நான்
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா..
எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..
பத்தாம் வகுப்பில்
என் பிரிவில் வந்தாள்
பிரியா..
என்னுடன் படிக்கும்
ராஜாராமனுக்கும் அவளுக்கும்தான்
படிப்பில் போட்டி
முதல் இடத்துக்கு
முட்டிக்கொள்வார்கள் இருவருமே..
நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.
அவள் ஆண்டுவிழாக்களின்
கதாநாயகி...
பாரதமாதா வேஷத்தில்
பார்த்த கண்ணும் பூத்துப் போகும்
ராஜாராமனுக்கும்
அவள் மேல் காதல் வர
கடிதம் தந்து
தூதனுப்பினான் என்னை..
படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போன
பிரியா...
காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...
ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...
குசலம் விசாரிக்கத்தான்
அவள் வீட்டுக்கு நான்...
தேநீர், பிஸ்கட்டுக்குப் பின்
"ஏன் பிரியா அன்னிக்கு அறைஞ்சே?"
அக்கம்பக்கம் பார்த்து
அருகில் வந்தவள்
முன்னுச்சி மயிர் கலைத்து
மெதுவாய்ச் சொன்னாள்
"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"
இதன் சிறுகதை வடிவத்தை தம்பி விந்தைமனிதன் ஸ்வர்ணா என்றொரு தேவதை... என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்...
அப்படியே இங்கியும் போயி கவுண்டமணி - மிஷ்கின் பேட்டியை பாருங்கள்..
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா..
எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..
பத்தாம் வகுப்பில்
என் பிரிவில் வந்தாள்
பிரியா..
என்னுடன் படிக்கும்
ராஜாராமனுக்கும் அவளுக்கும்தான்
படிப்பில் போட்டி
முதல் இடத்துக்கு
முட்டிக்கொள்வார்கள் இருவருமே..
நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.
அவள் ஆண்டுவிழாக்களின்
கதாநாயகி...
பாரதமாதா வேஷத்தில்
பார்த்த கண்ணும் பூத்துப் போகும்
ராஜாராமனுக்கும்
அவள் மேல் காதல் வர
கடிதம் தந்து
தூதனுப்பினான் என்னை..
படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போன
பிரியா...
காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...
ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...
குசலம் விசாரிக்கத்தான்
அவள் வீட்டுக்கு நான்...
தேநீர், பிஸ்கட்டுக்குப் பின்
"ஏன் பிரியா அன்னிக்கு அறைஞ்சே?"
அக்கம்பக்கம் பார்த்து
அருகில் வந்தவள்
முன்னுச்சி மயிர் கலைத்து
மெதுவாய்ச் சொன்னாள்
"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"
இதன் சிறுகதை வடிவத்தை தம்பி விந்தைமனிதன் ஸ்வர்ணா என்றொரு தேவதை... என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்...
அப்படியே இங்கியும் போயி கவுண்டமணி - மிஷ்கின் பேட்டியை பாருங்கள்..
34 கருத்துகள்:
வணக்கம் அண்ணே :)
//"காதல் கடுதாசி..."//
உங்க அனுபவமா? அண்ணே.. சூப்பர் :)
>>>>>"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"
சூப்பர் சார்.. ஜஸ்ட் மிஸ் போல.. ட்ரை பண்ணி இருந்திருக்கலாம்.
சிறுகதைக்கான லிங்க் கொடுத்தது ஓகே, ஆனா இந்த கவிதைதான் அந்த கதையும் கற சஸ்பென்சை உடைச்சுட்டீங்களே...
சிறுகதையை கவிதையாக்கிய விதம் அருமை...
கவிதை வடிவிலும் அருமை..
வாழ்த்துக்கள்..
//நான்
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா.//
ஓகோ... இரண்டும் சேர்ந்து AC ஆகியதால்த்தான் காதல் இவ்வளளவு கூலானதாக இருக்கா???
நீங்க நிஜமா அறை வாங்கின மாதிரி கற்பனை எல்லாம் செஞ்சு பாத்தேன்
sarithan..
ஆட்டோகிராப் படம் பார்த்தமாதிரியே இருக்கு...
சிறுகதையை கவிதையாக்கிய விதம் அருமை...
நேற்று தம்பியை பார்க்க வரலியே...
மிஸ் ஆயிடிச்சே:-)
நம்ம ஆட்டோகிராப்!
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
ராஜாராமை காதலித்த விசயங்களை இப்படி வெளிப்படையாக போட்டதன் காரணம் என்ன? நான் வருத்தப்படவில்லை. நிஜப்பெயரை மாற்றி இருக்கலாம். பூத்து வாடி விட காதல் ஒன்றும் மலர் அல்ல..உயிர்த்தீ! லண்டனில் இருந்து அடுத்த வாரம் சென்னை வருகையில் சந்திக்கிறேன்.
//முன்னுச்சி மயிர் கலைத்து \\
ம்ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்
//ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...//
அடடா.....
:)))
//நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.//
நீர் என் இனமய்யா ஹா ஹா ஹா ஹா.........
//படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போன
பிரியா...
காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...//
அடி வாங்குனது நீரா அவரா....ஹே ஹே ஹே..........
when u think of me, i stop thinking !
உங்கள அறைஞ்சது தப்பே இல்ல..
அடடா வட போச்சே.....!
தோழர் இது உங்க வாழ்வில் நடந்தேறிய நிகழ்வா? நெகிழ்ச்சியா இருக்கு.
உன்னுடன் பழகிய நாட்களை
எழுத நினைக்கும் போதெல்லாம்
நீ உன் கணவனுடன்
நடந்து சென்ற போது
என்னைப் பார்த்த ஓரப்பார்வையை
வந்து போகின்றது.
வந்தவன் பணக்காரன்
என்றார்கள்.
குடியில் பாதி மடியில் பாதி
என்று வாழ்ந்து விட்டு
சென்றவன் கொண்டு சென்ற
பொட்டையும்பூவையும்
இன்று தேடிப் பார்த்து
உன் முகத்தை பார்க்கின்றேன்.
அவனுடன் நீ
வாழ்ந்த வாழ்க்கையை
என்றாவது எழுதுவேன்.
என் குழந்தைகள் காதலிக்கும் போது.
vaalantines day இன்னும் கொண்டாடிகிட்டு இருக்கீங்களா பிரதர். சுவாரஸ்யமான கவிதை!
அது ஆனைன்னா இது அரேபியக் குதிரை. சிக்குன்னு இருக்கு. சபாஷ்
எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..
......இதில் பொதிந்து இருக்கும் அர்த்தங்கள், பல...
அண்ணா ரெண்டும் கலக்கல்...
ம்...இப்பிடியும் நடக்கும் காதல்ல !
ஒரு வேளை விந்தை அண்ணனின் பதிவை படிக்காமல் இதைப் படித்திருந்தால் இதன் வீரியம் உரைத்திருக்காது...
அந்த ராஜாராமன் அவரே தானோ...
ஒரே காதலர் தினக்கொண்டாட்டம் போல.கவிதை ரொம்பவே நல்லாயிருக்கு.
-அருண்-
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்து விடும்.......இந்தப்பாட்டு பொருந்தும்னே!
எத்தன பிளாஷ்பேக் மொத்தத்துல..
//நீங்க நிஜமா அறை வாங்கின மாதிரி கற்பனை எல்லாம் செஞ்சு பாத்தேன்
//
இதே பொது நல வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுகிறோம்..
//பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்.//
நல்லவேள இத முன்னாடியே சொல்லிட்டீங்க..
கருத்துரையிடுக