட்ட முடியும் என்பதால்.

இவ்ளோ கோவப்பட்டா நம்க்குத்தான் கூடாது செந்தில் !

இந்த 62 பற்றி நம்ம அதியமான்கிட்டே கேட்டுப் பாருங்க. நான் சொல்லவருவது இந்திய அடைந்துள்ள மேன்மையை அதற்கு பின்னால் உள்ள உண்மையை?

நேற்று இந்த குடியரசு தினத்தை அடிப்படையாக வைத்து ஆரம்ப ஆங்கிலேயர்களைப் பற்றி எழுதிவிட்டு தொடரை நகர்த்தலாம் என்று யோசிக்க யோசிக்க சங்கர் சொன்ன அட்டகாசம் தான் நினைவுக்கு வந்து போகின்றது. காரணம் காரணம் அன்று ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளையும் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையும். ஆனால் நம்ம காட்டுப்பய புள்ள தெகா சொல்லியுள்ள பல் இளிக்க முடியல என்பது போல கடந்த நான்கு மாதங்களில் உயர்ந்துள்ள எரிபொருள் விலையை பார்த்து சட்டென்று உயர்ந்து போகும் மற்ற விலை வாசிகளை பார்க்கும் போது ஹேமா சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது.

இவ்வளவு கோபப்பட்டா நம்ம புள்ளகுட்டிய இந்த ப்ளக்ஸ் போர்டில் சிரிக்கும் தலையில்லா முண்டங்களா காப்பாற்றுவார்கள்?

விந்தைமனிதனா இனி எந்த இடத்திலும் பொறுப்பில்லாமல் மது பற்றி உன்னுடைய பின்னூட்டத்தை பார்த்தால் இங்கிருந்து ஒரு பார்சல் உனக்கு அனுப்பி வைப்பேன். ஜாக்ரத.

ஜெய்ஹிந்த். வாழ்க் நடிகர் அர்ஜுன்

Philosophy Prabhakaran சொன்னது…

அண்ணே அருமையா எழுதியிருக்கீங்க...

ஆனாலும் உங்களுக்கு அசாத்திய தைரியம் தான்... எனக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடுதான்... ஆனால் இதெல்லாம் நானும் என்னைப்போல யாராவதும் எழுதினால் அவனை அடித்து துவைத்து காலியாக்கவே ஒரு கூட்டம் வந்துவிடுகிறது... நீங்கள் எழுதினா அதுக்கு எப்போதும் தனி மரியாதை தான்...

மாணவன் சொன்னது…

ஒன்றும் சொல்வதற்கில்லை அண்ணே...

கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க....சூப்பர்...

Philosophy Prabhakaran சொன்னது…

follow up...

Philosophy Prabhakaran சொன்னது…

இன்றைய தினம் இடும் பின்னூட்டங்களில் உங்கள் தல இணைப்பை சேர்க்க இருக்கிறேன்...

goma சொன்னது…

என்னத்த சொல்ல ...நாடு உருப்படுமான்னு இருக்கு

Unknown சொன்னது…

ரொம்ப சூடா இருக்கு. உண்மை சொல்லும் தைரிய வரிகள்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம தாக்கு அண்ணே

தகனமேடை சொன்னது…

குடியரசு தினத்தில் உண்மையாக மிட்டாய் கொடுத்திருக்கிறீர்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ithukkuthan uppu podaama saappidanumnu sollarathu

Nagasubramanian சொன்னது…

ஜனநாயகத்துக்காக தான் ஆள்காட்டி விரலைக் கூட தூக்காத ஒரு சமூகமே நம்மிடம் உண்டு. வாழ்க ஜனநாயகம்!

சேலம் தேவா சொன்னது…

சரியான சாட்டையடி பதிவு..!!

ஆத்திரக்காரன் சொன்னது…

சரியான பதிவு!
http://manakkumural.blogspot.com/2011/01/26.html

Udayakumar Sree சொன்னது…

ஒரு நல்ல அரசியல்வாதியின் குமுறலைக் காண முடிகிறது...

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒன்றும் சொல்வதற்கில்லை அண்ணே...எப்படி இருந்தாலும் இது நமது நாடு, நம் தேசம், நான் சாகப்போகிற பூமி.
இன்றைய சில அரசியல்வாதிகளால் நம் நாடு அசிங்கப்பட்டாலும் ஓரு பொது ஜனங்களின் ஒருவனாக( Common man)அனைத்தையும் சகித்துகொண்டு,
குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்.

செங்கோவி சொன்னது…

//எப்படி இருந்தாலும் இது நமது நாடு, நம் தேசம், நான் சாகப்போகிற பூமி.
இன்றைய சில அரசியல்வாதிகளால் நம் நாடு அசிங்கப்பட்டாலும் ஓரு பொது ஜனங்களின் ஒருவனாக( Common man)அனைத்தையும் சகித்துகொண்டு,
குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்// ரிப்பீட்டேய்...குடியரசு தின வாழ்த்துகள்.

துளசி கோபால் சொன்னது…

அக்மார்க் உண்மைகளைச் சொல்லும் இதுபோன்ற பதிவுகளை 'பார்த்தே' வருசம் பல ஆச்சு!

இன்னிக்கு தொலைகாட்சியைப் பார்ப்பதில்லைன்னு முடிவு எடுத்துருக்கேன்.

பதிவுக்கு என் பாராட்டுகள்.

Unknown சொன்னது…

என்ன மாப்ளே, அரசுப் பேருந்து ரொம்ப சூட்டக் கெளப்பிட்டு போல?

என்னைக் கொற சொல்ற...போய் ஒன்னோட பிப்பியச் செக் பண்ணு மொதல்ல.

தறுதலை சொன்னது…

ஜெயா ஹிந்த்
ஷீதா ஹிந்த்
ஸ்ரிதேவி ஹிந்த்
குஷ்பு ஹிந்த்
ஜெனிலியா ஹிந்த்
ஸ்ரேயா ஹிந்த்
ஸ்நேகா ஹிந்த்

எப்பூடி நம்ம ஹிந்தியப் பற்று? ஹிந்திய இல்லாத ஆண்மைப்படி கண்ணகி, வானதி மாதிரி பெயெரெல்லாம் சேர்த்துக்கலீங்க.


--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

வானம் சொன்னது…

அரசு ஊழல்லயும் ,அதிகாரிகள் லஞ்சத்துலயும், பொதுமக்கள் மறதியிலயும் சொரணைகெட்டத்தனத்துலயும் மிகப்பிரமாதமா வளர்ச்சியடைஞ்சு இருக்காங்க. அப்புறம் எதுக்கு இம்புட்டு கோவம்?
(கல்வித்துறைதான் இன்னும் முன்னேறாம அதே ஆரஞ்சு மிட்டாயிலேயே இருக்கு போல, அதுக்கு கோவப்படுறத விட்டுபுட்டு?...)

Unknown சொன்னது…

அசத்தலான பதிவு, மிக அற்புதமாக எழுதி இருக்கின்றீர்கள், ஜனநாயகம் என்ற அற்புதம் ஒரு சாக்கடையாகி கொண்டிருக்கிறது எங்குபோய் நிற்குமோ.

கோவி.கண்ணன் சொன்னது…

பின் மற்றும் முக்கியமான குறிப்பு : 'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசபக்தி'ச் சிசுபாலர்கள் இந்தத்தளத்தை விட்டு விலகி அவரவர் ஊரில் இருக்கும் 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் கருணைகூர்ந்து வழங்கப்படும் மிட்டாய்களைச் சப்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
//

அவ்வண்ணமே நானும் கேட்டுக் கொள்கிறேன்
:)

jayaramprakash சொன்னது…

இப்படியே போனா மக்களே சீனாக்காரன சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறாங்க.

vinthaimanithan சொன்னது…

@கோவி.கண்ணன்

:))))))))

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.

'பொங்க'ப்படாதுன்னு சொல்லியும் ஏகப்பட்ட பேரு பின்னூட்டத்தில பொங்கிட்டுப் போயிருக்காவளே! என்னத்தச் சொல்லி...!

பதிவின் அங்கதம், பகடி பற்றி யாருமே ஒண்ணுஞ் சொல்லலியே ஏன்!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பட்டையக் கெளப்பிட்டீங்கண்ணே...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சுவர்களிலும், ஃப்ளக்ஸ்களிலும் புன்னகை சிந்தி நவீன ரட்சகர்களாக அவதரித்திருந்தனர்.////

ராட்சசர்கள்.... ?

jayaramprakash சொன்னது…

முப்படைகளின் அணிவகுப்பை டிவி ல பாக்கும்போது அந்த வீரர்களை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.யாரை பாதுகாக்க இவர்கள் பணி செய்கிறார்கள்?ஊழல் அரசியல்வாதிகளையும்,கருப்பு பண அதிபர்களையும்,ஜில் ஜில் ரமாமணி களையும் பாதுகாக்க தானே.சோனியாவின் அடிமை பிரதிபா பாட்டிலை பார்த்து அவர்கள் அடிக்கும் சல்யூட் கூட பார்க்க சகிக்காததாகவே இருந்தது.

dheva சொன்னது…

வரிக்கு வரி வந்து விழும் எரிச்சலின் பின்னணியில் ஒளிந்து கிடக்கிறது ஒரு ஆற்றாமையும், வருத்தமும். எல்லோருக்கும் கோபமாய் தெரியும் வரிகளில் எனக்கு ஏக்கம் தெரிகிறது.

வற்றிய வயிறுகளின் வார்த்தைகளில் சந்தோச கானங்களா வரும்....

இன்றே இந்த நிலைமாற நான் என்ன செய்யவேண்டும், நீ என்ன செய்யவேண்டும் என்று மகா பொது ஜனங்கள் எல்லாம் பேசி முடிவெடுத்து மாற்றம் வர நினைக்கவாவது வேண்டும்


கட்டுரை யாரைப் பற்றியோ அல்ல.. நம்மைப் பற்றி நம் தேசம் பற்றி.. ! தேசம் என்ற பிணைப்பில் நேர்மையான இயக்கமாக இருப்பதில் மாற்றுக் கருத்து உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்......

நியதிகள் வழுவும் போது........முரண்களை ஆயுதமாக்க வேண்டியிருக்கிறது.....

குடியரசு தின வாழ்த்துக்கள்... (வேற என்ன பண்றது...? பொது புத்தி....)

Prabu Krishna சொன்னது…

நல்ல பதிவு

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா...
உண்மையை உரக்கச் சொல்லும் பதிவு.
இருந்தும் நாம் இன்னும் செம்மறிகளாய்... (அவை கூட மாறிவிட்டதாக நினைக்கிறேன்)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேக தெய்வத்துடனும் இன்னுமொரு குடியரசுதினவிழா பாண்டுவாத்தியங்களுடனும், அணிவகுப்புக்களுடனும், 'விடுமுறைதின சிறப்பு' நிகழ்ச்சிகளுடனும் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கின்றது//


நாசமா போச்சி....

Madhavan Srinivasagopalan சொன்னது…

வரிக்கு வரி.. நெத்தியடி..
அனல் பறக்குது.. இன்றைய நிலையை சரியாகச் சொன்னீர்கள்..

Jana சொன்னது…

ரணங்களோடு மக்களின் தேசிய கோசம்!!!

Unknown சொன்னது…

உண்மையை இன்று மட்டும் இல்லை என்றுமே உரக்க சொல்லலாம்...மன்னார் வளைகுடா இனி இராசபக்சே வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்யப்படும் - பிரதமர்..

அருண் பிரசாத் சொன்னது…

செம காரம்

:)

raja சொன்னது…

நன்றாக எழுதியிருக்கீறிர்கள் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இது என்ன ரசிக்கக்கூடிய கட்டுரையா..? உங்களது தார்மீக கோபம் யாருடைய செவிட்டில் அறையவேண்டுமோ.. அவர்களேல்லாம் ஒரு அயோக்கிய புன்னகையோடு அடுத்த அயோக்கியத்தனத்தை தொடர சென்றுவிடுவார்கள். கழிவுகளையும் விட கீழான தலைவர்களையும் சொரணையற்ற சமுகத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

உண்மைத்தமிழன் சொன்னது…

அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று உமக்கு சிறந்த அரசியல் ஆய்வாளருக்கான விருதினை வழங்க நான் சிபாரிசு செய்கிறேன்..!

உண்மைத்தமிழன் சொன்னது…

அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று உமக்கு சிறந்த அரசியல் ஆய்வாளருக்கான விருதினை வழங்க நான் சிபாரிசு செய்கிறேன்..!

வந்தியத்தேவன் சொன்னது…

இந்தியா விரைவில் சீனாவின் ஒரு மாநிலமாகீவிடும். அப்போ வந்து அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவிக்கின்றேன். ஒரு அடிமைக்கு வாழ்த்து தெரிவிக்க இன்னொரு அடிமைக்கு உரிமையில்லை.

வந்தியத்தேவன் சொன்னது…

அண்ணன் உண்மைத்தமிழனின் உள்குத்து கலக்கல் அடுத்தாண்டு ஆட்சியில் அவரது அம்மா தானே கோலோச்சுவார்.

உமர் | Umar சொன்னது…

//அவ்வண்ணமே நானும் கேட்டுக் கொள்கிறேன்
:)//

நானும் கேட்டுக் கொள்கிறேன்
:-)

உமர் | Umar சொன்னது…

@SushmaSwarajBJP why the hell v shud fly the tricolor when u do nothing to stop the fuckin lankan navy to kill #tnfishermen

----

பத்தி எரியுது ட்விட்டர்.

ஈரோடு கதிர் சொன்னது…

ரௌத்திரம்

Unknown சொன்னது…

வரிக்கு வரி சாட்டையடியாகத் தாக்கிட்டீங்கண்ணே!!
அருமை! உங்களால் மட்டுமே இது முடியும்!

Unknown சொன்னது…

Hi
Feel shame to be a citizen of this country. Sent your post link to Savukku.net. Please provide your approval to publish.

Thanks.

அன்பரசன் சொன்னது…

ரொம்ப சூடா இருக்கு தல..
வார்த்தைக்கு வார்த்தைக்கு சாட்டையடி..

குறையொன்றுமில்லை. சொன்னது…

தைரியமான சாட்டை அடிகள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

என் தளத்தில் இணைப்பை தர உங்களிடம் கேட்கப்போவதில்லை.

நசரேயன் சொன்னது…

போட்டு தாக்குங்க

நவன் சொன்னது…

இந்த நிலமைய மாத்த என்னத்த கிள்ளி போட்டிக? (டாஸ்மாக் போனதைஎல்லாம் கணக்கில் வச்சுக்க முடியாது).

க.பாலாசி சொன்னது…

ஹி...ஹி... எழுதிக்கிழிக்கும் கோவணங்களால் மட்டும் எவன் மானம் போகப்போகிறது.

தமிழ் உதயன் சொன்னது…

நாம் வாழும் சமூகத்தின் நிலையினை தோலுரித்து காட்டி உள்ளிர்கள்.... இன்றைய நிலையில் சீமான் மட்டுமே அரசியல் வியாதிகள் நிலையில் சிறிது நம்பிக்கை தருகிறார். பார்ப்போம். பதிவு அருமை அதைவிட அருமை அதை சொல்லியவிதம்

சசிகுமார் சொன்னது…

இதே போல தாங்க அண்ணா நேற்று ஒரு செய்தி பார்த்தேன் சிரிப்பு தான்
வந்தது அப்பொழுது என் மனதில் உதித்த சில கேள்விகளை கூறுகிறேன் தெரிந்தால் பதில் கூறுங்கள்......

"காஸ்மீரில் இந்திய தேசியக்கொடியை ஏற்ற முயன்ற பா.ஜா.கா வினர் கைது" இதில் யார் மீது குற்றம் என சத்தியமாக எனக்கு விளங்க வில்லை.

1.காஸ்மீர் எங்கு உள்ளது இந்தியாவில் இல்லையா?

2.இந்தியாவில் தான் இருந்தால் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றுவது என்ன தவறு உள்ளது?

3.சச்சின் டெண்டுல்கர் ஹெல்மட்டில் தேசிய கொடி சின்னம் கீழே இருந்தாலே பெரிய தேசிய குற்றம் மாதிரி கொடி பிடிக்கும் அல்லக்கைகள் இதற்கு ஏன் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

4.தமிழனுக்கு ஆதராவாக பேசினாலே இறையாண்மை என கூறும் அரசியல் வாதிகள் இந்தியாவிற்கே எதிராக நடக்கும் இது போன்ற செயல்களை பார்த்து கொண்டு இருப்பது ஏன்.

யாராவது தெரிந்தால் பதில் கூறுங்கள்......

உமர் | Umar சொன்னது…

@சசிகுமார்

விந்தை மனிதனின் இந்தப் பதிவை பாருங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்கக்கூடும்.

பாராளுமன்றத்தில் நேரு ஆற்றிய உரை இது.

Let me say clearly that we accept the basic proposition that the future of Kashmir is going to be decided finally by the goodwill and pleasure of her people. The goodwill and pleasure of this Parliament is of no importance in this matter, not because this Parliament does not have the strength to decide the question of Kashmir but because any kind of imposition would be against the principles that this Parliament holds. Kashmir is very close to our minds and hearts and if by some decree or adverse fortune, ceases to be a part of India, it will be a wrench and a pain and torment for us. If, however, the people of Kashmir do not wish to remain with us, let them go by all means. We will not keep them against their will, however painful it may be to us. I want to stress that it is only the people of Kashmir who can decide the future of Kashmir. It is not that we have merely said that to the United Nations and to the people of Kashmir, it is our conviction and one that is borne out by the policy that we have pursued, not only in Kashmir but everywhere. Though these five years have meant a lot of trouble and expense and in spite of all we have done, we would willingly leave if it was made clear to us that the people of Kashmir wanted us to go. However sad we may feel about leaving we are not going to stay against the wishes of the people. We are not going to impose ourselves on them on the point of the bayonet

இப்பொழுதும் உங்களுக்கு அந்தக் கேள்விகளும் சிரிப்பும் வருகிறதா? அப்படியும் வந்தால், பாடப்புத்தகங்கள் தாண்டிய உண்மைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசபக்தி'ச் சிசுபாலர்கள் இந்தத்தளத்தை விட்டு விலகி அவரவர் ஊரில் இருக்கும் 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் கருணைகூர்ந்து வழங்கப்படும் மிட்டாய்களைச் சப்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்//

அப்பாடா என்ன ஒரு கோபம் சிசுபால பதிவர்கள் மீது. நாட்டில் நடக்கும் எல்லா நியாய அநியாயமும் எல்லோரும் பாத்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம்.சில கருத்துக்கள்
சொல்றவங்க சொன்னால்தான் (உங்களைப்போல )ஏதுவா இருந்தாலும் எடுபடும்.அவங்கவங்க மண்டையில தோன்றததான சொல்ல முடியும்.

ஒரு நிமிடமாவது நாட்டை பற்றி பெரும்பாலோனோர் நினைக்கிற நாள் சுதந்திர,குடியரசு நாளாதாநிருக்கும். அந்த நாளை தீபாவளி பொங்கல் போல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் குடும்ப விழாவாக கொண்டாடுங்கனு சொல்ல ஆசையாத்தான் இருக்கு.

வசதியானவங்க பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை விட 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் தான் (நாட்டுப்பற்றிலோ,மிட்டாய்க்கு ஆசைப்பட்டோ )ஆசிரியர்களும்,மாணவர்களும் ஆல் பிரசன்ட்..பதிவுலகுக்கு வந்திருக்கும் நிறைய பேரின் ஊக்கத்துக்கும்,உணர்வுக்கும் அங்க அன்று சப்பிய இனிப்பும் ஒரு காரணமாதானிருக்கும்.

Unknown சொன்னது…

நியாயமான கோபம்..

தீர்வு??????????????

Unknown சொன்னது…

தீர்வு சொல்லவேண்டியவர்கள், சாதாரணன் போல ஆவேச பதிவு எழுதுவதால், சாதாரணன்கள் படித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டு...

Unknown சொன்னது…

நியாயமான கோபம்..
தீர்வு??????????????

Unknown சொன்னது…

தாராளமாய் இதையே அடுத்த வருடமும் மீள்பதிவிடலாம் # அடுத்த வருபவர்கள் மட்டும் என்னச் செய்ய போகிறார்கள்.

Unknown சொன்னது…

மாற்றுச்சாவி யாரிடம் இருக்கிறது...

தமிழ்நதி சொன்னது…

அருமையான கட்டுரை செந்தில். என்ன ஒரு தெளிவு...! என்னால இப்படிச் சொல்லமுடியாதுங்க..“எங்க நாட்டைக் கிண்டல் பண்றியா அகதி நாயே“ன்னுடுவாங்க. ஆனாலும், இந்த “தேசபக்தி“யை வைச்சு, தேசபக்தர் ஜெயமோகனைக் கிள்ளி ஒரு பதிவு போட்டிருக்கேன்.

ரொம்ப நல்லா எழுதுறீங்க.. இனிம அடிக்கடி வருவேன். நன்றி.

ஆதி சொன்னது…

சரியான உணர்வு

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

ரொம்ப தெளிவா சொல்லியிருக்கிங்க...

சபாஷ்...

தொடரட்டும் உங்கள் வீர நடை...