28 பிப்., 2011

போராடு .. பொங்கியெழு ... புரொபைலை ஒளிச்சுவை ....


உள்நாக்கும்
உலர்ந்துபோக
உக்கிரமாய் வெயிலெரிக்க...
கோடை விடுமுறை
மின்சாரத்துக்கும் சேத்துதானாம்
கிராமங்களில்..

தேர்தல் திருவிழா
உடுக்கு ஒலியெழுப்ப
இடுப்புவேட்டி அடகுவெச்சி 
சீட்டுக்கு தீபாராதனை...
வெதவெதமா துண்டுபோட்டு
கரைவேட்டி சாமியாடி 
"போடுங்கம்மா ஓட்டு
ரெண்டாயிரத்தப் பாத்து..."
மந்திர சத்தத்துல
மயங்கி நிக்கும் ஆடுங்க..

ஐயாவுக்கோ,
அம்மாவுக்கோ, 
அவங்க குடும்பம் முழுசுக்குமோ 
இன்னொருக்கா எடங் கெடைக்கும் 
அரசாங்கக் கட்டிலுல..

உனக்கென்ன கெட்டுப்போச்சு?
பதிவெழுத குப்பை கூளம்
பல ஆயிரம் 
பாக்கி இருக்கு
ஹிட்டடிச்சா போதுமய்யா 
எவங்கெட்டா என்ன போச்சு!..

இன்னொரு சாகித்யம் 
பதிவுலக சாமர்த்தியம் ..

ஒளிஞ்சுக்கோ!
மறைஞ்சுக்கோ!!
சேற்றை வாரி எறிஞ்சுக்கோ!!!..

26 பிப்., 2011

பதிவர் சந்திப்பு... 26/02/2011


அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்தக கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால், ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது? என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச்சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது  சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில் நம் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நம் சந்திப்பினூடே நம்முடன் வந்திருந்து கலந்துரையாட தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் திரு. சீனு ராமசாமி வருகிறார். புதிய, பழைய,வாசக பெருமக்கள் அனைவரும் வந்திருந்து சந்திப்பை சிறப்பிக்க வேண்டுமாய் எல்லா பதிவர்கள் சார்பாய் வேண்டுகிறோம்.

இந்தப் பதிவர் சந்திப்பில் ’சென்னை வலைப்பதிவாளர் குழுமம்’ துவங்குவது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால் சென்னைப் பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி   : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி. 

பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அனைவரும் வருக..வருக.. வருக..

நன்றி.. 

25 பிப்., 2011

தெ.மு.தி.க-வும், கேபிளு சங்கருலுவும்...

நேற்று நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தபோது 'கேப்புட்டன்' கட்சில தெலுங்கு பேசத்தெரிந்த ஆளுகளுக்கு அல்லது பூர்வாசிராம மக்களுக்கு பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதாக சொன்னார். எனக்கோ ஆச்சர்யம் என்னடா இது 'கேப்புட்டன்' பச்சை தமிலனாச்சே.. டமிலைத் தவிர வேற்று மொழிப்படங்களில் கூட நடிக்க மறுத்த ஆளாச்சே என விசயகாந்து பக்கம் இருந்த நியாயத்த பேசுனேன்.

ஆனா கவரை நாயுடு பிரிவை சேர்ந்த 'கேப்புட்டன்' அவரது மச்சான் குடும்பம் எல்லாம் வீட்டில் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடுவதாக சொன்னார். டமிலை காப்பாற்ற தன் 'நைனா' மேல் சத்தியம் செய்துவிட்டு கட்சியை தொடங்கியிருக்கும் 'கேப்புட்டன்' நாளது தேதி வரைக்குமே மக்களின் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியது என்னவோ பேருக்குதான் என்றாலும்

தன் கட்சியில் இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள்?? படையைக் கட்டி ஆள தெலுங்கர்களால் மட்டுமே முடியும் என்பதில் வியப்பொன்றும் இல்லை.

எனக்குத் தெரிந்து நம்ம பதிவர்களில் நன்றாக தெலுங்கு பேசும் ஆள் நம்ம கேபிள்தான் எனவே இந்த அதி சிறப்பான தகுதி அவருக்கு இருப்பதால் அவரின் பெயரை 'கேபிளு சங்கருலு' என்று மாற்றிக்கொண்டு சைதாப்பேட்டை தொகுதியில் நிக்க வைத்தால் அமோக வெற்றி பெற்று தன் கேபிள் நெட்வொர்க்கில் 'கேப்புட்டன்' நடித்த அத்தனை தமில் படங்களையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு மக்களை மகிழ்விப்பார்.

தெ.மு.தி.கவில் சீட்டு கேட்பவர்கள் தங்கள் பெயர்களுடன் 'லு' சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக முன்னுரிமை கிடைக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே போஸ்ட்டர்களில் 'சுதிச்லு' காரு 'பிரேமலதாலு' காரு எனப்புகழ் பாடுங்கள்.

ஆகவே வரும் தேர்தலில் "கேப்புட்டன்' கட்சிக்கு வாக்களித்து தமிழகத்தில் தெலுங்கை வாழவைக்குமாறு 'வந்தாரை வாழவைக்கும்' கூமுட்டை தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதென்ன தெ.மு.தி.க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது அது உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டாமா?...

23 பிப்., 2011

பிணந்தின்னும் சிங்கள நாய்களும், துணைபோகும் இந்தியப் பேய்களும்...


இன்று எனக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான, அவமானகரமான தகவல் இது. தமிழனாய்ப் பிறந்ததற்காய் இன்னொரு முறை வாழ்வில் கூசிக் குறுகிப்போன நாளும்கூட!

தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயாரும், தமிழினத்தின் போற்றத்தக்க பெண்மணியுமான பார்வதியம்மாளின் அஸ்தியும் சிங்களவெறிநாய்களால் சேதமாக்கப்பட்டு அவமானத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவரது அஸ்தி தாறுமாறாக அள்ளி வீசப்பட்டு இருந்ததாகவும், அவரது பூதவுடல் எரியூட்டப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் தலைப்பாகைக்கே ஃப்ரான்சு சென்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அரசு தமிழனின் உயிர்ப்பிரச்சினைக்கு உதிர்ந்துபோன மயிரளவுக்கும் மதிப்புத் தரத் தயாராயில்லாதநிலை தொடர்ந்துவருவதை கடந்த பத்தாண்டுகளாகவே நாம் கண்டுவருகிறோம். லட்சக்கணக்கான தமிழ் உறவுகள் உயிரோடு சமாதி கட்டப்பட்ட நிலையிலும், நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் உயிர் சிங்களர்களின் விளையாட்டுப்பொருளாய்ப்போன பொழுதிலும் நாம் கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய், செவியிருந்தும் செவிடராய், இயங்கமுடியாத முடவராய் இருந்திருந்தோம்.

எவர் இறந்துபோனாலும் அவரது உடலத்துக்கு உரிய மரியாதை தந்து இறுதிச் சடங்கு செய்வது என்பது மனிதகுலத்தின் மிகப்பழமையான நாகரீகம்! ஒருவரது இறந்துபோன உடலைச் சிதைப்பதும், அவமானப்படுத்துவதும் மிகவும் இழிவுக்குள்ளான ஒரு செயலாகவே இதுவரை சமூகத்தின் அனைத்து நாகரீகங்களிலும் பார்க்கப்படுகின்றது. "அதையெல்லாம் மனிதனுக்குச் சொல்லுங்கள்: எங்களுக்கல்ல!" என்று சிங்களம் மீண்டும் ஒருமுறை உரத்துக் கூவியிருக்கின்றது.

"தமிழர்களே! தமிழர்களே!! என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் தமிழர்களுக்குக் கட்டுமரமாவேன்" என்று தமிழன்பாட்டு பாடியே ஆட்சியையும் அதிகாரத்தையும் சுவைத்திருந்த்த "தமிளினத் தலைவன்" தன் மகளது வீட்டுக்குள் சீப்பீஐ நுழைந்துவிடக் கூடாது என்று முதுகெலும்பைக் கூட காங்கிரஸ் பன்றிகள் தேர்தல் கடலில் கரையேறக் கட்டுமரமாக்கிக் கொண்டு தரையோடு குனிந்துகிடக்கிறார். அவரது உடலில் கண்களையும் மூளையையும் தவிர வேறெந்த பாகங்களும் வேலை செய்யவில்லை என்பது உண்மைதான் போலும்.

தமிழர்களே! இன்னும் மிச்சம்மீதி சொரணையும், தமிழ் ரத்தமும் உங்கள் உடலில் ஓடிக் கொண்டிருந்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சுயநலப் பிரச்சினைகளயும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு வாருங்கள். வருங்காலத் தமிழ்த் தலைமுறை உங்களை வாயார வாழ்த்தும்...

துரோணா - 6 ...


நான்தான் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால் செல்லம் அதிகம். எனக்கு நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரன், ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அண்ணனுக்கே அதிக முன்னுரிமை என்று. அவனுக்கு கவுச்சி இல்லாம சோறு உள்ள இறங்காது. அதனாலே அவன் சாப்பிடும்போது மட்டும்  'கன்னிராசி' படத்துல வர்ற மாதிரி சோத்துக்குள்ள முட்டையை புதைச்சு வச்சிருப்பாங்க. அவன் எப்ப பணம் கேட்டாலும் உடனே கொடுப்பாங்க. நான் ரெண்டு ரூவா பணத்துக்கு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சனும்.  

ஆனால் என்னோட உலகம் வேறாக இருந்தது . எப்போதும் விளையாட்டுதான் . என்னுடைய வீடு இருக்கும் தெருவில் அனேகமாக எல்லோரும் மாமாக்கள் வீடுதான். எல்லாவீட்டிலும் என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தனர்.  ஏன்னா நான் ஏறாத மரம் கிடையாது. தம்பிதான் மறுக்காம உதவி பண்ணும் என்று சொல்லியே எல்லா வேலையும் என்னிடம் வாங்கிவிடுவார்கள் தேங்கா,மாங்கா, முருங்கைக்காய் பறிக்கிறது, கடைகன்னிக்குப்போறது இப்படியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாத நான் எல்லோர் வீட்டிற்கும் வேலைக்காரன் ஆகிப்போனேன்..

அப்பல்லாம் நான் ஒன்னாப்பு படிக்கயில என்னக்கு மட்டும் ஒரு பலகை. பலகை என்பது பெஞ்சு அளவில் இருக்கும் ஆனால் தரையில் நாலு இன்ச் உயரத்துக்கு இருக்கிறமாதிரி செய்திருப்பார்கள். நான் மட்டும் ஒரு பலகை முழுதும்  வேணுன்னு அடம்புடிப்பேன். என்னோட கட்ட டீச்சரும் (நாங்க இப்படித்தான் கூப்புடுவோம் )எனக்கு ஒரு பலகைய  கொடுப்பாங்க. என்னோட விருப்பத்துக்குதான் ஸ்கூலுக்கு போவேன். வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சா உடனே பைய தூக்கிட்டு கெளம்பிடுவேன். அப்படிதான் ஒரு நாள் வீட்டுக்கு வர்றப்ப என்னோட தாய்மாமா டேப்பன் (எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் ) பாத்துட்டு எங்கடா போறேன்னு கேட்க நானோ வயித்து வலி அதனாலே வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். அவரும் பரிதாபப்பட்டு தன்னோட சைக்கிள்ள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாரு. ஆனா என்னோட அம்மா அவர்கிட்டே இவன் இப்படித்தான் தெனமும் எதாச்சும் சொல்லிட்டு வீட்டுக்கு வர்றான் தம்பின்னு அவரிடம் கம்ப்ளெயின்ட் பன்ன. என் அம்மா முனாடியே என்னை அடி பின்னி எடுத்துட்டார்.  அடிச்சதோட மட்டுமில்லாம என்னை திருப்பிக் கொண்டு வந்து பள்ளில விட்டுவிட்டு கட்ட டீச்சரிடம் இவன் இனி வீட்டுக்கு போறேன்னு சொன்னா எனக்கு சொல்லி அனுப்புங்க அப்புடின்னு கண்டிசன் போடவே அவரின் அடிக்கு பயந்தே  அதன்பிறகு ஒழுங்கா பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன் ..

அப்புறம் நான் அஞ்சாப்பு படிக்கயில என்னோட செட்டுங்க ரொம்ப பெருசாயிடுச்சு. வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் விளையாடுவோம். அப்படிதான் ஒருமுறை நாங்க எல்லோரும் சேந்து காசு சேத்தோம். பொதுவான ஒரு எடத்துல உண்டியல் புதைத்து வைக்கப்பட்டது. ஆனால் திடீரென உண்டியல் ஒருநாள் காணாமல் போனது. எல்லோரும் பரபரப்பாகி தேடிக்கொண்டு இருந்தோம். யாராவது திருடி இருக்கலாம் என்பதால் யாரெல்லாம் அதனை திருடுவதற்கான சாத்தியம் இருக்கும் என தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தோம்.

என்னோட மாமா வீட்டு தோப்புல வெளியூருல இருந்து பிழைப்புத்தேடி வந்த ஒரு குடும்பம் இருந்தது. அந்த வீட்டு பையன் நான்தான் அந்த உண்டியல திருடியதாகவும் அதை தன் கண்ணால் பார்த்ததாகவும்சொன்னதால். எல்லோரும் என்னைக்  கூட்டி வைத்து பஞ்சாயத்து வைத்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் ,சத்தியம் செய்தும் யாரும் என்னை நம்பவில்லை. ஏனெனில் நான் திருடியதாக சொன்னவன் தன் அம்மாமேலும் சாமி மேலும் சத்தியம் செய்தான். 

என்னோட அம்மாவும் , சத்தி வீட்டு தாத்தாவும் மட்டும் நம்பினார்கள். சத்தி வீட்டு தாத்தா மட்டுமே எங்கள் பகுதியில் தினமணியும். துக்ளக்கும் வாங்குவார். இரண்டையும் அவர் வீட்டுக்கு சென்று படிப்பவன் நான். அவர் சிங்ககப்பூர்காரர் என்பதால் அவர் கால சிங்கப்பூர் கதைகளை சொல்லுவார். நான் அவரின் பிரியமான பேரன் என்பதால் என்மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதனால் அவரும் என் அம்மாவும் மட்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் எனத்திடமாக நம்பினார்கள். ஆனாலும் என் சேக்காலிங்க நம்பாததால், அம்மாவே அவர்களுக்கு அவர்கள் கணக்கு சொன்ன இருவது ரூபாயும் கொடுத்தாங்க.

அதன்பிறகு என் செட்டுங்க யாரும் என்கிட்டே பேசுறது கிடையாது . நான் கடைக்கு போகும்போதெல்லாம் என்னைபாத்து ''திருடன் போறான்னு " கத்துவாங்க. ஸ்கூல் விட்டுவந்து அவங்களோட விளையாட முடியாது. அத தவிர்ப்பதற்காக ஸ்கூல் விட்டவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அப்படித்தான் நான் படிப்பாளி ஆனேன் ,

இப்படி சில மாசம் போன பின்னாடி ஒரு நாள் ஸ்கூல்ல இருக்கும்போது என்னோட அப்பா மற்றும் என்னை நான்தான் திருடினேன் என்று சொன்ன பையன் அவனோட அப்பா ,அம்மா மற்றும் அவனோட தங்கச்சி எல்லோரும் வந்து என்னை ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க என்னை திருடன்னு சொன்ன பையன் அவனோட தங்கச்சிய நான் கருக்கருவளால் (கதிர் அறுக்கும் அருவாள் ) வெட்டிவிட்டேன் என்று சொன்னான். ஆனால் என் வகுப்பு ஆசிரியரோ அவனை விசாரித்து கேட்டபோது அவன் நான் காலை பதினோரு மணி அளவில் வெட்டியதாக சொன்னான். அப்போது நான் பள்ளியில் இருந்ததால் அவன் என்மேல் பொய் சொல்கிறான் என்று தெரிந்து அவனோட அப்பா ,அம்மா அவன செமையா சாத்துனாங்க. 

அப்புறம் இது என்னோட செட்டுங்களுக்கு தெரிஞ்சு அவங்களும் அவன புடிச்சு அடிச்சப்பதான் தானே திருடிவிட்டு என் மேல் பழிசுமத்தியதை ஒப்புக்கொண்டான். என் சேக்காலிங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டு மறுபடியும் செட்டுல சேத்துகிட்டங்க. ஆனாலும் அன்றைக்கு நான் அத்தனை சொல்லியும் அவர்கள் என்னை நம்பாத காரணம் என்னக்கு உறுத்தியதால் நான் அதன்பிறகு அவர்களுடன் விளையாடுவதை தவிர்த்து விட்டேன்.

என்னோட ஆர்வம் லைப்ரரி மேல மாறிப்போனதால் என் மாமா அவரோட உறுப்பினர் அட்டையை கொடுத்து என்னையும் உறுப்பினராக சேத்துவிட்டார். அப்புறம் சத்தி வீட்டு தாத்தாவும் தன்னோட உறுப்பினர் அட்டையைக்கொடுத்தார். இப்படி ஆறு உறுப்பினர் அட்டையை வைத்து இருந்ததால் தினசரி ஒரு புத்தகம் என்கிற அளவில் படிக்க ஆரம்பித்தேன். லைப்ரரியன் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கென புத்தகங்களை தேர்ந்து எடுத்து தர ஆரம்பித்தார்.

இன்றுவரைக்கும் நான்  தீவிர படிப்பளியாக நான் மாறக்  காரணமான என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டிய அந்தப்  பையனுக்குதான் நன்றி சொல்லணும்.

சேட்டைகள் தொடரும்....

18 பிப்., 2011

மீனவன் - பயோடேட்டா...


பெயர்                                   : தமிழக மீனவன்
இயற்பெயர்                        : படகோட்டி 
தலைவர்                             : முன்னொரு காலத்தில் எம்.ஜி.ஆர்  
துணைத் தலைவர்              : வட்டிக்குப் பணம் தருபவர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்  
  : சிதறிக்கிடக்கும் மீனவசங்கத் தலைவர்கள்
வயது                                   : சிங்களக் கடற்படையைப் பொறுத்தது
தொழில்                              : சிங்களத் துப்பாக்கிகள், வலையறுக்கும் நவீனக்
                                                   கப்பல்களுக்கு சாகசமாய்த் தப்பிப் பிழைப்பதும்,
                                                   மிச்ச நேரத்தில் மீன் பிடிப்பதும் 
பலம்                                     : கடலை ஆளும் தைரியம்
பலவீனம்                             : இன்னும் கடலை மட்டுமே நம்பி இருப்பது
நீண்ட கால சாதனைகள்        : சுனாமிக்குச் சோர்ந்துவிடாதது  
சமீபத்திய சாதனைகள்           : ஒருவேளை வரும் தேர்தலில் செய்யக்கூடும்!
நீண்டகால எரிச்சல்                : கச்சத்தீவு
சமீபத்திய எரிச்சல்                   : கலைஞரும், சோனியாவும்
மக்கள்                                  : இன்றைய பொழுதுக்கு உயிரோடு இருப்பவர்கள்
சொத்து மதிப்பு                          : கோபத்தில் எரியும் வயிறும், 
                                                             கிழிந்துபோன வலைகளும்
நண்பர்கள்                                  : இந்தியக் கடற்படையினர் அல்ல
எதிரிகள்                                      : மீன்பிடித் தொழிலில் இறங்கும் 
                                                           கார்ப்பரேட் கம்பெனிகள்
ஆசை                                           : "வங்கக்கடல் முழுதும் தொழில் செய்குவோம்" 
                                                           என்று பாட
நிராசை                                       :  "வங்கக்கடல் முழுதும் உயிர் கொல்லுவோம்" 
                                                             என்று மாற்றிப்பாடப் படுவது
பாராட்டுக்குரியது                    : நாளை பற்றிய நம்பிக்கையை இன்னும் 
                                                              கைவிடாமல் இருப்பது
பயம்                                             : இனி கரையில்தான் மீன்பிடிக்க வேண்டுமோ?
கோபம்                                        : சாவிலும் சம்பாதிக்க நினைக்கும் 
                                                          அரசியல்வியாதிகள்மேல்
காணாமல் போனவை              : இந்திய இறையாண்மையைத் 
                                                                 தேடிக் கொண்டிருக்கிறார்கள்
புதியவை                                    : உதயமாகும் ஒவ்வொரு நாளும்
கருத்து                                        : # tnfisherman சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
டிஸ்கி                                          : முள்ளெடுத்து மீன் தின்னும் இந்திய 
                                                           அதிகாரவர்க்கம், ஒரு வில்லெடுத்து 
                                                           சிங்களவன் திசை நீட்டக் கூடாதோ?
  

கூடுதலாய் இரண்டு வலைப்பக்கங்கள்..
  
பெண்கள், வயசானவங்க- இதப் படிக்காதீங்க -

லாக் அவுட் பண்ணிட்டு வாக் அவுட் பண்ணு ! (வியாபாரச் சிறுகதைகள்-1)

17 பிப்., 2011

காதல் கடுதாசி...

நான்
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா..

எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..

பத்தாம் வகுப்பில்
என் பிரிவில் வந்தாள்
பிரியா..
என்னுடன் படிக்கும்
ராஜாராமனுக்கும் அவளுக்கும்தான்
படிப்பில் போட்டி
முதல் இடத்துக்கு
முட்டிக்கொள்வார்கள் இருவருமே..

நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.

அவள் ஆண்டுவிழாக்களின்
கதாநாயகி...
பாரதமாதா வேஷத்தில்
பார்த்த கண்ணும் பூத்துப் போகும்

ராஜாராமனுக்கும்
அவள் மேல் காதல் வர
கடிதம் தந்து
தூதனுப்பினான் என்னை..

படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போன
பிரியா...

காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...

ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...

குசலம் விசாரிக்கத்தான்
அவள் வீட்டுக்கு நான்...
தேநீர், பிஸ்கட்டுக்குப் பின்

"ஏன் பிரியா அன்னிக்கு அறைஞ்சே?"

அக்கம்பக்கம் பார்த்து
அருகில் வந்தவள்
முன்னுச்சி மயிர் கலைத்து
மெதுவாய்ச் சொன்னாள்

"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"

இதன் சிறுகதை வடிவத்தை தம்பி விந்தைமனிதன்  ஸ்வர்ணா என்றொரு தேவதை... என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்...

அப்படியே இங்கியும் போயி கவுண்டமணி - மிஷ்கின் பேட்டியை பாருங்கள்..

16 பிப்., 2011

துரோணா - 5 ...


பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார் குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார் 
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார். - விவேக சிந்தாமணி..

காதலில் எத்தனையோவகையை பார்த்துவிட்டோம்.போதாகுறைக்கு அதனை சினிமாவும் கற்பனைக்கு எட்டியவரை காட்டியாயிற்று.. இது ஒரு மாணவனுக்கு டீச்சர் மேல் உண்டான காதல், ஆனால் இதில் டீச்சர் ஒன்றும் அறியாத அப்பாவி.. ஏனென்றால் நண்பனுக்கு வந்தது ஒருதலைக்காதல் ..

நம்ம நண்பனின் பெயர் கம்பன்,வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்தவன். அவன்தான் நம்ம ஹீரோ, தொடர்ந்து அவனைப்பற்றி பேசுறதுக்கு முன்னால என்னோட சுயபுராணம் கொஞ்சம் ...

நாங்க அப்போது +2 படித்துகொண்டிருந்தோம் , பத்தாவது முடித்தவுடன் நான் கட்டிடவியல் படிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அப்பாவோ சுத்துப்பட்டுல நம்ம ஊருக்குதான் கம்ப்யூட்டர் வந்திருக்கு அதனால் அதைத்தான் படிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக சேர்த்துவிட்டார், எனவே நமக்கு பிடிக்காமலே சேர்ந்த படிப்பு அது, அதனால் கொஞ்சம் கவனக்குறைவாகவே இருப்பேன் , அதனால் டீச்சருக்கு என்னையும் நண்பன் கணேஷையும் சுத்தமா புடிக்காது,

இந்தக் கணேஷ் இருக்கானே அவன் ஒரு ஊமைக்குசும்பன் எப்பவுமே அவன் பேசுறதுக்கு டபுல் மீனிங்தான். நானும் அவனும்தான் படா தோஸ்த்.. ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டி தாங்காம டீச்சர் அடிக்கடி வகுப்பை விட்டு பத்தி விட்ரும்..

போதாகுறைக்கு எங்களோட சீனியர் ஒருத்தனும்(பேரு மதி ) எங்களோட படித்தான், அவனோட கிளாஸ்மேட்தான் நம்ம டீச்சர், இந்தமாதிரி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்ன்னா அப்ப கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவங்க ரொம்ப கொறைவு , ”ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபோல்” டீச்சர் எங்க ஊரு என்பதாலும் மேலும் கம்ப்யூட்டரில் டிப்ளோமா செஞ்சதால் எங்கள் வகுப்புக்கு அவங்கள டீச்சரா போட்டுட்டாங்க, அவங்களுக்கு தெரியுமா கூடப்படிச்சவனுக்கே சொல்லிகொடுக்க வேண்டியிருக்குன்னு? அதனால அவனமட்டும் வாங்க, போங்கன்னு சொல்வாங்க, எங்கள நீ, வான்னு சொல்வாங்க போதாதா!.. அதை அடிக்கடி சொல்லி மதியை அவங்க முன்னாடியே கிண்டல் செய்வோம், அதனால் நாங்க ரெண்டு பேரும் கிளாஸ்ல இருக்கிற மாதிரியே நெனைக்க மாட்டங்க, எங்களுக்கும் அது ரொம்ப வசதியா போய்ட்டதால சிகிரெட் புடிக்கனும்னா வெளிய வந்துருவோம்,

இப்படி போய்க்கிட்டிருந்த வகுப்புல நம்ம திருநாமத்த(என் பேருதான் அவனுக்கும்) கொண்ட நண்பன் ஒருவன் நம்ம ஹீரோ டீச்சர காதலிக்கிற விசயத்த போட்டு ஒடைச்சான், நமக்கு ஒரு கிலோ அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்த்துச்சுங்க , அப்புறம் என்ன! கொஞ்ச நாளைக்கு நம்ம மக்களோட செலவெல்லாம் அவனோடதுதான், என்ன நம்ம கையும் , வாயும் சும்மா இருக்காது , சுவர் விளம்பரம், ரேடியோ விளம்பரம் , போஸ்டர்ன்னு ஒன்னுவிடாம போட்டு விட்ருவோம் , மேலும் அவன கூப்பிட்டு விசாரித்தபோது , விசாரணை என்றால் எங்க ஸ்கூல் பாத்ரூம்தான் போலீஸ் ஸ்டேஷன் அங்கதான் முதலில் அவனை சும்மா விளையாட்டா கேட்டோம், முதலில் சத்தியம் செய்து மறுத்த அவன், ரெண்டு தாங்கு தாங்கினவுடன் ஒத்துக்கொண்டான், மேலும் ”தன்னோட அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவார்ன்னு சொன்னான்” போதாதா! ”விடுங்கடா நான் காதலிக்கவே இல்லை” என்று கதறும் வரைக்கும் கறந்துக்கிட்டுதான் விட்டோம்!.

ஆனா! இது கடைசிவரைக்கும் டீச்சருக்கு தெரியாம போய்ட்டுது , நாங்க பன்ற சேட்டை தங்காம எனக்கும் கணேசுக்கும் ரெகார்ட் நோட்டுல 4 மார்க் கொறைச்கிட்டங்க, அதனால கணேஷ் அவங்ககிட்டே போய் ”நீ என்னோட ரெகார்ட் மார்க்கதான் குறைக்கமுடியும் தியரில நான் பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டா வேலைய விட்டுட்டு போவியான்னு” சவால் விட்டான் , அதுக்கு அவங்க அவனை மொறச்சுக்கிட்டே போய்ட்டாங்க, நான்கூட ”என்னடா இப்பிடி சொல்லிட்டே இதல்லாம் ஆவுற கதையாடா விட்டுட்டு வாடான்னு” அழைச்சிக்கிட்டு வந்திட்டேன், ஆனால் அவனோ சொன்னபடி செய்து காட்டினான், தியரில ஃபர்ஸ்ட் மார்க்  வாங்கினவன் கணக்குல பெயில் ஆயிட்டான். அப்புறம் ஸ்கூலுக்கு மார்க்லிஸ்ட் வாங்க வந்தபோது அந்த டீச்சர் எங்களிடம் மன்னிப்பு கேட்டாங்க. அவங்களே வந்து மண்ணிப்பு கேட்டதாலே நாங்களும் அதுக்கு அப்புறம் பெரிசு பண்ணல .
அப்புறம் நாங்க ( நானும்தான்) கணக்குல பெயிலாயிட்டதால் மேற்க்கொண்டு படிக்கல, பிறகு சிங்கப்பூர் போயிட்டு வந்தபிறகு அவங்கள போய்ப்பார்த்தேன் ரொம்ப அன்பா விசாரிச்சாங்க , இவங்கள போய் நோகடிசுட்டோமே என வருத்தப்பட்டேன்.

+2 முடிந்த பின் எப்பவாவது என் அத்தை பெண்ணைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கு போவேன், அப்படிதான் ஒருநாள் அது என்னிடம் கடிதம் ஒன்றை காட்டியது, அது நம்ம ஹீரோ கம்பன் அதுக்கு எழுதிய கடிதம், அதில் சிக்கல் என்னவென்றால் அந்தக் கடிதம் ஒரு பதில் கடிதம் போல எழுதப்பட்டிருந்தது, அதுக்கும் அந்தக் கடிதம் பார்த்து ஒரே குழப்பம், எங்க மாமாவுக்கு தெரிந்தால் பிரச்சினை பெரிதாகி அவனை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார் என்பதால், நானே அந்த கடிதத்தை வாங்கிகொண்டு கம்பன் வீட்டிற்கு சென்றேன், அவனை தனியே அழைத்துசென்று விசாரித்தால், முதலில் நான் அந்த கடிதத்தை திருடிக்கொண்டு வந்ததாக சொன்னான், பிறகு ரெண்டு போட்டவுடன் ”அந்த பெண்ணும் தனக்கு கடிதம் எழுதியது அதனால்தான் நான் பதில் போட்டேன்” என்று சொன்னான்,  நான் “அந்த லெட்டர கொடுடா” என்றால் ”தரமுடியாது” என்று சொன்னான் ,

நமக்குதான் நம்ம நண்பன பத்தி தெரியுமே, ”தருகிறாயா இல்லை உங்க அப்பாகிட்டே சொல்லட்டுமா?” என்றவுடன் நடுங்கிக்கொண்டு வந்து கொடுத்தான், ”இதை யாருடா உனக்கு கொடுத்தது?” என ரெண்டு போட்டேன், அதற்க்கு ”அவன் எங்களுடன் படித்த பாஸ்கரன் கொடுத்தான்” எனவும் , தொடர்ந்து கடிதம் கொடுப்பன் நானும் பதில் எழுதி கொடுப்பேன் , இடையில் அவன் எதற்கு புரோக்கர் மாதிரி என நானே எழுதினேன் , அது உன் கையில் மாட்டிவிட்டது என அழுதான், மேலும் தன் வீட்டாருக்கு தெரிய வேண்டாம் என மன்றாடினான், நானும் ழ்ழ்’அவனை இந்த கடிதமெல்லாம் பாஸ்கர் உன்னிடம் விளையாண்டிருக்கிறான், அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு” வந்துவிட்டேன்,

இந்த பாஸ்கர் என் மாமாவின் மூத்த பெண்ணின் கணவர் வைத்திருக்கும் கடையில் வேலை செய்தான், அவனிடம் சென்று விசாரித்தேன் , அவனும் முதலில் மறுத்தான் , படையல் ஆரம்பித்தவுடன் ஒப்புக்கொண்டான், அவனும் கம்பனும் ஒரே ஊர் அதனால் கம்பன் அடிக்கடி என் அத்தை பெண்ணை பற்றி விசாரிக்கவும் , சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன் அவன் இந்த அளவு போவான் என்று தெரியவில்லை என மன்னிப்புக்கேட்டான் , அப்பல்லாம் நான் விஜயகாந்த் மாதிரி, மன்னிப்பு என்னோட அகராதியில் கிடையாது, பாஸ்கர் தன் வாழ்நாளில் அப்படி அடி வாங்கியிருக்க மாட்டான், அடி பின்னி எடுத்திட்டேன்

இனி அந்தக் கடையிலும் வேலை பாக்கக்கூடாது என துரத்திவிட்டேன், இப்போது எல்லாருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் , அவர்களும் என்னைப்போல் நினைத்து பார்ப்பார்களா? ஆட்டோகிராப் சேரனைபோல் ஒரு தடவை எல்லோரையும் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்...

சேட்டைகள் தொடரும்...

15 பிப்., 2011

கடவுள் பேசுகிறேன்...


பரபரப்பான 
காலை வேளையொன்றில் 
கடைவீதியின் டீக்கடையில் 
அரசியல் விவாதங்களோடு 
புகைந்து கொண்டிருக்கும் 
விரல்களுடன் நிற்கையில் 
எங்கள் முன்  தோன்றினார்
கடவுள்!

வெறுமனே எங்களை உற்றுப் பார்த்த 
அவரிடம் 
”டீ வேணுமா என்றான்” நண்பன் 
தலையாட்டிவிட்டு 
உரிமையுடன் இரண்டு வடைகளும் 
எடுத்துக்  கொண்டார் கடவுள்!

நண்பன் நீட்டிய சிகரெட்டை 
மறுத்து 
டீ குடித்தபின் 
ஒரு சுருட்டைப் பற்றவைத்தார்..

அதன்பின்
எங்காவது எதிர்ப்படுவார்  
கொடுக்கும் காசை 
வாங்கிக்  கொண்டு சிறிய புன்னகை 
தருவார்!

பின்னொரு நாளில் 
’டாஸ்மாக்’ ஒன்றின் வெளிப்புறமாக 
முகமெல்லாம் ஈக்கள் விளையாட 
இறந்து கிடந்தார்
கடவுள்!...

14 பிப்., 2011

ஆகவே! உங்கள் பொன்னான வாக்குகளை...


ஐயா சாமிகளா!எங்கூட பொறக்காத பொறப்புகளா! நீங்கதான் இதுக்கு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லணும். நான் யாருன்னு கேக்குறீங்களா? நான்தான் மஞ்சள் கர்சீப்காரன்! அதென்ன மஞ்சள் கர்சீப்காரன்னு நீங்க முழிக்கிறது எனக்கு தெரியுது. நான் ஒரு ஏழை பங்காளனுங்க ( 'பங்களான்' அப்டீன்னு தப்பா படிச்சிடாதிய!) அதாவது நீங்க காருலேயோ, பைக்கிலேயோ சென்னையில போனீங்கன்னா சிக்னலுக்கு சிக்னலு வேகாத வெயிலுல கையில வண்டி தொடைக்கற மஞ்சள் துணிய பத்து ரூவாய்க்கு விப்பாங்க தெரியுமா? அந்த குடும்பங்களும் வாழணுங்கிற நல்ல எண்ணத்துல என் பக்கத்துல உக்காந்து வரும் என் அல்லக்கைக இத எனக்கு வாங்கித்தரும், நானும் எக்கச்சக்கமா அது சேந்து போனதால கர்சீப்பா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். என்னைப்பார்த்து நெறைய பேரு அத கர்சீப்பா பயன்படுத்துனா அந்த ஏழைங்க குடும்பத்துக்கு நான் வெளக்கேத்துன மாரிங்க...


இப்ப விசயம் என்னன்னா.. ஒரு தலப்பா கட்டுகாரரும் இன்னும் கொஞ்சம் பேரும் சேந்து ஒரு ஊர குத்தகைக்கு எடுத்தோங்க. அதுக்கு குறைந்த பச்ச செயல் திட்டம்ன்னு ஒரு ஒப்பந்தம் போட்டுகிட்டோங்க. வேறொண்ணுமில்லீங்க... அவரு பெரிய நாட்டாமையாவும், நான் சின்ன நாட்டாமையாவும் இருக்கறதா ஒரு ஒப்பந்தம்.அதும்படி தலப்பாக்கட்டோட வேலை என்னன்னா நம்மூருல இருந்து மேக்கால ஒரு ஆறாயிரம் பர்லாங் தூரத்துல இருக்குறாருல்ல பெரீய்ய பெரிய நாட்டாமை... அட..அதாங்க நாமெல்லாம் 'பெரியண்ணன்'னு சொல்லுவோமே, அவருக்கு காலமுக்கி உடுறது, கோமணம் கசக்கிப் போடுறது, பெரியண்ணனோட அல்லக்கையிங்களுக்கு நம்மூரு ஏரிகொளம், தோப்புதொறவு எல்லாத்தையும் திருட்டுத்தனமா பட்டா போட்டுக் கொடுக்குறது... இவ்ளோதாங்க. எம்பங்குக்கு 'பெரியண்ண'னுக்கு பட்டா போட்டது போவ மிச்சம்மீதிய தேத்திக்கிட்டு தலப்பாக்கட்டுக்கு சால்ரா அடிச்சிட்டு இருப்பேன்.அந்த ஒப்பந்தம் போடுற அதே நாளு என்னோடு தாயாதிகள வேற ஒரு நாட்டுல 'போட்டு' தள்ளினாங்க. ஏதோ எசமானுங்க ஊத்துற கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு இருந்தா அவனுங்களை ஏன் கொல்லப்போறானுங்க? நீங்களே சொல்லுங்க. நானெல்லாம் என்ன மானம் மருவாதியா பாத்துக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் என் மசுத்துக்கு சமானம்னு தூக்கி எறியல?! சொரணை பாத்தா சொத்துசொகம் கெடைக்குங்களா? காக்காசு பொறாத மானத்துக்காக கஞ்சி வேண்டாம்னு சொல்ற பயலுவ இருந்தா என்ன செத்தா என்ன... அதுல என் குடும்பத்து ஆளுங்க யாருமே இல்லேங்கிற சந்தோசத்துல நானும் மேற்படி தலப்பாக்கட்டுக்காரரோட ஒப்பந்த ஷரத்துகள சரியா படிக்காம கையெழுத்து போட்டேன். ஒப்பந்தப்படி அந்த ஊருல எதாவது அடிப்படை திட்டம் இருந்தா அதே மேம்படுத்துறோம்னு அவனுக காசை எடுத்து பேருக்கு ஏதாச்சும் பண்ணிட்டு மிச்ச இருக்கிற பணத்துல எங்க பேரனுங்க செல்போனுல படம் எடுத்து எல்லோரையும் பாக்க வைப்போங்க, அதுக்கு மேல காசு இருந்தா அதையும் என் குடும்ப வறுமையை போக்கத்தான் பயன்படுத்திக்குவேங்க. உண்மைய சொல்லனுன்னா எனக்கு சொந்தமா ஒரு வீடு கூட இல்லாத அப்பாவிங்க.

இந்த தலப்பாகட்டுகாரரு இருக்காரே அவரு சரியான ஊமைக்குசும்பனுங்க. செய்யறதையெல்லாம் செஞ்சிப்புட்டு மனுசன் கமுக்கமா ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க வெள்ளந்தியா சிரிக்கிறாரா வில்லங்கமா சிரிக்கிறாரான்னுகூட தெரியாதுங்க. அவருக்கு ஒரு மொதலாளியம்மா இருக்காங்க. அவங்க, அவங்களோட பையன் ரெண்டு பேருக்கும் பிசினசுல எப்படி ஆட்டைய போடலான்னு சொல்லிக்கொடுத்த ஆளு நான்தானுங்க. இப்ப பிரச்சினை என்னடான்னா என்னோட ஆளு ஒருத்தன் ஒரு சின்ன டெண்டர நாலஞ்சு கம்பெனிக்கு கொடுத்திருக்கான். அதுல கொஞ்சம் டீக்காசு வாங்கிருக்கான், டீ குடிக்கும்போது தலப்பாவுக்கும் ஒரு டீ சொல்லிட்டுதான் குடிச்சுருக்கான். ஆனா இந்த பசங்க நாட்டுல வெங்காய வெல ஏறிப் போனதுக்கு காரணமே அன்னிக்கு டீ குடிச்சதுதான்னு சொல்றானுங்க. 

நான் இந்த ஊருக்கு பழைய பொஸ்தகக் கடை வச்சி கொடுத்தேன். அதப் பத்தி ஒரு நாதாரியும் பேச மாட்டேங்குது. இளைஞர் முன்னேற ஒரு படம் எடுத்தேங்க. அது குப்பைன்னு எல்லா பய புள்ளையும் எழுதுது. எல்லாரும் நல்லா குடிங்க அப்பத்தான் எல்லாரும் நல்லா சாப்புடலான்னு சொன்னவனுங்க நான். ஆனா என்னோட ஆளு ஒரு டீ குடிச்சதுக்கு அதுவும் வெறும் ஒண்ணேமுக்காலணா டீங்க, அவனைப்போயி அண்டிராயர கயட்டி ஒக்கார வெச்சிட்டாங்க.. பத்தாக்கொறைக்கு என்னோட பட்டாபட்டியும் வேணும்னு புடிவாதம் புடிக்கிறாங்க இந்த டாணாக்காரங்க. இது பத்தி நானே கவலைப்படாம, தலப்பாவோட அடுத்த டெண்டர பத்தி பேசுறப்ப. இந்த பன்னாடைங்க இன்னம் ஒண்ணேமுக்காலணா டீயப் பத்தியே பேசிட்டு இருந்தா தர்மத்துக்கு அடுக்குமாங்க?நீங்களே சொல்லுங்க இப்ப ஏழைங்க கொறஞ்ச வேலையில டீ குடிக்கிறாங்க, அதுக்கு இந்த டெண்டர்தானே காரணம்.

இதெல்லாம் நானும், தலப்பாவோட மொதலாளியம்மாவும் சேர்ந்துதான் இப்படியெல்லாம் பிளான் பண்ணி பண்ணுறோம்னு ஒரு பயலும் நெனச்சு பாக்குறானா? 

அதெல்லாம் ஒருபக்கம் கெடக்கட்டும். எனக்கு இன்னொரு வவுத்தெரிச்ச என்னன்னா... எனக்கு பொறந்த பசங்களுக்குள்ள பிரச்சினை வந்துடப்பிடாதுன்னு முன்கூட்டியே ஒருத்தன தெக்குத்தெருவுக்கும் இன்னொருத்தனை வடக்குத் தெருவுக்கும்  தலையாரி ஆக்கி வெச்சேன். இவிங்க இப்ப என்னடான்னா மொத்த ஊருமே தனக்குத்தான் சேரணும்னு என்னோட டவுசரை கிழிச்சிக்கிட்டு இருக்கானுவ. ஏங்க நீங்களே சொல்லுங்க? அண்ணன் தம்பிக்குள்ள பங்காளித்தகறாரு வந்திச்சினா ஊரு சிரிக்காது?

அப்புறம் காலம்போன கடேசில கொஞ்சூண்டாவது மனசுக்கு எதமா நாலு கலைநிகழ்ச்சியெல்லாம் பாத்து பொழுத போக்கலாம்னு நம்மூரு நாடக குரூப்புல கூத்து கட்ற பயபுள்ளைங்கள அழைச்சிட்டு வந்து ஆட உட்டுப் பாப்பேனுங்க. அது பொறுக்கலைங்க இந்த பேப்பருகாரப் பயலுவளுக்கு. அதுலகூட கண்ணுவெக்கலாங்களா? கொஞ்சங்கூட மட்டுமருவாதியே இல்லாம போச்சுங்க இவிங்களுக்கு. இதுமட்டும் இல்லீங்க, நம்ம பட்டறையில எடுப்புவேல செஞ்சிட்டு இருக்குற பசங்களுக்கு கொஞ்சம் பொறம்போக்கு நெலத்த ஒதுக்கி இதுல குந்துனாப்புல குடிசை போட்டுக்குங்கடான்னு சொல்லி கொடுத்தேங்க. ஞாயமா பாத்தா என்னோட நல்ல மனச பாராட்டத்தானே வேணும்? அதுக்குக்கூட மனசு இல்லீங்க இந்த பேப்பருகாரனுங்களுக்கு.

ஏதோ உங்ககிட்ட இதையெல்லாம் சொல்லி கொஞ்சம் மனசை ஆத்திக்கலாம்னுதானுங்க இதெல்லாம் சொன்னேன். அதுக்காவ நான் மனச உட்டுட்டேன்னு மட்டும் நெனக்காதீங்க. இந்தா இன்னும் நாலு மாசத்துல மறுக்கா நம்மூரு மாரியம்மன் கோயில் கொடையில யாருக்கு பரிவட்டம் கட்றதுன்னு மக்கள் கமிட்டில முடிவுபண்ண போறாங்க. நீங்களும் சேர்ந்துதான் முடிவு பண்ணனுமாம். அதுனால உங்க ஒவ்வொருத்தர் ஊட்டுலயும் கூழுகாச்சி ரெண்டாயிரம் பணமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேனுங்க. மறக்காம எனக்கே பரிவட்டம் கட்டணும் சொல்லிப்பிட்டேன். பொறவு ஏதாச்சும் மிச்சம்மீதி இருந்தா அடுத்தாப்புல பரிவட்டம் கட்டுறப்ப பாத்துக்கலாம். என்ன நாஞ்சொல்றது? சரிதானுங்களே?

ங்கொக்க மக்கா! வாலண்டைன்ஸ் டே இசுபெசலுங்கொ....

11 பிப்., 2011

டவுன் Buzz - ம், பின், முன்,நடு, ஓர நவீனத்துவ கருத்துகளும்...




கேவிஆர் . - Buzz - Public
அகரம் படத்திலே நம்ம கேபிள் கலெக்டர் :-)
2 people liked this - Selvam Muniyandi and அருணையடி .
எம்.எம். அப்துல்லா - எந்த கலெக்ட்டர்? பில் கலெக்ட்டரா?? குப்பை கலெக்ட்டரா??

:))

எது என்ன பெரிய விஷயம். எதோ ஒரு படத்துல கேபிளை ஜட்ஜா பார்த்தேன். கேபிள்லாம் நாட்ல நீதி சொல்லி.... கொடுமைடா சாமி :(
3:38 pm
கேவிஆர் . - ஒரு சீனோட கலெக்டரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க :-)))3:41 pm
raguraman r - எதோ ஒரு படத்துல கேபிளை ஜட்ஜா பார்த்தேன்.!! என்ன படம் அது ?3:43 pm
எம்.எம். அப்துல்லா - பேரு தெரிஞ்சா நான் ஏன் ஏதோ ஒருபடம்னு சொல்லப்போறேன்?? நல்லாக் கேக்குறாய்ங்கய்யா டீட்டேலு.3:49 pm
raguraman r - பாஸ் உங்க சப் கான்ஷியஸ் மைன்ட் ல எதவாது மூலையில இருக்கும் .. நல்லா யோசிங்க பாருங்க :) :)3:54 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - நான் கேபிளை ஒரு படத்துல போலிஸ் கமிஷனரா பார்த்தேன்.3:55 pm
O.R.B Raja - வக்கீலா இருந்து எப்போ ஜட்ஜானாரு. இப்பத்தானே அவர வக்கீலா பாத்தேன்.3:55 pm
கேவிஆர் . - மூளையின் மூலையிலே இருந்தாலும் வெளில எடுக்க அது என்ன சிநேகா நடிச்சப் படமா?3:55 pm
Suresh @ Night Sky - நான் கேபிள் சார கனவில பார்த்தேன்:-)3:56 pm
raguraman r - கனவுல யாரோட பார்த்தீங்க :P3:56 pm
Suresh @ Night Sky - :_))))))))))))3:57 pm
விஜி . - நான் கூட ஒரு நாடகத்திலே பார்த்தேன், என்னவான்னு மறந்துட்டேன்3:57 pm
கேவிஆர் . - @ரகு :-))))))))))))3:58 pm
O.R.B Raja - நான் கேபிளை நேத்து நேர்ல பாத்தேன்...போங்கப்பூ..4:00 pm
Suresh @ Night Sky - எங்க வச்சு பார்த்தீங்க?4:06 pm
O.R.B Raja - @சுரேஷ் - அதெல்லாம் ரகசியம் ;) சாமி கும்புடுற எடத்துல பாத்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க?4:13 pm
Suresh @ Night Sky - ஹி ஹி ஹி, கூட யாரு சார்?4:16 pm
O.R.B Raja - சுரேஷ், ரொம்ப டீடேய்லு கேக்காதீங்க. ஒளரிடப் போறேன்...4:20 pm
மணிஜி கோபால் - நான் கேபிளை ஒரு படத்துல ஜாக்கியா பார்த்தேன்4:37 pm
ramesh subburaj - கேபிள் சுயேச்சை MLA படத்துல போலீஸ்4:37 pm
§en.. ™ - அகரம் பட டைட்டில கேபிள் பேர் போடாம இருட்டடிப்பு செய்த இயக்குனரை வண்மையா கண்டிப்போம்..4:44 pm
ராஜ வம்சம் - அகரம் படத்தில் ஹீரோவுக்கு கலெக்டர் ரோலா?4:58 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அட ஆமாம்.. நிறைய பேர் போன் பண்ணி கேட்டாங்க.. எனக்குத்தான் பேர் மறந்து போச்சு.. நன்றி கேவிஆர்5:17 pm
கேவிஆர் . - சிங்கிள் ஷாட் வந்தாலும், கார் கிட்டே போய் திரும்பி ஒரு லுக்கு விடுவிங்க பாருங்க, ஜூப்பரு :-)5:19 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - நன்றி..நன்றி..5:23 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - கேவிஆர், சாருவோட விரல்கள் சூப்பரா நடிச்சிருந்தன அப்படின்னு ஒரு வாசகர் கடிதம் படிச்சேன். அதுதான் ஞாபகம் வந்துச்சு :)5:27 pm
கேவிஆர் . - சுந்தர் :-)5:29 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - நான் அந்த படத்தில் மூன்று காட்சிகள் நடித்ததாக ஞாபகம். ஆனால் எடிட்டிங்கில் போய்விட்டது.5:31 pm
४१ தோழி १४ - sankar narayan (கேபிள் சங்கர்) - நான் அந்த படத்தில் மூன்று காட்சிகள் நடித்ததாக ஞாபகம். ஆனால் எடிட்டிங்கில் போய்விட்டது. //

எப்பூடில்லாம் சமாளிக்கறாங்கப்பா..:)))
5:32 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அட நிசமாவேங்க..இதுக்கெலலாம் நான் சமாளிக்கவே மாட்டேன். இதாவது பரவாயில்ல.. போக்கிரி படத்துல சுமார் 15 நாள் நடிச்சிட்டு, ஒரே ஒரு ஷாட் வந்தேன் அத என்ன சொல்றது. அது கூட இந்த படத்திலயாவது பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஆனா போக்கிரில நானே சொல்லி பாக்குறதுக்குள்ளே போயிரும். பதினைஞ்சு நாள் நடிச்சேன். ம்ஹும்5:34 pm
கேவிஆர் . - பாவம் கேபிள் & சாரு :-)5:35 pm
§en.. ™ - @கேபிள்.. போக்கிரில அந்த ஒரு ஷாட் நீங்க சரியா நடிச்சியிருக்க மாட்டீங்க... அதான் ரீடேக் ரீடேக் வாங்கி 15 நாள் நடிச்சியிருப்பீங்க...
;-)
5:36 pm
ராஜ வம்சம் - sankar narayan (கேபிள் சங்கர்) இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது என் நண்பன் ஒருவன் வருசகணக்கா ஒரே படத்தில நடிச்சான் படமே ரிலிஸ் ஆகல.5:38 pm
ராஜ வம்சம் - @४१ தோழி १४ இது பொது இடம் பெயர் சொல்லாமல் விடுவதே சரி.5:42 pm
४१ தோழி १४ - அவர் எனக்கும் நண்பர் தான் இல்லாம எனக்கு இந்த மேட்டர் எப்படி தெரியும்.. நான் இலங்கைல இருக்கேன்ல..

மன்னிக்கவும் காமெண்ட அழிச்சிட்டேன்..
5:45 pm (edited 5:46 pm)
யெஸ்.பாலபாரதி . - கேபிள்- குரல் உங்களுடையது தானா? #டவுட்டு.5:47 pm
ramesh subburaj - பாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளவர்கள் மது ஷாலி்னியும் ஜனனியும். 10 காட்சியில் வரும் அளவுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

பிறகு சொல்லியனுப்பும்போது வந்தால் போதும் என்று கூறி தேனி ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தார்களாம்.

அவ்வளவுதான். அதன் பிறகு அவர்களை மறந்தே போனார் பாலா. காரணம், கதை முழுக்க ஹீரோக்களும் வில்லனுமே ஆக்கிரமித்துக்கொள்ள, ஹீரோயின்கள் அவசியப்படவே இல்லையாம்.

படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கும்போதுதான் சொல்லியனுப்பினார்களாம் ஹீரோயின்களுக்கு.
5:47 pm
ராஜ வம்சம் - கேவிஆரும் குசும்பணும் படம் எடுக்க போரதா போனவாரம் பஸ்ஸுல பேசிக்கிட்டாங்க # பதிவுலகில் ரொம்பபேருக்கு நடிக்க சந்தர்ப்பம் உண்டு.5:48 pm
எம்.எம். அப்துல்லா - @ ராஜவம்சம் - பதிவுலகில அல்ரெடி பலபேரு நடிச்சிகிட்டுதானே இருக்காங்க :)5:51 pm
ராஜ வம்சம் - @எம்.எம். அப்துல்லா அண்ணா நா சினிமாவுல சொன்னேன் நீங்க எந்த நடிப்ப சொல்றீங்க.5:55 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - பாலபாரதி@ நான் தொடர்ந்து செல்வியிலிருந்து அந்த வக்கில் கேரக்டர் செய்து கொண்டு வந்தேன் முதலில் டப்பிங் ஆர்டிஸ்டை வைத்து குரல் கொடுத்துவிட்டார்கள் அதனால் தொடர்ந்து அவரே பேசினார்.6:09 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அண்ணே.. நான் சினிமாவுல மட்டுமே நடிப்பவன்.6:10 pm
Sanjai Gandhi - //sankar narayan (கேபிள் சங்கர்) - அண்ணே.. நான் சினிமாவுல மட்டுமே நடிப்பவன்.//
தோடா.. சிம்புக்கு பக்கத்து வீட்டுக்காரர்.. :)
6:31 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அஹா.. வந்திருச்சு.. வந்திருச்சு6:34 pm
Sanjai Gandhi - அய்ய.. பஸ்ல வேனாம்.. பாத்ரூம் போங்க..6:38 pm
எம்.எம். அப்துல்லா - உனக்கு வெளிய நடிக்க தெரிஞ்சிருந்தாத்தான் இந்நேரம் டைரக்‌ஷன் சான்ஸ் கிடைச்சிருக்குமே :((6:41 pm
ஸ்ரீதர் நாராயணன் - அட! வாழ்த்துகள் கேபிள்!6:43 pm
.............................................................................................................................................

jackie sekar - Buzz - Public
யாராவது பெங்களூர்ல பயணம் படத்துக்கு இன்று மதியாகட்சிக்கு என்னோடு வரமுடியுமா??? வண்டி வைத்து இருக்க வேண்டும்.... என்னை போல யாராவது வெட்டியாக இருந்தால் எனது செல்போன் எண் 09840229629க்கு எஸ் எம் எஸ் பண்ணவும்.. நான் கால் பண்ணறேன்... ஒரு மணிக்குள்ள பதில் சொல்லங்க...
1 person liked this - VARIndia Magazine
யுவ கிருஷ்ணா - ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி கொடுத்தால் நானும், அதிஷாவும் உங்களோடு படம் பார்க்க தயார்.11:14 am
jackie sekar - கொய்யால எல்லா வழியாவும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்..லக்கி..11:15 am
கோ. கணேஷ் - ஜாக்கி PVR கிளாசிக்கில் போட்டிருக்காங்க... மடிவாலாலேர்ந்து நடக்கிற தூரம் தான்... அதுக்கு போய் வண்டி வேணும்னு பேசறது நியாயமில்லை...11:19 am (edited 11:20 am)
jackie sekar - உண்மைதான் டிக்கெட் செக் பார்த்தேன் சண்டித்தனம் பண்ணியது.. ரெண்டாவது இன்னைக்கு அங்க புல்லா இருக்க வாய்ப்பு இருக்குன்னு மச்சான் சொன்னான்.. அதான் அடுத்த ஆப்ஷன் பார்க்குறேன்...11:29 am
jackie sekar - ஐநாக்சில் டிக்கெட் தேடினால் 240, 350 என்று டிக்கெட் விலையை சொல்லி சினிமாவையே வெறுத்து போக வைக்கின்றார்கள்...11:34 am
jackie sekar - மார்த்தஹல்லி கிட்ட இருக்கும் இன்னோவேட்டிவ் மல்ட்டி பிளக்ஸ் பக்கத்துல மச்சான் ஆபிஸ் இருக்கு டிராப் பண்ணிட்டு போடான்னு சொன்னேன். அந்த தியேட்டருக்கு கெயிட்டி பராவயில்லைன்னு சொல்லறான்....11:36 am
jackie sekar - அஜந்தா தியேட்டர் நல்லா இருக்கும் ஆனா ரொம்ப தூரம் என்று சொன்னான்11:37 am
யுவ கிருஷ்ணா - சென்னை சத்யமிலேயே காத்தாடுகிறது. பெங்களூர் ஐநாக்ஸில் ஃபுல் ஆகிறதா? ஆச்சரியம்.11:37 am
கோ. கணேஷ் - இன்னோவேட்டிவ் மல்ட்டி பிளக்ஸா ...
அங்க போறதுக்கு சும்மாவே இருக்கலாம்...
11:37 am
கோ. கணேஷ் - ஆமா PVR Classicல் 03:40PM 09:20PM ரெண்டு ஷோவும் ஃபுல்....11:38 am
jackie sekar - அதேதான் கணேஷ்....11:40 am
மணிஜி கோபால் - //மதியாகட்சிக்கு//

புது கட்சியா ஜாக்கி?
12:29 pm
jackie sekar - குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குங்கும் புலவர்கள் இருக்கின்றார்கள்.. மிஸ்டேக் கண்டுபிடித்து பேர் வாங்கும் நீர் எந்த இனத்தை சேர்த்தவரென்று எனக்கே விளங்கவில்லை...12:39 pm
எம்.எம். அப்துல்லா - ஜாகியண்ணே, குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கினால் புலவர். மிஸ்டேக் கண்டுபிடித்து பேர் வாங்கினால் பொயட்.12:42 pm
மணிஜி கோபால் - //சேர்த்தவரென்று//

சேர்ந்தவர்
12:42 pm
மணிஜி கோபால் - ////மதியாகட்சிக்கு//


இது உனக்கு மிஸ்டேக்கா ஜாக்கி?
12:43 pm
மணிஜி கோபால் - //வாங்குங்கும்/

3 மணிக்குத்தானே படம்?
12:44 pm
அகநாழிகை பொன்.வாசுதேவன் - யோவ்(மணி)ஜி, ‘சொரணை‘ய மாத்துங்க முதல்ல12:44 pm
மணிஜி கோபால் - அது கொஞ்சம் சூடு கம்மி வாசு12:44 pm
jackie sekar - போய்யா போ....12:46 pm
அகநாழிகை பொன்.வாசுதேவன் - அப்போ ஆறிப்போச்சா?12:46 pm
மணிஜி கோபால் - சதா தப்பு பண்றியே ஜாக்கி12:47 pm
jackie sekar - எல்லாம் இனிமே அப்படித்தான்....12:51 pm
subramanian rajaraman - சாதா தப்பு இல்லையா மணிஜி?# டவுட்டு12:55 pm
.........................................................................................................................................................

இதனை எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியவில்லை.

இந்த மாத சூரியக்கதிர் புத்தகத்தில் நடிகை ரஞ்சிதாவின் பேட்டி. அதில் ஒரு கேள்வி :

கேள்வி : எழுத்தாளர் சாருநிவேதிதா உங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தீர்களா..? அதைப் பற்றி உங்களது கருத்தென்ன..?

ரஞ்சிதாவின் பதில் : நான் அவருடைய எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் அதையெல்லாம் எப்படிப் படிக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

உங்களுக்கு மட்டுமா ஆச்சரியம்..? எங்களுக்கும்தான் அம்மணி..!
மணிஜி கோபால் - வேற என்ன கேள்வி கேட்டாங்க அண்ணே?2:42 pm
Suresh @ Night Sky - இதுல ஆச்சரிய பட என்ன இருக்கு, இவங்க நடிக்கறத அவரு எழுதராரு அவ்வளவுதான்..2:44 pm
உண்மைத்தமிழன் S. - பொஸ்தகம் வாங்கிப் படிண்ணே.. சாருவைப் பத்தி கேட்டிருக்கிறது இது ஒண்ணுதான்..!3:01 pm
S.Raja Priyan - எப்பா இது உலக மகா நக்கலு.......

இருந்தாலும் தல சாருவை விமர்சிக்க ரஞ்சிதாவுக்கு அருகதை இல்லை.......
3:07 pm
S.Raja Priyan - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் ரஞ்சிதா இருட்டடி வீரனுடன் "அஜால் குஜால்" செய்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது சரியில்லை.3:21 pm
Priya Siva - அப்டியே ரஞ்சிதா பத்திப் பேசறதுக்காக உங்களுக்கு வழங்கப்பட்ட அருகதைத் தகுதிச் சான்றிதழையும் இணைச்சுட்டீங்கன்னா... மத்தவங்களுக்கு ஈஸியா இருக்கும்...3:25 pm
S.Raja Priyan - நான் எவளோடு கள்ளத்தனமாக படுத்து மாட்டிக் கொண்டு இன்னும் என்னுடைய காணொளி வெளியாகவில்லை.... வெளியான பிறகு அந்த உரிமை எனக்கு மறுக்கப்படும்3:29 pm
Priya Siva - ||S.Raja Priyan - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் ரஞ்சிதா இருட்டடி வீரனுடன் "அஜால் குஜால்" செய்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது சரியில்லை.

S.Raja Priyan - நான் எவளோடு கள்ளத்தனமாக படுத்து மாட்டிக் கொண்டு இன்னும் என்னுடைய காணொளி வெளியாகவில்லை.... வெளியான பிறகு அந்த உரிமை எனக்கு மறுக்கப்படும்||

இப்டிப் பேசறவங்களுக்கே அந்த உரிமை இல்லைன்னு நான் நினைக்கறேன்...

VOMITS
3:30 pm
Vidhoosh . - ராஜப்ரியன்: ரஞ்சிதா போன்ற பொதுஜன சாதாரண வாசிப்பாளர்கள், ச்சாரு எழுத்தை விமர்சிக்க என்ன மாதிரியான தகுதி இருக்கணும்னு நினைக்கிறிங்க...3:32 pm (edited 3:32 pm)
Priya Siva - :)@விதூஷ்...3:32 pm
S.Raja Priyan - ஐயோ நான் இதவிட மோசமா பேசுவன் நண்பா.... ஒங்களுக்கு நான் ரொம்ப புதுசு....... வாந்தி எடுக்கறது தப்பு இல்ல........ டாக்டர்கிட்ட போங்க3:34 pm
Priya Siva - ஓ.. ஸாரி... குழந்தைன்னு தெரியாம பேசிட்டேன்... நல்லாருப்பா... ஆசீர்வாதம்...3:34 pm
S.Raja Priyan - நன்றிங்கண்ணா3:35 pm
Vasu Balaji - :))3:35 pm
Vidhoosh . - எஸ்.ராஜப்ரியன்: நீங்க சாம்ராஜ்ய பிரியன் தானே..3:36 pm
கேவிஆர் . - விதூஷ் - இல்லை. சாம்ராஜ்ய ப்ரியன் - தினேஷ் - Mr.R.Din :-)3:36 pm
S.Raja Priyan - @Vidhoosh .: அவுங்க பொது ஜன வாசிப்பாளரா விமர்சனம் பண்ணா தப்பில்ல.

அவுங்க .......... காரியத்துல ஈடுபட்டு மாட்டிக்கான அப்பறமும் வேஷம் போடறதுதான் தப்பு. இதனால அவுங்களுக்கு சாருவை விமர்சிக்க தகுதி இல்லை.
3:38 pm
S.Raja Priyan - @கேவிஆர் .:நன்றி அவரு ரொம்ப நல்லவரு3:39 pm
கேவிஆர் . - அவங்க வேஷம் போடறதுக்கும் சாரு எழுத்தை விமர்சிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? கிறுக்குத்தனமா இருக்கு ராஜப்ரியன்3:42 pm
Vidhoosh . - ராஜப்ரியன். ரஞ்சிதா சாருவை விமர்சிக்க நித்தியானந்தாதான் காரணம் என்று நீங்கள் நம்பினால், சாரு-வும் நித்தியானந்தாவை "குரு"வென்று சொன்னதில்லையா? குமுதத்தில் ஒரு பத்தி கூட அவருக்காக எழுதிக் கொடுக்க வில்லையா? எனக்கு ரஞ்சிதாவுக்கும், சாருவுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.3:43 pm (edited 3:44 pm)
S.Raja Priyan - Vidhoosh .: சாரு அதை எல்லாம் ஒத்துக் கொண்டு விட்டார். ஏமாந்ததாக பிறகு அது பற்றி எழுதியும் உள்ளார்3:44 pm
கேவிஆர் . - சாருவை விமர்சிக்கணும்ன்னா அவரோட புத்தகங்கள் நாலஞ்சு படிச்சிருக்கணும்ன்னு சொல்லுங்க, அது ஒகே. அதை விட்டுட்டு அவ யாரோட படுக்கணும், எங்கே படுக்கணும்ன்னுல்லாம் முடிவு பண்ணிட்டுத் தான் விமர்சிக்கணும்ன்னு சொல்றது ........3:45 pm
S.Raja Priyan - @கேவிஆர் : .நீங்க சொல்றது கூடம் ரொம்ப லூசுத் தனமாதான் இருக்கு.3:45 pm
சந்தோஷ் = Santhosh - அதான் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்களே அவரோட படைப்புகளை படிச்சி இருக்கேன்னு..அப்புறம் என்னா அவரோட எலக்கியங்களை படிக்காம பேசுறாங்கன்னு ஒரு ஜல்லி...3:47 pm
கேவிஆர் . - @ராஜப்ரியன் - ரைட்டுங்க :-)3:47 pm
S.Raja Priyan - thank you :-)3:47 pm
கேவிஆர் . - @ராஜப்ரியன் - எதுக்குங்க?3:48 pm
Vidhoosh . - அப்போ நானும் சாம்ராஜ்ய ப்ரியனுக்கு sorry சொல்லணும்... இல்லையோ ...
sorry Mr.R.Din :-)
;P
:D
3:52 pm (edited 3:52 pm)
கேவிஆர் . - @விதூஷ் - தினேஷ் அப்பாவி :-))))3:54 pm
Suresh @ Night Sky - எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டரு??????3:54 pm
raguraman r - // கேவிஆர் . - @விதூஷ் - தினேஷ் அப்பாவி :-)))) //

:) :) இன்னுமா இந்த ஊர் அவன நம்புது :P
3:55 pm
Vidhoosh . - ரகு: கம்பேரிசன் யாரோடங்கரத பொறுத்து கே.வி.ஆர் மதிப்பீடு செய்திருப்பார். மற்றபடி, குட்டி டின்... நான் எதுவும் சொல்வதற்கில்லை.4:08 pm
raguraman r - விதூஷ் அந்த குட்டி டின்னை எனக்கு 7 வருடங்களாக தெரியும்.... ரொம்ப ரொம்ப அப்பாவி அவேன்.. Mr.R.Din :-) நன்பேண்டா :) :)4:14 pm
Vidhoosh . - ரகு: வேலிக்கு ஓணான் சாட்சி.. டண்டேலி போனவருதானே நீங்க... :))5:10 pm
கேவிஆர் . - ரகு, நான் என்னோட கம்பேர் பண்ணி சொன்னேன் :-)5:10 pm
raguraman r - @ விதூஷ் - நான் இனி ஒண்ணுமே பேசல :( :( டண்டனகான் தான் எனக்கு :P

கேவிஆர் . - அண்ணே அப்படியே உங்களோட என்னையும் கம்பேர் பண்ணி எவ்ளோ நல்லவன் வல்லவன்னு சொல்லுங்க :P
5:13 pm
கேவிஆர் . - @ரகு - உன்னை அப்படிச் சொல்ல முடியாது. ஏன்னா நீ டண்டேலி போனவன் #விதூஷ் வாழ்க5:17 pm
Vidhoosh . - http://www.ithutamil.com/content.aspx?user=raguraman86@gmail.com&postid=a633824a-01b5-400c-aadc-6a07396dee9b
டண்டேலி கதை இங்கே இருக்கு... கும்மலாம்... # ஸ்டார்ட் ம்யூசிக்
5:21 pm
raguraman r - நீங்களுமா :( :(5:22 pm
Vidhoosh . - நீச்சலே தெரியாம ராஃப்டிங்?5:23 pm
raguraman r - ஆமாம் விதூஷ்.. பயம் நீங்க தண்ணியில சும்மாவே குதிக்க சொல்லிட்டாங்க..5:25 pm
கேவிஆர் . - அதான் செய்வாங்க, தரைலேயே தவழ்ந்துகிட்டு இருந்தா நீச்சல் வந்துடுமா ;-)5:26 pm
raguraman r - இல்லீங்க அண்ணே .. கைடு கிட்ட துருவி துருவி எனக்கு நீச்சல் தெரியாது நம்பி வரலாமா safe தான அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தேன். அவன் கடுப்பாகி ஒன்னும் ஆகாது யா விழுந்தாலும் மேல தான் வருவா வேணும்னா குதுச்சி பார்ன்னு சொல்லிட்டான்5:30 pm
கேவிஆர் . - நீச்சல் தெரியாம தண்ணில குதிச்சா மேல போய் தான் ஆகணும் ;-)5:34 pm